Monday, 30 March 2015

உணவும், மருந்தும் - 1

வாழைப் பூவின் மருத்துவ குணங்கள் 

வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ குணம் கொண்டவை. இதை ஆய்ந்து சுத்தப்படுத்துவது சற்று சிரமமான செயல் என்பதால், இதனை நம்மில் பெரும்பாலனோர் இந்த ஊட்டச் சத்துமிக்க உணவை தவிர்த்து விடுகிறோம். நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவுக்கு முக்கிய இடம் உண்டு. எனவே, மாதத்தில் இரண்டு, மூன்று நாட்களாவது அதனை உட்கொள்வது நன்மை பயக்கும். 

பெண்களின் கர்ப்பப்பைக்கு இது நல்ல பலன் அளிக்கும். வாழைப்பூவில் உள்ள துவர்ப்பு சுவை மூலம் ஊட்டச் சத்து வீணாகாமல், 'பி' விட்டமின் கிடைக்கிறது. எனவே, வாழைப்பூவில் இருக்கும் துவர்ப்பு சுவை போக அதனை கழுவுவதை தவிர்க்க வேண்டும்.

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

இருமல் நீங்க வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும். சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும்.


பப்பாளி பழத்தின் அற்புதம் 

பப்பாளி பழத்தின் தாயகம் மெக்சிகோ மற்றும் மேற்கிந்திய தீவுகள். இது 17-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தது. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது.

சுவையும், சத்துகூகளும் நிறைந்த இந்த பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியது. இதிலும் வைட்ட மின் 'ஏ' உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

மருத்துவக் குணங்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், சற்றே பழுத்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும், பாதிக்கு மேல் பழுத்ததில் 53 முதல் 95 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் 'சி' இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.

அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்கவேண்டும்.இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும். 

பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.

Saturday, 28 March 2015

தெரியுமா இவரை - 7 ஜான் லோகி பேர்ட்

1922 ஆம் ஆண்டில் வானொலி உலகுக்கு கிடைத்தபோது ஒரு பெட்டியில் குரலைக் கேட்க முடியுமா என்று அதிசயித்த உலகம் அடுத்த நான்கே ஆண்டுகளில் ஒரு பெட்டியில் குரலைக் கேட்பதோடு உருவங்களையும் பார்க்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்த்திருக்காது. ஆனால் கற்பனை செய்பவர்கள்தானே கண்டுபிடிப்புகளையும் செய்கிறார்கள். ஒரு பெட்டிக்குள் ஒலியையும், ஒளியையும் காட்ட வேண்டும் என்று கற்பனை செய்து கனவு கண்டு தொலைக்காட்சி என்ற உன்னத சாதனத்தை உலகுக்குத் தந்த ஒருவரைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர் பெயர் John Logie Baird. வானொலியின் தந்தை Marconi என்றால் தொலைக்காட்சியின் தந்தை Baird.

1888 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 13-ம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு அருகில் ஹெலன்ஸ்பர்க் என்ற இடத்தில் பிறந்தார் ஜான் லோகி பேர்ட். நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. அவரது தந்தை போதகர். குறைந்த வருமானத்தில் பெரிய குடும்பத்தை நிர்வகித்து வந்தார். பேர்ட் சிறுவயது முதலே ஆரோக்கியம் குன்றியிருந்தார். அதனாலோ என்னவோ அவருக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றில் அதிக நாட்டம் இல்லை. 

வீட்டுக்கு அருகில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார் பேர்ட். அவருக் சிறுவயதிலிருந்தே புகைப்படங்களின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்தக்காலக் கட்டத்தில் இங்கிலாந்து பள்ளிகளில் பல இணைப்பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று புகைப்படக்கலை பேர்ட் அதில் அதிக ஆர்வம் காட்டி புகைப்படக்கலை சங்கத்தின் மாணவர் தலைவராகவும் செயல்பட்டார். அறிவுக்கூர்மையும் கைகொடுக்க பேர்ட் தனது 12-ம் வயதிலேயே சில நண்பர்களுடன் சேர்ந்து படங்கள் காட்சிகள் பற்றியும், நகரும் காட்சிகள் பற்றியும் சோதனைகளை செய்தார்.

17 ஆம் வயதில் லண்டன் ராயல் தொழில்நுட்பக் கழகத்தில் மின்பொருளியல் துறையில் சேர்ந்து முதல் நிலையில் தேறினார். பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே செலினியம் செல்களைக் கொண்டு ஒளியை மின் சமிக்ஞைகளாக மாற்ற முடியும் என்று நம்பிய பேர்ட் பல்கலைக் கழகத்தில் அதற்கான ஆய்வுகள் செய்ய முடியாததால் வீட்டிலேயே ஆய்வுகளை மேற்கொண்டார். மின்சாரம் மூலம் ஒளியையும் பேசும் படத்தையும்கூட அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் எப்போதுமே இருந்தது. பட்டம் பெற்ற பிறகு ஒரு நிறுவனத்தில் உதவிப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார். 26 ஆவது வயதில் மின்னணுத்தொழிற்சாலை ஒன்றில் பணி கிடைத்தது. அவற்றிலெல்லாம் மன நிறைவடையாத பேர்ட் முற்றிலும் மாறாக காலுறை உற்பத்தி செய்யும் சொந்தத் தொழில் ஒன்றை தொடங்கினார். ஆனால் அதில் அவ்வளவு இலாபம் கிட்டவில்லை பின்னர் ரொட்டியில் தடவும் ஜாம் மற்றும் ச்சாஸ் தயாரிப்பில் இறங்கினார். உடல் ஆரோக்கியம் குன்றியதால் அந்தத் தொழிலையும் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அந்தச் சமயத்தில் ட்ரினிடேடில் இருக்கும் தன் நண்பரை பார்க்க கப்பல் பயணம் மேற்கொண்டார் பேர்ட். அப்போது கப்பலில் வானொலி இயக்கும் ஊழியரிடம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. வானொலி ஒலியை ஒலிபரப்புவதுபோல் படங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வாறு ஒலிபரப்பலாம் என்பதுபற்றி இருவரும் நிறைய விவாதித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். 1922 ஆம் ஆண்டில் தனது 34 ஆவது வயதில் லண்டன் திரும்பினார் பேர்ட். வேலையில்லாத காரணத்தால் அவர் வறுமையில் வாடினாலும் தொலைக்காட்சிப் பற்றிய கனவு மட்டும் அவரைவிட்டு நீங்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் செயல் முறைக்கான வரைப் படத்தை உருவாக்கி அட்டைப்பெட்டி, மின்மோட்டார், புரொஜ்க்ஸன் விளக்கு, மின் கலங்கள், நியான் விளக்கு, வானொலி வால்வுகள் போன்றவற்றை வைத்து பல வகையான ஆய்வுகளை செய்து பார்த்தார். 

இரண்டு ஆண்டுகள் அவர் உழைத்த உழைப்புக்கு 1924 ஆண்டு பலன் கிட்டுவதுபோல் தெரிந்தது. ஒரு சிலுவையின் நிழலை பத்து மீட்டர் தூரத்திற்கு அவரால் ஒலிபரப்ப முடிந்தது. மேற்கொண்டு ஆய்வைத் தொடர அவருக்கு பொருளாதார வசதி இல்லை உண்மையில் தனது ஆய்வுக்கருவிகளின் பாகங்களை விற்று சாப்பிடும் நிலைக்குக்கூடத் தள்ளப்பட்டார் அப்படியிருந்தும் மனம் தளரவில்லை பேர்ட். எப்படியாவது மனித முகத்தையும், நகரும் காட்சியையும் ஒரு பெட்டிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயன்றுகொண்டே இருந்தார். ஆய்வுக்கு பணமில்லாததால் உதவிகேட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார். அதில் கிடைத்த உதவியைக் கொண்டு அடுத்த ஆண்டே தொலைக்காட்சியின் ஆரம்ப மாதிரியை இயக்கிப் பார்த்தார். எந்தக் குறையுமின்றி முழுப்படமும் திரையில் துல்லியமாகத் தெரிந்தது பேர்ட் மலைத்துப்போனார். 

அந்த நாள்தான் அதாவது 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதிதான் உலகுக்கு தொலைக்காட்சி கிடைத்த நாள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் வண்ணத் தொலைக்காட்சிப் பற்றியும் ஆய்வு செய்து அதனையும் வெற்றிகரமாக உருவாக்கினார். 1929ல் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகத்திற்காக கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி சேவையைத் தொடங்கினார். தொலைக்காட்சி இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்ப்பது சற்று சிரமம்தான். நமது வரவேற்பறைக்குள் உலகத்தைக் கொண்டு வர உதவிய அந்த முன்னோடி ஜான் லோகி பேர்ட்  1946 ஆம் ஆண்டு ஜூன் 14ந்தேதி தமது 58 ஆவது வயதில் காலமானார். 

Friday, 27 March 2015

தெரியுமா இவரை - 6 சர்' ஐசக் நியூட்டன்

ஒரு பொருள் கீழே விழுவது இயற்கை என்றாலும், அதன் பின்னால் உள்ள அறிவியல் உண்மையை சிந்தித்தவர் சர் ஐசக் நியூட்டன். அதன் மூலம்தான் புவியின் ஈர்ப்பு விசையைப் பற்றி உலகம் தெரிந்துகொண்டது. அந்த மாபெரும் கண்டுபிடிப்பைச் செய்த நியூட்டன்,  1642 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர்-25) இங்கிலாந்தில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். 

நியூட்டன் படிப்பில் சராசரி மாணவர்தான். வறுமை காரணமாக படிப்பை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது அவருக்கு. ஆனால், சிறுவயதிலேயே அவருக்கு அறிவியலில் அலாதி பிரியம். தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். 

நியூட்டனின் திறமையை  அறிந்துகொண்ட அவரது மாமன் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிடி கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். 

வளைந்தப் பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்து தந்தவைதான். ஒருமுறை அவர் தனது தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஓர் ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைப் பார்த்தார். நியூட்டனுக்கு முன் தோன்றி மறைந்த மனிதர்கள் அனைவரும் பார்த்திருக்கக்கூடிய சாதாரணக் காட்சிதான் அது. நியூட்டனுக்கு அது சாதாரணமாகப்படவில்லை. அதைப்பற்றி சிந்தித்தார் நியூட்டன். 

ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்திதான் ஆப்பிளை பூமியில் விழச்செய்கிறது என்று ஊகித்தார் நியூட்டன். உலகில் புவி ஈர்ப்பு விசை என்ற சக்தி இருப்பதால்தான் எல்லாப் பொருள்களும் கீழே விழுகின்றன. நாமும் மிதக்காமல் நடக்கிறோம் என்பது நியூட்டன் கண்டுபிடித்துச் சொன்ன உண்மை. அது அவரது மகத்தான் கண்டுபிடிப்பு. 

1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கௌரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

பட்டகம் எனப்படும் முக்கோணத்தில் ஒளி விழும்போது ஏற்படும் விளைவுகளை அவர் கண்டறிந்தார். ஒளியின் இமிசன் கோட்பாடு நியூட்டன் வகுத்து தந்ததுதான். வெகுதொலைவில் உள்ள ஓர் ஒளிரும் பொருளிலிருந்து வெளியாகும் துகள்கள் பரவெளியில் வினாடிக்கு நூற்றி தொன்னூராயிரம் மைல் வேகத்தில் விரைந்து வருவதுதான் ஒளியாக நமக்குத் தெரிகிறது என்பதுதான் அந்தக்கோட்பாடு. 

* எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன; அந்த ஈர்ப்பு விசை இரு பொருள்களுடைய நிறைகளின் பெருக்கலுக்கு நேர் விகிதத்திலும், அவ்விரு பொருள்களின் இடையே உள்ள தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர் விகிதத்திலும் இருக்கும்.

* ஒவ்வொரு வினைக்கும், அதற்கு எதிர்த் திசையிலிருந்து சமமான எதிர் வினை நிகழும்.

* ஒரு நிலையான பொருளை நகர்த்துவதற்கு, புற விசை இன்றியமையாதது.

'சர்' ஐசக் நியூட்டனின் மேற்கூறிய கோட்பாடுகளை அறியாத அறிவியல் மாணவர் எவரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அறிவியலிலும், கணிதத்திலும் நியூட்டனின் பங்களிப்பு மகத்தானது. அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் நியூட்டன் மேற்கொண்ட ஆய்வுகள் பெரிதும் போற்றப்பட்டன.

நியூட்டன் அறிவுச்செல்வத்தை சேர்த்து வைத்திருப்பதை உணர்ந்த அவரது நண்பர் ஹேய்லி அவற்றையெல்லாம் புத்தமாக வெளியிட நியூட்டனுக்கு ஊக்கமூட்டினார். அதன்பலனாக 1687 ஆம் ஆண்டு " Mathematical Principles of Natural Philosophy" என்ற புத்தகம் வெளியானது. "Principia" என்றும் அழைக்கப்பட்ட அந்த புத்தகம்தான் இதுவரை வெளியிடப்பட்டிருக்கும் அறிவியல் நூல்களிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. 

1692 ஆம் ஆண்டு முதல் 1694 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் நியூட்டன் கடுமையான நோய்வாய்ப்பட்டார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினையும், தூக்கமின்மை பிரச்சினையும் ஏற்பட்டது. நியூட்டனுக்கு புத்தி பேதலித்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் பின்னர் நன்கு குணமடைந்து பல்கலைக்கழகப் பணிகளில் ஈடுபட்டார். 

1703 ஆம் ஆண்டில் நியூட்டன் ராயல் சொசைட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 25 ஆண்டுகள் அவர் ஒவ்வொரு ஆண்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 1705 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ராணி (Queen Anne) கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு வருகை மேற்கொண்டபோது நியூட்டனுக்கு 'சர்' பட்டம் வழங்கி சிறப்பித்தார். இங்கிலாந்தின் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் "சர் ஐசக் நியூட்டன்" நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற "Westminster Abbey"-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனு குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்ட சொற்றொடர் ஆழ்ந்த பொருளுடையது.

நியூட்டனுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும் போப் எழுதிய அஞ்சலி மிக ஆழமானது... 

"இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன, கடவுள்... நியூட்டன் பிறக்கட்டும் என்றார் ஒளி பிறந்தது" 

இந்த வாசகம் நியூட்டன் பிறந்த அறையில் இன்றும் பொறிக்கப்பட்டிருக்கிறது! 

Thursday, 26 March 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 4


அப்படீங்களா?

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
• யானையின் கால் தடத்தின் நீளத்தை அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
• கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம். 
• 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
• ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.
• வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
• ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
• பெரியார் பொதுக் கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21,400 மணிநேரம் பேசியுள்ளார். 
• தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் குங்பூ வீரர் ஆனார் - புருஸ்லீ.
• ‘தாஸ் காப்பிட்டல்’ நூல் எழுத காரல் மார்க்ஸூக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.
• சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
• விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
• சீல் வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
• யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
• நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
• டால்பின் ஒரு கண்ணை திறந்துகொண்டே தூங்கும்
• புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
• மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
• நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
• எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.


ஒரு குட்டிக்கதை 

ஒரு பெண் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் “நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடத் தருகிறேன்” என்றாள்

அதற்கு அவர்கள், “வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா?” என்று கேட்கிறார்கள்.

“வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்”.

“அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம்” - என்று கூறுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்ததும் நடந்ததை கூறுகிறாள். அதற்கு அவன், “நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்து வா” என்கிறான். 

அவள் வந்து மூவரையும் அழைக்கிறாள், அதற்கு அவர்கள். “நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது” என்கிறார்கள்.

“ஏன் அப்படி?” என்று அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து. “இவர் செல்வம்” என்றும், மற்றொருவரை காண்பித்து. “இவர் வெற்றி” என்றும், “நான் அன்பு” என்றும் கூறி. “உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல்” என்று அவளிடம் கூறுகிறார்.

அந்த பெண் கணவனிடம் வந்து முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..அதை கேட்ட கணவன், மகிழ்ந்து, நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று மனைவியிடம் கூறுகிறான்.

ஆனால், மனைவியோ, நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கலாமே  என்கிறாள். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? கூறுகிறாள்.

மகளின் ஆசைப்படி அன்பை வீட்டிற்கு அழைக்க கணவனும், மனைவியும் முடிவு செய்கின்றனர். அதன்படி, மனைவி, வீட்டிற்கு வெளியே வந்து, முதியவர்களைப் பார்த்து,  உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வரவேண்டும்  என்கிறாள்.

அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? நான் அன்பை மட்டும் தானே அழைத்தேன் ? என்கிறாள். 

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!

அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.பொண்ணுகளுக்கும் பசங்களுக்கும் உள்ள வித்யாசம் என்ன தெரியுமா? கீழே உள்ள டயலாக்கை படிச்சுப் பாருங்க.. புரியும்..

முதல் நாள் 

பெண் : எனக்கு இந்த சுடிதார் நல்லா இருக்காடா?
ஆண் : செம சூப்பரா இருக்குப்பா.

இரண்டாம் நாள் 

பெண் : எனக்கு இந்த கிரீன் சாரி எப்படி இருக்கு?
ஆண் : வாவ்வ்...வெரி நைஸ்டா.

மூன்றாம் நாள் 

பெண் : நான் இன்னைக்கி ஜீன்ஸ், டாப்ஸ்ல எப்படி இருக்கேன்?
ஆண் : ரெம்ப அழகா இருக்கே செல்லம்.

நான்காம் நாள் 

பெண் : நான் இந்த சல்வார்ல நல்லா இருக்கேனா?
ஆண் : நீ எது போட்டாலும் உனக்கு சூப்பரா தான்டா இருக்கும்.

ஐந்தாம் நாள் 

ஆண் : இப்ப நீ சொல்லு, நான் இந்த ஜீன்ஸ், டி-சர்ட்ல எப்படி இருக்கேன்?
பெண் : அய்யோ,என்னடா கலர் இது. உனக்கு நல்லாவே இல்ல. ஜீன்ஸ்ல வேற மாடலே கிடைக்கலயா.உனக்கும் டி-சர்ட்டுக்கும் மேட்சிங்கே இல்லடா. நல்லா மேட்சிங்கா போடுடா.

# நீதி : எதையுமே அழகாக பார்ப்பது ஆண்கள். எல்லாத்திலும் குறை சொல்வது பெண்கள். ஆமாவா? இல்லையா...


சினிமா பாடல்களைத்தான் ரீமிக்ஸ் பண்ணணுமா என்ன, ஒரு சேஞ்சுக்கு ரீமிக்ஸ் கவிதையைத் தான் படிச்சுப் பார்ப்போமே.. அதுவும் வைரமுத்துவோட பிரபலமான கவிதை இது.. படிச்சா உங்களுக்கே தெரியும். முடிஞ்சா அவரோட குரல்லயே படிச்சுப் பாருங்க..

கல்யாணம் பண்ணிப்பார்.

உச்சந்தலையைச் சுற்றி 'ஒளிவட்டம்'
தோன்றும்...
அப்பவே கண்ணைக் கட்டும்
உலகமே உன்னை வெறித்துப்
பார்க்கும்...
ராத்திரியின் நீளம் குறையும்...
அதிகாலையில் கொடூரம் புரியும்...
உனக்கும் சமைக்க வரும்...
சமையலறை உனதாகும்...
ஷாட்ஸ் பனியன் அழுக்காகும்...
பழைய சாம்பார் கூட அமிர்தமாகும்...
ஃபிரிட்ஜ் ,வாசிங் மெசின்,
கிரைண்டர்,மிக்ஸி கண்டுபிடித்தவன் தெய்வமாவான்...
கையிரண்டும் வலிகொள்ளும்...
கண்ணிரண்டும் பீதி கொள்ளும்...
கல்யாணம் பண்ணிப்பார்...
தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம்
துலக்குவாய்...
காத்திருந்தால்...
'வரட்டும்...
இன்னிக்கி வச்சிருக்கேன்'
என்பாய்...
வந்துவிட்டால்...
'வந்திட்டியாடி செல்லம் போலாமா'
என்பாய்...
வீட்டு வேலைக்காரி கூட
உன்னை மதிக்கமாட்டாள் -ஆனால்,
வீடே உன் கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...
கார் வாங்கச்சொல்லி கட்டியவள்
வயிற்றில் மிதிக்க, கடன்
கொடுத்தவன் கழுத்தைப்
பிடிக்க, வயிற்றுக்கும்
தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையன்று உருளக்
காண்பாய்...
கல்யாணம் பண்ணிப்பார்...
இருதயம் அடிக்கடி எதிர்த்துப் பேசத்
துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
மட்டுமே உனது குரல் ஒலிக்கும்...
உன்
நரம்பே நாணேற்றி உனக்குள்ளே வெறியேற்றி விடும்...
எதிரில் எது கிடந்தாலும் கோபத்தில்
உனது கைகள் கிழிக்கும்...
கழுத்து நரம்பு புடைக்கும்...
குருதி கொதித்து எரிமலையாய்
வெடிக்கக் காத்திருக்கும்...
ஆனால்உதடுகள் மட்டும்
ஃபெவிகாலைவிட அழுத்தமாக
ஒட்டியிருக்கும்...
பிறகு....
"என்ன அங்க சத்தம்..." என்கிற
ஒற்றை
சவுண்டில் 
சப்த நாடியும்
அடங்கிவிடும்...
கல்யாணம் பண்ணிப்பார்...!


உங்களையெல்லாம் யார்ரா இப்படி யோசிக்க சொல்றது? 

சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்.
வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...
கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம். நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம்.
நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டு வந்தா ஆது ஜாக்கிங்
பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்கள்ளின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க
ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரனுக்கு தூரம் கூட பக்கம்தான்,
5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது தாய். 15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது சகோதரி. 30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில், அது தோழி. 3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானப்படுத்த முடியவில்லையெனில், அது காதலி. உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது மனைவி....
தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்..வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்..
வாக்கிங் போறது எளிதானது தான்...வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஷ்டமானது..
உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மளைத் தவிர யாருக்கும் வராது..
கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட, யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதியைத் தரவல்லது.
மதம் மாறினால் தான் கடவுள்ஆசீர்வதிப்பார் என்றால் உண்மையில் அவர் கடவுளா, கட்சித் தலைவரா? 
ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போலஃபீல் பண்ணுவாங்க பெண்கள்.. ஜிம்முக்கு போனஅன்னிக்கே அர்னால்டு போல ஃபீல் பண்ணுவாங்க ஆண்கள்..
இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவனை விட ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.
ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்ஆப் பக்கமெல்லாம் வராதவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்
• குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க் செய்யல?'னு கேட்டா அதுங்களே கதை கதையா சொல்லுதுங்க..
காய்கறி விலை மளமளவென உயர்ந்துவரும் நிலையில்,கீரை விலை ஏறாமல் சில்லறையில் கிடைப்பது, நம் உடல்ஆரோக்கியத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடைசி வாய்ப்பு..
ஆபிஸ் போற அன்னைக்கு 9 மணி வரைக்கும் தூக்கம் வரும். சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல வராது # எல்லாம் விதி


ஹலோ யார் பேசறது?..

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்.. ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு .. . .
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !! ."நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?" .
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் போட்டிங்களோ அதைபத்தி மட்டும் கேளுங்க..!"
"கோவப்படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா ?"
"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?" .
"இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.." .
".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! " .
"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்னை லவ் மேரேஜ் பண்ணா...ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்... அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்!! .
"சார்..!! நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல .. என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..? .
"இப்ப புரிதா !!.. நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!"

# ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாரோ?நகைச்சுவை (அசைவம்)

தொழிலதிபர் ஒருவர் ரோபோ ஒன்றை வைத்திருந்தார். யாரவது பொய் சொன்னால் ரோபோ கன்னத்தில் பளார் என்று அறையும். ஒரு முறை தொழிலதிபா¤ன் மகன் இரவு வீட்டுக்கு லேட்டாக வந்தான் 
தொழிலதிபர் :  ஏன்டா லேட்டு ? எங்கேடா போயிருந்தே?
மகன் : அப்பா நண்பர்களோட சேர்ந்து பரீட்சைக்கு படிக்கப் போயிருந்தேன்
ரோபோ மகனின் கன்னத்தில் அறை விட்டது. 
தொழிலதிபர் : (கோபமாக மகனிடம்) ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்ல ரோபோ கிட்ட மறுபடியும் அறை வாங்குவே.
மகன் :  மன்னிச்சிடுங்க அப்பா .. நண்பர்களோட சினிமாவுக்கு போயிருந்தேன்
தொழிலதிபர் : டேய் நீ எல்லாம் உருப்படவே மாட்டே..நானெல்லாம் உன் வயசுல எப்படி படிப்பேன் தெரியுமா ?
ரோபோ தொழிலதிபரின் கன்னத்தில் ஒரு அறை விட்டது. அப்போது அங்கே தொழிலதிபா¤ன் மனைவி வருகிறாள்.   
மனைவி : என்ன இருந்தாலும் உங்களுக்கு பிறந்த பையன் உங்களை மாதிரி தானே இருப்பான்..
இப்போது ரோபோ தொழிலதிபரின் மனைவியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டது


ஏன்டா இப்படி?   

குமாருக்கு நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. காரணம் அது அவன் மனைவி வளர்க்கும் நாய். ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான். ஆச்சர்யம்! அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்!

கடுப்பான குமார், மறுநாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம் வீட்டில் நாய்!

மூன்றாம் நாள் காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான். ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய், வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டான்.
இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்? என்றாள் அவள். அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!


ஆண்கள் தானுங்கோ எப்பவும் 'பெஸ்ட்'. ஏன்னு கேக்கறீங்களா? பின் வருவனவற்றை படிச்சுப் பாருங்கோ.. நீங்களே சொல்லுவீங்கோ.. 

1. மொக்க ஃபிகர் எனி ஹெல்ப்னு (உதவி) கேட்டாக்கூட பரவாயில்லன்னு உதவி செய்வாங்க.
2. ஐ லவ் யூ சொன்னா Ôவாட்? நான்சென்ஸ்னு என்னைக்கும் சொன்னதில்லை..
3. நீயும் மத்த ஆம்பிளைங்க மாதிரி தான். நான் மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல, ரெண்டையும் சொல்றது பொண்ணுங்க தான்.
4. குஸ்காவில் சின்ன பீஸ் வந்தாலும் குதுகளிக்கும் குழந்தை மனசுக்காரன்-ஆண் 
5. மனைவி எவ்வளவு அடித்தாலும் வெளியே சொல்லி புலம்பாமல் இருப்பதால்..
6. என் பொண்டாட்டி, பக்கத்துக்கு வீட்டுக்காரன் பொண்டாட்டின்னு பிரிச்சு பார்க்க
மாட்டான் 
7. தங்கைகளுக்கு மணமாகும் வரை நாற்பது வயதானாலும் காத்திருப்பான்..
8. சுமாரா இருக்குற பொண்ண கூட தங்கச்சின்னு சொல்லி அசிங்கப்படுத்த
மாட்டான் 
9. துணிக்கடைக்கு போன 'உடனே' டிரஸ் எடுத்திட்டு வந்துடுவோம், ஜவுளிக்
கடைல வேலை பாக்குற பொண்ணுங்கனை பாடாய் படுத்தமாட்டான்.
10. கஸ்டமர் கேர் பொண்ணாவே இருந்தாலும், சாப்பிடிங்களான்னு விசாரிப்பான்..
11. பொண்ணுங்க சைக்கிள் பஞ்சர் ஆனதும், அவன் சைக்கிள்ல காத்த இறக்கி விட்டு நடந்து வருவான்...
12. வீட்டு வருமானத்துக்கு உழைக்கிறான். நாட்டு வருமானத்துக்கு குடிக்கிறோம்.
13. முக்கியமா. டி.வி சீரியல் பார்த்து நாசமா போகமாட்டான். 

# என்னங்க நான் சொல்றது சரிதானுங்களே...

Monday, 23 March 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 3

வாய்விட்டுச் சிரிப்போம்..!

"நீங்க சிகரெட் பிடிப்பீங்களா?"
"ஆமா."
"எவ்வளவு  நாளா இந்த பழக்கம்?"
"கிட்டத்தட்ட பத்து வருஷமா."
"ஒரு நாளைக்கி எத்தனை பாக்கெட் தம் அடிப்பீங்க?"
"மூணு பாக்கெட்"
"அப்படின்னா.. ஒரு பாக்கெட் சிகரட் எவ்வளவு?"
"40 ரூபாய்."
"அப்போ ஒரு நாளைக்கு 120 ரூபாய் செலவு பண்றீங்க."
"ஆமா."
"அப்போ மாசத்துக்கு 3,600 ரூபாய்"
"ஆமா".
"வருஷத்துக்கு 43,200 ரூபாய்?"
"கரெக்ட்டா சொன்னீங்க"
"பத்து வருசத்துக்கு 4,32,000 ரூபாய்"
"ஆமா"
"சிகரெட் அடிக்காம, நீங்க இந்த காச சேர்த்து வச்சிருந்தா ஒரு சான்ட்ரோ கார் வாங்கியிருக்கலாம்"
"ஓ அப்படியா.!! சரி நீங்க தம் அடிப்பீங்களா?"
"ச்சீ ச்சீ எனக்கு அந்த பழக்கமே கிடையாது"
"அப்போ உங்க சான்ட்ரோ கார் எங்கே நிக்கிது?"
.........?
"கொய்யால யாருகிட்ட...?"


என்னமோ போங்க...

பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - மவனே..அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்டா இதோடு..!!இன்பத்திலும் சிரிங்க..!
துன்பத்திலும் சிரிங்க!
எல்லா நேரமும் சிரிங்க!
அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
என்ன தெரியலையா? சரி, நானே சொல்றேன், அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம்
எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...


உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!

1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்பற நல்ல மனசு.... பாவம்..நீங்க..மாமனார் வீட்டுல டிவி பாக்கும்போது இந்த விளம்பரம் அடிக்கடி வந்தா கடுப்பு ஆவீங்களா?? இல்லையா??    
"நம்பிக் கட்டினோம் ... நன்றாக இருக்கிறோம்"


புரியுமா?

ஒரு பெண் தானாகவே முன்
வந்து காதலை வெளிப்படுத்தினால்
மட்டமாக பார்ப்பார்கள்.
காதலை வெளிபடுத்தாமல்
இருந்தால்
அழுத்தக்காரி என்பார்கள்.
காதலித்தவனை ஓடிப்போய் கைப்பிடித்தால்,
ஓடுகாலி என்பார்கள்.
பெற்றோருக்காக காதலை மறந்தால்

ஒருத்தனை
விரும்பிட்டு வேறு ஒருனை கட்டிக்கொள்வதா என்பார்கள்.
காலம் காலமாக பெண்களை
பலவாறாக
பழிக்கும் இந்த சமூகம் எப்போது புரிந்து கொள்ளும்
பெண்ணினத்தின்
சோகங்களையும், தியாகங்களையும்...


ஃபேமிலி மேன் குறிப்பு வரைக;-

கல்யாணத்திற்கு முன்பு தான் உண்டு தன் வேலை உண்டு என முழித்துக்கொண்டிருந்த மேன் திருமணத்திற்கு பின், பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல் "பேய்" முழி முழிக்கும்
மேனை தான் "பேய் முழி மேன்" "பேய் முழி மேன்" என்கிறோம். இதுவே காலப்போக்கில் மருவி ஃபேமிலி மேன் ஆனது ....

வேலை வெட்டிக்கு போகாமல் வாழ்வது எப்படி?

* காலையில் பத்து மணிக்கு முன்னர் தயவு செய்து எந்திரித்து தொலைக்கவேண்டாம். மீறி எழுந்தால், வேலைக்கு செல்பவர்களை பார்த்து மனம் உடைய நேரிடலாம்.
*  வேலைக்கு செல்லும் நண்பர்களை தவிர்ப்பது நல்லது.
* காலையில் காலை உணவுக்குப் பிறகு, உங்கள் மெயில் ஐடி’யை செக் செய்யவும். அதில் பல வேலை வாய்ப்பு தகவல்கள் வந்து, தலையை வலிக்கச் செய்யும்.
* உடனே Facebook- க்கு சென்று இளைப்பாறவும்.
* தப்பிதவறிகூட வீட்டு வேலைகளை செய்யக்கூடாது. அதையும் மீறி வீட்டில் யாராவது வேலை சொன்னால் அதை காதில் வாங்கக்கூடாது.
* வேலை இல்லாதவருக்கு மதிய தூக்கம் மிக மிக அவசியம். அதனால் கண்டிப்பாய் பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை தூங்கி விடவும்.
* மாலை எழுந்ததும் தேனீர் அருந்திவிட்டு, உங்களை போல் வேலை இல்லாத உங்கள் நண்பர்களை சந்தித்து இந்திய பொருளாதாரம் முதல் சமந்தாவின் வாழ்வாதாரம் வரை வெட்டி பேச்சு பேசலாம்.
* இரவு அனைவரும் தூங்கும் நேரத்திற்கு சரியாய் வீடு வந்து சேர்ந்து விடவும்,கொஞ்சம் முன்னாலோ பின்னலோ வந்தால் தந்தையிடம் திட்டு நிச்சயம்,முடிந்தவரை தந்தை உறங்கிய பின் வீட்டுக்கு வருதல் நல்லது.
*  இரவு பொழுது தங்கள் கணினியில் பொழுதை கழிக்கலாம்.
* இடையிடையே உங்களுக்கு வேலை இல்லை என்று யாராவது (முக்கியமாக உறவினர்,பக்கத்துக்கு வீட்டார்.) குத்திக்காட்ட கூடும் அப்போது வெட்கமே இல்லாமல் சிரித்து விடவும்… பின்னர் அவர்களின் வாரிசு அல்லது பிள்ளைகளை எதிர்காலத்தில் பழி தீர்த்து கொள்ளலாம்.
#  பின்_குறிப்பு : கல்யாண நிகழ்ச்சிகள், கிடா விருந்து போன்ற உறவினர் தெரிந்தவர் அதிகம் கூடும் இடங்களில் தலை காட்ட வேண்டாம். முடிந்தவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.


கொஞ்சம் மொக்கைதான், முடிஞ்சா சிரிங்க...

☑ டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
🔗 எந்த பாட்டுக்கு?

🔘 ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
🔗 நோயோடதான்!
.
☑ தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
🔗 அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

🔘 டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
🔗 கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

☑ டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

🔘 என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
🔗 பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

☑ படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
🔗 புக்கை மூடிடுவேன்!

🔘 காலில் என்ன காயம்?
🔗 செருப்பு கடித்து விட்டது
🔗 பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!

☑ குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
🔗 தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

🔘 இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
🔗 என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

☑ டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு
🔗 என்னிடம் சுத்தமா இல்ல
🔗 பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

🔘 இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
🔗 கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

☑ சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.ஏ.
சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

🔘 இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
🔗  ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய
மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

☑ மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல !
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்தை அழுவுது...
கணவன்: அடி செருப்பால! உன்னை எவன்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

அப்பா: நேத்து ராத்திரி பரீட்ச்சைக்கு படிச்சேன்னு சொன்னே, ஆனா, உன் ரூம்'ல லைட்டே எரியலையே?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

அப்பா: ஏண்டா உஜாலா பாட்டிலை கீழே போட்டு தாண்டிகிட்டு இருக்குறே?
மகன்: எங்க ஸ்கூல்ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.


மனைவி அமைவதெல்லாம்.......

சாதாரணமாக மனைவிக்குப் பயப்படும் ஆண்களைப் பற்றி நிறைய நகைச்சுவை துணுக்குகள்உண்டு. 
வளமை மிக்க எமதா்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.
அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. அதைவிட முக்கியமான சிக்கல் அந்தப் பெண்மணி எமனை ஆசையாக இறுக்கி அணைத்தால் எமனுக்கு மூச்சு திணறியது. அவ்வளவு அழுத்தமான அணைப்பு. பாசத்தோடு மனைவி அணைக்கும் போதெல்லாம் எம பாசத்தோடு இருந்த எமனுக்கே மரண பயம் வரத் தொடங்கியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.
மகன் கொஞ்சம் வளா்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவா் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவா் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீா் விட்டு எமதா்மன் நழுவி விட்டார்.
மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவா் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சா்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை (எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.
கொஞ்ச நாளில் அந்த ஊா் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும். இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு
வழிகாட்டும் ஏழு விஷயங்கள்
1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்.
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்
நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் 
1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்க கற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத் தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்
கவனிக்க ஏழு விஷயங்கள்
1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

உண்டு என்பதே இங்கு இல்லை.

1.அன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை
2. அத்தி, பலா மரங்கள் பூப்பதில்லை
3. அரேபியாவில் ஆறுகள் இல்லை
4. அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை
5. இந்தியாவில் எரிமலைகள் இல்லை
6. உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை
7. யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை
8. ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை
9. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை
10. ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை
11. பூடானில் திரை அரங்குகள் இல்லை
12. நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை
13. காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை
14. பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை
15. மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை
16. கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை
17. சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழ்வதில்லை
18. கடலில் முதலைகள் இருப்பது இல்லை
19. யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை
20. நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை
21. நண்டுக்குத் தலை இல்லை
22. ஆமைக்கு பற்கள் இல்லை
23. வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லை
24. மண்ணுளிப பாம்புக்கு கண் இல்லை
25. பாம்புக்கு காது இல்லை.


நேர்மறையாக சிந்தியுங்களேன்...

 ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்  தார்கள். வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து. ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர். ஆளில்லாத வனாந்திரம், மான்களும்

மயில்களும் குயில்களின் இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை. இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி இருந்த பாறையில் ஏறினர். உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி கரங்களைப் பற்றிக் கொண்டனர்.

வனக்குரங்குகள் மரங்களிலிருந்து இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன. அப்போது, மிகப் பெரிய சப்தம். திரும்பிப் பார்த்தார்கள். இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது மலையிலிருந்து மிகப் பெரிய பாறை விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது. ஒருவரும் தப்பவில்லை! இவர்கள் இருவரைத் தவிர..பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.

குயிலோசை இல்லை! மான்களும் மயில்களும் ஒடுங்கி நின்றிருந்தன. வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி ஓடின. இளம் தம்பதி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் சொல்லிக் கொண்டார்கள். "நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!"

ஏன் அப்படிச் சொன்னார்கள் ? ஊகிக்க முடிகிறதா? சவாலான கேள்வி...!

100% உங்கள் யூகம் தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அவர்கள் அந்த பேருந்தில் இருந்து இறங்கி இருக்காமல் பயணித்திருந்தால்.. சில நிமிடங்களுக்கு முன்னரே பேருந்து அந்த இடத்தைக் கடந்திருக்கும். பாறை விழும் பேராபத்தில் இருந்து அனைவரும் தப்பி இருப்பார்கள். எதிர்மறையான சிந்தனை உங்களுக்குத் தோன்றி இருந்தால்...நீங்கள் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

"பார்த்தாயா நம் தமிழ் மொழியின் அருமையை !"

Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Sex Therapist -- காமதேவன்
Marriage Counselor -- கல்யாணசுந்தரம்
Ophthalmologist--கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை,பிச்சையாண்டி, பிச்சைமுத்து
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
eBowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- திரிப்புரசுந்தரி
Driver -- சாரதி

கடைசி தலைமுறை

* ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறை நாம், ஓனிடா மண்டையனை பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
* செல்போனில் பட்டனை பாத்த கடைசி தலைமுறை நாமளாதான் இருக்கும்.
* மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமதான்...!
* கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நாமளாதான் இருக்கும்.
* மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும
* கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
* 10th 12th ரிசல்ட்  பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்
* கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான்

* ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.
* சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.
* போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
* ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது
* நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை  இதெல்லாம் போச்சு.
* நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி என  பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...
* 5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,
* மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.

தெரியுமா இவரை - 5 அலெக்ஸாண்டர் ப்ளமிங்


பெனிசிலின் என்ற அற்புத மருந்தை உலகிற்கு தந்ததன் மூலம் மருத்துவ உலகின் தலையெழுத்தையே மாற்றி அமைத்தவர் அலெக்ஸாண்டர் ப்ளெமிங்.

1881 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி ஸ்காட்லந்தில் லாக்ஃபில் நகரில்  விவசாய குடும்பத்தில் அலெக்ஸாண்டர் ப்ளமிங் பிறந்தார். ஆரம்பக் கல்வியை முடிந்த அவர், ஒரு நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்து 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதில், கொஞ்சம் பணத்தை சேர்த்த்து, தமது 20 வயதில்  லண்டனில் உள்ள புனித  மேரி மருத்துவ பள்ளியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். 

டைபாய்டு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்த சர் ஆம்ராத் எட்வர்ட் ரைட் என்பவர் ப்ளெமிங்கிற்கு பேராசிரியராக இருந்தார். 1906 ஆம் ஆண்டு மருத்துவத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்று அந்த பேராரசிரியரிடமே உதவியாளராக சேர்ந்தார் ப்ளமிங். பின்னர், பாக்டீரியா கிருமிகளைப்பற்றி ஆய்வு மேற்கொண்ட அவர், முதல் உலகப்போரில்  இராணுவ மருத்துவ குழுவில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது, போரில் காயமடைந்து, சரியான மருந்து இல்லாமல் மடிந்துபோன வீரர்களின் நிலை அவரை கலங்க வைத்தது.

அந்தக் காலக்கட்டத்தில் கார்பாலிக் அமிலம்தான் கிருமிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த அமிலம் கிருமிகளைக் கொன்றாலும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களையும் அழித்தது. முதலாம் உலகப்போரில் சுமார் 70 லட்சம் வீரர்கள் காயமடைந்து உயிரிழந்தனர். அப்போது சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட கார்பாலிக் அமிலம் உரிய பயனைத் தரவில்லை என்பதை ப்ளமிங்கும் அவரது பேராசிரியரும் உணர்ந்தனர். உலக போர் முடிந்த கையோடு மீண்டும் தன் ஆய்வுக்கூடத்திற்கு திரும்பினார் ப்ளெமிங். கிருமிகளை கொல்லும் மருந்துத்தை உருவாக்குவதற்காக பலவகை கிருமிகளை வளர்த்து அவற்றின் மீது சோதனை செய்தார் ப்ளெமிங். 

1928 ஆம் ஆண்டு லண்டனில் இலையுதிர் காலம் தொடங்கும் முன் இரண்டுவார விடுமுறைக்காக புறப்பட்டார் பிளமிங். அதற்கு முன் அவர்,  ஆய்வுக்கூட வட்டில், நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும்  ஸ்டெபிலோ காக்கஸ் என்ற கிருமியை சேமித்து வைத்துவிட்டு சென்றார். விடுமுறை முடிந்து வந்து பார்த்தபோது அந்த வட்டில் பூசனம் பூத்திருப்பதை பார்த்தார். அந்த பூசனம் படர்ந்திருந்த இடங்களில் கிருமிகள் கொல்லப்பட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். 

அந்த பூசனம் பெனிசிலியம் என்ற ஒருவித காளான் என்பது தெரிய வந்தது. அந்தக் காளானைக் கொண்டு பல்வேறு ஆய்வுகள் செய்தார் அதன் விளைவாக கிடைத்த அருமருந்துதான் பெனிசிலின். இரண்டாம் உலகப்போரின்போது அதிக அளவில் பெனிசிலின் உற்பத்தி செய்யப்பட்டு காயமடைந்த போர் வீரர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் பயனாக லட்சக் கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. நோய் தொற்று அபாயம் ஏற்படுமே என்று அதுவரை அறுவை சிகிச்சை செய்ய தயங்கிய மருத்துவ உலகம் பெனிசிலின் வரவுக்கு பிறகு தைரியமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது.

பெனிசிலினுக்குப் பிறகு எத்தனையோ வேறுவித ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவற்றுக்கு அஸ்திவாரம் போட்டது பெனிசிலின்தான். அந்த உயிர்காக்கும் கண்டுபிடிப்புக்காக 1945 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை கொடுத்து  தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது உலகம்.

ஒரு மனிதனின் விடாமுயற்சியால் கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் எண்ணிலடங்கா உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. விலைமதிக்க முடியாத மருந்தை உலகுக்கு தந்த ப்ளெமிங் 1955-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி லண்டனில் காலமானார். 

மேற்குத் தொடர்ச்சி மலை - சிறுகுறிப்பு

இமயமலையைவிட வயதில் மூத்தது, ஆறு மாநிலங்களை கடந்து, 1600 கி.மீ. தூரம் நீண்டு, அதிசயங்களையும், பொக்கிஷங்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது மேற்கு தொடர்ச்சி மலை. 
அரிய வகை தாவரங்கள், அபூர்வ உயிரினங்கள், ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் போன்ற கோடை வாசஸ்தலங்கள், சபரிமலை, பழநி ஆன்மீகத் தலங்கள் என ஏராளமான அம்சங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உண்டு. இந்த பெருமைக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு, மேற்குத் தொடர்ச்சி மலையை பாரம்பா¤ய சின்னமாக அறிவித்துள்ளது.

குஜராத்தின் தாபி பள்ளத்தாக்கில் தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம்,  கேரளா, தமிழ்நாடு வழியாக இந்தியாவின் தென் கோடியான கன்னியாகுமரியில் முடிகிறது மேற்கு தொடர்ச்சி மலை. 6 மாநிலங்களை தாண்டி மொத்தம் ஆயிரத்து 600 கி.மீ. தூரம் நீண்டு 1 லட்சத்து 74 ஆயிரத்து 700 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. 

மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இது 'சாயத்ரி மலை' எனவும், தமிழகத்தில் பொதிகை மலை, ஆனைமலை, நீலகிரி மலை எனவும், கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் மிக உயரமான சிகரமாக கேரளாவில் உள்ள ஆனைமுடி விளங்குகிறது. 2 ஆயிரத்து 695 மீட்டர் உயரத்தில் உள்ள இதுதான் 

இந்த மலை 'கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி' என்கின்றனர் புவியியல் வரலாற்று அறிஞர்கள்.  பண்டைய காலத்தில் இந்த மலை தற்போதைய ஆப்ரிக்கா, மடகாஸ்கர், செஷல்ஸ் தீவுகளுடன் இணைந்திருந்தது. 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியியல் மாற்றம் ஏற்பட்டபோது கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென்னிந்திய பகுதிகள், ஆசிய கண்டம் நோக்கி இடம் பெயர்ந்தன. இதோடு 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவான புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலை என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு, காலப்போக்கில் அங்கு அரிய தாவரங்கள், உயிரினங்கள் உருவாக காரணமாக அமைந்தது. இங்குள்ள பல ஆயிரம் வயதுள்ள அடர்ந்த சோலை காடுகளை போன்று உலகில் வேறு எங்கும் காண முடியாது.

இந்த மலையில் உருவாகும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி போன்ற பெரிய ஆறுகள் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கின்றன.  பல்வேறு சிறிய ஆறுகள் மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக் கடலில் கலக்கின்றன. அதில் சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கல்லாறு, பெண்ணாறு, பெரியாறு ஆகியவற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டு, நீர் பாசனத்துக்கும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள கோபாளி, கோய்னா, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணசாகர், கேரளாவின் பரம்பிக்குளம், தமிழகத்தில் மேட்டூர் ஆகிய பெரிய அணைகள் முக்கியமானவை.

மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, மிளா போன்ற மிருகங்கள், மான், சோலை மந்தி, சிங்கவால் குரங்கு, வரையாடு உள்ளிட்ட 139 வகையான பாலூட்டி இனங்கள், 508 வகை பறவைகள், நிலத்திலும் நீரிலும் வாழும் 176 வகை உயிரினங்கள் உள்ளன. இவற்றில் 119 வகை பட்டாம்பூச்சிகள், பறக்கும் அணில், பறவை கீரி போன்ற அரிய உயிரினங்களும் அடங்கும்.

இந்த மலையில் தேக்கு மரக்காடுகள் அதிகம் உள்ளன. தேக்கடி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களில் பூக்கும் மலர்கள், மலையின் அழகை ரம்மியமாக்குகிறது. தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள், ஏலக்காய், மிளகு போன்ற பணப் பயிர்கள் விளைகின்றன. 

அரபிக் கடலிருந்து வீசும் குளிர்ந்த காற்று, மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி மழை தருகிறது. இதுதான் தென்மேற்கு பருவ மழையாகும். இந்தியாவின் 40 சதவீத நீர்த் தேவையை பூர்த்தி செய்வது மேற்குத் தொடர்ச்சி மலை. தென்னிந்தியாவின் நீர் ஆதாரமே இந்த மலைதான். 

பத்ரா, பீமா, சாலக்குடி, சித்தாறு, கோதாவரி, கபினி, காளி, கல்லாயி, காவிரி, கோய்னா, கிருஷ்ணா, குண்டலி, மகாபலேஷ்வர், மலபிரபா, மணிமுத்தாறு, நேத்ராவதி, பச்சையாறு, பரம்பிக்குளம், வைகை, பெண்ணாறு, சரஸ்வதி, சாவித்ரி, ஷராவதி, தாமிரபரணி, தபதி, துங்கா, வீணா ஆகியவை மேற்குத் தொடரச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள். 

குற்றாலம், அகஸ்தியர், சுருளி, அப்பே, சுஞ்சனா சுட்டே, சோகக், சாலக்குடி, கல்கட்டி, உஞ்சள்ளி, பாணதீர்த்தம், சத்தோடு, சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சி என இந்த மலை தொடர்ச்சியில் உள்ள அருவிகளின் பட்டியல் நீளமானது. கோவா, பாலக்காடு போன்ற கணவாய்களும் இதில் அடக்கம். 

சபரிமலை ஐயப்பன் கோயில், பழநி மலை முருகன் கோயில், கற்புக்கரசி கண்ணகி கோயில் போன்ற ஆன்மீகத் தலங்களும் இந்த மலைத்தொடரில் அமைந்துள்ளன. மலைகளின் அரசியான உதகை, மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல், ஏழைகளின் உதகை எனப்படும் ஏற்காடு போன்ற கோடை வாசஸ்தலங்களும், சுற்றுலா பயணிகளை கவரும் தேக்கடியும் இதில் அமைந்துள்ளன.

களக்காடு முண்டந்துறை, பிடிஆர் புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், அகத்தியமலை, நீலகிரி உயிர்க்கோள காப்பகம் மற்றும் இந்திரா காந்தி தேசிய பூங்கா, பந்திப்பூர் உள்ளிட்ட பல தேசிய பூங்காக்களும் ஸ்ரீவில்லிபுத்தூர், தலைக்காவிரி, வயநாடு உள்ளிட்ட ஏராளமான இடங்களில் காட்டுயிர் வாழ்விடங்கள் மற்றும் பறவைகள் வாழ்விடங்களும் அமைந்துள்ளன.

அமேசான் காடுகள், கிழக்கு இமயமலை உட்பட உலகின் பல்லுயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் 18 காடுகளுள் மேற்குத் தொடர்ச்சி மலைக்குத் தான் முதலிடம். 1,00,080 சதுர கி.மீ. பரப்பளவுக்குள் விரிந்து கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள், இந்திய நிலப்பரப்பில் ஆறு சதவீதம். இந்தியாவின் 30 சதவீத வன உயிரினங்கள், 14 தேசிய பூங்காக்கள், 44 வன உயிரினச் சரணாலயங்கள் மேற்கு மலைத் தொடர்ச்சிக்குள் அடக்கம். 

Sunday, 15 March 2015

தெரியுமா இவரை - 4 மார்க்கோனி

வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்தவர் மார்கோனி. 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் அவர் 1874-ம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார். அவரது இயற்பெயர் குலீல்மோ மார்க்கோனி. 

தந்தை தனவந்தர். எனவே மார்க்கோனிக்கு மிகச்சிறந்த கல்வி கிடைத்தது. வீட்டிலேயே தந்தை உருவாக்கி வைத்திருந்த நூலகம், அவா¤ன் பார்வையை விசாலப்படுத்தின. சிறு வயதிலேயே மார்கோனிக்கு மின்சக்தி ஆய்விலும், இயற்பியலிலும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. எனவே வீட்டுப் பரணில் சிறு ஆய்வுக் கூடத்தை நிறுவி ஆய்வுகளை மேற்கொண்டார். 

தமது 20-ம் வயதில், கம்பியில்லாமல் ஒலி அலைகளை அனுப்பும் ஆய்வு குறித்து படிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அது அவருக்கு உந்துதலாக இருக்கவே, அதைப்பற்றி தொடர்ந்து  ஆய்வுகள் மேற்கொண்டார். அதன் பயனாக, ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தியை அதாவது டெலிகிராப் அனுப்பும் முறையை உருவாக்கினார். 

அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரை கேட்டு 1896-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி. இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அஞ்சல் துறை அவரது கண்டுபிடிப்பை வரவேற்று அறிமுகம் செய்தது. அதே ஆண்டு தனது கண்டுபிடிப்பான கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.

ஒலி அலைகளை வானில் உலா வரச்செய்ய முடியும் என்று நம்பிய மார்க்கோனி அதனை சோதித்துப் பார்க்க, பலூன்களையும், பட்டங்களையும் பறக்க விட்டு அவற்றிலிருந்து சமிக்ஞைகளை பெற முடியுமா என்று சோதித்தார். அதில் வெற்றி கிடைக்க, பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில் ஒன்பது மைல் சுற்று வட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். 

1899-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒன்றும், இங்கிலாந்தில் ஒன்றுமாக இரண்டு கம்பியில்லா தொலைத் தொடர்பு நிலையங்களை உருவாக்கினார் மார்கோனி. 31 மைல் இடைவெளி இருந்த இரண்டுக்குமிடையே ஆங்கில கால்வாய்க்கும் மேலே வெற்றிகரமாக தகவல் பரிமாற்றத்தை செய்து காட்டினார். அவர் உருவாக்கிய கருவிகள் போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்பட்டன. அதன் மூலம் 75 மைல் சுற்றளவில் செய்தி பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. 


1901-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ஓர் அபூர்வமான உண்மையை நிரூபித்துக்காட்டினார் மார்க்கோனி. உலகம் உருண்டை என்பதால், வானொலி அலைகள் 200 கிலோ மீட்டர் வரைதான் பயணிக்கும் என்று அப்போது நம்பப்பட்டது. உலகின் உருண்டை வடிவத்திற்கும் வானொலி அலைகளின் பயணத்திற்கும் தொடர்பு இல்லை என்று நம்பிய மார்க்கோனி, அன்றைய தினம் செயிண்ட் ஜான்ஸ் தீவில் உள்ள ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு ஹெட்போன் கருவியை அணிந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டிருந்தார். 2100 மைல் தொலைவுக்கு அப்பால் இங்கிலாந்தின் கார்ன்வால் பகுதியிலிருந்து அவருக்கு மாஸ்கோட் மூலம் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன.


தந்தி இல்லாமலேயே காற்றில் உலா வந்த அந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் ஒலித்தன. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும் என்பதை அந்த சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி. மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கம்பியில்லா தந்தி முறையை நிறுவிக் கொடுத்தார். அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம் எல்லாம் மாஸ்கோட் எனப்படும் குறியீட்டு முறையில் இருந்தன. அதே அடிப்படையில் மனித குரலையும் அனுப்ப முடியும் என்று நம்பிய மார்க்கோனி 1915-ஆம் ஆண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

ஐந்து ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1920-ஆண்டின் தொடக்கத்தில் நண்பர்கள் சிலரை தாம் தங்கியிருந்த படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பபட்டது. வானொலியும் பிறந்தது. தொடர்ந்து அவர் செய்த ஆய்வின் காரணமாக 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்புவதில் மகத்தான சாதனை புரிந்த மார்க்கோனிக்கு 1909-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

வானொலி என்ற சக்தி வாய்ந்த ஊடகத்தை உலகுக்குத் தந்த மார்க்கோனி 1937-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள் தமது 63-ம் வயதில் ரோம் நகரில் காலமானார். 

Monday, 9 March 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 2

பிரபலங்களின் கடைசி வார்த்தைகள்......

* காந்தி இறக்கும்போது ' ஹே ராம்!'

* ஜூலியஸ் சீஸர் ' யூ டூ புரூட்டஸ்? '

* கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) : தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம்,  'நான் இன்னும் இறக்கவில்லை!'

* தாமஸ் ஆல்வா எடிசன் : 'விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் !'

* பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : 'இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது!'

* பாபர் ( மொகலாயப் பேரரசர் ) : தன் மகன் ஹுமாயூனிடம், 'இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!'

* ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : 'இறைவா .....நான் ஒரு குற்றமும் செய்யாதவன்!'

* டயானா : 'கடவுளே ! என்ன நடந்தது எனக்கு?'"

* ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) : தீயில் எரிந்துகொண்டு இருந்த நேரத்தில், 'ஜீஸஸ்!'

* வால்டேர் : (தூக்க்கிலிடப்படும் முன்) ' சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ' என்று சொன்ன பாதிரியாரிடம், ' எதிரிகளை உருவாக்கிக்கொள்வதற்கான நேரம் இது அல்ல!'
* கிளியோபாட்ரா : பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , 'ஆஹா... இதோ ... என் முடிவு இங்கே இருக்கிறது!'
* பீத்தோவன் : 'நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது!'
* ஆன் ( இங்கிலாந்து ராணி ) ; தன் உதவியாளரிடம் ,' மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள்!'

* நெப்போலியன் : ' ஃபிரான்ஸ் ... ஆர்மி...ஜோஸஃபின்!'

* மேரி க்யூரி : 'என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள்!'

* எழுத்தாளர் ஜேன் ஆஸ்டஸ் : ' வேறு எதுவும் வேண்டுமா' என்று கேட்ட தங்கையிடம் , ' இறப்பைத் தவிர எதுவும் தேவையில்லை'

* வின்ஸ்டன் சர்ச்சில் : 'எனக்கு எல்லாமே போர் அடிக்குது!' (இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார்)

* பெருந்தலைவர் காமராஜர் : தன் உதவியாளரிடம் , ' வைரவா ! விளக்கை அணைத்துவிடு..'

நோய்த் தீர்க்கும் மூலிகைகள்

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர், நெல்லிக்கனி
2) இதயத்தை வலுப்படுத்த , செம்பருத்திப் பூ.
3) மூட்டு வலியை போக்கும், முடக்கத்தான் கீரை
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி
5) நீரழிவு நோய் குணமாக்கும், அரைக்கீரை
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும், மணத்தக்காளிகீரை.
7) உடலை பொன்னிறமாக மாற்றும், பொன்னாங்கண்ணி கீரை
8) மாரடைப்பு நீங்கும், மாதுளம் பழம்
9) ரத்தத்தை சுத்தமாகும், அருகம்புல்
10) கான்சர் நோயை குணமாக்கும்,  சீதா பழம்
11) மூளை வலிமைக்கு ஓர், பப்பாளி பழம்
12) நீரிழிவு நோயை குணமாக்கும்,  முள்ளங்கி
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட, வெந்தயக் கீரை
14) நீரிழிவு நோயை குணமாக்க,  வில்வம்
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும், துளசி
16) மார்பு சளி நீங்கும், சுண்டைக்காய்
17) சளி, ஆஸ்துமாவுக்கு, ஆடாதொடை
18) ஞாபகசக்தியை கொடுக்கும், வல்லாரை கீரை
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும், பசலைக்கீரை
20) ரத்த சோகையை நீக்கும்,  பீட்ரூட்
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்,  அன்னாசி பழம்
22) முடி நரைக்காமல் இருக்க, கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும், தூதுவளை
25) முகம் அழகுபெற, திராட்சை பழம்
26) அஜீரணத்தை போக்கும்,  புதினா
27) மஞ்சள் காமாலை விரட்டும், கீழாநெல்லி
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும், வாழைத்தண்டு


படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க..

கோர்ட்டில்  விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார், அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க
ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
அடாடாஉங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது
தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்
கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதானஅதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க
வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
எதுக்காக விவாகரத்து கேட்கிறார்என்று அலறி விட்டு இருமினார்.
ஓ..அதுவாஎன்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்கஉங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?

ஒரு முன்னாள் ஃபாஸ்புட் கடைக்காரரின் ஒப்புதல் வாக்குமூலம் - படிச்சுப் பாருங்க அப்படியே ஷாக் ஆயிடுவீங்க..  

1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம். அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கெட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை

2) சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம். ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும். அப்ப அது உங்கள் வயிற்றுக்குள் போனால் ?

3) சோயா சாட்ஸ்.  இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின எண்ணையையோ கலந்து செய்றோம்.

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை. பாமாயில் தான் யூஸ் பண்றோம்.

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோறு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம்.

6) இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க. அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம்.  காரணம் அதில் உள்ள எண்ணை பசை போக கூடாது என்பதற்காக. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் செலவாகும்.

7) அஜினமோட்டோ. இதை அதிகமாக யூஸ் பண்றோம். உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள். இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும். சோதித்து பாருங்கள்.

8) வெள்ளை பெப்பர். இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம்.
9) தக்காளி சாஸ். இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த, காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம்.

10) சில்லி சாஸ். அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும்.

இது தான். நாங்கள் பாஸ்ட் ஃபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள். 5 நிமிடத்தில்  8 பிளேட் போடுவோம் .. ஒண்ணு 50 ருபாய் என்று விற்பனை செய்தால்,  400 ருபாய் சம்பாதிப்போம். அதை நானும் சாப்பிட்டு ன் உடலும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குமே என  என் மனசாட்சி உறுத்தியது. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன்.

( இனிமே ஃபாஸ்ட் ஃபுட் கடை பக்கம் போறவங்க கொஞ்சம் யோசிச்சுக்கோங்க)

பெருந்தலைவர் காமராஜர் 

தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரும், முன்னாள் பிரதமர் நேருவும், கூட்டமொன்றில் பங்கேற்க மதுரைக்கு  காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நேரு. "மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? " என்று கேட்கிறார்.
"ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது" - காமராஜர்
"அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? " என்று நேரு கேட்க, "இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?" என்று காமராஜர் மறுக்கிறார்.
அதற்கு நேரு, "இவ்வளவு தூரம் வந்து விட்டு, உங்கள் தாயாரை பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நான் பார்த்தே ஆக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்!" என்கிறார். 

வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுனரிடம், "தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டு!" என்கிறார். அது வீடுகளே இல்லாத பகுதி விவசாய நிலங்களில் பெண்கள் களை பறித்து கொண்டிருந்தனர். 'தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து செல்ல சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே..! என்ற வினாவுடன் வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு.
காமராஜர், களை பறித்து கொண்டிருக்கும் பெண்கள் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார்."ஆத்தா நான் காமராசு வந்து இருக்கிறேன்" என்று கூவுகிறார்.
வயலில் உழைத்து வியர்வை முகத்துடன்.. "காமராசு வந்திட்டியாப்பா, நல்லாயிருக்கியா..?" என்று தன் மகனை கண்ட மகிழ்ச்சியில், உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராஜரின் தாயார். தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள்.
பிறகு நேரு அவர்களை காட்டி அறிமுக படுத்துகிறார் காமராஜர்.
நேருவால் தன் முன்னால் நடப்பதை பார்த்து நம்ப முடியாமல் சிலையாக நிற்கிறார்.கோவில் அதிசயங்கள்..!

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!
அவற்றில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே தாராசுரம்என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9.  கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் பஞ்சவர்ணேஸ்வரர்என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி பாப்பாரப்பட்டியில்  இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளன.

15. மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு கோபுரங்கள் கிடையாது.

16. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாருக்கு படி தாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு - பெருமாளோடு எக்காலத்திலும் வெளியே வராத காரணத்தால் தானாம். 

அறிவியல் அல்லது ஆன்மீக உண்மை

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு (அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.  அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

இதற்காகத்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்களோ?