Wednesday, 1 April 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 5

கேள்வி பதில் 

ஒரு மாணவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி ஆனான்..! காரணம் அவன் அனைத்து கேள்விகளுக்கும்..சரியாக பதிலளித்திருப்பதாகவே நம்பினான்..! சரியான பதிலை எழுதியதாகவே.. அந்த மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம்..வாதாடினான்..!
சரி.. அப்படி என்ன தான் கேள்விகளுக்கு பதில் அளித்தான்.. என பார்ப்போம்..!
🔵  கேள்வி : எந்த போரில் திப்பு சுல்தான் மரணமடைந்தார்..?
பதில் : அவரது கடைசி போரில்..!
🔵கேள்வி : இந்திய சுதந்திரத்திற்கான..பிரமாணம் எங்கே கையெழுத்திடப்பட்டது..?
பதில் : காகிதத்தின் அடிப் பகுதியில்..!
🔵  கேள்வி : சுப நிகழ்ச்சிகளில்..வாழை மரங்கள் எதற்காக கட்டப்படுகிறது..?
பதில் : அவைகள் கீழே விழாமல் இருப்பதற்காக.. கட்டப்படுகிறது..!
🔵 கேள்வி : விவாகரத்திற்கான.. முக்கிய காரணம் என்ன..?
பதில் : திருமணம் தான்..!
🔵 கேள்வி : இரவு- பகல்..எவ்வாறு ஏற்படுகிறது..?
பதில் :  கிழக்கே உதித்த சூரியன்..மேற்கில் மறைவதாலும்.. மேற்கில்மறைந்த சூரியன் மீண்டும் கிழக்கில்..உதிப்பதாலும் இரவு- பகல் ஏற்படுகிறது..!
🔵  கேள்வி : மகாத்மா காந்தி..எப்போது பிறந்தார்..?
பதில் : அவரது பிறந்த நாளன்று..!
🔵 கேள்வி : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா..?
பதில் : இல்லை.. திருமணங்கள் செய்யும் அவரவர் வீட்டில்..!
🔵 கேள்வி : தாஜ்மகால் யாருக்காக.. யார் கட்டினார்..?
பதில் : சுற்றுலா பயணிகளுக்காக..கொத்தனார்களால் கட்டப்பட்டது..!
🔵 கேள்வி : 8மாம்பழங்களை.. 6 பேருக்கு எப்படி சரியாக பிரித்து கொடுப்பது..?
பதில் : ஜூஸ் போட்டு.. 6 டம்ளர்களில் சரியான அளவாக ஊற்றி கொடுக்கலாம்..!

நீங்களே சொல்லுங்க மாணவன் சரியாக தானே பதில் எழுதியிருக்கான்? 


மார்கெட்டிங் - வேலை நீதி கதை

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட  கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது.

மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளை சுமந்தால் உனக்கு புல்லின் அளவைஅதிகரிப்பதை பற்றி யோசிக்கிறேன்" என்றான்.
பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளை சுமக்க ஒப்பு கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது.

அதற்கு வியாபாரி "மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்பு அடைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்" என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்து கொண்டது.

புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, "மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிக குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்து கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்ய கூடிய நேரம்  குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்றான். 

கோபமடைந்த மாடு "எஜமான்! இந்த புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை" என்றது.
அதற்கு வியாபாரி "மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே" என்றான். தன்

இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு "வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்று தந்து விடுகிறேன்" என்று கூறியது.
மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்க தொடங்கியது. ஆனால் மிக கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லை கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் அதற்கு நோய் குணமாக மருந்து கொடுத்த வியாபாரி ஒரு நாள் அதனிடம் "மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விட போகிறேன்" என்றான். "எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?" என்றது.

வியாபாரி அதற்கு "அவர்கள் உன்னை வேலை செய்ய சொல்ல வாங்கவில்லை. உன்னை கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்கு கேட்கிறார்கள்" என்றான்.

வியாபாரி சொன்ன பதிலை கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. "எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்" என்றது.
அதை கேட்ட வியாபாரி, "நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்" என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது. 

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.


ஒரு இண்டர்வியூ-வின் போது.....

மேலாளர் : நான் சொல்றதுக்கு எதிர்வார்த்தைய சொல்லுங்க...! 
பையன் : ஓகே சார்... சொல்லுங்க. நான் ட்ரை பண்றேன்...!
மேலாளர் : நல்லது,
பையன் : கெட்டது,
மேலாளர் : வாங்க சார்,
பையன்: போங்க சார்,
மேலாளர் : அழகு,
பையன் : ஆபத்து,
மேலாளர் : நீங்க தப்பா சொல்றிங்க,
பையன் : நான் சரியா சொல்றேன்,
மேலாளர் : பேச்ச நிறுத்து,
பையன் : தொடர்ந்து பேசு,
மேலாளர் : இப்போ வாய மூடறியா இல்லையா...?
பையன் : இப்போ பேசுறியா இல்லையா...?
மேலாளர் : நிறுத்துடா எல்லாத்தையும்,
பையன் : தொடங்குடா எல்லாத்தையும்,
மேலாளர் : போடா வெளிய,
பையன் : வாடா உள்ள,
மேலாளர் : ஐயோ கடவுளே..
பையன் : ஆஹா பிசாசே...
மேலாளர் : யு ஆர் ரிஜக்டட்...!
பையன் : ஐ ஆம் செலக்டட்...சிரிப்பு கதை

அமெரிக்காவில் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள்.
"500" அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள் கிடைத்தன. உடனே அவர்கள் அறிவித்தார்கள்..."! "எங்களது முன்னோர்கள் மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்" என்று பெருமையோடு

ரஷ்யர்கள் உடனே அவர்களும் பூமிக்குக் கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். "500" அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள் கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்..."! “எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியுள்ளார்கள்” என்று ஆச்சரியத்தோடு 

இந்தியர்களும் தோண்டினார்கள். "500" அடி தாண்டி "1000" அடி தோண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை...! உடனே அறிவித்தார்கள்...? “எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே "வயர்லெஸ்" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்று திமிரோடு!!ஆண்கள் கவனத்திற்கு:

(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)

ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருக்கிறார்கள்.  5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி  லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான். சிறிது நேரத்துக்குப்பின்  அவள் இவனது கன்னத்தில்  ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.  இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம்.  லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி  வாயடைத்தான்.  வீட்டிற்கு நடக்கிறார்கள்.
மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.
கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...
மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன்.  நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.
கணவன் : (மீண்டும் வாயடைத்தான்) 
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

ஒரு ஊரில் கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது..அந்த கடை வாசலில் கடையின் விதிமுறை போர்டு இருந்தது. அதில்,
1.கடைக்கு ஒரு தடவைதான் வரலாம். .2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கு... ஒவ்வொரு தளத்திலும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். 3. ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது. அப்படியே வெளியேதான் போக முடியும். என்று எழுதப்பட்டிருந்தது. 
.
இதையெல்லாம் படித்துவிட்டு, இளம்பெண் ஒருத்தி கணவர் வாங்க கடைக்கு வந்தாள்..முதல் தளத்தில் இருந்த அறிவிப்பு பலகையில், "இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. 

இது அடிப்படை தகுதிகள் தானேன்னு நினைச்சுட்டு, இதைவிட பெட்டரா பார்ப்போம்னு இரண்டாம் தளம் வந்தாங்க. அங்கே இருந்த அறிவிப்பு பலகையில, "இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் "

அடடா, இது நல்லாயிருக்கே.. இன்னும் பெட்டரா பார்ப்போம்னு மூன்றாம் தளத்துக்கு வந்தாங்க அந்த பெண். அங்க இருந்த பலகையில், ."இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள், குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் மற்றும் வசீகரமானவர்கள்." அப்படின்னு இருந்தது. 

அப்போ நான்காம் தளத்துல இதைவிட சிறப்பான தகுதிகளோட கணவர்கள் இருப்பாங்க அப்படின்னு நினைச்ச இளம்பெண் அங்க வந்தாங்க. அங்கே இருந்த அறிவிப்பு பலகையில், "இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள், குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள், வசீகரமானவர்கள் மற்றும் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உள்ளவர்கள் "

ஐந்தாவது தளத்தில என்ன இருக்கும்னு பாக்கற ஆசை அந்த இளம்பெண்ணுக்கு வந்திடுச்சு. மேல வந்தாங்க. 
ஐந்தாவது தள அறிவிப்பு பலகையில், "இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள், குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள், வசீகரமானவர்கள், வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள், மற்றும் மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள்
.
அவ்வளவுதான் தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியல...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்படி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறாங்க..
.
ஆறாவது தளம் அறிவிப்பு பலகையில், ."இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது.. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே, பெண்களை திருப்திப்படுத்தவே முடியாதுங்குறத நிரூபிக்கத்தான்..!
.
எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி...! "பார்த்து கவனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்படின்னு போட்டிருந்தது..வாழ்க்கைக்குத் தேவையான பயனுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நீ மாறும்போது தானும் மாறியும், நீ தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் உனக்குத் தேவையில்லை. அதற்கு உன் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே செல்வது உன்னை மனிதனாக்கும்.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம் 
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப்மி பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

No comments:

Post a Comment