Monday, 27 April 2015

தெரியுமா இவரை - 12 நெப்போலியன்.

உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ள மாவீரர்கள் பட்டியலில் பிரான்ஸ் நாட்டின் நெப்போலியனுக்கு என்றுமே தனியிடம் உண்டு. கார்சிகா தீவில் 1769-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நெப்போலியன் போனபார்ட் பிறந்தார். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர். ராணுவ பள்ளியில் கல்வி பயின்ற நெப்போலியன், படிப்பில் ரொம்பவும் சுமார். ஒரு வழியாக படிப்பை முடிந்தபின், ராணுவத்தில் சேர்ந்தார் நெப்போலியன். தனது திறமையால், 1785-ம் ஆண்டு ராணுவ துணைத் தலைவராக உயர்ந்தார். 

1796-ம் ஆண்டு ஆஸ்திரியாவுக்குச் சொந்தமான இத்தாலியப் பகுதிகளை பிடிப்பதற்காக ராணுவம் நெப்போலியனை அனுப்பியது. வீரம், ராஜ தந்திரம், புதிய போர் முறைகள் இவற்றால், அவருக்கு வெற்றி எளிதாக கிட்டியது. பிரெஞ்சு மக்களின் உள்ளம் கவர்ந்த ஹீரோவானார் நெப்போலியன். பின்னர், அவரது பார்வை இங்கிலாந்து நோக்கித் திரும்பியது. கீழை நாடுகளுடன் இங்கிலாந்து கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை துண்டிக்கும் நோக்கத்துடன், எகிப்து மீது படையெடுத்தார். நைல் நதிக்கரையில் 1798-ம் ஆண்டு நடைபெற்ற இந்த போரில், நெப்போலியன் வெற்றியைத் தவறவிட்டார். 

இதற்கிடையில், பிரான்சில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. நாடு திரும்பிய நெப்போலியன், ஆட்சியை கவிழ்த்துவிட்டு, புதிய ஆட்சி அமைப்பை ஏற்படுத்தினார். பிரெஞ்சு புரட்சிகளால் சோர்ந்துபோயிருந்த அந்நாட்டு மக்கள், நெப்போலியன் மூலம் நல்லாட்சி கிடைக்கும் என்று நம்பினர். எனவே, மக்களின் பேராதரவுடன், 1804-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் சக்ரவத்தியானார் நெப்போலியன். ஆனாலும், தனது ராஜ்ஜியத்தை அவர் விரிவு படுத்த விரும்பினார். முக்கியமாக இங்கிலாந்தை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர விரும்பினார். எனவே, 1805-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் துணையுடன் இங்கிலாந்து மீது படையெடுத்தார். டிரபால்கர் என்ற இடத்தில் நடைபெற்ற போலில் நெப்போலியன் தோற்றார். ஆனாலும், இங்கிலாந்தின் நேச நாடுகளான ஆஸ்திரியா, பிரஷ்யா, ரஷியா ஆகிய நாடுகளை அவர் கைப்பற்றினார். பின்னர், 1806-ம் ஆண்டில் ஈடு இணையற்ற சக்ரவர்த்தி என்று பட்டம் சூட்டிக்கொண்டார். 

நெப்போலியனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஜோசபின். இவர் ஏற்கனவே திருமணமானவர். ராணுவ அதிகாரியான அவரது கணவர், பிரெஞ்சு புரட்சியின் போது கொல்லப்பட்டார். விதவையான ஜோசபினை நெப்போலியன் காதலித்து மணந்தார். திருமணத்தின் போது நெப்போலியனுக்கு 27 வயது. அவரை விட ஜோசிபின் 6 வயது மூத்தவர். ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக, நெப்போலியன் பின்னர், ஜோசபினை விவாகரத்து செய்துவிட்டு, ஆஸ்திரிய நாட்டு இளவரசியான மாரி லூயி என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 1811-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு இரண்டாம் நெப்போலியன் என்று பெயரிட்டனர். 

ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நெப்போலியன் செய்த முயற்சிகள் அந்த நாடுகளில் நெப்போலியனுக்கு எதிர்ப்பை உண்டாக்கின. ஒப்பந்தப்படி நடக்கத் தவறியதால், ரஷியா மீது 1812-ம் ஆண்டு நெப்போலியன் மீண்டும் படையெடுத்தார். ஆனால், இதில், அவர் பெருந்தோல்வியைத் தழுவினார். ரஷியாவுக்குச் சென்ற நான்கரை லட்சம் பிரான்ஸ் நாட்டு வீரர்களில், 20 ஆயிரம் பேர் மட்டுமே உயிருடன் திரும்பினர். இந்த தோல்வி, நெப்போலியனை ஆட்டம் காணச் செய்தது. பதுங்கியிருந்த ஐரோப்பிய நாடுகள் அவரை எதிர்க்கத் துணிந்தன. இங்கிலாந்து, ஆஸ்திரியா, ரஷியா, பிரஷ்யா ஆகிய நாடுகள் பிரான்ஸ் மீது படையெடுத்தன. 1814-ம் ஆண்டு நடைபெற்ற போரில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டு, எல்பா தீவுக்கு நாடுகடத்தப்பட்டார். எனினும், அங்கிருந்த தப்பிய அவர், மறுபடியும் படை திரட்டி போருக்குத் தயாரானார். 

1815-ம் ஆண்டு வாட்டர்லூ என்ற இடத்தில் நெப்போலியனின் படைகளும், இங்கிலாந்து படைகளும் சந்தித்து கடும் போர் புரிந்தன. இதிலும், நெப்போலியனுக்குத் தோல்வியே கிட்டியது. பாரிஸ் நகருக்குத் திரும்பிய நெப்போலியன், பதவி விலக, போசிடி என்பவன் தலைமையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. பின்னர், கப்பல் மூலம் நெப்போலியன் நாட்டை விட்டு வெளியேற முயன்றார். அப்போது, பிளிமத் துறைமுகத்தில் நெப்போலியனை கைது செய்த இங்கிலாந்து ராணுவம், அவரை ஹெலீனா என்ற தீவில் சிறை வைத்தது. 15 கிலோ மீட்டர் நீளமும், 10 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட சிறிய தீவில், சுகாதாரமற்ற வீட்டில் அவர் காவலில் வைக்கப்பட்டார். புத்தகங்கள் படிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்த நெப்போலியன், உடல் நலம் குன்றி, 1821-ம் ஆண்டு மே 15-ம் தேதி தமது 52 வது வயதில் மரணமடைந்தார். ஹெலீனா தீவிலேயே அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 


Sunday, 26 April 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 8

பசுமையான நினைவுகள் 

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த தலைமுறை மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே
WE ARE AWESOME !

OUR LIFE IS A LIVING PROOF
• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாவுடன் கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்                      
• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
• புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.
• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டிக் கொண்டதில்லை. 
• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை. 
• நாம் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம்,பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
• உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். 
• அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை
• உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழ்ந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
• நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம்.காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் !


ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும்  பறிக்கவில்லை".
இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்... !"

*

நாம் பல பழமொழிகளை அவ்வப்போது பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பல பழமொழிகளை இப்போது தவறுதலாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். உண்மையான பழமொழி என்ன? அவற்றில் சிலவற்றை காண்போம்

1 "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! 
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"
சரியான பழமொழி :
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
விளக்கம் :
இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது. கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள். இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது. கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.
2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.
3. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.
4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
ஆயிரம் வேரை (மூலிகை வேரை )  கொண்டவன் அரை வைத்தியன் (கொண்டவன் என்றால் வைத்திருப்பவன்) - சரி.
5.  நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.
   நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி. (சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது.   ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்.)
6. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.
  அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி
6. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே - தவறு
  மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே - சா¤   
தண்ணீர் குறைவாக ஓடும் ஆற்றில் ஆங்காங்கே மண் குவிந்து நிற்கும். இதற்கு மண் குதிர் என்று பெயர். அதன் மீது கால் வைத்தால் புதை மணல் போன்று உள்ளே இழுக்கும் எனவேதான் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்றார்கள் நம் முன்னோர்கள். குதிர்தான் மருவி குதிரையாகிவிட்டது. 
14 வருடங்களுக்கு முந்தைய பசுமையான நினைவுகள்:


வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் ஊரே அமர்ந்து பார்த்தோம்.
ஞாயிற்றுக்கிழமை மாநிலமொழி திரைப்படம் தமிழில் போடமாட்டார்களா என ஏங்கி கிடந்தோம்.
திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து கொண்டு ஞாயிறன்று பார்த்த படத்தைப்பற்றி விவாதம் செய்தோம்.
தாத்தவையும் பாட்டியையும் ஸ்கூல் லீவு போட அடிக்கடி சாகடித்தோம்.
பெரிய மழை வந்தால் ஸ்கூல் லீவு என சந்தோஷப்பட்டுக் கொண்டோம்.
முழு ஆண்டு விடுமுறையில் மாமா பெரியப்பா பாட்டி வீட்டுக்கு டூர் போனோம்.
ஒரே ஒரு ரூபாயைக் கையில் வைத்துக்கொண்டு நாள் முழுவதும் செலவு செய்தோம்.
100 ரூபாய் நோட்டை ஆச்சரியத்துடன் கையில் வாங்கி பெருமூச்சு விட்டோம்.
அனைவர் வீட்டிலும் உண்டியல் இருந்தது.
பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக நின்றுகொண்டே படம் முழுவதையும் பார்த்து ரசித்தோம்.
பீரோக்கள் முழுவதும் சக்திமான் ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து அழகு பார்த்தோம்.
ஹார்லிக்ஸ் பாட்டில்களில் மீன்களை வளர்த்தோம்.
பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கிரிட்டிங் கார்டு வாங்க குவிந்து நின்று தேர்வு செய்தோம்.
10-வது 12-வது ரிசல்ட் பார்க்க தினந்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்.
15-வயதுவரை டவுசர்களையே அணிந்திருந்தோம்.
பழைய மாடல் கேசட்களில் பிலிம் சிக்கிக்கொண்டால் ரெனால்ஸ் பேனாவால் உள்ளே விட்டு சுத்தி சுத்தி அட்ஜஸ்ட் செய்தோம்.
இளம் பெண்கள் நதியா மாடல் சடை போட்டு அழகு பார்த்தார்கள்.
பணக்கார வீட்டு இளம்பெண்கள் ஙிஷிகி ஷிலிஸி சைக்கிளில் பேஷனாக வலம் வந்தார்கள்.
ஜாமென்ட்ரி பாக்ஸில் காசுகளையும் மிட்டாய்களையும் போட்டு வைத்தோம்.
நம் ஊரில் பணக்காரர்கள் மட்டுமே டி.வி.எஸ் -50 வைத்திருந்தார்கள் 
கட்டான கரண்ட் மீண்டும் வந்ததும் மகிழ்ச்சியில் கத்தி ஆராவரப்படுத்தினோம்.


" இதுவே தமிழின் சிறப்பு.."

(அகரத்தில் ஓர் இராமாயணம் இராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.)

அனந்தனே 
அசுரர்களை 
அழித்து,
அன்பர்களுக்கு 
அருள 
அயோத்தி 
அரசனாக 
அவதரித்தான்.
அப்போது 
அரிக்கு 
அரணாக 
அரசனின் 
அம்சமாக 
அனுமனும் 
அவதரித்ததாக
அறிகிறோம். 
அன்று 
அஞ்சனை 
அவனிக்கு
அளித்த 
அன்பளிப்பு 
அல்லவா 
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை 
அரவணைத்து 
அருளும் 
அருட்செல்வன்!
அயோத்தி 
அடலேறு,
அம்மிதிலை 
அரசவையில் 
அரசனின் 
அரியவில்லை 
அடக்கி, 
அன்பும்
அடக்கமும் 
அங்கங்களாக 
அமைந்த 
அழகியை
அடைந்தான் .
அரியணையில் 
அமரும் 
அருகதை 
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க 
அந்தோ !
அக்கைகேயி 
அசூயையால் 
அயோத்தி 
அரசனுக்கும்
அடங்காமல் 
அநியாயமாக 
அவனை 
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும் 
அபாயம்!
அரக்கர்களின் 
அரசன் ,
அன்னையின் 
அழகால் 
அறிவிழந்து 
அபலையை
அபகரித்தான்
அங்கேயும் 
அபாயம்!
அரக்கர்களின் 
அரசன் ,
அன்னையின்
அழகால் 
அறிவிழந்து 
அபலையை
அபகரித்தான்
அந்த 
அடியார்களில் 
அருகதையுள்ள 
அன்பனை
அரசனாக 
அரியணையில் 
அமர்த்தினர்.
அடுத்து 
அன்னைக்காக 
அவ்வானரர் 
அனைவரும்
அவனியில் 
அங்குமிங்கும் 
அலைந்தனர், 
அலசினர்.
அனுமன், 
அலைகடலை 
அலட்சியமாக 
அடியெடுத்து
அளந்து 
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின் 
அடியில் ,
அரக்கிகள் 
அயர்ந்திருக்க
அன்னையை 
அடிபணிந்து 
அண்ணலின்
அடையாளமாகிய 
அக்கணையாழியை 
அவளிடம்
அளித்தான்
அன்னை 
அனுபவித்த 
அளவற்ற 
அவதிகள்
அநேகமாக 
அணைந்தன.
அன்னையின் 
அன்பையும்
அருளாசியையும் 
அக்கணமே 
அடைந்தான் 
அனுமன்.
அடுத்து, 
அரக்கர்களை 
அலறடித்து , 
அவர்களின்
அரண்களை , 
அகந்தைகளை 
அடியோடு 
அக்கினியால்
அழித்த 
அனுமனின் 
அட்டகாசம் , 
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன் 
அலைகடலின் 
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான 
அணையை
அமைத்து,
அக்கரையை 
அடைந்தான்.
அரக்கன் 
அத்தசமுகனை 
அமரில் 
அயனின்
அஸ்திரத்தால் 
அழித்தான்.
அக்கினியில் 
அயராமல் 
அர்பணித்த 
அன்னை
அவள் 
அதி 
அற்புதமாய் 
அண்ணலை 
அடைந்தாள்.
அன்னையுடன் 
அயோத்தியை 
அடைந்து
அரியணையில் 
அமர்ந்து 
அருளினான்
அண்ணல் . 
அனந்தராமனின் 
அவதார
அருங்கதை 
அகரத்திலேய 
அடுக்கடுக்காக 
அமைந்ததும் 
அனுமனின் 
அருளாலே.

• 

ஸ்மைல் ப்ளீஸ்  (கொஞ்சம் மொக்கைதான் முடிஞ்சா சிரிங்க.. இல்லைன்னா விட்டுடுங்க.)

☑ டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
  எந்த பாட்டுக்கு?
......................................................
🔘 ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
🔗 நோயோடதான்!
.......................................................
☑ தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
  அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?
....................................................................
🔘 டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
🔗 கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?
.....................................................................
☑ டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி  வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?
....................................................................
🔘 என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! 
🔗 பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
........................................................................
☑ படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
🔗 புக்கை மூடிடுவேன்!
........................................................................
🔘 காலில் என்ன காயம்?
🔗 செருப்பு கடித்து விட்டது
🔗 பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!
..............................................................
☑ குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
🔗 தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!
.......................................................................
🔘 இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
🔗 என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!
...........................................................................
☑ டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு
🔗 என்னிடம் சுத்தமா இல்ல
🔗 பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
....................................................................
🔘 இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
🔗 கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
..............................................................
☑ சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.ஏ.
சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
.................................................................
🔘 இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
🔗 ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!
.....................................................................
☑ மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல !
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

Saturday, 25 April 2015

இந்தியாவுக்கு 117-வது இடம்

எதில் என்கிறீர்களா? உலகிலேயே மகிழ்ச்சியான 158 நாடுகள் பட்டியலில்தான் இந்த இடம்.

உலகிலேயே மகிழ்ச்சியான 158 நாடுகள் பட்டியலில் இந்தியா 117வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து தான் மிகவும் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐநாவின் கீழ் இயங்கும் சஸ்டெய்னபில் டெவலப்மென்ட் சொலிஷன் நெட்வொர்க் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் ஆயுட்காலம், சமூக ஆதரவு மற்றும் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இதற்கான ஆய்வு நடத்தப்படுகிறது. 
கடந்தாண்டுக்கான ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து பெற்றுள்ளது. டாப் - 5 இடங்களை  ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே மற்றும் கனடா நாடுகள் பிடித்துள்ளன. 
அமெரிக்கா 15வது இடத்திலும், இங்கிலாந்து 21 வது இடத்திலும், சிங்கப்பூர் 24வது இடத்திலும், சவுதி அரேபியா 35வது இடத்திலும், ஜப்பான் 46 வது இடத்திலும், சீனா 84வது இடத்திலும் உள்ளன.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 117வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு 113வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4 இடங்கள் பின்தங்கியுள்ளது.

பாகிஸ்தான் - 81 வது இடத்திலும், பாலஸ்தீனம் - 108 வது இடத்திலும், வங்கதேசம் - 109 வது இடத்திலும்,  உக்ரைன் -111 வது இடத்திலும், ஈராக் - 112 இடத்திலும் உள்ளன.

ஆப்கானிஸ்தான், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஆப்ரிக்க நாடுகளான டோகோ, புருண்டி, பெனின், ரிவாண்டா, புர்கினா, பாஸோ, ஐவரி கோஸ்ட், கினியா மற்றும் சாட் ஆகிய 10 நாடுகள் மிகவும் மகிழ்ச்சி குறைவான நாடுகள் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Monday, 20 April 2015

தெரியுமா இவரை - 11 பெஞ்சமின் ஃபிராங்களின்

'இறந்த பிறகும் நீங்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்; சிறந்த படைப்புகளை உருவாக்குங்கள் அல்லது பிறர் உங்களைப் பற்றி எழுதும் அளவுக்கு அர்த்தமுள்ள வகையில் வாழுங்கள்' என்றவர் பெஞ்சமின் ஃபிராங்களின். சொன்னதோடு நிற்காமல் இரண்டு விதமாகவும் சாதனை மனிதராக வாழ்ந்து காட்டியவர் அவர். 

விஞ்ஞானி, அரசியல்வாதி, வணிகர், இலக்கியவாதி, பத்திரிகையாளர், கல்வியாளர் என பல முகங்களுடன் இயங்கிய பெஞ்சமின் ஃபிராங்கிளின், மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்துக் கண்ணாடி உள்பட பல்வேறு கருவிகளையும் கண்டுபிடித்தவர். அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, அரசதந்திரியாக, பிரான்சுக்கான தூதராக விளங்கியவர். அமெரிக்க சுதந்திர பிரகடணத்தை தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர். இப்படி பல பரிமாணங்களில் பிரகாசித்த அவரை அமெரிக்காவின் பிரபலமான குடிமகன் என்றும் அழைக்கிறது வரலாறு. 

1706 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் நாள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார் ஃபிராங்கிளின். 17 பிள்ளைகளில் இவர் பத்தாவது. அவரது தந்தையார் சோப்புக் கட்டிக்களையும், மெழுகுவர்த்திகளையும் தயாரித்து பாஸ்டன் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்து விற்பனை செய்வார். பெரிய குடும்பம் என்பதால் அவர்கள் வீட்டில் வறுமை வசதியாக் ஆட்சி செய்தது. குடும்ப ஏழ்மையின் காரணமாக ஃபிராங்கிளினை பள்ளிக்கு அனுப்பகூட அவரிடம் பணம் இல்லை. ஃபிராங்கிளின் பள்ளி சென்றது ஓராண்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதுமட்டுமல்ல பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தன் தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் அவர் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார் 

புத்தகங்கள் வாசிப்பதில் இருந்த ஆர்வம் காரணமாகவே அவர் தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் படித்துவிடுவார்.  வாசிப்பின் காரணமாக, சுவாரசியமாக எழுதும் திறமையும் வந்தது. பிறகு, தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி பிலடெல்பியா  வந்தடைந்தார். அங்கும் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கினார்.

பத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கியதால், புகழும் சேரத் தொடங்கியது. 1720 ஆம் ஆண்டு 'பென்சில்வேனியா கெசட்' என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கினார் ஃபிராங்கிளின். நான்கு ஆண்டுகள் கழித்து 'புவர் ரிச்சர்ட் அல்மனாக்' என்ற பத்திரிகையை தொடங்கினார். மிகவும் வித்தியாசமான பாணியில் வெளிவந்த அந்த பத்திரிகை, அவருக்கு செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவரிடம் இருந்தது. குறைவான எரி சாதனத்துடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பை அவர் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்காக செயற்கை உரத்தை உருவாக்கியவரும் அவரே.

மின்சாரத்தின் மீது ஆய்வுகள் செய்த அவர் மின்னலில் கூட மின்சக்தி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதைக் கண்டுபிடித்து மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். முதியவர்கள் தூரப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அணியும் வெள்ளெழுத்து கண்ணாடியும் அவரது கண்டுபிடிப்புதான். தனது கண்டுபிடிப்புகள் எதற்கும் அவர் காப்புரிமை பெற்றதில்லை.


பத்திரிகைகளை சந்தா செலுத்தி, வாங்கிப் படிக்கும் முறையை அறிமுகம் செய்தவரும் ஃபிராங்க்ளின்தான். பிலடெல்பியாவின் தபால் துறையில் பல மாற்றங்களை செய்து தற்கால தபால் துறை பின்பற்றும் பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார். 1730-ஆம் ஆண்டு நடமாடும் நூல் நிலையம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார்.  உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான 'பென்சில்வேனியா  பல்கலைக்கழகம்' அவர் நிறுவியதுதான். 1749-ஆம் ஆண்டு அது நிறுவப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார் ஃபிராங்கிளின்.

1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டென் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை பெஞ்சமின் ஃபிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். அவரது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது. 

சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டெனின் படம். மற்றொன்றில் பெஞ்சமின் ஃபிராங்கிளினின் படம். அமெரிக்காவுக்கும், உலகுக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த அந்த மாமனிதனுக்கு அந்த தபால் தலை மூலம் நன்றி தெரிவித்துக்கொண்டது அமெரிக்க தேசம். கடைசி நாள் வரை ஓய்வு என்பதையே அறியாமல் உழைத்த ஃபிராங்கிளின் 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தனது 84 ஆவது வயதில் காலமானார். Sunday, 19 April 2015

புலிக்கு மீண்டும் ஆபத்து?

இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்பது நமக்குத் தெரியும். புலிகள் இனம் அழிந்து வருவதை தொடர்ந்து கடந்த 1972ம் ஆண்டு புலி தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், சிங்கத்தை தேசிய விலங்காக அறிவிக்கலாமா என்று மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. 

இதற்கான பரிந்துரையை ஜார்கண்டைச் சேர்ந்த எம்பி பரிமல் நத்வானி மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தார். இந்த பரிந்துரை தேசிய வன விலங்கு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆலோசனையை குஜராத்தை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று ஆய்வு செய்து வருகிறது.

புலி நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காணப்படுகிறது. ஆனால் சிங்கம் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே காணப்படுகிறது.  

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2200 புலிகளும், 411 சிங்கங்கள் மட்டுமே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதிகளில் மட்டுமே சிங்கம் காணப்படுகிறது. எனவே விரைவில் சிங்கம் தேசிய விலங்கு அந்தஸ்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தற்போது சிங்கத்தை தேசிய விலங்காக அறிவித்தால் புலிக்கு மீண்டும் ஆபத்து ஏற்படும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது என்ன மாதிரியான நோய்?

கேமராக்கள் என்பது ஒரு காலத்தில், தொழில்முறை புகைப்படக்காரர்களும், வசதியானவர்களும் மட்டுமே பயன்படுத்தும் சாதனம். அதுவும், பிலிம் சுருள்களை பயன்படுத்தி போட்டோக்கள் எடுக்கப்பட்ட காலத்தில், நெகட்டிவ், பாசிட்டிவ், பி£¤ண்ட் என அதற்கான செலவுகள். அதிகம். ஆனால், இன்றைய நிலை அப்படியில்லை. 

கையடக்கமாகவும், கண்ணுக்குத் தெரியாத வகையில் ஏராளமான கேமராக்கள் வந்துவிட்டன. நாம் எல்லோருமே இப்போது ஏதாவது ஒரு கேமரா கண்ணால் பார்க்கப்பட்டிக் கொண்டிருக்கிறோம். 

நான்கு சுவர்களுக்குள் அரங்கேறும் அந்தரங்கம், கேமராக்களால், பொதுவெளியில் அம்பலமாக்கப்படுகிறது. இது  ஒருபுறம் என்றால், கல்யாணம், காது குத்து, திருவிழா, இழவு வீடு என எல்லா இடங்களிலும், செல்போன்களை நீட்டி எதையாவது போட்டோ அல்லது வீடியோ எடுக்கும் விவஸ்தை கெட்ட பழக்கம் அதிகா¤த்து வருகிறது. வாட்ஸ் ஆப், முகநூலில் பதிவேற்றுவது ஒருபுறம் என்றாலும், மேற்படி சமூக வலைத்தளங்களில் புழங்காதவர்கள் கூட இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். 

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவனை காப்பாற்றுவதை விடுத்து, அதை போட்டோ எடுக்கும் அதிகரித்து வருகிறது. இந்த இன்ஸ்டன்ட் புகைப்படக்காரர்களை பார்க்கும்போது, இந்த போட்டோக்களை வைத்து என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழத் தவறுவதே இல்லை. 

கீழே இருக்கும் இந்த புகைப்படத்தைப் பாருங்கள். நாகாலாந்தில் சிறுமி ஒருத்தியை வண்புணர்வு செய்த இளைஞனை கிராம மக்கள் அடித்தே கொன்றதாக இணையதளங்களில் வெளியான புகைப்படம் இது. 


அந்த இளைஞன் ரத்தக்களறியாக நிற்க, அந்த காட்சியை, கூட்டத்தில் இருக்கும் பெரும்பான்மையோர் தங்களது செல்போனால் படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படங்களை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள்? அருகிலேயே சலனமின்றி வேடிக்கைப் பார்க்கும் சிறுவனையும் பாருங்களேன். 

உச்சமாக, அண்மையில் ஒரு செய்தித்தாளில் வெளியான சம்பவம். நீங்களே படித்துப் பாருங்கள். 

நம் சமூகம், மனிதம், மனிதநேயம், மனித மாண்புகள் எங்கே போய்க்கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த செய்தி  சிறந்த உதாரணம். 

வாட்ஸ் ஆப் வறுவல் - 7

சிறந்த 25 பொன்மொழிகள்


1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்தபிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம்வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
3. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
4. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
6. நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
7. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம்இருக்கிறது என்பதே முக்கியம்.
10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
12.ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.ஒன்று காலம், இன்னொன்று மௌனம்.
15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
16. நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்று சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும். 
19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
23. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்குகண்டிப்பாக கிடைத்தே தீரும்.
24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
25.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

*

மின்னணு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியானது, புரிந்து பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு ஆதாயமாகவும், அஜாக்கிரத்தையாக நடந்து கொள்கின்றவர்களுக்கு விபரீதமாகவும் அமைந்து விடுகின்றது 
வாட்ஸ் ஆப் வந்து பார்.

*


ரீமிக்ஸ் கவிதை  - (வைரமுத்து குரலில் படிக்கவும்)

வாட்ஸ் ஆப்  வந்துபார்

உன்னைச் சுற்றி நோடிபிகேஷன் சத்தம் ஒலிக்கும் ராத்திரியின் நீளம் விளங்கும் உனக்கும் கவிதை வரும் 
கண்ணுக்கடியில் கருவளையம் தோன்றும்
குரூப்பில் சேர்த்துவிடுபவன் எமனாவான்
செல்ஃபி போட்டே நண்பன் கொல்வான்
லாஸ்ட் சீன் என்பது மரணவாக்குமூலமாகும் 
பன்னி குட்டியை படம் எடுத்து போட்டோகிராபி என்பாய் 
போன் அடிக்கடி சார்ஜ் இழக்கும் 
அட்மின் கசாப்பு கடை ஆடாகி அடிபடுவான் 
ஸ்மைலி மட்டுமே போடுபவன் மேல் கொலைவெறி தோன்றும் 
நம்மை கலாய்க்கும்போது மட்டும் எல்லாம் ஆன்லைனில் அலைவார்கள் 
சிங்கில் டிக்கிற்க்கும் டபுள் டிக்கிற்க்கும் நடுவில் மாட்டி சிக்கிதவிப்பாய் 
3ஜி சிக்னல் தெய்வமாய் தெரியும்   , ஓசி வை-பை மேல் ஆசை பிறக்கும்.
போன் ஹேங் ஆகி கடுபேற்றும், ஹிஸ்டா¤ டெலிட் என்பது மகிழ்ச்சிதரும்  .
டி.பி.-யையும், ஸ்டேட்டசையும் டெய்லி மாற்றாவிட்டால் மண்டைவெடிக்கும் 
இருக்கும் 9 குரூப்பிலும் ஒரே மெசேஜை பார்வேர்ட் பண்ண தோன்றும் ,
தனிமையை உணர்ந்தாலும் நண்பர்கள் குரூப்பில் வந்து கும்மி அடிப்பார்கள்  
தனியாய் சிரிப்பது பழகிபோகும்,குரூப்புக்கு ஒரு உத்தமன் அட்வைஸ் செய்வான்.
இரண்டு மணிநேரம் வராவிட்டாலும் 400 அன்ரீட் மெசேஸ்கள் வந்து பயமுறுத்தும்.
வாட்ஸ் ஆப் வந்து பார்.    


