Thursday 15 June 2017

முத்துக் கதைகள்

விடாமுயற்சியும் - உறுதியும்

     ஒரு குருவும், அவரது சீடர்களும் கடலோர அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சீடரைப் பார்த்து, உனக்கு என்ன தெரிகிறது என்று குரு கேட்டார். அதற்கு அந்த சீடர், திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளின் விடாமுயற்சி தெரிகிறது என்றார்.
   இதே கேள்வியை மற்றொரு சீடரிடம் கேட்டபோது, துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும், கரையைப் போல உறுதியாக நின்றால், துன்பங்கள் சிதறிப் போகும் என்றார்.
    இவற்றைக் கேட்ட குரு, சில நேரங்களில் அலைகளாய் இரு, சில நேரங்களில் கரையாய் இரு என்று சொன்னார்.

கடவுள் கொடுத்த வரம்

       ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள், அந்த ஏழையின் முன் தோன்றி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

     அதற்கு, பணம், செல்வம், தங்கம், வைரம் என்று ஆசையோடு கூறினான் அந்த ஏழை. உடனே, கடவுள் தனது வலது கை சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமாக மாறியது. ஆனால், ஏழை எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தான்.

        கடவுள் மறுபடியும் விரலை நீட்ட, அங்கிருந்த மேஜை தங்கமானது. இருப்பினும், அந்த ஏழைக்கு திருப்தி ஏற்படவில்லை. உடனே கடவுள், இன்னும் உனக்கு என்ன தான் வரம் வேண்டும் என்று கேட்டார்.


      அதற்கு அந்த ஏழை, எனக்கு அந்த விரல் வேண்டும் என்றார். இதைக் கேட்டதும், கடவுள் மயங்கி விழுந்து விட்டார். 

2 comments:

  1. இரண்டாவது செம.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete