சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன், கற்பூரத்தைச் சேர்த்து நன்றாகக் காய்ச்சி, அதை முழங்காலுக்குக் கீழே தடவிக்கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைக்கும் இந்த எண்ணெய்யைத் தடவலாம்.
மிளகு, இஞ்சி, பூண்டு போன்ற காரமான மூலிகைப் பொருள்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மஞ்சள் கிழங்கை நன்றாக உரசி, கரைத்து ஒரு கைக்குட்டையில் நனைத்துக்கொள்ள வேண்டும். கிராம்பு, பச்சைக் கற்பூரம், ஏலம் இவை மூன்றையும் அரைத்துப் பொடியாக்கி அந்தக் கைக்குட்டைக்குள் வைத்து குழந்தைகள் பயன்படுத்த கொடுக்கவும். இதை அவர்கள் நுகரும்போது, காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க முடியும்.
அடிக்கடி தேங்காய் எண்ணெய்யை உடம்பில் தடவிக்கொள்ள வேண்டும்.
நிலவேம்பு கசாயத்தைத் தொடர்ந்து மூன்று நாள்கள் குடிப்பது நல்லது.
நிலவேம்பு குடிக்கும் முறை:
20 கிராம் சூரணத்தை 100 மிலி தண்ணீர் ஊற்றி 25 மிலி அளவுக்கு வருமாறு சுண்டக் காய்ச்சவும். இதைக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குடித்த பின்னர் கசப்பு நீங்க தேன் அல்லது வெல்லத்தை எடுத்துக்கொள்ளலாம். ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு 10 மிலி கொடுக்கலாம்.
No comments:
Post a Comment