பெற்றோர்களின் கவனத்திற்கு:


1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch"   எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
2. மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.
5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!
6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.
7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்
8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.
9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!
10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.
11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!
12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!
15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.
16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!
17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.
18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!
19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.
20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"
21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.
22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!
23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!
25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல


2050-ம் ஆண்டில் தண்ணீர் - ஒரு சிறிய கற்பனை..

(தொலைக்காட்சியில் செய்தியில் ) 

இன்றைய முக்கிய செய்திகள்
ஈரோடு அருகே வீட்டில் பூட்டி வைத்திருந்த மூன்று குடம் தண்ணீர் திருட்டு போலீஸ் வலை வீச்சு .

மூன்று வயது குழந்தையை எல்.கே.ஜி.யில் சேர்க்க இரண்டு குடம் தண்ணீர் நன்கொடையாக கேட்ட பள்ளி உரிமையாளர் கைது.

கணவனுக்கு தெரியாமல் வீட்டில் வைத்திருந்த 4 குடம் தண்ணீரை எடுத்துக்கொண்டு மனைவி கள்ளக்காதலுடன் ஓட்டம் .கணவன் 4 குடம் தண்ணீரை கண்டு பிடித்து தருமாறு போலீசீல் புகார் 

இரண்டு குடம் தண்ணீர் கொடுத்தால் ஒரே வருடத்தில் 50 குடம் தண்ணீர் தருவதாக தண்ணீர் மோசடி கும்பல் கைவரிசை.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேசன்கடையில் 3 குடம் தண்ணீர் தருவதாக எதிர்கட்சிகள் வாக்குறுதி.

பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட். மூலம் கடத்தி சென்ற 20,000 லிட்டர் தண்ணீரை விண்வெளி காவல்துறையினர் பறிமுதல்செய்தனர் 

உலக தண்ணீர் வங்கியில் இருந்து இந்தியா 50 கோடி லிட்டர் தண்ணீர் கடன் வாங்கியது. பொது மக்கள் அனைவரும் மாதம் ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும். இரண்டு சொம்பு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று புதிய சட்டம் அமல்படுத்தியது. மீறினால் இரண்டு சொம்பு தண்ணீரும் பறிமுதல் செய்யும்.

உலக தண்ணீர் வேர்ல்ட் கப் கிரிக்கெட்டில் இந்தியா தண்ணீர் கோப்பையை வென்றது 

⛲ இன்றைய தண்ணீர் விலை நிலவரம்..
கிணற்று நீர் ஒரு லிட்டர் 5000 ரூபாய்க்கும் 
ஆற்று நீர் ஒரு லிட்டர் 10,000 ரூபாய்க்கும்
சுத்திகரிக்கப்பட்ட நீர் ஓரு லிட்டர் 15,000 ரூபாய்க்கும் விற்கபடுகின்றன.

( மரங்களை வெட்டி, காடுகளை பாலைவனமாக்கி, விளைநிலங்களை விலை நிலங்களாக மாத்தி, ஆறு, ஏ£¤, குளம், குட்டைகளை ஆக்ரமித்து வீடுகள் கட்டினால், இந்த கற்பனை நிஜமாகவும் வாய்ப்பு இருக்கு. மக்களே முடிஞ்சா மழை நீரையாவது சேமிங்க. ) 


அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட் விளையாட சொல்லி கொடுக்காம விவசாயம் பண்ண சொல்லி குடுங்க ! ஸ்கோரை விட சோறு முக்கியம் !
அஞ்சப்பர் ஹோட்டலுக்கு முன்னாடி போன கோழியும், அனுஷ்கா சர்மா பின்னாடி போன கோலியும், அவுட் தான்!

*

கதையும், கருத்தும் 

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம்வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.
ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன் ! மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் - “ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள் காணும் - உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”
மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர். வாரக்கடைசி - டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும் ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள் அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி கீழே தன் கையெழுத்தையும் போட்டு, மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.
மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்து படிக்கிறார்கள். 10 நிமிடங்கள் - வகுப்பறையே சந்தோஷக்கடலில் மிதக்கிறது.
“நான் இவ்வளவு சிறப்பானவனா..? என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” - அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !
அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குணாதிசயங்களை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன. அந்த வகுப்பில் படித்த மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து, மரணம் அடைகிறான்.
அவன் உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது. இறுதிச் சடங்கில், கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார். மிடுக்கான ராணுவ உடையில் - நாட்டின் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார். ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார். பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார். உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள் அருகிலேயே நின்றிருந்தனர்.
ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார். பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் - எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்” சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத் தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.
அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர். அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் - “டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும். இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.
அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக - பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள். ஆமாம் - பல வருடங்களுக்கு முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் - “ரொம்ப நன்றி டீச்சர் - உங்கள் கடிதத்தை அவன் உயிரையும்விட மேலாக விரும்பினான். இத்தனை வருடங்களும் அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான். அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும், பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.” டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து கதறி அழுகின்றனர்..,
ஆம்,என் இனிய நண்பர்களே., இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது. எங்கே துவங்கும் - எப்படி இருக்கும் -எப்போது, எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது. இருக்கின்ற காலத்தில் - நம்முடன் இருப்பவர்களை அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.
நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம். ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால், நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக, அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம். ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை - அநேகமாக - நாம் வெளிப்படையாக பாராட்டத்தவறி விடுகிறோம். கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் தெரிவதில்லை.
சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல் நன்றாக இருக்கும்போது - பாராட்டுவது இல்லை ! பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை ! இந்த உலகில் அனைத்து உயிர்களுமே, பாராட்டுதலை எதிர்பார்க்கிறது. கிடைத்தால் சந்தோஷப்படுகிறது ! நீங்களோ, நானோ - யாருமே அதற்கு விதிவிலக்கல்ல. வெளிப்படையான பாராட்டுதல் - அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும். நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும். தோழமை உணர்வு அதிகப்பட உதவும். மனிதர்களை மேலும் நல்லவர்களாக உருவாக்க இது உதவும்..அர்த்தங்கள்

