இந்தியாவில் புற்றுநோய்க்கு தினமும் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்ற தகவல் வெளியாகிஉள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ICMR), தேசிய புற்றுநோய் பதிவக திட்ட, தகவலின்படி 2012-ம் ஆண்டு முதல், 2014-ம் ஆண்டுவரையில் புற்றுநோய் காரணமாக இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 6 சதவீதம் உயர்ந்து உள்ளது என்பதை காட்டுகிறது. மத்திய சுகாதாரத்துறை தகவலின்படி “2014ம் ஆண்டு மட்டும் புற்றுநோய் காரணமாக இந்தியாவில் சுமார் 5 லட்சம் வரையிலானோர் உயிரிழந்தனர்,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2014-ம் ஆண்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,20,179 ஆக பதிவாகிஉள்ளது. இறப்பு எண்ணிக்கையானது 4,91,598 ஆகும்.
2013-ம் ஆண்டில் புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,34,314 ஆகும், இதே வருடத்தில் புற்றுநோய் காரணமாக 4,78,180 பேர் உயிரிழந்து உள்ளனர். 2012-ம் ஆண்டில் புற்றுநோய்க்கு சுமார் 4,65,169 பேர் தங்களது உயிரை இழந்துஉள்ளனர். இதே வருடத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,16,628 ஆகும்.
“வயது முதிர்வு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளைகள், புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல், ஆரோக்கியமற்ற உணவுமுறைகள். நோய் நிர்ணய பரிசோதனை வசதிகள் குறைபாடு, ஆகியவை காரணம் சில காரணங்களால் புற்றுநோயினால் இறப்போர் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் புற்றுநோய் சிறப்பு ஆலோசனைக்கும், வசதிகளை வலுப்படுத்தும் வழிமுறைகளை மாநிலங்களில் பரப்பவும் மத்தியஅரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. புற்றுநோயை தொடர்ந்து இந்தியாவில் அதிகபேரது உயிரை வாங்கிய நோயாக காசநோய் உள்ளது. நாட்டில் 2011ம் ஆண்டு காசநோய்க்கு 63,265 பேரும், 2012ம் ஆண்டு 61,887 பேரும், 2013ம் ஆண்டு 57,095 பேரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி பதிவுசெய்யப்பட்டு உள்ள தகவல்கள் இதனை காட்டுகிறது. அரசு நோயாளிகளுக்கு காசநோய் எதிர்ப்பு மருந்து உள்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில், தரமான ஆய்வுக்கு நுண்ணோக்கியியல் மையங்களை அரசு நிறுவிஉள்ளது. இதேபோல் 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் பழங்குடியின மற்றும் மலைப்பகுதிகளிலும் ஆய்வு மையங்களை அரசு அமைத்து உள்ளது. நாட்டில் அரசு 13,000 நுண்ணோக்கியியல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 6 லட்சம் நேரடி சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment