உலகத்துலயே மக்கள் தொகையில முதல்ல இருக்கற நாடு சீனான்னு பாட புத்தகத்துல படிச்சது.. இப்போ.. அந்த சாதனையை நம்ம நாடு செஞ்சிடும் போல.. இதை நான் சொல்லலைங்க.. ஐக்கிய நாடுகள் சபை சொல்லியிருக்கு. வரும் 2028-ம் ஆண்டுல இந்த சாதனை நடந்துடுமாம். இது சம்பந்தமா ஐ.நா. சபை உலக மக்கள் தொகை பத்தின அறிக்கை ஒண்ணை அண்மையில வெளியிட்டுச்சு..
அதுல.. உலக மக்கள்தொகை அடுத்த மாசம் 720 கோடியாக அதிகரிக்கும்னு சொல்லப்பட்டிருக்கு. இது 2100ஆம் ஆண்டுல 1090 கோடியாக உயருமாம். வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளில்தான் மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாக இருக்கும்னும், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இது 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும்னும் அந்த அறிக்கையில தெரிவிக்கப்பட்டிருக்கு. இந்திய மக்கள்தொகை வரும் 2028 ம் ஆண்டல 145 கோடியாக இருக்குமாம். அதாவது.. சீனாவை மிஞ்சிடுமாம்.
மேலும் அந்த அறிக்கையில் என்ன சொல்லியிருக்காங்கன்னா.. ஒட்டுமொத்தமா உலகின் மக்கள்தொகை வளர்ச்சி இப்போது சரிஞ்சிக்குட்டு வந்தாலும், சில வளரும் நாடுகள்ல, குறிப்பா ஆப்பிரிக்காவுல மக்கள்தொகை வளர்ச்சி வேகமாக இருக்கு. இப்போ தொடங்கி, வரும் 2050 ஆம் ஆண்டு வரைக்கும், வளர்ந்த நாடுகளின் மக்கள்தொகை மாறாமல் சுமார் 130 கோடியாவே இருக்கும். அதுக்கு மாறா, குறைந்த பொருளாதார வளர்ச்சி கொண்ட 49 நாடுகளோட மக்கள்தொகை 2013இல் 90 கோடியில் இருந் து, 2050ஆம் ஆண்டில் இரு மடங்காக, அதாவது 180 கோடியாக உயரும். நைஜீரியாவின் மக்கள்தொகை வரும் 2050ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மக்கள்தொகையை மிஞ்சிடும்னு எதிர்பார்க்கப்படுது.
எதிர்வரும் ஆண்டுகள்ல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மக்களின் ஆயுளும் அதிகரிக்கும். உலக அளவுல 2045-2050 காலகட்டத்தில, மக்களோட ஆயுள் சராசரியா 76 ஆண்டா அதிகரிக்குமாம். 2095-2100 காலகட்டத்தில இது 82-ஆக இருக்கும்னும் எதிர்பாக்கறாங்க. உலகெங்கிலும் உள்ள 233 நாடுகள் மற்றும் பகுதிகளின் மக்கள்தொகை குறித்த தகவல்களின்படி இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கு.
ஏதோ ஒரு சாதனை... ? !
ReplyDeleteவிரைவில் முதலிடம்... :(
ReplyDeleteசீனாவில் இருக்கும் கடுமையான சட்டங்கள் இந்தியாவில் இல்லை. அதனால் 2028 வரை காத்திருக்க வேண்டியதில்லை. இன்னும் சில வருடங்களிலேயே முந்தி விடும் அபாயம் இருக்கிறது.
அடங்கொக்கமக்கா... இயற்கை வளங்கள் குறைஞ்சு போய், உணவுப் பொருள்லருந்து பெட்ரோல் வரை எலலாத்துலயும் விலை ஏறி அவதிப்பட்டுட்டு வந்தாலும் இந்த ஒரு விஷயத்துல மட்டும் இந்தியா வேகமா மு்ன்னேறிட்டு இருக்கா..? சரிதான்!
ReplyDelete