Sunday, 19 April 2015

புலிக்கு மீண்டும் ஆபத்து?

இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்பது நமக்குத் தெரியும். புலிகள் இனம் அழிந்து வருவதை தொடர்ந்து கடந்த 1972ம் ஆண்டு புலி தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்கலாமா என்று மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. 

இதற்கான பரிந்துரையை ஜார்கண்டைச் சேர்ந்த எம்பி பரிமல் நத்வானி மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தார். இந்த பரிந்துரை தேசிய வன விலங்கு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆலோசனையை குஜராத்தை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று ஆய்வு செய்து வருகிறது.

புலி நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காணப்படுகிறது. ஆனால் சிங்கம் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே காணப்படுகிறது.  

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2200 புலிகளும், 411 சிங்கங்கள் மட்டுமே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதிகளில் மட்டுமே சிங்கம் காணப்படுகிறது. எனவே விரைவில் சிங்கம் தேசிய விலங்கு அந்தஸ்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தற்போது சிங்கத்தை தேசிய விலங்காக அறிவித்தால் புலிக்கு மீண்டும் ஆபத்து ஏற்படும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment