Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, 13 July 2017

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு.


 2009 - 2014 வரை 6 ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

சிறந்த பாடலாசிரியர் விருது

2012, 2013,2014 - ம் ஆண்டின் சிறந்த பாடலாசியர் விருது மறைந்த 
நா. முத்துகுமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
2009 - யுகபாரதி 
2010 - முத்துலிங்கம் 
2011 - பிறைசூடன்

சிறந்த நடிகைகள் விருது

2009  - பத்மபிரியா
2010  - அமலாபால்
2011  - இனியா 
2012  - லட்சுமிமேனன்
2013  - நஸ்ரியா
2014  - ஐஸ்வர்யா ராஜேஷ்

சிறந்த இசையமைப்பாளர்கள் விருது

2009 - சுந்தர் சி பாபு
2010  - யுவன் சங்கர் ராஜா 
2011  - ஹாரீஸ் ஜெயராஜ்
2012  - இமான் 
2013  - ரமேஷ் வினாயகம்
2014  - ஏ.ஆர். ரகுமான்

சிறந்த நகைச்சுவை நடிகர்

2009  - கஞ்சா கருப்பு  
2010  - தம்பி ராமையா 
2011  - மனோபாலா 
2012  - சூரி 
2013  - சத்யன் 
2014  - சிங்கமுத்து

சிறந்த இயக்குநர்கள் விருது

2009  - வசந்தபாலன் (அங்காடி தெரு) 
2010  - பிரபு சாலமன்(மைனா) 
2011  - ஏ.எல். விஜய் (தெய்வத் திருமகள்) 
2012  - பாலாஜி - (வழக்கு எண் 18/9)
2013  - ராம் (தங்க மீன்கள்) 
2014  - ராகவன் (மஞ்சபை)

சிறந்த திரைப்படங்கள் விருதுகள் 

2009 - பசங்க 
2010  - மைனா 
2011  - வாகை சூடவா
2012  - வழக்கு எண் 18/9
2013  - ராமானுஜர்
2014  - குற்றம் கடிதல் 

சிறந்த நடிகர்கள் விருதுகள்

2009  - கரன்
2010  - விக்ரம்
2011  - விமல் 
2012  - ஜீவா 
2013  - ஆர்யா 
2014  - சித்தார்த் 

Sunday, 3 April 2016

பாரதிராஜா இயக்கத்தில் 'குற்றப்பரம்பரை' தொடக்கம்

பாரதிராஜா இயக்கத்தில் 'குற்றப்பரம்பரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் தொடங்கியுள்ளது.  

தென் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதி மக்கள் திருட்டையே தொழிலாகக் கொண்டிருந்ததாக கூறி அவர்களை ‘குற்றப்பரம்பரை' என அப்போது பிரிட்டிஷ் அரசு முத்திரை குத்தி சட்டத்தின் கீழ் வகைப்படுத்தி தமிழகத்தில் உள்ள 90 சாதி மக்களை குற்றப் பரம்பரையினர் என்று பட்டியலிட்டு அவர்கள் மீது ரேகை சட்டத்தை 1911-ல் திணித்தனர்.

அப்பாவி மக்களை 'பிறவிக் குற்றவாளிகளாக' அடையாளப்படுத்தி சமூக நீதிக்கெதிராகக் குற்றம் சாட்ட வழி வகுத்தது இந்தச் சட்டம். மாலை 6 மணிக்குப் பிறகு இரவு நேரங்களில் யாரும் வீட்டில் தங்க கூடாது, இருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகி கைரேகை பதிக்க வேண்டும் என்பன போன்ற பல கொடுமைகளுக்கு இந்த மக்கள் ஆளானார்கள்.  இந்த வரலாற்றுப் பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் குற்றப்பரம்பரை கதை. 

1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச்சட்டத்தை எதிர்த்தும், ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்தும் கடுமையான போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 'மாயாக்காள்' என்ற பெண் உட்பட 17 பேர் மரணம் அடைந்தனர். இறுதியாக இந்த சட்டம் 1947 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி முதல் முழுமையாக நீக்கப்பட்டது. 

இந்த வரலாற்றுப் பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் குற்றப்பரம்பரை கதை. குற்றப்பரம்பரை கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதியுள்ளார். அந்தக் கதையை இயக்குநர் பாலா திரைப்படமாக எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.  

தொன்னூறுகளின் பிற்பகுதியிலேயே குற்றம் பரம்பரை கதையை படமாக்க இயக்குநர் பாரதிராஜா முயற்சி செய்தார். அவருக்காக 'கிழக்குச் சீமையிலே', 'கருத்தம்மா' போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதிய இயக்குநர் ரத்னகுமார் குற்றப் பரம்பரை என்ற பெயரில் ஒரு கதையை உருவாக்கினார். 1997-ல் ‘குற்றப்பரம்பரை' படத்தின் கதையை எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் அந்தப் பட முயற்சி தள்ளித்தள்ளிப் போனது. இந்நிலையில் பாரதிராஜா குற்றப்பரம்பரை படத்தின் படப்பிடிப்பை உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் தொடங்கியுள்ளார். 

Wednesday, 30 March 2016

சாதனை படைத்த பி. சுசீலா

பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலா 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர் பி. சுசீலா. பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திரத்தில் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் டிப்ளமோ முடித்தார்.

பதினைந்து வயதில் சென்னை வானொலியில் "பாப்பா மலர்' நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது படத்தில் இவரை முதல்முதலாக பின்னணி பாட வைத்தார். 1955-இல் இவர் பாடிய 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..,' , 'உன்னைக் கண் தேடுதே' பாடல்களால் பிரபலமடைந்தார். தனித்தன்மை வாய்ந்த தனது குரல் இனிமையால் தொடர்ந்து பல மொழிகளில் சிறந்த பாடல்களை அளித்துள்ள பி.சுசீலா, சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பாடி வருகிறார்.

1955 முதல் 1985 வரை வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார். தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம்.செüந்தரராஜன், கன்னடத்தில் பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம் படைத்தன. 

பத்மபூஷண், தேசிய விருது, கலைமாமணி விருது, ஆந்திர மாநில அரசின் ரகுபதி பெங்கையா விருது, கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை பி.சுசீலா பெற்றுள்ளார்.

இசைக்காகவே வாழ்ந்தேன், இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன் என்று கின்னஸில் இடம்பிடித்த பாடகி பி.சுசீலா தெரிவித்துள்ளார். 


முறியடிக்கப்படாத சாதனை

'டைட்டானிக்' திரைப்படம் ரசிகர்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் மாறாமல் உள்ளது.  அதேபோல ஆஸ்கர் விருது தொடர்பாக இந்த திரைப்படம் செய்த சாதனை 18 ஆணடுகளாக இன்னும் முறியடிக்கப் படாமல்  இருந்து வருகிறது.  அது என்ன தெரியுமா? 

20 ஆண்டுகள் தவமிருந்து இந்த ஆண்டு ஆஸ்கர் விருதை வாங்கிய லியார்னடோ டிகாப்ரியோ தான் டைட்டானிக் படத்தின் நாயகன். டிகாப்ரியோவுடன் இணைந்து கதே வின்ஸ்லெட் நடித்திருந்த இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து, இயக்கியிருந்தார். சரியாக 19 வருடங்களுக்கு முன் வெளியான இப்படம் படத்தின் பட்ஜெட்டைவிட 10 மடங்கு வசூலைக் குவித்து சாதனை புரிந்தது.

வசூல் மட்டுமின்றி விருதுகளிலும் டைட்டானிக் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆஸ்கர் விருதுகளில் அதிகம் பரிந்துரை செய்யப்பட்ட படம் என்ற பெருமையை இப்படம் இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிறந்த படம் சிறந்த இயக்குநர் உட்பட மொத்தம் 14 பிரிவுகளில் இப்படம் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு முன் 1950 ம் ஆண்டு வெளியான 'ஆல் அபௌட் எவே' என்னும் படம் அதிகபட்சமாக 14 பிரிவுகளில் பரிந்துரை செய்யபட்டிருந்தது. என்றாலும் டைட்டானிக் படத்திற்குப் பின் வேறு எந்தப் படமும் இவ்வளவு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்படவில்லை. 

இதன் மூலம் ஆஸ்கர் விருதுகளில் டைட்டானிக் படத்தின் 18 வருட சாதனை இன்னும் முறியடிக்கப்படாமலேயே உள்ளது. அதேபோல 88 வருட ஆஸ்கர் விருதுகள் வரலாற்றில் அதிக விருதுகளை வென்ற படம் என்ற சாதனையையும் டைட்டானிக் படைத்திருக்கிறது. இதுவரை ’பென்ஹர்’ (1959), ’டைட்டானிக்’ (1997) மற்றும் ’தி லார்ட் ஆப் தி ரிங்: தி ரிட்டர்ன் ஆப் தி கிங்’ (2003) ஆகிய 3 படங்கள் மட்டுமே அதிகபட்சமாக 11 விருதுகளை வென்றிருக்கின்றன. 2003 ம் ஆண்டிற்குப் பின் வேறு எந்தப் படமும் இவ்வளவு விருதுகளை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டைட்டானிக் காலத்தால் அழியாத காவியம் என்பது நிஜம்தானே? 


Monday, 28 March 2016

தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள்!


தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டும் (2016) கணிசமான தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 5 விருதுகளை தமிழ் சினிமா பெற்றுள்ளது இந்த ஆண்டு. இரு மொழிப் படம் என்ற வகையில் ‘பாகுபலி' யையும் சேர்த்தால் மொத்தம் 7 விருதுகள்

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை' படத்துக்கு சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான விருது கிடைத்துள்ளது. கடந்த 71 வருட வரலாற்றில் வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமைக்கு உரியது ‘விசாரணை'.

இந்தப் படத்தை தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த காக்காமுட்டை படமும் தேசிய விருதைப் பெற்றது

இதேபோல், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றிமாறனுக்கும் தேசிய விருது கிடைத்தன.
விசாரணை படத்துக்காக உயிரைக் கொடுத்து உழைத்த மறைந்த டி இ கிஷோருக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது.

அதே படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.


'இறுதிச் சுற்று' படத்திற்காக  சிறந்த நடிப்புக்கான சிறப்பு விருதினை ரித்திகா சிங் பெற்றுள்ளார். 

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துச் சாதனைப் புரிந்த இளையராஜாவுக்கு, அவரது ஆயிரமாவது படமான 'தாரை தப்பட்டை' படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்துள்ளது.
ஏற்கெனவே, 'சலங்கை ஒலி' , 'சிந்து பைரவி' , 'ருத்ர வீணை' படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினை பெற்ற இளையராஜா, 'பழஸிராஜா' படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்றார். இப்போது 5-வது முறையாக 'தாரை தப்பட்டை' படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்றுள்ளார்.


'பாகுபலி' தெலுங்குப் படம் என்றாலும், அது தமிழிலும் நேரடிப் படமாகவே வெளியானது. அந்தப் படத்துக்கு தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த கிராபிக்ஸுக்கான விருதும் கிடைத்துள்ளது.


Friday, 14 June 2013

தீயா வேலை செய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்



சாப்ட்வேர் அலுவலகம் தான் கதைக்களம். 
பெண்கள் வாடையே பிடிக்காத (அதற்கு சில குட்டிக் குட்டி காமெடி பிளாஷ்பேக்குகள் உண்டு) ஹீரோவுக்கு, அவர் பணியாற்றும் அலுவலகத்தில் புதிதாக சேரும் ஹீரோயின் மீது வழக்கம்போல் காதல் வருகிறது. தமிழ் சினிமா இலக்கணப்படி, அதற்கு காமெடியன்கள் அடங்கிய நண்பர்கள் பட்டாளம் உதவி ஏதும் செய்யவில்லை. மாறாக, தனி அலுவலகமே போட்டு, காதலிக்க கற்பதற்கு, ஐ.. மீன் பிடித்த பெண்களை மடக்குவதற்கு,பீஸ் வாங்கிக் கொண்டு சந்தானம் ஐடியாக்களை வழங்குகிறார். அவரிடம் போய் நம் ஹீரோ உதவி கேட்க, (ஐடியா சொல்வதற்கு முன்பே பீஸ் வாங்கிக் கொண்டு) அவரும் உதவுகிறார். திட்டப்படி, இரண்டாம் ஹீரோ உள்ளிட்ட சில பல தடைகளைத் தாண்டி ஹீரோயின் மனதில் இடம்பிடிக்கிறார் ஹீரோ. திடீரென கதையில் ஒரு ட்விஸ்டாக, காமெடியன் சந்தானத்தின் தங்கைதான் ஹீரோயின் என்று தெரியவர, சந்தானத்திற்கு மட்டுமல்லாமல் நமக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. பின்னர், காமெடியன் வில்லன் அவதாரம் எடுத்து, ஹீரோவையும், ஹீரோயினை பிரிக்க முயல, நாரதர் கலகம் நன்மையில் முடிவதுபோல, அவரது முயற்சிகள் காதலர்களுக்கு சாதகமாக முடிகின்றன. பின்னர், சுபம்.சுபம். 

அவெஞ்சர் பைக்கில், சந்தானம் என்ட்ரி ஆகும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது. ஆனால், ஏனோ அவர்களது எதிர்பார்த்த அளவுக்கு அவரால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை. வழக்கமான அவரது நையாண்டி வசனங்கள் மூலம் லேசாக புன்னகைக்க வைக்கிறார். "காலைல தென்னங்கன்னை வெச்சிட்டு, சாயங்காலம் சட்னி எதிர்பார்க்கறே", "செல்வராகவன் படம் செகண்ட் ஹீரோ போல அழகா இருக்கான்" என்பது மாதியான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. 

ஹீரோயின் வேஷம் கட்டியுள்ள ஹன்சிகா வழக்கம்போல அழகாக இருக்கிறார். சில சீன்களின் பப்ளியாகவும், சில சீன்களின் இளைத்தும் காணப்படுவது ஏனோ. ஹீரோவைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பாய்ஸ் படத்தில் பார்த்த மாதிரியே இருக்கிறார். நடிப்பும் அப்படியேத்தான் இருக்கிறது. 

சுந்தர்.சி. படமாயிற்றே காமெடிக்கு கண்டிப்பாக உத்திரவாதம் இருக்கும் என்று நம்ம்ம்ம்ம்ம்ம்பி தியேட்டருக்குள் போனால், ஏமாற்றம்தான் மிச்சம். லேசாக கிச்சு கிச்சு மூட்டுகிறார். அவ்வளவே.. 

Tuesday, 7 May 2013

சூது கவ்வும் - சினிமா விமர்சனம்




பெட்டிக்கடை ரேஞ்சுக்கு ஆட்களை கடத்தி, அதிகபட்சமாக 45 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து சுயதொழில் செய்துவரும் விஜய் சேதுபதி ஆபத்தில்லாத நல்ல கடத்தல்காரன். பணம் கிடைத்ததும், கடத்தப்பட்டவருக்கு டிப்ஸ் உண்டு. நயன்தாராவுக்கு கோயில் கட்டிவிட்டு சென்னை வரும் இளைஞரும், காலை எட்டுமணிக்கு அலாரம் வைத்து எழுந்து, குளித்து முடித்து பயபக்தியோடு தண்ணி அடிக்க அமரும் இளைஞரும், விஜய்சேதுபதியுடன் கூட்டு சேருகிறார்கள். தொழில் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. 

இந்த கோஷ்டியுடன் சாப்ட்வேர் இன்ஜினியர் கூட்டு சேர்கிறார். விஜய்சேதுபதி அன் கோ தங்கள் கொள்கைகளை மீறி, 2 கோடிக்கு ஆசைப்பட்டு அதிகார மட்டத்தில் இருப்பவரின் மகனை கடத்துகிறது. ஆனால், கடத்தப்பட்ட அரசியல்வாதியின் மகனோ இவர்களை விட பக்கா பிராடு என்பது தெரியவருகிறது. நாம் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தால், கடத்தல் கும்பலை பிடிக்க, என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரம்மா வருகிறார். ரவுடியை பிடித்து, தோட்டத்தில் உயிரோடு புதைப்பது என்று அவரது அறிமுகமே திகிலை ஏற்படுத்துகிறது. 

இன்டர்வெல் வரை விஜய் சேதுபதி கற்பனை காதலியோடு உலா வருகிறார். படத்தில், காதல், மரத்தை சுற்றி டூயட் என்ற அபத்தங்கள் ஏதுமில்லாதது ஆறுதல். விஜய்சேதுபதிக்கு ஏதாவது மனபிறழ்வா என்பது குறித்த விவரங்கள் ஏதும் படத்தில் இல்லை. நாற்பதை கடந்த கெட்டப் எதற்கும் என்றும் புரியவில்லை. 

படம் தொடங்கியது முதல், வசனங்களும், விஜய்சேதுபதி அன் கோவின் கோமாளித்தனங்களும் காமெடி சரவெடி. பிரம்மாவின் என்ட்ரிக்குப் பின்னர், படத்தை சீரியசாக்குவதா, காமெடியை தொடருவதா என்று இயக்குநர் தனது தடுமாற்றத்தை வெளிப்படுத்துகிறார். பின்னர், ஒருவழியாக காமெடியே போதும் என்று முடிவுக்கு வந்து, இன்ஸ்பெக்டர், கள்ளத் துப்பாக்கியால் பின்னால் சுட்டுக்கொண்டு, ஆஸ்பத்திரிக்குப் போகிறார். 

