
* இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா' 1931ம் ஆண்டு வெளியானது. அந்தப்படத்தின் கதாநாயகன் விட்டல், கதாநாயகி சுபைதா.
* இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம், 1959ம் ஆண்டு வெளிவந்த ' காகஸ் கி பூல்'
* ஆஸ்கார் விருதுக்காக அனுப்பப்பட்ட முதல் இந்தியப்படம், 'மதர் இந்தியா'
* விசேஷ ஆஸ்கார் விருதுபெற்ற ஒரே இந்தியர், சத்யஜித் ரே.
* முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்த முதல் இந்திய திரைப்படம், 'ருக்மாபாய் கீ ஹவேலி'
* பத்மஸ்ரீ விருதுபெற்ற முதல் இந்திய நடிகை நர்கீஸ்
* இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை இடம் பூனா. இது 1964ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
* தமிழின் முதல் திரைப்படமான 'காளிதாஸ்' படத்தை இயக்கியர் எச்.எம்.ரெட்டி. இப்படம் 1937ம் ஆண்டு வெளியானது.
* தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் 'கீசகவதம்' இதன் தயாரிப்பாளர், மோட்டார் கார் பாகங்களை விற்பனை செய்துவந்த நடராஜ முதலியார்.
* தமிழ் திரையுலக முதல் நட்சத்திர நடிகை டி.பி. ராஜலட்சுமி
No comments:
Post a Comment