Monday, 31 July 2017

பிரபலங்கள் வாழ்வில்


மூன்று ஆசைகள் 

மாவீரன் அலெக்ஸாண்டர் மரணத் தறுவாயில், தளபதிகளை அழைத்து தனது 3 இறுதி ஆசைகளைத் தெரிவித்தார்.
தமது சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள் சுமந்து செல்ல வேண்டும், இதுவரை தாம் சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவற்றை இறுதி ஊர்வலப் பாதையில் தூவிச் செல்ல வேண்டும், தமது கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும் என்பவையே அந்த 3 இறுதி ஆசைகள்.
தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண ஆசைகள் குறித்து அவரிடமே தைரியமாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு அலெக்ஸாண்டர், “ தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாத்தால், இறப்பை யாராலும் தடுக்க முடியாது என்பது உலகம் தெரிந்துகொள்ள வேண்டும்.  நான் இந்த பூமியில் சேகரித்த, கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானது மக்கள் அ றிந்து கொள்ள வேண்டும். சவப்பெட்டிக்கு வெளியே தொங்கும் எனது கைகள், காற்றில் அசையும் போது, வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் தான் செல்கிறேன் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். என்பதை இந்த உலகத்திற்கு தெரிவிக்க இந்த மூன் ஆசைகள் ” என்றார்.

அறிவாளியை சந்திக்கவில்லை

கவிஞர் வாலியை சந்தித்த நண்பர் ஒருவர், “ வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு வாலி, “ ராமாயணத்திலே, வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி,அவனுக்கு வந்து விடுமாம்.அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது, அவர்களது அறிவில் பாதி எனக்கு வந்து விடுமல்லவா? அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.என்றார்.
உடனே நண்பர் கிண்டலாக, “ அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?”
வாலி சிரித்துக் கொண்டே, “ நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே! என்றார்.
சமரசம் 

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் வழக்கறிஞராக பணியாற்றியபோது, பணக்காரர் ஒருவர் அவரிடம் வந்தார். அவருக்கு ஏழை ஒருவர் ஐந்து டாலர் கடன் கொடுக்க வேண்டியிருந்தது.
பணக்காரர் விவரத்தைச் சொல்லி, அவர் மீது வழக்குப் போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வெறும் ஐந்து டாலர்களுக்காகவா வழக்கு போடப் போகிறீர்கள்?” என்று லிங்கன் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தும் அந்தப் பணக்காரர் கேட்பதாக இல்லை.
சரி, எனக்கு வழக்காடுவதற்காக 10 டாலர் கட்டணமாக நீங்கள் தர வேண்டும்என்று லிங்கன் கேட்டார்.
பணக்காரரும் 10 டாலர்களை உடனே லிங்கனிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட லிங்கன் அந்த ஏழையை அழைத்து அவரிடம் 5 டாலர்களைக் கொடுத்துக் கடனை அடைக்கச் சொன்னார்.
பணக்காரரும் கடன் கிடைத்த மகிழ்ச்சியில் தமது இல்லம் திரும்பினார்.

நான்எ ங்கே போவது?

 எம்.ஜி.ஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது. தனது  இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த அவருக்கு, ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த விருப்பம்.  ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி சொல்றேன்என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்.
ஒரு முறை சிவாஜி, எம்ஜிஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்திருந்தார்.
காமராஜரை வழியனுப்பும் போது மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்ஜிஆர். அப்போதும் அதே புன்னகை மாறாமல் ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக் கூடாது என்றில்லை. உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப் பட்டுள்ளேன். அறுசுவை உணவும் மீன் இறைச்சியும் அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள். நான் மக்கள் ஊழியக்காரன் ரெண்டு இட்லி, தயிர் சோறு தான் எனக்கு சரிப்படும் உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திரும்பவும் அந்த ருசியை நாக்கு தேடும்..அதுக்கு நான் எங்கே போறதுஎன்று கூற ஆடிப்போனார் எம்ஜிஆர்.
தன்னையும் அறியாமல் காமராஜரை கைகூப்பி வணங்கினாரார் எம்.ஜி.ஆர்.


Sunday, 30 July 2017

இந்த 26 வார்த்தைகள்! எவ்வளவு அழகுA - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

D - Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

E - Ego
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

G - Genuineness
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

N - Neutral
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

O - Over Expectation
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

P - Patience
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

W - Wound

எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

X - Xerox
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

Z - Zero
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்.
 Saturday, 29 July 2017

ரிலாக்ஸ் ப்ளீஸ்

‍ 
கணவன் :  என்ன இது இட்லில இவ்வளவு ஓட்டை இருக்கு?
மனைவி : நல்லா பாருங்க இது இட்லி இல்லை, இடியாப்பம்!

*

ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு நல்ல மனைவி    அமைவாள்.

