Sunday 14 June 2015

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்...


[?] ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். 

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ[?]. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார். 

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். 

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது." 

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...[?]!". 

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் [?] செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது." 

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? " 

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை". 

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்...[?]!"[?][?] . .

சின்னச் சின்ன சிரிப்புக்கள்

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க
கணவன்: ஒண்ணுமில்ல!
மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
பார்த்துகிட்டு இருக்கிங்க!
கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

*****

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு
கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே… மறந்துட்டியா…
மனைவி:- எப்போ சொன்னீங்க…நீங்க சொல்லவே இல்லை..
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????

*****

நபர்1: இங்கிலீசு படத்துக்கும், தமிழ் படத்துக்கும் என்னடா வித்தியாசம்?
நபர்2: இதுக்கூட தெரியாதா? தமிழ் படத்துல இங்கிலுசுல பேசுவாங்க…ஆனா இங்கிலுசு படத்துல தமிழ்ல பேச மாட்டாங்க…

*****

இன்ஸ்பெக்டரிடம் : சார் “பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாம போய் மூணு மாசமாகுது”
அதுக்கு நீ ஏன்யா புகார் குடுக்கிற!
அந்த ஆளு புகார் குடுக்காம ஜாலியா சுத்திட்டு இருக்கான் சார்..!
( அதானே அடுத்தவன் சந்தோசமா இருக்கப்படாதே ! என்னா ஒரு கொல வெறி !)

*****

மனைவி நேர தாமதமாக வீட்டிற்கு வந்தாள்... நேராக தனது படுக்கை அறைக்குச்சென்றாள்...
அங்கே,

போர்வைக்கு வெளியே 4 பாதங்கள் தெரிந்தன. உடனே ஆத்திரத்துடன் கிரிக்கெட் மட்டையை எடுத்து தனது ஆத்திரமும், அலறல் சத்தமும் தீரும் வரை அடித்தாள்.
அடித்துவிட்டு சமையலறைப்பக்கம் போனாள்...
அங்கே...
காபி குடித்தபடி கணவர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார்...
மனைவியை கண்டதும்...

"உங்க அப்பா அம்மா வந்திருந்தாங்க... நான் என் படுக்கை அறையை அவர்களுக்கு கொடுத்துவிட்டேன்... "

*****

டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?


*****

கணவனும் மனைவியும் கடைத்தெருவில் நடக்கும் பொழுது மனைவி சற்று தொலைவில் இருந்த விளம்பர போர்டை கண்டு வியந்தாள்....

Banaras saree Rs10/-
Nylon saree Rs 8/-
Cotton saree Rs 5/-

மனைவி: 500 ரூபாய் பணம் கொடுங்கள்... நான் 50 புடவை வாங்கனும்

கணவன்:  அது இஸ்திரி போடும் கடைடி எரும மாடு

வாட்ஸ் ஆப் வறுவல் - 13 பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்..

விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு