Sunday, 13 August 2017

கொசுவின் எதிரி
மூன்று ரொட்டிகள் கொடுத்தவன்


   இரவு நேரம். ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். பலத்த மழை பெய்து கொண்டிருந்த து. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா?” என்று கேட்டார்.

      “அதற்கென்ன? தாராளமாய் தங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள் இருவரும். சிறிது நேரம் கழித்து, “ எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?”  என்றார் வந்தவர்.

           முன்னவர் இருவரில்  ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது?” என்றார். இரண்டாமவர், “ என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர், “ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்?” என்றார். 

            மூன்றாம் நபர், “ இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்.


                      ‘இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள். 

         பொழுது விடிந்தது. மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, “உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணங்களை இருவரிடம் கொடுத்து, “நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

          மூன்று ரொட்டிகளை கொடுத்தவர், “அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்வர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள், ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.

          மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது! என்றாலும் பரவாயில்லை. சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

           சுமுகமான முடிவு எட்டாத்தால் வழக்கு அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. சற்று நேரம் யோசித்த அரசன், இருவரையும் அழைத்தான். மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுக்குமாறு உத்தரவிட்டான்.

       ஒரு காசு வழங்கப்பட்டவர், “மன்னா! இது அநியாயம். அவரே எனக்கு மூன்று கொடுத்தார். நீங்கள் எனக்கு ஒரே ஒரு காசு கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளீர்களே?” என்றார்.

           அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது ரொட்டித் துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத் துண்டுகள்தான் கிடைத்தது. ஆக நீ  தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார்.  

         மூன்று ரொட்டிகள் கொடுத்தவர், வேறு வழியின்றி கொடுத்த தை பெற்றுக்கொண்டு நகர்ந்துவிட்டார். 

Monday, 7 August 2017

ஆண்கள் ரொம்ப பாவம்ஆண்
கடவுளின்
உன்னத படைப்பு

சகோதரிகளுக்காக
சந்தோஷத்தையும்,
பெற்றோருக்காக
கனவுகளையும்
தியாகம் செய்பவன்

காதலிக்காக
பர்ஸை காலி செய்பவன்

மனைவி,
குழந்தைகளுக்காக
இளமையை அடகுவைப்பவன்.  

எதிர்காலத்தை
லோன்களால் கட்டமைத்து, 
அதனை அடைக்க
ஆயுள் முழுவதும் போராடுபவன்.  

வெளியில் சுற்றினால்,
 'உதவாக்கரை' என்றும்,
வீட்டிலேயே இருந்தால்,
'சோம்பேறி' என்றும் பெயரெடுப்பவன்.

குழந்தைகளை கண்டித்தால்,
'கோபக்காரன்' என்றும்,
அன்பு காட்டினால்,
 'பொறுப்பற்றவன்' என்றும் விளிக்கப்படுபவன்

மனைவியை வேலைக்கு அனுப்பாதவனை
'நம்பிக்கையற்றவன்' என்றும்,
அனுப்பினால்,
'பொண்டாட்டி சம்பாத்தியத்தில்
பொழப்பை ஓட்டுபவன்' என்றும் அழைக்கப்படுபவன்.

தாய் சொல் கேட்டால்,
 'அம்மா பையன்'
மனைவி சொல் கேட்டால்,
'பொண்டாட்டி தாசன்'  எனப்படுபவன்.

எனவே,
ஆண்களின் உலகம்,
தியாகங்களாலும்
வியர்வையாலும் சூழப்பட்டதுங்கோ..

( வாட்ஸ் ஆப்பில் வந்த புலம்பல் )Sunday, 6 August 2017

கீரைகளும் அதன் மருத்துவ பயன்களும்


அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.
கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.
புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.
முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
வல்லாரை கீரை  - மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.
புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.
தும்பை கீரை - அசதி, சோம்பல் நீக்கும்.
முருங்கை கீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.
முள்ளங்கி கீரை - நீரடைப்பு நீக்கும்.
பருப்பு கீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
புளிச்ச கீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.
வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
தவசிக்கீரை - இருமலை போக்கும்.
சாணக்கீரை - காயம் ஆற்றும்.
வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.
விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.
கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.
துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.
துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்.
நருதாளிகீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.எவ்வளவு பெரிய விஞ்ஞானம் ?


          நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. காலையில் வீட்டிலிருந்து வெளியில்  கிளம்பும்போது , மனைவியை எதிரில் நடந்து வரச்சொல்வதன் பின்னால்எவ்வளவு பெரிய விஞ்ஞான காரணம் இருக்கிறதென்று, நமக்கெல்லாம்  தெரியாமல் போய்விட்டது!

         நினைத்தாலே உடல்  சிலிர்க்கின்றது.

         வெளியுலகில் பல துன்பங்கள், சோதனைகள், போராட்டங்கள் என எது வேண்டுமானாலும் வரலாம். அதையெல்லாம் அந்த ஆண் சமாளித்தாக வேண்டும். எதையும் தாங்கும் துணிவு வேண்டும். சமாளிக்கும் திறன் வேண்டும்.  

         அதற்கான ஒரே வழி, வெளியே கிளம்பும் போதே மனைவியை எதிரில் நடந்து வர செய்வது.  ஆம்.  அதன்மூலம் அவனது நாடி, நரம்பு, சதை, புத்தி என எல்லாவற்றிலும் அவன் உணர்வது யாதெனில்..
மவனே இதைவிட உனக்கு என்ன, பெரிய பிரச்சனை இந்த உலகத்துல வந்துடப்போகுது? எந்த  பிரச்சனையா இருந்தாலும் அசால்ட்டா முடி!என்பதாகும்