கற்பனை காதலி உத்தி நல்ல ஐடியாதான். ஆனால், அதற்கான காரணம் என்று ஏதாவது வைத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. 

நேர்மையான அரசியல்வாதியாக வந்து, மகனைவிட தனது நற்பெயர்தான் முக்கியம் என்று கருதும் கேரக்டரில் எம்.எஸ். பாஸ்கர் அசத்துகிறார். 

சினிமா விமர்சனம் முன்னே பின்னே எழுதி பழக்கம் இல்லை என்பதால், எங்கே ஆரம்பித்து, எங்கே முடிப்பது என்பது தெரியாததால், இத்துடன் முடித்துக்கொள்கிறேன். மொத்தத்தில் படம் ஜாலியாக போகிறது என்பதால், திருட்டி வி.சிடியில் ஸாரி டி.வி.டியில் பார்க்காமல் தியேட்டரில் பார்க்கலாம். 

பின்குறிப்பு 1 -  நீண்ட நாட்களுக்குப் பிறகு.. ம்.. அனேகமாக.. படம் ரிலீசான அன்றே முதல் காட்சி பார்த்த மூன்றாவது படம் இது. ஆனாலும், சோம்பல் காரணமாக விமர்சனம் எழுத சற்றே லேட்டாகிவிட்டது. 

பின்குறிப்பு 2 -  முதல் காட்சி பார்த்த முதல் இரண்டு படங்கள் - காந்தி பிறந்த மண்( விஜயகாந்த்), உதயம் என்.எச்.-4 

Friday, 3 August 2012

இந்திய சினிமா 100 - 3




** சினிமாவுக்காக வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை 'மூவி மிரர்' இந்த பத்திரிகையை 1927ம் ஆண்டு எஸ்.கே. வாசன் என்பவர் தொடங்கினாரு. தமிழ்ல வெளிவந்த முதல் சினிமா பத்திரிகை 'சினிமா உலகம்'. இதை 1935ம் ஆண்டு பி.எஸ். செட்டியார் என்பவர் வெளியிட்டாரு. 

** தென்னிந்திய மொழியில் 'டப்பிங்' செய்யப்பட்ட முதல் படம் 'அரிச்சந்திரா' இதை 1943ம் ஆண்டு தயாரிச்சவரு ஏவி.எம். 

** இந்தியாவுக்குள்ள முதல் முதலா காட்டப்பட்ட முதல் மௌனப்படம் 'ஏசுவின் வாழ்க்கை'. 'டூபாண்ட்'ங்கற பிரெஞ்சுக்காரர் 1896ம் ஆண்டு மும்பையில பொதுமக்களுக்கு போட்டு காட்டினாரு. 

** இந்திய சினிமாவுல முதன் முதலா கதாநாயகியா நடிச்சது ஒரு சிறுவன். 'சோலங்கி' என்ற அந்த சிறுவன் 'ராஜா அரிச்சந்திரா' படத்துல பெண் வேஷம் போட்டு, 'தமயந்தி' கதாபாத்திரத்துல நடிச்சான். உண்மையான முதல் கதாநாயகி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கமலா'ங்கற பெண்மணிதான். 1913ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே தயாரிச்ச 'பாஸ்மாசூர் மோகினி'ங்கற படத்துல அவங்க முக்கிய வேடத்துல நடிச்சாங்க. 

** ஆரம்பகால சினிமா படங்கள் ஊமைப்படங்களாவே வந்திச்சுன்னு நமக்குத் தெரியும். பிறகு பேசும் படங்கள் வந்தன. பேசும் சினிமாக்கள் வந்த பிறகும் ஊமைப்படங்கள் வந்தா எப்படி இருக்கும்?
இப்படி உருவான முதல்படம் 'இங்கீத்'ங்கற பெங்காலி படம். 1961ம் ஆண்டு வெளியான இந்த படத்துல வசனமே கிடையாது. பின்னணி இசை மட்டும்தான் இருந்திச்சு. அதுக்கு அப்புறம் 1987ம் ஆண்டு சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்துல பேசாத படம் வெளி வந்துச்சு. தமிழ்ல 'பேசும் படம்', தெலுங்குல 'புஷ்பக் விமானா', இந்தில,'புஷ்பக்'ன்னு வெவ்வேற பெயர்கள்ல வெளியாச்சு. இந்த படத்துல கதாநாயகனா நடிச்சவரு நம்ம கமல்ஹாசன். 

