Wednesday, 26 June 2013

ஹேப்பி பர்த்டே டூ யூ

‘ஹேப்பி பர்த்டே டூ யூ ன்னு யாரும் சத்தம் போட்டு இனிமே பாட முடியாது போல இருக்கு. 

உலகம் முழுக்க குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டுன்னா.. அது இந்த ‘ஹேப்பி பர்த்டே டூ யூ ங்கற   பிறந்த நாள் வாழ்த்து பாட்டுதான். இந்த பாட்டு எழுதி இசையமைக்கப்பட்டு 120 வருஷம் ஆயிடுச்சி.  1893ம் ஆண்டு ‘குட் மார்னிங் டு ஆல் ‘ என்ற பாடல் அமெரிக்காவின் பேட்டி மற்றும் மைல்ட்ரெட் ஹில் சகோதரிகளால் உருவாக்கப்பட்டு அறிமுகப்பட்டுச்சு.  இதை அடிப்படையா வெச்சு,  ஹேப்பி பர்த்டே டு யூ ங்கற பாட்டு உருவாக்கப்பட்டுச்சு. 

இப்போ விஷயம் என்னன்னா... இந்த பாட்டு யாக்குச் சொந்தம்னு சர்ச்சை வெடிச்சிருக்கு.. அமெரிக்காவில் உள்ள வார்னர் சேப்பல் இசை குழு நிறுவனம்,  ஹேப்பி பர்த்டே டு யூ பாட்டு எங்களுக்குத்தான் சொந்தம், இதுக்கு கோடி கணக்குல செலவு பண்ணி அதோட உரிமையை வாங்கியிருக்கோம்.. அதனால.. எங்க அனுமதி இல்லாம யாரும் இதை பயன்படுத்தக் கூடாது அப்படின்னு சொல்லிக்கிட்டு வருது... இந்த பாடலை பயன்படுத்தினவங்கக் கிட்ட பல கோடி ரூபாய் பணமும் வசூல் பண்ணியிருக்காங்க.  

இது சட்டவிரோதம்னு பல தரப்புல இருந்தும் கண்டனக் குரல் எழுந்திருக்கு.. மேலும்.. இந்த பாட்டு உலகம் முழுக்க இருக்கற பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தமானதுன்னு உத்தரவிடக் கோரி ஒரு தரப்பினர் கோர்ட்ல வழக்கு போட்டிருக்காங்க.  

தீர்ப்பு யாருக்கு சாதகமா வரும்னு தெரியலை.. அதுவரைக்கும்.. யாருக்காவது பிறந்தநாள் சத்தம்போட்டு பாடாதீங்க.. 




3 comments:

  1. அடடா...! மனிதனுக்கு எதுவுமே சொந்தமில்லை... பணம் என்ன வேண்டுமானாலும் செய்யும்...!

    ReplyDelete
  2. அடடா..... இன்னிக்கு போய் எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருக்கே! :))))

    ReplyDelete
  3. பிறந்தநாள்... .இன்று பிறந்த நாள்... நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் ‌மறந்த நாள்ன்னு ஸ்ரீலங்கா ரேடியோவுல ஒரு பாட்டு போடுவாங்க. அதைப் பாடிட்டுப் போயிரலாம் போலருக்கே தாஸ்!

    ReplyDelete