Thursday 15 March 2018

நமக்கு 133 வது இடம், எதிலே தெரியுமா?


ஐ.நா. வெளியிட்டுள்ள உலகிலேயே 2018-ம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்ல பின்லாந்து நாடு முதலிடம் பிடிச்சிருக்கு.  நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூஸிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

அமெரிக்கா 18-வது இடத்தையும், பிரிட்டன் 19-வது இடத்தையும், ஐக்கிய அரபு அமீரகம் 20-வது இடத்தையும் வகிக்கின்றன. இந்த பட்டியலில் ஆண்டு 122 –ம் இடத்தில் இருந்த இந்தியா மிகவும் பின் தங்கி 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கு.  நமது அண்டை நாடான பாகிஸ்தான், சில இடங்கள் முன்னேறி 75-வது இடத்திற்கு வந்திருக்கு.   
பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளும் இந்த அறிக்கையில் முன்னேறிய இடத்தில் உள்ளன. பூடான் 97-வது இடத்தையும், நேபாளம் 101-வது இடத்தையும், இலங்கை 116-வது இடத்தையும், சீனா 86-வது இடத்தையும் பிடிச்சிருக்கு.
2012-ம் ஆண்டு முதல், ஐ.நா. அமைப்பு ஆண்டுதோறும் உலகத்தின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் மொத்தம் 156 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஒருவரின் வாழ்நாள் கால அளவு, சமூகத்தின் ஆதரவு, ஊழலின் அளவு உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஒரு நாட்டின் மகிழ்ச்சியின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.





பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பாதுகாப்பனதா ?

கிராமங்கள்ல வாய்க்கால், கிணறு, குளம், ஆறுகள்ல இருக்கிற தண்ணியை ரெண்டு கையாலயும் அப்படியே அள்ளி குடிச்ச காலம் உண்டு. அதனால யாருக்கும் எந்த பிரச்சினையும் வந்தது இல்லை. ஆனா இப்போ அப்படியான காலம் இல்லை. தண்ணியை காசு கொடுத்து வாங்கி குடிக்கிற நிலைக்கு வந்துட்டோம்.

பிளாஸ்டிக் பாட்டில்,  பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றில் அடைத்து விற்கப்படும் குடிநீரை பயன்படுத்தறது இப்போ நாகரீகமாவும், ஃபேஷனாவும் மாறிடுச்சு.அதுல, பல ஆபத்துக்கள் ஒளிஞ்சிருக்கிறதா கூறுது ஆய்வு ஒண்ணு. அண்மையில அமெரிக்காவில் உள்ள ‘ஆர்ப்  மீடியா’ என்ற பத்திரிகையாளர் அமைப்பு நியூயார்க் பல்கலைக்கழகத்தோட  இணைஞ்சு ஒரு ஆய்வு மேற்கொண்டது.

அதாவது, உலகம் முழுவதும் உள்ள 11 முன்னணி நிறுவனங்களோட 250 குடிநீர் பாட்டில்களை சோதனை பண்றதுதான் அ ந்த ஆய்வு. அந்த பரிசோதனையின் முடிவுல பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்திருக்கு. அது என்னன்னா, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 93 சதவீத தண்ணீர் பாட்டில்கள்ல பிளாஸ்டிக் மற்றும் ரசாயன துகள்கள் ஏராளமா இருந்த்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அதாவது, பாலிபுரோப்லின், நைலான், பாலித்தீன், டெரபதலேட் (பெட்)  ஆகிய ரசாயன துகள்கள் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரில் கலந்திருந்திருச்சாம்.

சராசரியா ஒரு லிட்டர் தண்ணீரில் 0.1 மில்லி மீட்டர் அளவு கொண்ட 10.4 பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாம். சில பாட்டில்கள்ல ஒரு லிட்டர் நீரில் 10 ஆயிரம் துகள்கள் கூட இருந்தனவாம்.

இந்த துகள்களை செரிமானம் செய்யும் சக்தி மனித உடலுக்கு கிடையாதாம். ரத்த சிவப்பணுவை விட சிறிய அளவிலான இந்த துகள்கள், குடல்வழியாக நேரடியா ரத்த குழாய்களுக்குள் போய் கலந்துடுமாம். அப்புறம், அந்த துகள்கள், ஒவ்வொரு உறுப்புகளிலும் தேங்கி,  ஈரல், சிறுநீரகம் போன்ற மோசமான நோய்கள் மனிதனை தாக்குமாம். அதனால, பாட்டில் அடைச்சு விக்கப்படற தண்ணீரும் பாதுகாப்பானதில்லைன்னு ஆய்வாளர்கள் குறிப்பிடறாங்க.

நீதி : பளபளப்பா இருக்கிற எதுவுமே பாதுகாப்பானது இல்லை. (அடடே!)