Sunday, 29 April 2018

தெரியுமா இவரை 19 - தாதா சாகேப் பால்கே

இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக மதிக்கப்படுபவர், தாதா சாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே. நாசிக்  அருகே உள்ள திரும்பகேஸ்வரில் 1870-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பிறந்தார். 

ஆரம்பக் கல்வியை நாசிக்கில் பயின்ற அவர், 1885-ம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஓவியம், சிற்பம் ஆகிய துறைகளில் அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை முடிந்து சரியான வேலை கிடைக்காத நிலையில், ஓவியராகவும், மேஜிக் செய்தும் பிழைப்பை நடத்தினார். 

அந்த காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு சினிமா அறிமுகமானது.  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஊமைப்படங்கள் மக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன. அப்போது காட்டப்பட்ட படங்கள் அனைத்தும், ஒலி இல்லாத ஊமைப்படங்களாகவே இருந்தன. படத்தின் கதையை விளக்குவதற்காக, அப்போது தியேட்டர்களில் நாடக க் கலைஞர்கள் இடையிடையே கதையை விளக்கிச் சொல்வார்கள். படத்திற்கு சுவாரஸ்யத்தைச் சேர்ப்பதற்காக இசைக் குழுவும் நேரடியாக பின்னணி இசையை வாசிப்பார்கள். 

அந்தப் படங்களைப் பார்த்த பால்கேவுக்கு சினிமா மீது ஆர்வம் பிறந்த து. இங்கிலாந்தில் உள்ள வால்டன் ஸ்டுடியோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டு திரும்பிய பால்கே, சொந்தமாக கேமரா வாங்கிக் கொண்டு வந்து, படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினார்.

தயாரிப்பு, கதை, வசனம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என சகலத்தையும் அவரே கவனித்துக் கொண்ட அவருக்கு பெரும் சவாலாக இருந்தது நடிகர்கள்தான். 

நாடகங்களில் பெண்கள் நடிப்பதே பெரும் பாவமாக கருதப்பட்ட அந்த நாளில், ஆண்களை பெண் வேடமிட்டு நடிக்க வைத்தார். மேலும், படத்தில் நடிப்பதற்கு ஆட்கள் கிடைக்காத தால், தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நடிக்க வைத்தார்.  தீவிர முயற்சியால் 1913-ல், ‘ராஜா அரிச்சந்திரா’ என்ற திரைப்படத்தை எடுத்தார். அதுதான், இந்தியாவின் முதல் சினிமா. மவுனப் படமான அதில் வரும் டைட்டில்கள் மராத்தியில் எழுதப்பட்டிருந்தன. அது மும்பையில் தயாரிக்கப்பட்டு, திரையிடப்பட்டது. 1940-ம் ஆண்டு வரை 70-க்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கிய அவர், பெரும்பாலும் அந்த திரைப்படங்களை அவரே இயக்கினார்.

பெரும் சிரமங்களுக்கு சினிமா வாழ்க்கையை நடத்திய தாதா சாகேப் பால்கே, 1944-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தமது 73-ம் வயதில் காலமானார். அவரது நினைவாக திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. 

Monday, 23 April 2018

தெரியுமா இவரை - 18 சாமுவேல் ஹானிமன்

ஆங்கில மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர். சாமுவேல் ஹானிமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையே ஹோமியோபதி மருத்துவம். ஜெர்மனியின் மிசென் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் ஏப்ரல் 10, 1755 – ம் ஆண்டு பிறந்தார். 

லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று, வியன்னாவின் எர்லேங்கன் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, சிறந்த மருத்துவராகப் பணியாற்றினார். 

ஆங்கில மருத்துவம் மூலம் நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த முடியாமலும், அதற்காக உடகொள்ளும் மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதும் அவருக்கு பெரும் சோர்வை ஏற்படுத்தின. இதனால், வெறுத்துப்போன ஹானிமன், மருத்துவத் தொழிலை விட்டு விலகி, புத்தகங்களை மொழி பெயர்க்கும் தொழிலை மேற்கொண்டார். 

வில்லியன் கலின் என்ற புகழ்பெற்ற மருத்துவரின் நூலை மொழிபெயர்க்கும்போது, சின்கோனா மரப்பட்டையின் மருத்துவ குணம் பற்றி அறிந்தார். சின்கோனா மரப் பட்டைகளில் உள்ள கசப்புத் தன்மை மலேரியா காய்ச்சலை குணமாக்கும் என்ற வாசகம் அவரது கவனத்தைக் கவர்ந்த்து.  இதுதொடர்பான ஆய்வில் இறங்கிய ஹானிமன், சின்கோனா மரப்பட்டைச் சாறைக் குடித்து தமது உடலில் காய்ச்சலை வரவழைத்துக் கொண்டார். பின்னர், அதிக வீரியம் கொண்ட அதே மரப்பட்டைச் சாறைக் குடித்து காய்ச்சலை குணமாக்கிக் கொண்டார். தொடர்ந்த ஆய்வுகள் மூலம், ‘எது ஒன்றை உருவாக்கும் தன்மை உடையதோ அது தான் அழிக்கும் ஆற்றல் கொண்டது’. இதனைக் கொண்டு ‘லைகாஸ்கேர்லைகாஸ்’ என்ற தத்துவத்தினை உருவாக்கினார். 

