அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம் போன்று ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தினம். கனடா, நியூசிலாந்து, லண்டன், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பாரம்பரிய விழாக்கள் போல் இந்த நாள் கொண்டாடப்ப டுகிறது.
எதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது என்பதற்கான உறுதியான காரணங்கள் தெரியவில்லை. வரலாற்று ரீதியாகவும், கற்பனையாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
பிரான்ஸ் நாட்டில்தான் முதன் முதலில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டது. 16-ம் நுாற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில், அப்போதைய ஜூலியன் காலண்டரின்படி, ஏப்ரல் 1-ம் தேதிதான் புத்தாண்டு தினமாக கடைபிடிக்கப்பட்டது. பின்னர், 13-ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர், 1582 பிப்., 29-ல், புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார்.அதில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாக மாற்றப்பட்டது.
ஆனால், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இந்த மாற்றத்தை உடனடியாக ஏற்கவில்லை. ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி போன்றவை இந்த காலண்டரை 1582-ம் ஆணடு அக்டோபர் மாதம் முதல் பயன்படுத்த தொடங்கின. 1752-ம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்காவிலும் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு வந்தது. புதிய காலண்டரை ஏற்காமல், ஏப்ரல் 1-ம் தேதியையே புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்தவர்களை கேலி செய்யும் விதமாக ‘முட்டாள் தினம்’ உருவாக்கப்பட்டது. நாளடைவில் அனைத்து நாடுகளும் ஏப்ரல் 1- ம் தேதியை முட்டாள்கள் தினமாக கடைபிடிக்கத் தொடங்கின.
1508-ம் ஆண்டு முதலே பிரான்சில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்ததாகவும், 1539-ம் ஆண்டிலேயே டச்சு மொழியில் இத்தினம் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்ததென்றும், சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் நாட்டில், ஓடைகள் மற்றும் ஆறுகளில் ஏப்ரல் மாதத்தில் நிறைய மீன்கள் கிடைக்கும். அதனை எளிதாக சிக்கிக் கொள்ளும் அந்த மீன்களை முட்டாள் மீன்கள் என அழைக்கப்பட்டன. இது பின்னர், இந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், பிரான்ஸ் நாட்டு மக்கள் தங்களுக்குள் ஏமாற்றி விளையாடத் தொடங்கினர். அதுவே ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள் தினமாக மாறுவதற்கு காரணம் என்போரும் உண்டு.
1466-ம் ஆண்டு, பிலிப்பைன்ஸ் நாட்டு அரசனை அவரது அவைக் கவிஞர் முட்டாளாக்கிய தினம் இது என்றும் அதனால், அந்த நாள் முட்டாள்கள் தினமாக மாறியதாகவும் ஒரு ஒருகதை உண்டு.
ஆங்கில கவிஞர் ஜெஃப்ரி, 14 ஆம் நூற்றாண்டில் எழுதிய சேவல் நரி கதைதான் ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினமாக கடைபிடிக்கப்படுவதற்கு மூல காரணம் என மற்றொரு கதையும் உண்டு.
நரியிடம் சிக்கிய சேவல் ஒன்று, பொய் சொல்லி, அதனிடமிருந்து தப்பும் என இருக்கும் அந்த கதையில், 'Syn March began' என்று ஒரு குறிப்பு இடம் பெற்றிருக்கும். இதனை மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து 32 வது நாள் என்பதாக புரிந்துக் கொண்டு, ஏப்ரல் 1-ம் தேதியைதான் அவர் குறிப்பிட்டார் என்றனர். இதனால்தான் ஏப்ரல்-1 ஆம் தேதி முட்டாள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது என்போரும் உண்டு.
ஏமாற்றங்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்புக்களாலேயே ஏற்படுகிறது. எல்லோர் வாழ்க்கையில் ஏமாற்றாமல் வருவது ஏமாற்றம் மட்டுமே. ஏமாற்றத்தை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உணர்த்துவற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுவதாக எடுத்துக்கொள்ளலாம்.
x
No comments:
Post a Comment