** சினிமாவை செட்டுகள் ஆட்டிப்படைச்ச காலத்துல ஒரு செட் கூட போடாம எடுக்கப்பட்ட படம், ' ஆஸ்மான் மஹால்'ங்கற படம். இது 1965ம் ஆண்டு வெளியாச்சு. 

** இயக்குநர் மணிரத்ம் எடுத்த 'தில்சே' (தமிழ்ல 'உயிரே') படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. பிரிட்டன்ல 'டாப் டென்' படங்கள்ல இடம்பிடிச்ச முதல் இந்திய திரைப்படம் இதுதான். 

** உலகத்துலயே அதிக படங்கள்ல கதாநாயகனா நடிச்ச நடிகர் பிரேம் நசீர். அதுவுமில்லாம, ஒரே ஆண்டுல அதிக படங்களிலும் நடிச்சி சாதனை படைச்சிருக்காரு. 1979ம் ஆண்டுல மட்டும் இவரு நடிச்ச 39 படங்கள் வெளியாச்சு. உலக அளவிலான இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கலை. 

** ஆரம்ப காலத்துல வெளியான சினிமாக்கள் பெண்கள் நடிக்கலை. ஆண்கள்தான் பெண் வேஷம் போட்டு நடிச்சாங்க. அதுக்கு அப்புறம் பெண்களும் நடிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, பெண் கதாபாத்திரமே இல்லாத ஒரு படம் வந்திருக்கு. மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்துல மம்முட்டி கதாநாயகனா நடிச்ச 'மதிலுகள்'தான் அந்த படம். இதுல ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை. 

** நடிகை மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் நடிச்சி சாதனை படைச்சிருங்காங்க. அதேபோல சத்தமில்லா வேறொரு சாதனையும் செஞ்சிருக்காங்க. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் கூட நாடகங்களிலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கூட சினிமாவுலயும் நடிச்சிருக்காங்க. அதனால, அதிக முதல்வர்களோட நடிச்ச பெருமை அவங்களுக்கு இருக்கு. அதே மாதிரி, ஏவி.எம். நிறுவனம் தயாரிச்ச படங்கள் பணி புரிஞ்ச அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ஆர். ஆகியோர் முதலமைச்சரா ஆகியிருக்காங்க.  


Friday, 20 July 2012

இந்திய சினிமா 100 - 2



* இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா' 1931ம் ஆண்டு வெளியானது. அந்தப்படத்தின் கதாநாயகன் விட்டல், கதாநாயகி சுபைதா. 

* இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம், 1959ம் ஆண்டு வெளிவந்த ' காகஸ் கி பூல்'

* ஆஸ்கார் விருதுக்காக அனுப்பப்பட்ட முதல் இந்தியப்படம், 'மதர் இந்தியா' 

* விசேஷ ஆஸ்கார் விருதுபெற்ற ஒரே இந்தியர், சத்யஜித் ரே. 

* முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்த முதல் இந்திய திரைப்படம், 'ருக்மாபாய் கீ ஹவேலி'

* பத்மஸ்ரீ விருதுபெற்ற முதல் இந்திய நடிகை நர்கீஸ் 

* இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை இடம் பூனா. இது 1964ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

* தமிழின் முதல் திரைப்படமான 'காளிதாஸ்'  படத்தை இயக்கியர் எச்.எம்.ரெட்டி. இப்படம் 1937ம் ஆண்டு வெளியானது.

* தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் 'கீசகவதம்' இதன் தயாரிப்பாளர், மோட்டார் கார் பாகங்களை விற்பனை செய்துவந்த நடராஜ முதலியார்.

* தமிழ் திரையுலக முதல் நட்சத்திர நடிகை டி.பி. ராஜலட்சுமி 





Sunday, 1 July 2012

இந்திய சினிமா 100 - 1


*  1935ம் ஆண்டு தெற்கு பம்பாயில் கட்டப்பட்ட 'ரீகல் தியேட்டர்'தான் இந்தியாவின் முதல் ஏசி தியேட்டர். 

*  1934ம் ஆண்டு வெளியான 'பாக்ய சக்ரா' என்ற படத்தில் தான் முதன் முதலாக பின்னணி இசை அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படமாகும்.

*  சத்யஜித்ரேவின் கடைசிப் படம், 'அகன் துக்'

*  ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த முதல் இந்தியர், சாபு

*  நமது தேசிய கீதம் இடம்பெற்ற முதல் திரைப்படம், 'ஹம்ராஹி'

*  வரி விலக்கு பெற்ற முதல் இந்தியத் திரைப்படம், 'கப்பலோட்டிய தமிழன்' (தமிழ்)

*  இந்தியாவின் முதல் பெண் சினிமா இயக்குநர், டி.பி. ராஜலட்சுமி. இவர் இயக்கிய முதல் படம், 'மிஸ். கமலா'


*  திரைப்படம் தயாரித்த முதல் இந்தியர் ஹரிச்சந்திர சகாரம் பட்வாடிகர்

*  தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் 1960ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

*  இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுபவர், தாதா சாகேப் பால்கே.

Tuesday, 20 March 2012

இந்திய சினிமா


பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்திய சினிமாவுக்கு நூற்றாண்டு தொடங்குவதால் சேவை வரி ரத்து செய்யப்படுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்தாலும் அறிவித்தார். அன்றிலிருந்து சினிமாவைப் பற்றி ஏதாவது எழுதியே தீருவது என்று மண்டையை பிறாண்டிக் கொண்டிருந்தேன். அப்புறம் அங்குமிங்குமாக தேடி கிடைத்த கொஞ்சுண்டு தகவல்கள் உங்கள் பார்வைக்காக. 
   இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் தாதா சாகேப் பால்கே என்பவரால் 1913 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'ஹரிச்சந்திரா' ஆகும். இதற்கு முன்பே கூட இந்தியாவில்திரைப்படங்கள் வந்திருந்தன. 1865 ஆம் ஆண்டு முதல் அசையும் படங்கள் வெளிவந்திருந்தன. ஆனால், இவைகள் துண்டுப்படங்களாகும். ஹரிலால் சென், தானேவால் ஆகியோர்மும்பையிலும், கொல்கத்தாவிலும், சிறிய படங்களை தயாரித்தனர். வங்க மொழியின் முதல் திரைப்படம் 'சத்யாபாபு ஹரிச்சந்திரா' 1917 ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழின் முதல் படம்'கீசகவதம்' 1919 ஆம் ஆண்டு வெளிவந்தது.
          1920 ஆம் ஆண்டுகளில், தீரன் கங்கூலி, பாபுராவ் பெயிண்டர், அசெத்திங், சந்துலால்ஷா, ராணி, வி.சாந்தாராம் போன்ற திரைப்பட இயக்குநர்கள் 'இங்கிலாந்து ரிடர்ண்டு, 'சங்காரிபாஷ்', 'குணசுந்தரி' போன்ற பல திரைப்படங்களை உருவாக்கினர்.
           ஊமைப்படக் காலக்கட்டத்தில் இருந்து முதல் பேசும் படமாக உருவானது 'ஆலம் ஆரா' தான். இதுவே இந்தியாவின் முதல் பேசும் படமாக 1931 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தகாலக்கட்டத்தில் தான் வங்காளத்திலும், தென்னிந்தியாவிலும் பேசும் படங்கள் உருவாக்கப்பட்டன. வங்காளத்தில் 'ஜமாய்ஷாஸ்தி' தெலுங்கில் 'பக்த பிரகலாதா', தமிழில் 'காளிதாஸ்',முதல் படங்களாக வெளிவந்தன.
           திரைப்பட வளர்ச்சி 1930 ஆம் ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் கண்டது. பக்தி, புராணக்கதைகளுடன் கூடிய படங்களுடன், சமுதாய உணர்வுள்ள படங்களும் வெளியாயின.சாந்தாராமின் 'துனியாநாமானே', 'ஆதீமி' பதேஹாலின் 'சாந்தாதுக்காராம்' மற்றும் பல பொழுதுபோக்கு படங்கள் வந்தன.
            இந்தியாவின் முதல் வண்ணப்படம் அர்தேஷிர் ராணியின் 'கிஸபின் கன்னியா' என்ற திரைப்படமாகும். இது 1937 ஆம் ஆண்டு வெளியானது. இதே காலத்தில், மராத்தி, குஜராத்தி,கன்னடம், ஒரியா, அசாமி, பஞ்சாபி, மளையாள மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகின.

தமிழ் சினிமா
விக்டோரியா பப்ளிக் ஹால்  
        1897 ஆம்  ஆண்டு சென்னையில் ரிப்பன் மாளிகைக்கு அடுத்திருந்த 'விக்டோரியா பப்ளிக் ஹாலில் 'எட்வர்ட்' என்ற ஆங்கிலேயர் 'புகை வண்டியின் வருகை, ' தொழிற்சாலையை விட்டு..'போன்ற சில நிமிடங்களே ஓடக்கூடிய மௌன துண்டுப்படங்களை போட்டுக்காட்டினார். இதுதான் தமிழகத்தில் காட்டப்பட்ட முதல் சினிமா.
      

