Sunday, 19 April 2015

இது என்ன மாதிரியான நோய்?

கேமராக்கள் என்பது ஒரு காலத்தில், தொழில்முறை புகைப்படக்காரர்களும், வசதியானவர்களும் மட்டுமே பயன்படுத்தும் சாதனம். அதுவும், பிலிம் சுருள்களை பயன்படுத்தி போட்டோக்கள் எடுக்கப்பட்ட காலத்தில், நெகட்டிவ், பாசிட்டிவ், பி£¤ண்ட் என அதற்கான செலவுகள். அதிகம். ஆனால், இன்றைய நிலை அப்படியில்லை. 

கையடக்கமாகவும், கண்ணுக்குத் தெரியாத வகையில் ஏராளமான கேமராக்கள் வந்துவிட்டன. நாம் எல்லோருமே இப்போது ஏதாவது ஒரு கேமரா கண்ணால் பார்க்கப்பட்டிக் கொண்டிருக்கிறோம். 

நான்கு சுவர்களுக்குள் அரங்கேறும் அந்தரங்கம், கேமராக்களால், பொதுவெளியில் அம்பலமாக்கப்படுகிறது. இது  ஒருபுறம் என்றால், கல்யாணம், காது குத்து, திருவிழா, இழவு வீடு என எல்லா இடங்களிலும், செல்போன்களை நீட்டி எதையாவது போட்டோ அல்லது வீடியோ எடுக்கும் விவஸ்தை கெட்ட பழக்கம் அதிகா¤த்து வருகிறது. வாட்ஸ் ஆப், முகநூலில் பதிவேற்றுவது ஒருபுறம் என்றாலும், மேற்படி சமூக வலைத்தளங்களில் புழங்காதவர்கள் கூட இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். 

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவனை காப்பாற்றுவதை விடுத்து, அதை போட்டோ எடுக்கும் அதிகரித்து வருகிறது. இந்த இன்ஸ்டன்ட் புகைப்படக்காரர்களை பார்க்கும்போது, இந்த போட்டோக்களை வைத்து என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழத் தவறுவதே இல்லை. 

கீழே இருக்கும் இந்த புகைப்படத்தைப் பாருங்கள். நாகாலாந்தில் சிறுமி ஒருத்தியை வண்புணர்வு செய்த இளைஞனை கிராம மக்கள் அடித்தே கொன்றதாக இணையதளங்களில் வெளியான புகைப்படம் இது. 


அந்த இளைஞன் ரத்தக்களறியாக நிற்க, அந்த காட்சியை, கூட்டத்தில் இருக்கும் பெரும்பான்மையோர் தங்களது செல்போனால் படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படங்களை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள்? அருகிலேயே சலனமின்றி வேடிக்கைப் பார்க்கும் சிறுவனையும் பாருங்களேன். 

உச்சமாக, அண்மையில் ஒரு செய்தித்தாளில் வெளியான சம்பவம். நீங்களே படித்துப் பாருங்கள். 

நம் சமூகம், மனிதம், மனிதநேயம், மனித மாண்புகள் எங்கே போய்க்கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த செய்தி  சிறந்த உதாரணம். 

No comments:

Post a Comment