Sunday, 8 October 2017

அடடே – 1



'என்னைத் தவிர யாரை கட்டியிருந்தாலும்  உன் கூட குடும்பம் நடத்தியிருக்க முடியாதுபெரும்பாலான கணவன் மனைவிக்கு இருக்கும் ஒன்று பட்ட எண்ணம் இதுவே.
  

நம்ம தமிழ்நாட்டில் பொறுத்தவரை  எல்லாரும் ஹெல்மெட் அணிவது போலீஸுக்கு பயந்து தானே, தவிர உயிருக்கு பயந்து அல்ல.


மருத்துவமனையில் உறவினரை நலம் விசாரிப்பதற்கு நாலு நல்ல வார்த்தைகளை விட, நாலு நல்ல ஆப்பிள்களே போதுமானதாய் இருக்கிறது.
  

ஒரு வருடத்திற்கு முன்பு மணக்கோலத்தில்  நண்பனை  சிரிப்போடும், அவன் மனைவியை  கண்ணீரோடும் பார்த்த காட்சியில், ஓராண்டுக்குப் பின், கண்ணீர் இடம் மாறியிருந்த்து.
  

பெண்களை விட ஆண்களுக்கு நல்லா சமைக்க தெரியும்ஆனால் ஆண்கள் ஒரு நாள் சமைக்கிற பொருளை வைத்து பெண்கள் ஒரு வாரத்துக்கு சமைச்சுடுவாங்க .
  

காலையில எழுந்ததும்  Whatsapp ஓபன் பன்ற மாதிரி, படிக்கும் போது பாட புத்தகத்தை  ஓபன் பண்ணியிருந்தா சிலர் உருப்பட்டுருப்பாங்க.
  

ஓட்டலில் சர்வர்  என்ன சாப்பிடறீங்கன்னு கேட்டாலே ஒழுங்கா பதில் சொல்லத் தெரியலைஇதுல கடவுள் வந்து என்ன வரம் வேணும்னு  கேட்டா எப்படி சொல்து ?
  

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெற்றோர்கள்  பிள்ளைகளை அடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள்பின்னர், அவங்க கை வலிக்குதுனு  பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்
  

ஊருக்கே குறி சொல்லும் பூசாரி, ATM வாசல நின்னு, பணம் இருக்கான்னு இன்னொருத்தர்கிட்ட கேட்கிறார்.
  

இரவு கணவனை சாப்பிடவாங்கன்னு மனைவி அழைத்தால், சீரியல்  முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்.


பந்தி பரிமாறுபவர் நமக்கு நன்கு தெரிந்தவராயின் மனதிற்குள் வரும் சந்தோம் அலாதியானது.
  

மனைவியை சமாதானப்படுத்த பீரோவில் இருக்கும் சேலையை பேக் செய்து கிஃப்டா கொடுத்துடணும். அது பழைய சேலைன்னு மனைவியால கண்டுபிடிக்க முடியாது. காரணம், பீரோ முழுக்க அவ்வளவு சேலைகள்.


பேருந்தில் ஏறி அமர்ந்தவுடனே தூங்கிவிடுவது வரம், அவ்வரம் பெற்றவர் நம் அருகில் அமர்ந்திருப்பது சாபம்!
  

ஒரு பெண்  ஒரு நிமிடத்தில் சேலை செலக்ட் செய்கிறாள் என்றால்அந்த சேலை வேறு யாருக்கோ என்று அர்த்தம்.


நல்லா போய்க்கிட்டிருந்த பஸ் திடீர்னு குலுங்கி  குலுங்கி போக ஆரம்பிச்சா,  நாம பஸ்ஸ்டாண்டுக்கு உள்ள வந்துட்டோம்னு அர்த்தம்.


முன்பு ஆண்களுக்கு குட்டிச்சுவர், டீக்கடை பெஞ்ச்! பெண்களுக்கு வீட்டுத் திண்ணை, குழாயடி ! ஆனால், எல்லோருக்குமானது இப்போ வாட்ஸப் ஆயிடுச்சு!
  

பெண்கள் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஒருவர் சொல்வதை கேட்டு அமைதியாக நிற்கிறார்கள் என்றால், து ஃபோட்டோகிராபரிடம் மட்டும்தான்.
  

பேசாமல் இருந்தால்'ஏன் பேச மாட்டேன்ங்கிறீங்க?' என்று  நச்சரிப்பதும், பேசினால், சண்டைக்கு இழுப்பதும் மனைவியின் இயல்பு!!


புரிந்து நடந்து கொண்டால் வாழ்க்கை வசப்படும்.

Saturday, 7 October 2017

சிரிச்சடுங்க பிளீஸ்..


😀

பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.
ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்...முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்....
நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்....

😀

மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதி தான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

😀

தொண்டன் 1: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
தொண்டன் 2: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரமே இல்லைனு சொல்றாங்களாம்.

😀

மருத்துவர் : ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு..
பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க.
😀
டாக்டர்: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...
நோயாளி: ஏன் டாக்டர்?
டாக்டர்: ஸ்டெதஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே..

😀

நோயாளி: டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
டாக்டர் : இந்த டானிக்கை சாப்பிடுங்க.
நோயாளி: சாப்பிட்டா இருமல் சரியாப் போயிடுமா ?
டாக்டர்: no no...நல்லா இருமலாம்...

😀

டாக்டர் : தற்கொலைக்கு முயற்சி செஞ்சீங்களாமே?
நோயாளி: ஆமா டாக்டர் வயித்துவலி பொறுக்க முடியல....
டாக்டர்: நான் தான் நாளைக்கு ஆப்பரேஷன் பண்றேன்னு சொல்லிருக்கேன்ல.... அதுக்குள்ள என்ன அவசரம்?

😀

ஒருவர்: எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?
டாக்டர்: ஏன்?
ஒருவர்: என் மனைவியை திட்ட வேற வழி தெரியலை டாக்டர்...

😀

நடிகை: டாக்டர்! எனக்கு பல்லு கூச்சமா இருக்கு !
டாக்டர்: பரவாயில்லை... விடுங்க! கூச்சம் அங்கேயாவது இருந்துட்டுப் போகட்டும்!

😀

டாக்டர்: தினமும் வெறும் வயிற்றில் காலையில் வெந்நீர் குடிக்கணும்
ஒருவர்: இப்பவும் வெந்நீர்தான் டாக்டர் குடிக்கிறேன். என்ன... என் மனைவிதான் அதை காபினு சொல்றா..

😀

என்ன டாக்டர் இது... பிரிஸ்கிரிப்ஷன்ல 'ஐ லவ் யூ...'ன்னு எழுதியிருக்கீங்க..?'
''சாரி! இது நர்சுக்கு கொடுக்கவேண்டிய சீட்டு... இடம் மாறிடுச்சு!''

😀

''கையைத் தூக்கவே முடியலை டாக்டர்.''
''டோண்ட் வொர்ரி. உங்க சட்டை பாக்கெட்டுல இருந்து நானே பீஸை எடுத்துக்றேன்....'''

😀

‘‘ஆபரேஷன் பண்ணி எப்படியாவது எங்க அப்பாவைக் காப்பாத்திடுவீங்கன்னு நினைச்சேன்...ஸ்ரீ ஏமாத்திட்டீங்களே டாக்டர்...’’
‘‘நல்ல கதையா இருக்கே... நீங்களே வீணா ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டா, அதுக்கு நானா பொறுப்பு?’’

😀

ராமு :எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்காரு தெரியுமா.?
சோமு : இப்பத்தான் டைனோஸரஸே கிடையாதே.!
ராமு :எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே.அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!

😀

சார்மீனுக்கு புழு வாங்கணும், அங்கே பக்கத்துல ஏதாவது கடை இருக்கா..?
பக்கத்துல ரேஷன் கடை இருக்கு பாருங்க…!!

😀

மனைவி : ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க?
கணவன் : Unmarried - னு சொல்லுவாங்க"

😀

பிளீஸ் சிரிச்சிடுங்க...

கண்டக்டர்: விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கே?

டிரைவர்: இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்குதே!

😀

"மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?"
"அது.... குருவி!"

😀

பிச்சைக்காரர்: அம்மா தாயே... பிச்சை போடுங்க, நான் வாய் பேச முடியாத ஊமை.
வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...எனக்கு காது கேட்காது.

😀

ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?”
ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.


😀

வாட்ஸ் ஆப் வறுவல் - 22

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :

1. WhatsApp      -       புலனம்
2. youtube          -       வலையொளி
3. Instagram       -       படவரி
4. WeChat          -        அளாவி
5. Messanger      -        பற்றியம்
6. Twtter             -         கீச்சகம்
7. Telegram        -         தொலைவரி
8. skype              -          காயலை
9. Bluetooth       -          ஊடலை
10. WiFi             -          அருகலை 
11. Hotspot        -          பகிரலை
12. Broadband    -         ஆலலை
13. Online           -         இயங்கலை
14. Offline           -        முடக்கலை
15. Thumbdrive   -        விரலி
16. Hard disk       -        வன்தட்டு
17. GPS               -        தடங்காட்டி
18. cctv                -        மறைகாணி
19. OCR              -         எழுத்துணரி
 20. LED              -         ஒளிர்விமுனை 
21.3D                  -        முத்திரட்சி
22. 2D                 -         இருதிரட்சி
23. Projector       -        ஒளிவீச்சி
24. printer          -        அச்சுப்பொறி
25. scanner         -        வருடி
26. smart phone  -       திறன்பேசி
27. Simcard          -       செறிவட்டை
28. Charger          -        மின்னூக்கி
29. Digital             -         எண்மின்
30. Cyber             -          மின்வெளி
31. Router           -         திசைவி
32. Selfie             -         தம் படம் - சுயஉரு - சுயப்பு
33. Thumbnail    -          சிறுபடம்
34. Meme            -         போன்மி
35. Print Screen  -          திரைப் பிடிப்பு
36. Inkjet             -           மைவீச்சு
37. Laser              -          சீரொளி
நல்ல முயற்சி நாமும்  தெரிந்துகொள்வோம்.


தமிழ் எண்கள்


       சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பழைய புத்தகக் கடையில் தேடலில் ஈடுபட்டிருந்தபோது, கம்ப ராமாயணம் புத்தகம் கிடைத்தது. அதில், என்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறதே.. ஒன்று அந்த புத்தகம் 1913-ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட புத்தகம். 104 ஆண்டுகள் பழமையானது. இரண்டு, அந்த புத்தகம் இன்னும் நூறாண்டுகளுக்கு தாங்கும் தரத்துடன் இருப்பது இன்னும் விசேஷம். மூன்று, ஐநூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும் அந்த தடியான புத்தகத்தின் துல்லியமான பக்க எண்ணிக்கை தெரியவில்லை. காரணம், அதன் பக்க எண்கள் அனைத்துமே தமிழ் எண்களில் அச்சிடப்பட்டுள்ளது. இத்தனை சிறப்புகள் கொண்ட அந்த புத்தகத்தை பொக்கிஷமாக பாதுகாப்பதுதானே சரியாக இருக்கும்?
     சொல்ல வந்த செய்தி அதுவல்ல என்றாலும், புத்தகத்தில் இருந்த தமிழ் எண்களை எப்படி தெரிந்துகொள்வது என்று குழம்பிக் கொண்டிருந்த போது வாட் ஆப்பில் வந்த தமிழ் எண்கள் இது.. உங்களுக்கும் பயன்படும் என்று இந்த பகிர்வு…

1 – , 2 – , 3 – , 4 – , 5 – ரு, 6 – சு, 7 – , 8 – , 9 – கூ, 10 – o,
11 – கக, 12 – கஉ, 13 – கங, 14 – கச, 15 – கரு, 16 – கசு, 17 – கஎ, 18 – கஅ, 19 – ககூ, 20 –
21 – உக, 22 – உஉ, 23 – உங, 24 – உச, 25 – உரு, 26 – உசு, 27 – உஎ, 28 – உஅ, 29 – உகூ, 30 – o
31 – ஙக, 32 – ஙஉ, 33 – ஙங, 34 – ஙச, 35 – ஙரு, 36 – ஙசு, 37 – ஙஎ, 38 – ஙஅ, 39 – ஙகூ, 40 – o, 
41 – சக, 42 – சஉ, 43 – சங, 44 – சச, 45 – சரு, 46 – சசு, 47 – சஎ, 48 – சஅ, 49 – சகூ, 50 – ருo
51 – ருக, 52 – ருஉ, 53 – ருங, 54 – ருச, 55 – ருரு, 56 – ருஎ, 57 – ருஎ, 58 – ருஎ, 59 – ருகூ, 60 – சு
61 – சுக, 62 – சுஉ, 63 – சுங, 64 – சுச, 65 – சுரு, 66 – சுசு, 67 – சுஎ, 68 – சுஅ, 69 – சுகூ, 70 – o
71 – எக, 72 – எஉ, 73 – எங, 74 – ஏசு, 75 – எரு, 76 – எசு, 77 – எஎ, 78 – எஅ, 79 – எகூ, 80 –
81 – அக, 82 – அஉ, 83 – அங, 84 – அச, 85 – அரு, 86 – அசு, 87 – அஎ, 88 – அஅ, 89 – அகூ, 90 – கூo
91 – கூக, 92 – கூஉ, 93- கூங, 94 – கூச, 95 – கூரு, 96 – கூசு, 97 – கூஎ,
98 – கூஅ, 99 – கூகூ, 100 – oo
101 – o, 102- o, 103 – o, 104 – o, 105 – oரு, 106 – oசு, 107 – o, 108-o…….