              ஆரம்பகாலத்தில்,பயாஸ்கோப்,கினிமோட்டோபிராஃப், மோட்டோ போட்டோஸ்கோப், சினிமோட்டோகிராஃப் என்று பலவிதமான பெயர்களில் வழங்கப்பட்டு, கடைசியாக, லூமியர்சகோதரர்கள் சூட்டிய சினிமோட்டோ கிராஃப் என்ற பெயர்தான் நிலைத்தது.
                    தெரு ஓரங்களிலும், பூங்காக்களிலும் வெவ்வேறு இடங்களில் சலனப்படம் காட்டப்பட்டு வந்த காலக்கட்டத்தில், 'வார்விக் மேஜர்' என்ற ஆங்கிலேயருக்கு நிரந்தரமாக ஒரே இடத்தில்படம் காட்டினால் என்ன என்று தோன்ற, 1900 ஆம் ஆண்டு, சென்னையில் 'எலெக்ட்ரிக் தியேட்டர்' என்ற சினிமா கொட்டகையை கட்டினார். இதுதான் தென்னிந்தியாவின் முதல்தியேட்டர் ஆகும்.
                         திருச்சியில் ரயில்வேயில் வேலைப்பார்த்து வந்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவருக்கு சினிமா தொழில் மீது ஆர்வம் ஏற்பட்டு, புரொஜக்டரையும், சில துண்டு படங்களையும்விலைக்கு வாங்கி திரையிட்டுக் காட்டத்தொடங்கினார்.  அந்த வகையில், சலனப்படங்களை காட்டிய முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவரானார். அதேபோல் சென்னையில்போட்டோ கிராபராக இருந்த வெங்கையா என்பவரும் துண்டுப்படங்களை வாங்கி, ஊர் ஊராக போய் படங்களை திரையிட்டுக்காட்டினார்.
                     பின்னர், வெங்கைய்யா 1913 ஆம் ஆண்டு சென்னையில் 'கெயிட்டி' தியேட்டரை கட்டினார். இந்தியர் ஒருவரால், தென்னிந்தியாவில் கட்டப்பட்டமுதல் தியேட்டர் இதுதான்.இதனைத்தொடர்ந்து, 1914 ஆம் ஆண்டு வடசென்னை தங்கசாலையில் 'கிரௌன்' தியேட்டரையும், 1915 ஆம் ஆண்டு 'குளோப்' (ராக்சி) தியேட்டரையும் கட்டினார்.
                         சென்னையில் மோட்டார் வியாபாரம் செய்துவந்த நடராஜ முதலியார் என்பவருக்கு நாமே படம் தயாரித்தால் என்ன என்று தோன்றியது.  எனவே, 'ஸ்டூவர்ட் ஸ்மித்' என்றஆங்கிலேயரிடம் கேமராவை கையாளும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, 1916 ஆம் ஆண்டு ' இந்தியா பிலிம் கம்பெனி'  என்ற தென்னிந்தியாவின் முதல் ஸ்டுடியோவை உருவாக்கி,அதில்,முப்பத்தைந்து  நாட்களில், தென்னிந்தியாவின் முதல் சலனப்படமான 'கீசகவதம்' தயாராகி வெளிவந்தது. 1932 ஆம் ஆண்டு மைசூரில் தயாரிக்கப்பட்ட 'பாக்ய சக்ரா' தான்தென்னிந்தியாவின் கடைசி மௌன படமாகும்.
                   1931 ஆம் ஆண்டு 'சாகர் மூவி டோன்' என்னும் மும்பை கம்பெனி 'குறத்தி பாட்டும், டான்சும் ' என்று பேசும் குறும்படத்தை தமிழில் முதன் முதலாக தயாரித்தது. அதே ஆண்டில், முதல்முழு நீளத் தமிழ்ப் படமான 'காளிதாஸ்' மும்பையில் தயாரிக்கப்பட்டது.
                    1934 ஆம் ஆண்டு ஏ.நாராயணன் என்பவர் சென்னையில், 'சீனிவாசா சினிடோன் என்ற தென்னிந்தியாவின் முதல் டாக்கி ஸ்டுடியோவை தொடங்கி,தென்னிந்தியாவின் முதல் பேசும்படமான 'சீனிவாச கல்யாணம்' படத்தை தயாரித்து வெளியிட்டார்.