கோபு                 : அது மச்சம் இல்லய்யா 'சூடு வெச்ச தழும்பு. அதை வச்சதே என் மனைவி 

*

சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க?”
கல்யாணத்துக்கு முன்னாடியாபின்னாடியா?”
கல்யாணத்துக்கு முன்னாடி?”
கல்யாணத்துக்கு முன்னாடிஎனக்கு முருகனை  ரொம்பப் பிடிக்கும்
அப்போ பின்னாடி.....?”
அடஅதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேண்டாத தெய்வமே
இல்லை!

*

நீதிக்கதை  :                     
சத்தியவான் சாவித்திரி  தன் கணவனைஎமதர்ம ராஜாவிடமிருந்து தன் தந்திர வரங்களால் கடுமையாகப் போராடி மீட்டாள்.
நீதி :  ஒரு புருஷனை பொண்டாட்டிகிட்ட இருந்து எமதர்மனால கூட
காப்பாத்த முடியாது!

 *

மனைவி:   உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என் புத்தியை
செருப்பால அடிச்சுக்சுக்கணும!
கணவன்:  செருப்பு இந்தா இருக்க.!  புத்திக்கு எங்கே போவே?
                            

*

கணவன்     :  என் தோசை இது? சாணி வறட்டி மாதிரி இருக்கு !
மனைவி     :  கடவுளே!  இந்த மனுஷன்  இன்னும் என்னத்தையெல்லாம்
சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ தெரியலையே?

*

தத்துவமுங்கோ                       
நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்,  மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே ஆண்களின் வாழ்க்கை தேடல்!

*

மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை, போய் என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.
கணவன் : நான் அங்கே போய் வந்த்தாலதான் அந்த சண்மையே ஆரம்பிச்சுது.

*

ஒரு கண்டுபிடிப்பு.
தக்காளி சோறு பிரியாணிமாதிரி இருந்தா அது அம்மா சமையல்!  ‍பிரியாணியே தக்காளி சோறு மாறி இருந்தா அது பொண்டாட்டி சமையல்! சாப்பிட்ட உடனே வாந்தி வந்தா, அது காதலியோட சமையல்!


 *

     
 
ஹி..ஹி
பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு, புதுசா ஒரு காலி பர்ஸ் கொடுப்பான் பாருங்க, அவன்தான் நகைக்கடைக்காரன்.

*

நோயாளி    : கசப்பான மருந்தைக் கூட உங்க கையால கொடுக்கிறப்போ
                              ஸ்வீட்டா இருக்கு  சிஸ்டர்
நர்ஸ்           : நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன், இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'


*

டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதாரர் : கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!

*

முதலாளி : நீ கொரில்லா குரங்கை நேர்ல பாத்திருக்கியா?
ஊழியர் : (தலையை குனிந்தபடி) இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே நேரா என்னைப்பாரு

*

மருத்துவர்: ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.
நோயாளி : ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?

*

டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது ஏன்னா, கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு. டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...

*

மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?  நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச தரகருக்கு ஆக்ஸிடெண்ட்ல கால் உடைஞ்சிடுச்சாம்.
கணவன் :  பின்னே, செஞ்ச பாவம் சும்மா விடுமா?

*

டாக்டர்! நான்தான் பிழைச்சுக்கிட்டேனே, அப்புறம் எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?”
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?”

*

"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"
அதெல்லாம் ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"

*


அதோ போறாரே அவர் ஒரு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."
“ ஓ..குழந்தைகளுக்குக்கான டாக்டரா?”
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!

*

" டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. எப்ப பார்த்தாலும் சிரிப்பு வந்துக்கிட்டே இருக்கு”
"
கவலைப்படாதீங்க.. என்னோட பில்லை பார்த்தீங்கன்னா சிரிப்பு தானா நின்னுடும்”

*

 ( டீ.வியில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கிறார்கள்)
" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கிறீங்க?"
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா?”
" வெள்ளைக்கு..!"
" புல்லு.."
" அப்ப கருப்புக்கு..?"
"அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்.."!
" ஆடுகளை எங்கே கட்டி வைக்கறீங்க?."
" எதை கருப்பையா.? வெள்ளையையா..?"
" வெள்ளையை.."
" வெளிய இருக்கிற கொட்டகையில..."
" அப்ப கருப்பு ஆட்டை..?"
" அதையும் வெளில இருக்குற கொட்டகையிலதான்.."
" ஆடுகளை எப்படி குளிப்பாட்டுவீங்க..?"
" எதை கருப்பையா..? வெள்ளையையா..?"
" கருப்பு ஆட்டை..?"
" தண்ணில தான்"
" அப்ப வெள்ளையை..?"
" அதுவும் தண்ணில தான்"
(பேட்டி எடுப்பவர் கடுப்பகிறார்)
" லூசாய்யா நீ, ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுற! அப்பறம்    எதுக்கு திரும்ப திரும்ப கருப்பா வெள்ளையான்னு கேட்டுட்டே இருக்கே? "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது"
" அப்ப கருப்பு ஆடு..?"
"அதுவும் என்டோடதுதான்"
" டேய்ய்ய்ய்.........!!!!"


*