Sunday, 3 April 2016

பொன்னாங்கண்ணி - 'கீரைகளின் ராஜா'


சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரை பொன்னாங்கண்ணி. இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன.

இ‌ந்த‌க் ‌கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள் முன்னோர்கள். அந்த அளவுக்கு கண் பார்வைக்கு உதவுவது பொன்னாங்கண்ணி கீரை. அவற்றின் பயன்களை பார்ப்போம். 

1. பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல்  எடை குறையும்.

 2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். 

3. உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும் பங்கு பொ‌‌ன்னா‌ங்க‌ண்‌ணி‌க்கு உ‌ண்டு. 

 4. மூல நோய், மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்த வ‌ல்லது. 

 5. பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அலசி சிறிதாக  நறுக்கி, அதனுடன்  பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம்,  சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு  வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

 6. அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை பொ‌ரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனை நீங்கும். 

 7. பொன்னாங்கண்ணி கீரை வாய் துர்நாற்றத்தை போ‌க்கு‌ம் தன்மை கொண்டது. இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வைக் கொடு‌க்கு‌ம். 

பாரதிராஜா இயக்கத்தில் 'குற்றப்பரம்பரை' தொடக்கம்

பாரதிராஜா இயக்கத்தில் 'குற்றப்பரம்பரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் தொடங்கியுள்ளது.  

தென் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதி மக்கள் திருட்டையே தொழிலாகக் கொண்டிருந்ததாக கூறி அவர்களை ‘குற்றப்பரம்பரை' என அப்போது பிரிட்டிஷ் அரசு முத்திரை குத்தி சட்டத்தின் கீழ் வகைப்படுத்தி தமிழகத்தில் உள்ள 90 சாதி மக்களை குற்றப் பரம்பரையினர் என்று பட்டியலிட்டு அவர்கள் மீது ரேகை சட்டத்தை 1911-ல் திணித்தனர்.

அப்பாவி மக்களை 'பிறவிக் குற்றவாளிகளாக' அடையாளப்படுத்தி சமூக நீதிக்கெதிராகக் குற்றம் சாட்ட வழி வகுத்தது இந்தச் சட்டம். மாலை 6 மணிக்குப் பிறகு இரவு நேரங்களில் யாரும் வீட்டில் தங்க கூடாது, இருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகி கைரேகை பதிக்க வேண்டும் என்பன போன்ற பல கொடுமைகளுக்கு இந்த மக்கள் ஆளானார்கள்.  இந்த வரலாற்றுப் பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் குற்றப்பரம்பரை கதை. 

1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச்சட்டத்தை எதிர்த்தும், ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்தும் கடுமையான போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 'மாயாக்காள்' என்ற பெண் உட்பட 17 பேர் மரணம் அடைந்தனர். இறுதியாக இந்த சட்டம் 1947 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி முதல் முழுமையாக நீக்கப்பட்டது. 

இந்த வரலாற்றுப் பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் குற்றப்பரம்பரை கதை. குற்றப்பரம்பரை கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதியுள்ளார். அந்தக் கதையை இயக்குநர் பாலா திரைப்படமாக எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.  

தொன்னூறுகளின் பிற்பகுதியிலேயே குற்றம் பரம்பரை கதையை படமாக்க இயக்குநர் பாரதிராஜா முயற்சி செய்தார். அவருக்காக 'கிழக்குச் சீமையிலே', 'கருத்தம்மா' போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதிய இயக்குநர் ரத்னகுமார் குற்றப் பரம்பரை என்ற பெயரில் ஒரு கதையை உருவாக்கினார். 1997-ல் ‘குற்றப்பரம்பரை' படத்தின் கதையை எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் அந்தப் பட முயற்சி தள்ளித்தள்ளிப் போனது. இந்நிலையில் பாரதிராஜா குற்றப்பரம்பரை படத்தின் படப்பிடிப்பை உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் தொடங்கியுள்ளார்.