பிப்ரவரி மாதம் என்றதும் நினைவுக்கு
வருவது காதலர் தினம். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் அந்த நாளை ஒரு வாய்ப்பாக இளைஞர்களும்,
இளம் பெண்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
லூப்பர்காலியா என்ற திருவிழாவை
ரோமானியர்கள் கொண்டாடி வந்தனர். பிப்ரவரி 14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள்
மூலம் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேய பழமைவாதிகளின் இந்த நாளையே காதலர் தினமாக கொண்டாடுவதாக கூறுகின்றனர்.
இருப்பினும், ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் காதலர் தின கொண்டாட்டம்
துவங்கியதற்கான சான்றுகள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கி.பி.207ல் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம்
கிளாடியஸ், ரோமானிய வீரர்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால்
சலனங்கள் எதுவும் இல்லாமல் முழு ஆவேசத்துடன் போர் புரிவார்கள் என கருதினார். ஆகவே
படையில் சேரும் இளைஞர்களுக்கு 'திருமணம் ஆகியிருக்கக் கூடாது; காதலிக்கக்கூடாது!' என்று சட்டம் கொண்டு வந்தார் மன்னர்.
காதலை எப்படி ஒதுக்கி வைக்க முடியும்? வீரர்கள் ரகசியமாகக்
காதலித்தார்கள். அவர்களை ஆதரித்த வாலன்டைன் என்னும் பாதிரியார் இளைஞர்களுக்கு
ரகசியமாக திருமணம் செய்து வைத்தார். விஷயம் தெரிந்து, பாதிரியார் சிறையில் தள்ளப்பட்டார். ஆனாலும், கோபம் தணியாத மன்னர் கிளாடியஸ், பாதிரியாரின் தலையைச் சீவும்படி ஆணையிட்டார். அதே ஆண்டு பிப்ரவரி
மாதம் 14-ம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
காதலர்களுக்கான உயிரைக் கொடுத்த
வாலண்டைன் ரோம் மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். ரோமானிய
தேவாலயங்கள் ஐரோப்பியரின்
கட்டுப்பாட்டுக்குள் வந்த போது ‘பாகான்‘ விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. இதுவே வாலண்டைன் தினமாகக்
கொண்டாடப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி
வாலண்டைனை புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து வாலண்டைன் தினம் காதலர் தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment