
சில வருஷத்துக்கு முன்னால, போதை பாக்குகளை விக்கறதுக்கு தடை விதிக்கப்பட்டது ஞாபகமிருக்கலாம். நம்மாளுங்க சும்மா இருப்பாங்களா ? குழந்தைங்க சாப்பிடற மிட்டாய்கள் பாக்கெட்ல அந்த பாக்குகள் பெட்டிக்கடைகள்ல தொங்க ஆரம்பிச்சுது. இன்னிய வரைக்கும் அதான் நிலைமை. அந்த சட்டம் அமல்ல இருக்காங்கறது ஆண்டவனுக்கே வெளிச்சம். அப்புறம் பொது இடங்கள்ல புகை பிடிக்கக் கூடாது, எச்சில் துப்பக் கூடாதுன்னு சொன்னாங்க. ஆனா.. அதெல்லாம் சர்வ சாதாரணமா நடந்துக்கிட்டுதான் இருக்கு.
பஸ் பயணம்னாலே ஜன்னலோர சீட்டுதான். ஆனா.. பாக்கு எச்சில் வழிஞ்சி காய்ஞ்சிருக்கிற அங்க உக்காரவே அருவெருப்பா இருக்கு. போகட்டும். மது விலக்கு, புகையிலை பொருட்களுக்கு தடைன்னு செய்திகள் ரெக்கை கட்டி பறக்குது. இது வதந்தியா இல்லாம உண்மையா இருந்தா நல்லா இருக்கும். பார்ப்போம்.
அப்புறம், மேட்டருக்கு வருவோம். உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில 2020ம் ஆண்டுல, இந்தியாவில் மட்டும் 16 லட்சம் பேர் புகையிலை நோய்களால உயிரிழப்பை சந்திப்பாங்களாம். புகையிலையால நுரையீரல், கண்பார்வை போன்றவை தான் அதிகம் பாதிக்கப்படுது. புகைப்பழக்கம் காரணமா ஏற்படற நரம்புத்தளர்ச்சியால பாதிக்கப்பட்டு ஆண்மையை இழக்கறவங்களும் அதிகரிச்சிட்டாங்களாம். இந்த காலக்கட்டத்துல இந்தியாவுல வருஷத்துக்கு 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால உயிரிழக்கறாங்களாம். உலகத்துல, மனித இறப்புகளை தோற்றுவிக்கற முக்கிய காரணிகள்ல புகையிலை 2வது இடத்தை பிடிச்சிருக்காம்.
என்னத்தச் சொல்ல
ReplyDelete