பக்கம், பக்கமா எழுதற எழுத்து ஏற்படுத்தாத தாக்கத்தை ஒரு புகைப்படம் ஈசியா உணர்த்திடும். புகைப்படம்ங்கிறது நிகழ்காலத்தோட ஒரு நொடியை காட்சியா உறைய வைக்கிற அபூர் கலை. புகைப்படம் மனித வாழ்க்கையில முக்கியமான அம்சம்.
புகைப்பட கேமராவுக்கு முன்னோடியாக இரு படப்பெட்டி தான் கேமராவா இருந்திச்சாம். கி.மு. 5-ம் நூற்றாண்டுல சீன தத்துவ மேதை மோ ட்டி, ஒரு துளை வழியாக ஓர் இருண்ட பகுதிக்குள்ள ஒளி கடந்து போகும்போது ஒரு தலைகீழ் மற்றும் முகப் படத்தை உருவாக்க முடியும்னு சொன்னாரு. அதானல கேமராவோட செயல்பாட்டை முதல் முதலா பதிவு செஞ்சவர் இவர்தான்.
இவருக்கு அடுத்தபடியா பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர் பாயில், அவரது உதவியாளர் ராபர்ட் ஹுக் ஆகியோர் இணைஞ்சு 1660-ம் ஆண்டு ஒரு சின்ன கேமரா மற்றும் இரு படப் பெட்டிகளை உருவாக்கினாங்க.
அப்புறம், 1839-ல் கேமரா எனும் புகைப்படக் கருவிகள் உலகச் சந்தைக்கு வந்தன. இதன் வெளிப்பாடா ஜனவரி 9-ம் தேதிய உலக புகைப்பட நாளா கொண்டாடினாங்க. அப்புறம் இந்த நாள் ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு மாறிடுச்சி. 1920-ல் பல வகைகளில் கேமராக்கள் தயாரிக்கப்பட்டுச்சி.
உலக புகைப்பட தினத்தையொட்டி, சிறந்தப் படத்துக்குப் பரிசுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் குடுத்தது. மரப்பெட்டியில் கேமரா கருவி பொருத்தி கறுப்புத் துணியால மூடி புகைப்படம் எடுத்த காலம் மலையேறிப் போச்சு. இப்போது, செல்போன், ஐ-பேட், கையடக்க கணினி என பலவற்றிலும் கேமராக்கள் வந்தாச்சு.
2009-ம் ஆண்டுதான் உலக புகைப்பட தினத்துக்கான அமைப்பு தொடங்கப்பட்டது. முன்னாடில்லாம் கேமராவை லேசாக அசைத்தாலோ, கை நடுங்கினாலா, குறிப்பிட்ட அளவுக்கு மேல திருப்பினாலோ அந்தப் புகைப்படம் சரியாக வராது. இப்போது டிஜிட்டல் கேமராக்கள் வந்துட்டதால கை நடுக்கம் இருந்தாலும் கவலையில்லை.
முன்னாடி பிலிம் ரோல்களை பயன்படுத்தித்தான் புகைப்படம் எடுக்க வேண்டியிருந்துச்சி. இப்போ, குட்டியான மெமரி கார்டுகளே போதுமானது. நெட்டிவ், பாசிட்டிவ், டெவலப்பிங், பிரிண்டிங் அதை பாதுகாத்து வைக்கிற இம்சைகள் எதுவுமே இப்போ இல்லை.
போட்டோஸும், கொஞ்சம் போட்டிருக்கலாம்
ReplyDeleteப்ளாக் நல்லாருக்கு
ReplyDeleteநன்றி
Delete