விஷத்தன்மை கொண்ட மருந்துகளை தண்ணீர் ஆல்கஹால் போன்றவற்றில் நீர்த்துப்போக செய்து ஆய்வு செய்தபோது முன்பைவிட அதிக அளவில் அறிகுறிகள் கிடைத்தது. இவ்வாறு நீர்த்துப் போகும் நுட்பமான அளவுகளின் வீரியமூட்டும் முறையையும் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் 1796-ம் ஆண்டு ‘ஓமியோபதி’ என்ற மருத்துவ முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
ஒத்தநோய் அறிகுறிகளை ஒத்த மருந்துகளால் (முள்ளை முள்ளால் எடுப்பது) இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்துவது இம்மருத்துவ முறையின் அடிப்படைத் தத்துவமாகும். பக்க விளைவுகளோ, பத்தியமோ இல்லாத இந்த மருத்துவமுறையில், நோயின் தன்மைக்கேற்ப உணவுக் கட்டுப்பாடுகள் உண்டு. 

1807-ல் எழுதிய நூலில் தன் மருத்துவ முறையைக் குறிப்பிட ‘ஹோமியோபதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பின்னர், அவர் உருவாக்கிய மருத்துவமுறை ஹோமியோபதி மருத்துவமுறை என்று அழைக்கப்பட்டது. தனி மனிதனாக சுமார் பாடுபட்டு, ‘ஹோமியோபதி’ என்ற புதிய மருத்துவ முறையை உலகுக்கு வழங்கிய சாமுவேல் ஹானிமன் 88-வது வயதில் 1843-ம் ஆண்டு மறைந்தார். இவரது பிறந்த தினம் சர்வதேச ஹோமியோபதி மருத்துவ தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

இது எப்படி இருக்கு?

புதுசா கல்யாணமான ஜோடிகள், பொது இடங்களில் பண்ற அலப்பறைகளுக்கு அளவே இருக்காது. சுற்றிலும் இருக்கிறவங்க யாரையும் கண்டுக்காம அவங்க பண்ற சேட்டைகள் முகம் சுளிக்கிற அளவுக்கு இருக்கும். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று பெரியவங்க எந்த அர்த்ததுல சொன்னாங்களோ தெரியாது. 

ஆனால், ஆரம்பத்துல அவங்க கிட்ட இருக்கிற நெருக்கம் போகப் போக குறைந்து, பின்னாளில், எலியும், பூனையும் போலவும், கீரியும் பாம்பு மாறிடுவாங்க அப்படீங்கறது பொதுவான கருத்து. 

ஆனா, இந்த பொதுக் கருத்தை பொய்யாக்கற விதமாக புதுசா ஒரு ஆய்வு முடிவுகள் வந்திருக்கு. அதாவது தம்பதிகள் கல்யாணமான புதுசுல இருக்கிறதைவிட, 20 ஆண்டுகளுக்குப் பிறகே அவங்களுக்குள்ள நெருக்கம் அதிகமாகி ரொம்ப சந்தோஷமா இருப்பாங்களாம். 

அமெரிக்காவில், பென்சில்வேனியா ஆய்வாளர்களும், பிரிகாம் இளைஞர் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியிருக்காங்க. 

சராசரியா 37 வயதான ஆண்களும், 35 வயதான பெண்களும் கொண்ட ‘2 ஆயிரத்து 34 தம்பதிகள் கிட்ட இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கு. அவர்கள்கிட்ட, ‘உங்களுக்கு கல்யாணமாகி எந்த காலக்கட்டத்தில் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?’ அப்படின்னு கேட்ட கேள்விக்கு, பெரும்பாலானோர் 20 ஆண்டுகளுக்கு பிறகே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறதா சொல்லியிருக்காங்க. 

19-ம் நூற்றாண்டின் கடைசிப் பெண் மறைவு


உலகின் மிகவும் முதிய மூதாட்டியான நபி தாஜிமா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 117.


ஜப்பான் நாட்டில் ககோஷிமா மாகாணத்திற்கு உட்பட்ட கிகாய் நகரைச் சேர்ந்த நபி தஜிமா 4-8-1900 அன்று பிறந்தவர். உலகின் மிகவும் முதிய மூதாட்டியாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அவருக்கு மகன்கள் மற்றும் மகள் மூலம் பிறந்த வாரிசுகள் 160 பேர் உள்ளனர். 19-ம் நூற்றாண்டில் பிறந்த கடைசி பெண் என்ற பெருமைக்கும் சொந்தக்கா ர ரான நபி தாஜிமா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மருத்துவமனையில்  தங்கி சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் (22.04.2018) காலமானார்.

உலகின் மிகவும்  முதிய மனிதராக கருதப்பட்ட ஜமைகா நாட்டை சேர்ந்த வயலட் பிரவுன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 117வது வயதில் மரணம் அடைந்தார். இதையடுத்து, நபி தாஜிமா, உலகின் மிக முதிய மூதாட்டி இடத்திற்கு முன்னேறினார். 

நபி தாஜிமாவின் மறைவைத் தொடர்ந்து, மற்றொரு ஜப்பானிய பெண்ணான சியோ மியாகோ உலகின் மிக வயது முதிர்ந்த பெண் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  10 நாட்களில் 117 வயதை எட்ட உள்ள  சியோ மியாகோ டோக்கியோ நகரின் கனகாவா பகுதியில் வசித்து வருகிறார்.

Saturday, 21 April 2018

தெரியுமா இவரை – 17 சார்லி சாப்ளின்




ஹாலிவுட்டின் தன்னிகரற்ற கலைஞரும், உலகுக்கே நம்பிக்கையையும் நகைச்சுவையையும் வாரிவழங்கியவரு மான சார்லி சாப்ளின் லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் ஏப்ரல் 16, 1889-ம் ஆண்டு பிறந்தார்.  

பெற்றோர் இசை அரங்குகளில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். குடிப்பழக்கத்தால் சீரழிந்த தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து போக, தாய் மனநல பாதிப்புக்கு ஆளானார். எனவே, பிழைப்புக்காக 5 வயதிலேயே மேடையேறினார். அவரது தயார் கடைசியாக ஏறிய மேடையே, அவருக்கு முதல் மேடையாகவும் அமைந்தது. 12-வது தந்தை இறந்த போக, தாயார் நிரந்தரமாக மனநலம் பாதிக்கப்பட்டார். 

சகோதரருடன் அனாதை இல்லத்தில் வளர்ந்தார் சாப்ளின்.  14 வயதில் மேடை நாடகங்கள் மூலம் அவரது கலையுலகப் பயணம் தொடங்கியது.
அகதியாக  கார்னோ என்ற நாடக குழுவுடன் அக்டோபர் 2, 1912- அன்று அமெரிக்கா சென்றார். நாடகங்களில் நடித்தபடியே சினிமா வாய்ப்புத் தேடிய அவர், கீ ஸ்டோன் சினிமா நிறுவனத்தில் சேர்ந்தார். அவர் நடித்த 
முதல்  மவுனத் திரைப்படம் ‘மேக்கிங் ஏ லிவிங்’ 1914-ம் ஆண்டு வெளியானது.

 ‘கிட் ஆட்டோ ரேசஸ்’ என்ற இரண்டாவது படத்தில் தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத் தொப்பி, சிறு தடி’ என்ற இந்த கெட்டப்பில் தோன்றிய கோமாளி கனவான் வேடத்தைப் பார்த்து உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. பரிதாபத்தையும், சிரிப்பையும் ஒன்றாக வரச்செய்யும்  இந்த தோற்றமே அவரது நிரந்தர அடையாளமாகவும் மாறிப்போனது. அதன் பின்னர் அவரது கலையுலக வாழ்க்கை ஏறுமுகமாகவே இருந்த்து. ஒரே ஆண்டில் 35 திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு பிசியான நடிகரானார். 

அவர் நடித்த அத்தனைப் படங்களும் சாதனைகள் படைத்தன. ஸ்லாப்ஸ்டிக் காமெடி எனப்படும் உடல் மொழி மற்றும் பாவனைகளால் உலக மக்களை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்தார்.

வெறும் நடிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல், கதை, வசனம், இயக்கம், இசை, படத்தொகுப்பு நடனம், தயாரிப்பு என திரையுலகில் அத்தனை துறைகளிலும் கோலோச்சினார் சாப்ளின். அவரது படங்கள் நகைச்சுவை 
தோரணங்களாக இல்லாமல் ஏழைகளின் பரிதாப வாழ்க்கையும்,  முதலாளிகளின் பேராசையையும் விமர்சித்தன. பொங்கி பிரவாகமெடுக்கும் சிரிப்பும், மெலிதாக இழையோடும் சோகமும் கொண்ட அற்புத காவியங்கள் அவரது படங்கள்.

இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை வென்ற சாப்ளினுக்கு  இங்கிலாந்து அரசு 1985-ம் ஆண்டு அஞ்சல் தலைவெளிட்டு கௌரவித்த்து. தனித்துவமான நகைச்சுவையால் உலகையே கட்டிப்போட்ட சார்லி சாப்ளினின் தனிப்பட்ட வாழ்க்கை சோகங்களால் சூழப்பட்டது.

“நான் மழையில் நனைய ஆசைப்படுகிறேன், நான் அழுவது உலகுக்கு அப்பொழுதுதான் தெரியாது!” என்பது சார்லி சாப்ளின் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம்.

நான்கு முறை திருமணம் செய்த சாப்ளினுக்கு முதல் மூன்று திருமணங்கள் தோல்வியில் முடிந்தன. தமது 29-வது வயதில், 17 வயதான நடிகை மில்ட்ரெட் திருமணம் செய்த சாப்ளினுக்கு இரண்டே ஆண்டுகளில் மணமுறிவு ஏற்பட்டது. அவர்களுக்கு பிறந்த குழந்தையும் 3 நாட்களில் இறந்தது.

பின்னர், 16 வயது நடிகை லிடா கிரேவை இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டபோது சாப்ளினுக்கு வயது 35. இந்த திருமணமும் தோல்வியில் முடிந்த்து. 2 குழந்தைகள் பிறந்த பிறகு, லிடா கிரேக்கும் சாப்ளினுக்கும் ஒத்துப் போகவில்லை. குழந்தைகளுடன் பிரிந்து சென்ற லிடா கிரே, பின்னர் சட்டப்பூர்வமாக விவகாரத்து பெற்றார்.

பின்னர், 21 வயது பவுலட் கோர்ட் என்கிற நடிகையுடன் நெருக்க மாகப் பழகிய சாப்ளின், அவரை திருமணம் செய்து கொண்டார்.  அப்போது சாப்ளி னுக்கு வயது 43. இந்த வாழ்க்கையும் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. 

நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த 16 வயது ஊனா ஓநில் என்கிற பெண்ணை சாப்ளின் 4-வது திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 54. சாப்ளின் கடைசிவரை ஒற்றுமையாக வாழ்ந்த ஓநிலைப் பற்றி தன் சுயசரிதையில் ‘அவருடன் ஏற்பட்டது மட்டுமே மிகச் சரியான காதல்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தம்பதி 8 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.

1952-ல் அமெரிக்காவைவிட்டு வெளியேறிய சாப்ளின், சுவிட்சர்லாந்தில் குடியேறினார். 1972-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொள்ள அகாடமி அழைத்தது. தயக்கத்துக்குப் பிறகு அழைப்பை ஏற்று அமெரிக்கா வந்த சாப்ளினுக்கு அரங்கில் அத்தனை பேரும் எழுந்து நின்று இடைவிடாமல் 12 நிமிடங்கள் கை தட்டினார்கள். இது ஆஸ்கர் விருது விழா வரலாற்றில் மிகவும் நீளமான கை தட்டலாகும்.

சாப்ளின் 1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது 88-வது வயதில் இறந்தார். இவரது உடலை வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். ஆனால், அங்கும் அவரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

மார்ச் 1, 1978-ம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள்.

Sunday, 15 April 2018

தெரியுமா இவரை - 16 ஆபிரகாம் லிங்கன்


  அடிமைத்தனத்தையும் இனவெறியையும் ஒழித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக திகழ்ந்தவர் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ஹார்டின் என்ற கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் 12.02.1809 – ம் தேதி பிறந்தார். தந்தை தாமஸ், தாய் நான்சி. தந்தை செருப்பு தைக்கும் கூலித் தொழிலாளி. தமது 9-வது வயதிலேயே லிங்கன் தாயை இழந்தார்.
   ஊர் ஊராகச் சென்று பாடம் சொல்லித் தரும் ஆசிரியர் ஒருவரிடம் மூன்று வாரங்கள் ஆரம்பக் கல்வி பயின்ற லிங்கன் பள்ளியில் படித்தது சுமார் ஒரு வருடம் மட்டுமே. குழந்தைப் பருவத்தில் இருந்தே அப்பாவின் அனைத்து வேலைகளிலும் அவருக்கு உதவியாக இருந்து வந்தார்.
  நியு ஆர்லியன்சில் அவர்கள் குடும்பம் வசித்தபோது, கறுப்பினத்தவர்கள் விலைக்கு வாங்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்படுவதையும், சாட்டையால் அடித்து கொடுமைப் படுத்தப்படுவதையும் கண்டு வருந்தினார். .
   இந்தக் கொடுமைகளை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று உறுதிபூண்டபோது இவருக்கு வயது 15. சுயமாக கல்வி பயின்ற அவர், சட்டப்படிப்பு படித்த அவர்,. சிறிது காலம் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1830-ல் குடும்பம் இல்லினாய்சுக்குக் குடியேறியது. பேச்சாற்றலில் வல்லவரான லிங்கன், அரசியலிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
   ‘வீக்’ என்கிற கட்சியில் சேர்ந்து இல்லினாய்ஸ் மக்கள் பிரதிநிதி சபைக்கு 1834-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகாலம் அந்த பதவியை வகித்தார். பின்னர், அமெரிக்காவின் குடியரசு கட்சியில் சேர்ந்து 1858-ல் அந்த கட்சியின் சார்பில் அமெரிக்க நாட்டு செனட் பதவிக்கு போட்டியிட்டு எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார்.

    பிறகு, 1860-ம் ஆண்டு குடியரசு கட்சியின் வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டு வெற்றிப் பெற்று நாட்டின் 16-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

   அரசியலில் நுழைந்த து முதல் கருப்பின மக்களின் அடிமைத்தனம் ஒழிய பாடுபடுவதையே லட்சியமாக கொண்டிருந்த லிங்கன், அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863-ல் வெளியிட்டார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பு உருவானதால், அது உள்நாட்டு போர் வரை சென்றது. அதை முடிவுக்குக் கொண்டு வந்த லிங்கன், 1864-ம் ஆண்டு மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
      1865-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந்தேதி புனித வெள்ளி அன்று,  ‘அவர் அமெரிக்கன் கசின்’ என்கிற நகைச்சுவை நாடகத்தைக் காண தமது மனைவியுடன் சென்ற லிங்கன் துப்பாக்கியால் சுடப்பட்டார். பின்னர், ஏப்ரல் 15-ம் தேதி அவர் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 56.  


Monday, 2 April 2018

ஏப்ரல் 1-ம் தேதி ஏன் முட்டாள்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது?

அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம் போன்று ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தினம். கனடா, நியூசிலாந்து, லண்டன், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பாரம்பரிய விழாக்கள் போல் இந்த நாள் கொண்டாடப்ப டுகிறது. 

எதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது என்பதற்கான உறுதியான காரணங்கள் தெரியவில்லை. வரலாற்று ரீதியாகவும், கற்பனையாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 

பிரான்ஸ் நாட்டில்தான்  முதன் முதலில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டது.  16-ம் நுாற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில், அப்போதைய ஜூலியன் காலண்டரின்படி, ஏப்ரல் 1-ம் தேதிதான்  புத்தாண்டு தினமாக கடைபிடிக்கப்பட்டது. பின்னர், 13-ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர், 1582 பிப்., 29-ல், புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார்.அதில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாக மாற்றப்பட்டது. 

ஆனால், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இந்த மாற்றத்தை உடனடியாக ஏற்கவில்லை. ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி போன்றவை இந்த காலண்டரை 1582-ம் ஆணடு அக்டோபர் மாதம்  முதல் பயன்படுத்த தொடங்கின. 1752-ம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்காவிலும் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு வந்தது. புதிய காலண்டரை ஏற்காமல், ஏப்ரல் 1-ம் தேதியையே புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்தவர்களை கேலி செய்யும் விதமாக ‘முட்டாள் தினம்’ உருவாக்கப்பட்டது. நாளடைவில் அனைத்து நாடுகளும் ஏப்ரல் 1- ம் தேதியை  முட்டாள்கள் தினமாக கடைபிடிக்கத் தொடங்கின. 

1508-ம் ஆண்டு முதலே பிரான்சில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்ததாகவும், 1539-ம் ஆண்டிலேயே டச்சு மொழியில் இத்தினம் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்ததென்றும், சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

பிரான்ஸ் நாட்டில்,  ஓடைகள் மற்றும் ஆறுகளில் ஏப்ரல் மாதத்தில் நிறைய மீன்கள் கிடைக்கும். அதனை எளிதாக சிக்கிக் கொள்ளும் அந்த மீன்களை முட்டாள் மீன்கள் என அழைக்கப்பட்டன. இது பின்னர், இந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், பிரான்ஸ் நாட்டு மக்கள் தங்களுக்குள் ஏமாற்றி விளையாடத் தொடங்கினர். அதுவே ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள் தினமாக மாறுவதற்கு காரணம் என்போரும் உண்டு. 

1466-ம் ஆண்டு, பிலிப்பைன்ஸ் நாட்டு அரசனை  அவரது அவைக் கவிஞர் முட்டாளாக்கிய தினம் இது என்றும் அதனால், அந்த நாள் முட்டாள்கள் தினமாக மாறியதாகவும் ஒரு ஒருகதை உண்டு. 

ஆங்கில கவிஞர் ஜெஃப்ரி, 14 ஆம் நூற்றாண்டில் எழுதிய சேவல் நரி கதைதான் ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினமாக கடைபிடிக்கப்படுவதற்கு மூல காரணம் என மற்றொரு கதையும் உண்டு.  

நரியிடம் சிக்கிய சேவல் ஒன்று, பொய் சொல்லி, அதனிடமிருந்து தப்பும் என இருக்கும் அந்த கதையில், 'Syn March began' என்று ஒரு குறிப்பு இடம் பெற்றிருக்கும். இதனை மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து 32 வது நாள் என்பதாக புரிந்துக் கொண்டு, ஏப்ரல் 1-ம் தேதியைதான் அவர் குறிப்பிட்டார் என்றனர். இதனால்தான் ஏப்ரல்-1 ஆம் தேதி முட்டாள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது என்போரும் உண்டு. 

ஏமாற்றங்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்புக்களாலேயே ஏற்படுகிறது. எல்லோர் வாழ்க்கையில் ஏமாற்றாமல் வருவது ஏமாற்றம் மட்டுமே. ஏமாற்றத்தை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உணர்த்துவற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுவதாக எடுத்துக்கொள்ளலாம். 

x

Thursday, 15 March 2018

நமக்கு 133 வது இடம், எதிலே தெரியுமா?


ஐ.நா. வெளியிட்டுள்ள உலகிலேயே 2018-ம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்ல பின்லாந்து நாடு முதலிடம் பிடிச்சிருக்கு.  நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூஸிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

அமெரிக்கா 18-வது இடத்தையும், பிரிட்டன் 19-வது இடத்தையும், ஐக்கிய அரபு அமீரகம் 20-வது இடத்தையும் வகிக்கின்றன. இந்த பட்டியலில் ஆண்டு 122 –ம் இடத்தில் இருந்த இந்தியா மிகவும் பின் தங்கி 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கு.  நமது அண்டை நாடான பாகிஸ்தான், சில இடங்கள் முன்னேறி 75-வது இடத்திற்கு வந்திருக்கு.   
பாகிஸ்தான் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற அண்டை நாடுகளும் இந்த அறிக்கையில் முன்னேறிய இடத்தில் உள்ளன. பூடான் 97-வது இடத்தையும், நேபாளம் 101-வது இடத்தையும், இலங்கை 116-வது இடத்தையும், சீனா 86-வது இடத்தையும் பிடிச்சிருக்கு.
2012-ம் ஆண்டு முதல், ஐ.நா. அமைப்பு ஆண்டுதோறும் உலகத்தின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் மொத்தம் 156 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஒருவரின் வாழ்நாள் கால அளவு, சமூகத்தின் ஆதரவு, ஊழலின் அளவு உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் ஒரு நாட்டின் மகிழ்ச்சியின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.





பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பாதுகாப்பனதா ?

கிராமங்கள்ல வாய்க்கால், கிணறு, குளம், ஆறுகள்ல இருக்கிற தண்ணியை ரெண்டு கையாலயும் அப்படியே அள்ளி குடிச்ச காலம் உண்டு. அதனால யாருக்கும் எந்த பிரச்சினையும் வந்தது இல்லை. ஆனா இப்போ அப்படியான காலம் இல்லை. தண்ணியை காசு கொடுத்து வாங்கி குடிக்கிற நிலைக்கு வந்துட்டோம்.

பிளாஸ்டிக் பாட்டில்,  பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றில் அடைத்து விற்கப்படும் குடிநீரை பயன்படுத்தறது இப்போ நாகரீகமாவும், ஃபேஷனாவும் மாறிடுச்சு.அதுல, பல ஆபத்துக்கள் ஒளிஞ்சிருக்கிறதா கூறுது ஆய்வு ஒண்ணு. அண்மையில அமெரிக்காவில் உள்ள ‘ஆர்ப்  மீடியா’ என்ற பத்திரிகையாளர் அமைப்பு நியூயார்க் பல்கலைக்கழகத்தோட  இணைஞ்சு ஒரு ஆய்வு மேற்கொண்டது.

அதாவது, உலகம் முழுவதும் உள்ள 11 முன்னணி நிறுவனங்களோட 250 குடிநீர் பாட்டில்களை சோதனை பண்றதுதான் அ ந்த ஆய்வு. அந்த பரிசோதனையின் முடிவுல பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்திருக்கு. அது என்னன்னா, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 93 சதவீத தண்ணீர் பாட்டில்கள்ல பிளாஸ்டிக் மற்றும் ரசாயன துகள்கள் ஏராளமா இருந்த்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அதாவது, பாலிபுரோப்லின், நைலான், பாலித்தீன், டெரபதலேட் (பெட்)  ஆகிய ரசாயன துகள்கள் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரில் கலந்திருந்திருச்சாம்.

சராசரியா ஒரு லிட்டர் தண்ணீரில் 0.1 மில்லி மீட்டர் அளவு கொண்ட 10.4 பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாம். சில பாட்டில்கள்ல ஒரு லிட்டர் நீரில் 10 ஆயிரம் துகள்கள் கூட இருந்தனவாம்.

இந்த துகள்களை செரிமானம் செய்யும் சக்தி மனித உடலுக்கு கிடையாதாம். ரத்த சிவப்பணுவை விட சிறிய அளவிலான இந்த துகள்கள், குடல்வழியாக நேரடியா ரத்த குழாய்களுக்குள் போய் கலந்துடுமாம். அப்புறம், அந்த துகள்கள், ஒவ்வொரு உறுப்புகளிலும் தேங்கி,  ஈரல், சிறுநீரகம் போன்ற மோசமான நோய்கள் மனிதனை தாக்குமாம். அதனால, பாட்டில் அடைச்சு விக்கப்படற தண்ணீரும் பாதுகாப்பானதில்லைன்னு ஆய்வாளர்கள் குறிப்பிடறாங்க.

நீதி : பளபளப்பா இருக்கிற எதுவுமே பாதுகாப்பானது இல்லை. (அடடே!)



Monday, 18 December 2017

எதார்த்தமான உண்மைகள்



1. கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்.,  உருவம் கொடுத்தபின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்! 

(நம்ம ஊரு டிசைன் அப்படி)



2. கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை !

(ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை)



3. எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது!

(மிகச் சிரியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)



4. தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது!

(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)



5. ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம்!

(மரணம் ஒரு முடிவு அல்ல!)



6. வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை!

(நிதர்சனமான உண்மை)



7. அவசரத்துக்கு ஒரு கொத்தனாரைக் கூட  தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!  ஏன் இந்த கொடுமை!

(ஊருக்கு ரெண்டு இன்ஜினீயரிங் காலேஜ் தான் காரணம்)



8. இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!

(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)



9. இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்!

(எல்லாம் பீஸ் தான் காரணம்)



10. இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!

(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)



11. 250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்!

(லஞ்சம் தான் காரணம்)



12. மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்!

(யூஸ் பண்ணத் தெரியலை அவ்வளவுதான் )



13. தூக்கம் வராமல் முதலாளி... தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு!

(கரன்சி பண்ற வேலை)



14. கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் உங்களுக்கு தெரிவதில்லை!

(இது மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை)

- வாட்ஸ் ஆப் சித்தன் 

Friday, 8 December 2017

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்



1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.

11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.

14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.

16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.

18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.

19. கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.

20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய கசுக்கொட்டையை (முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.

23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.

24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.

25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.

34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.

39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.

42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.

43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.

44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.

45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.

46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.

47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.

49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.

52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.

53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.

54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.

55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.

56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.

57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.

60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.

62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.

63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.

64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.

65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.

70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.

71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.

72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.

74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.

75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.

76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.

77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.

80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.

81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.

82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.

84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.

85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.

88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.

89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.

90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.

92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.

93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.

94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.

95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.

96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.

97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.

98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.

100. துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.

101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.

102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.

103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.

104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.

105. அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.

106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.

107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.

108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.

109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.

111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.

112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.

113. காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.

114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.

115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.

119. தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் “பிரஷ்”ஷாக இருக்கும்.

122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.

123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.

124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.

126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.

127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.

128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.

129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

130. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.

132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.

133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.

136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.

137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.

138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்

(வாட்ஸ் ஆப்பில் வந்தது.)

Sunday, 15 October 2017

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா?


"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
என்கிறார் திருவள்ளுவர். ( குறள் 969 )
கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்.

இந்திய காடுகளில், அதிகம் காணப்படும் விலங்குகளில், மான் இனமும் ஒன்று. சருகுமான், புள்ளி மான், குரைக்கும் மான், நான்கு கொம்பு மான், எலிமான், கடமான், ஆண்டி லோப் மான், சாம்பார் மான் உள்ளிட்ட, 200-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும், 80-க்கும் மேற்பட்ட மான் இனங்கள் உள்ளன.
இந்த மான் இனங்களைப் பற்றி நாம் படித்திருப்போம். ஆனால், கவரி மான் என்ற வகை மான் இருக்கிறதா என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? ஆனால், இப்படி ஒரு மான் இருப்பது குறித்த தகவல்கள் வேறு எந்த புத்தகங்களிலும் இல்லை. குழப்பமாக இருக்கிறது அல்லவா?

969- என் திருக்குறளைக் கவனமாகப் படித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அதில் சொல்லப்பட்டு இருப்பது ‘கவரி மான்’ அல்ல, ‘ கவரி மா’ என்பதே சரி!  கவரி மா பேச்சு வழக்கில் கவரி மானாக மருவிவிட்டது.

‘கவரி மா’ என்று ஒரு விலங்கு உண்டு. ஆனால், அது மான் இனம் அல்ல.  
புறநானூற்றில் இந்த விலங்கு பற்றிய குறிப்பு உண்டு.
"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்"

இமயமலைப் பகுதியில், கவரிமா என்ற விலங்கு, நரந்தை எனும் புல்லை உண்டு, தன் துணையுடன் மகிழ்ச்சியாக வாழும் என்பது இதன் பொருள்.

கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் விலங்கு. மேலும், அது மாடு வகையைச் சேர்ந்த விலங்கு.  
வள்ளுவர் குறிப்பிடுவது இந்த விலங்கைத்தான்.  கவரி மா குறித்து பதிற்றுப் பத்திலும் குறிப்புகள் உள்ளன.
‘முடி சடை போல தொங்கக் கூடிய விலங்கு’ கவரி மா. அந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம். கவரி என்பதில் இருந்துதான் ‘சவரி முடி’ என்ற இன்றைய சொல் உருவானது. ‘மா’ என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல்.

பனிப் பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு, அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்.
அதே போல சில மனிதர்கள். அவர்கள் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால், அவர்கள் வாழ்வது அரியதாகி விடும். என்பதே 969 எண் திருக்குறள் சொல்லும் பொருள்.

எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை. பெரும்பாலான உரைகளும் தவறு இல்லை.ஆனால் கவரிமா வைக் கவரிமான் எனப் புரிந்து கொள்வது தவறு!


Saturday, 14 October 2017

படித்ததில் ரசித்தது



"என்னாடா  ? தலையில இவ்வளவு பெரிய கட்டு,  என்னாச்சு ??"

"அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "

"உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "

"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி "

☺

"டொக் டொக்"

"அம்மா.. யாரோ வாசல்ல..!"

"அது டேபிள்மேட்ரா.."

"டேபிள்மேட்டா? அப்பாம்மா"

"அது உங்கப்பாதான் .....!

“ 'ஏன் லேட்டு?'ன்னு கேட்டா பதினெட்டு விதமான ஆங்கிள்ல கதை சொல்லுவாரு.  அதான் அவருக்கு டேபிள்மேட்னு பேர் வச்சிருக்கேன்..."

☺

திருமணம் முடிந்து மணப் பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்ல தயாராகி கண்களில் கண்ணீருடன் புறப்படுகிறாள். அப்போது அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அவன் தந்தையிடம் கேட்கிறான்.

☺

மகன் : அப்பா... ஏன் அந்த கல்யாணப் பெண் அழுகிறாள்?.

அப்பா : ஏன் என்றால் அவள் தனது பெற்றோரைப் பிரிந்து ஒரு புது இடத்திற்கு செல்கிறாள்.

மகன் : அப்போ அந்த மணமகன் ஏன் அழவில்லை?".

அப்பா : அவன் நாளைல இருந்து தினமும் அழுவான்.


☺

   ஒரு முதலை பண்ணையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள். யார் அந்த முதலைகள் நிறைந்த குளத்தில் குதித்து குளத்தின் மறு கரையை அடைகிறார்களோ, அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்று. அனைவரும் அமைதியாக நின்று கொண்டிருந்தார்கள். 

  அப்போது ஒருவன் மட்டும் குளத்தில் குதித்து மறு கரையை அடைந்தான்.
அவனுக்கு உடனே ஒரு கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. 

  உடனே அவன் கூட்டத்தினரை பார்த்து," என்னை யார் பின்னல் இருந்து குளத்தினுள் தள்ளியது?" என்று கேட்டான். கூட்டத்தினர் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த அவன் மனைவி அவனை பார்த்து புன்னகைத்தாள்.

நீதி : ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்

☺

மனைவியை ஆங்கிலத்தில் wife  என்று அழைப்பதன் அர்த்தம் இதுதான்
‘Without information fight everytime ’  இதைத்தான் ஆங்கிலேயர்கள் சுருக்கி wife என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்தனர்.  எப்ப வேணாலும் ஏழரை 

☺


உலகத்துல 3 விஷயம் முடியாது.

1) தலைமுடியை எண்ண முடியாது
2) கண்களை சோப்பால் கழுவ முடியாது
3) நாக்கை வெளிய நீட்டிவிட்டு மூச்சுவிட முடியாது
உடனே நாக்கை வெளிய விட்டு மூச்சுவிட்டு பாக்குற உங்களயெல்லாம் திருத்தவே முடியாது.