பாத்ரூமில் நின்று மனைவி " என்னங்க " என்று அழைத்தால் பல்லி அடிக்க அழைக்கிறாள் என்று அர்த்தம்
சாப்பிடும் ஹோட்டலில் " என்னங்க " என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம்.
வீட்டு வாசலில் நின்று யாருடனாவது கைகட்டி நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது
வீட்டின் உள்ளில் இருந்து " என்னங்க " என்று உச்சஸ்தாயியில் சத்தம் வந்தால் கையைகட்டி நின்று பேசாதே என்று அர்த்தம்.
கல்யாண வீட்டு கூட்டத்தில் "என்னங்க " என்று சத்தம் வந்தால் எனக்கு தெரிந்தவர் வந்திருக்கிறார் அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என்று அர்த்தம்
துணிக்கடையில் நின்று " என்னங்க " என்று அழைத்தால் அவள் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம் 
வண்டியில் செல்லும் போது " என்னங்க " என்றால் பூக்கடை அவள் கண்ணில் பட்டதென்று அர்த்தம்.
மருத்துவமனை சென்று " என்னங்க " என்று அழைத்தால் டாக்டரிடம் என்ன பேசவேண்டும் என்று கேட்கிறாள் என்று அர்த்தம்.
வெளியே எட்டி பார்த்தவண்ணம் " என்னங்க " என்று அழைத்தால் யாரோ அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம். 
பீரோவின் முன் நின்று " என்னங்க " என்று அழைத்தால் பர்ஸுக்கு வேட்டு வைக்கிறாள் என்று அர்த்தம்.
சாப்பாட்டை எடுத்து வைத்து " என்னங்க " என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தால் இப்போ சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம் ........
இன்னும் உண்டு நிறைய பொருள்படும் " என்னங்க " எனும் சொல்..

# ரொம்ப அனுபவசாலியா இருப்பாரோ? 
Friday, 10 April 2015

தெரியுமா இவரை - 10 சாக்ரடீஸ்

மக்களை சிந்திக்கத் தூண்டியதற்காக, ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாகி மரண தண்டனை பெற்றவர் தத்துவஞானி சாக்ரடீஸ். கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்சில் கி.மு. 470-ம் ஆண்டு பிறந்தவர் சாக்ரடீஸ். இவரது தந்தை ஒரு சிற்பி. தாயார் மருத்துவச்சி. அந்த காலத்தில் முறையான கல்வி கற்க வசதியில்லாததால், சுயமாகவே அவர் அறிவை வளர்த்துக் கொண்டார். சதா சிந்தனையுடன் இருப்பதும், ஊர் சுற்றுவதும் அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகள். குடும்பத்தின் வறுமை காரணமாக, தந்தையின் சிற்பத் தொழிலை கற்றுக் கொண்டு, சில காலம் அந்த வேலையை செய்தார். எனினும், அதில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. 

அந்த காலக்கட்டத்தில், ஏதென்சில் வசிப்பவர்கள், குடும்பத்திற்கு ஒருவரை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது அந்நாட்டு சட்டம். எனவே, சாக்ரடீசை அவரது பெற்றோர் ராணுவத்திற்கு அனுப்பினர். குறிப்பிட்ட காலம் வரை ராணுத்தில் பணியாற்றிவிட்டு வீடு திரும்பிய, சாக்ரடீஸ் அதன் பிறகு வேறு எந்த தொழிலும் செய்யவில்லை. காலையில் எழுந்ததும் ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார். மக்கள் கூடும் இடங்களில் நின்று, பகுத்தறிவு பிரச்சாரம் செய்யத் தொடங்கி விடுவார். 

சாக்ரடீஸ் மெர்டன் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களது இனிய இல்லறத்தின் விளைவாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. தனது கணவர் சிறந்த அறிவாளி என்று மெர்டன் பெருமை கொண்டிருந்தாள்.
ஆனால், மெர்டன் உடல்நலம் குன்றி இறந்துவிட்டாள். மனைவியின் இறப்பால், பெரிதும் துயரம் அடைந்த சாக்ரடீஸ், தன் குழந்தைகளை பராமரிப்பதற்காக, சாந்திபி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாள். சாந்திபி, மெர்டனுக்கு நேரெதிரான குணங்களை கொண்டிருந்தாள். சாக்ரடீசின் பகுத்தறிவு பிரச்சாரங்களை, வெறும் வெட்டிப்பேச்சு என்றாள் அவள். இவளுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. 

சாக்ரடீசின் பகுத்தறிவு பிரச்சாரம், ஆட்சியாளர்களுக்கு கிளியை ஏற்படுத்தின. அவருடைய பேச்சைக் கேட்டு, மக்கள் சிந்திக்கத் தொடங்கினால், அது தங்களுக்கு ஆபத்து என்று கருதினார்கள். எனவே, பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ளுமாறு அவரை எச்சரித்தார்கள். ஆனால், சாக்ரடீஸ் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஆட்சியாளர்கள், நாத்திக பிரச்சாரம் செய்து, இளைஞர்களின் மனதை கெடுக்கிறார் என்று குற்றம்சாட்டி, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். 

விசாரணைக்குப் பின், சாக்ரடீஸ் குற்றவாளியா, இல்லையா என்று நீதிமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சாக்ரடீஸ் குற்றவாளி என்று 281 பேரும், குற்றவாளி இல்லை என்று 220 பேருக்கும் வாக்களித்தனர். 61 ஓட்டு வித்தியாசத்தில் சாக்ரடீஸ் குற்றவாளி என்று முடிவாயிற்று. இனி பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தால், தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று ஆட்சியாளர்கள் ஆசை காட்டினர். சாக்ரடீஸ் அதை மறுத்து, உயிருள்ளவரை பிரச்சாரத்திற்கு ஓய்வு கொடுக்கமாட்டேன் என்றார். எனவே, நாடு கடத்துவது, அல்லது பெருந்தொகை ஒன்றை அபராதமாக செலுத்துவது என்று இரண்டு தண்டனைகள் அவர் முன் வைக்கப்பட்டன. இரண்டையும் சாக்ரடீஸ் ஏற்க மறுத்தார். 

சாக்ரடீசின் போக்கு ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று கூறி, அவருக்கு மரண தண்டனை விதித்தனர். அவரை தண்டனையிலிருந்து காப்பாற்ற, உறவினர்களும் நண்பர்களும் முயற்சி செய்தனர். ஆனால், அதற்கு சாக்ரடீஸ் சம்மதிக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, 'ஹெமலாக்' என்ற கொடிய விஷம் கோப்பையில் கொடுக்கப்பட்டது. அதை வாங்கி, கொஞ்சமும் அஞ்சாமல் குடித்துவிட்டு, தரையில் சரிந்தார் சாக்ரடீஸ். அப்போது அவருக்கு வயது 70. 


Thursday, 9 April 2015

ஜெயகாந்தன்


தமிழ் எழுத்தாளர்களுக்குப் பரவலான சமூக அடையாளத்தை அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த முன்னோடி ஜெயகாந்தன். வாசகனின் வாசகியின் அறிவில் நம்பிக்கை வைத்து அவர்களிடம் நட்புணர்ச்சியோடு எழுதியவர். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பேசாப் பொருளைப் பேசத் துணிந்தவர்.  - பத்திரிகையாளர் ஞானி

அவர் ஒரு கர்வி என்று என்னிடம் சிலர் சொல்லும்போது.. 'இருக்கட்டுமே..அசாத்திய படைப்புகளைப் பிரசவிக்க அந்த குணம் அவருக்கு தூண்டுதலாக இருந்தால் அது சமூகத்திற்கு நல்லதுதானே' என்பேன். - எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்


'நான் இனிமேல் எழுதப் போவதில்லை' என்று ஜெ.கே. அறிவித்தார். சுமார் கால் நூற்றாண்டுகளாக எந்தப் படைப்பிலக்கிலத்தையும் அவர் செய்யவில்லை. ஆனாலும் தமிழ் எழுத்தாளர்களின் அடையாளமாக இன்றுவரை அவர்தான் இருந்தார்... இருக்கிறார். - எழுத்தாளர் தமிழ்மகன்


விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை ஊடுருவிச் சென்றது போலவே உயர் வகுப்பினரின் வாழ்வியல் போராட்டங்களுக்குள்ளும் அதே உக்கிரத்துடன் தன் படைப்பு மொழியை செலுத்தியவர். துணிச்சலாக எழுதியது போலவே அதே துணிச்சலுடன் எழுதுவதையும் நிறுத்திக்கொண்டவர். - கவிஞர் மனுஷ்யபுத்திரன்

ஒரு முறை அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்... ''பாரதி... பாரதிக்குப் பிறகு? புதுமைப்பித்தன் ! புதுமைப்பித்தனுக்குப் பிறகு? நான்!'' அவர் இன்று இல்லை... அந்தக் குரல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும்... அது... சத்தியத்தின் குரல்! - கவிஞர் பழனி பாரதி


ஜெகே மறைவு இரு ஆளுமைகளையும் எண்ணத்தூண்டுகிறது. நூல்களில் நானறிந்த ஜெகே இருப்பார். நேரில் நானறிந்த ஜெகே நினைவுகளாக இருப்பார். வலக்கையால் மீசையை நீவியபடி ஒரு புதிய எண்ணம் வரும்போது உருவாகும் தோள்பொங்குதலுடன் "கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டுபவர். ஓச்சின்னா என்ன? சுழற்றுதல். மெல்லச்சுழற்றி எறியணும். யானை கல்லை விட்டெறிவதை பார்த்திருக்கிறீர்களா? மென்மையா பூவை போடுவதுபோல எறியும். ஏன்னா அரசன் யாரு? அவன் யானை. அவன் அப்படித்தான் செய்யவேண்டும்" என்று எழுந்தெழுந்துபோகும் அவரது குரலை நினைத்துக்கொள்கிறேன்.
இன்று வேறேதும் செய்யப்போவதில்லை. ஜெகே மட்டும்தான். - எழுத்தாளர் ஜெயமோகன்


ஜெயகாந்தன் என்பது ஒற்றைச்சொல்லில் ஒரு சரித்திரம், அது இந்திய இலக்கியத்தின் தமிழ் அடையாளம். ஞானபீடம் என்பது அவர் பெற்ற விருதல்ல; அவர் எழுத்துக்களே ஞானபீடம்தான். சூரிய வெளிச்சம்கூட எட்டிப் பார்த்திராத வாழ்க்கையை தன் கலைக்கண்களால் பார்த்துப் பதிவு செய்தவர்; விளிம்புநிலை மனிதர்களை உலக இலக்கியக் கதாபாத்திரங்களாய் உலவச் செய்தவர் ஜெயகாந்தன். - கவிஞர் வைரமுத்து


தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எளிய மனிதர்களின் குரலை ஒலிக்கச் செய்தவர் தமிழ் எழுத்துலகில் மட்டுமில்லாமல் திரையுலகிலும் தன்னுடைய அடையாளத்தை பதித்தவர் ஜெ.கே. தமிழ் எழுத்துலகின் புத்தெழுச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர் புதிய படைப்பாளிகளின் கலங்கரை இலக்கியத்திற்கும், தமிழர்களுக்கும் அவர் செய்த தொண்டு மறக்க முடியாதது. - இசையமைப்பாளர் இளையராஜா


ஒரு ஆளுமையாக ஜெயகாந்தனை எனக்கு பிடிக்கும். கர்வமாக ஒரு நிஜ கலைஞன் வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயகாந்தன். தான் விரும்பிய வாழ்க்கையை மிக சந்தோசமாக நிதானமாக அழகாக வாழ்ந்து மடிந்தான் ஒரு எழுத்து கலைஞன்....
- திரைப்பட இயக்குநர் வசந்தபாலன்

தமிழின் உயிர் எழுத்துக்களில் ஒன்று தன் உயிரை உதிர்த்துவிட்டு இனி எழுத்தாக மட்டுமே வாழும். எழுதுபவனையெல்லாம் எழுத்தாளன் எனத் (தானே) அழைப்பதுண்டு.
ஆனால் தன் எழுத்தின் மூலம் தமிழையே ஆள்பவனை, தனித்துவ ஆளுமையின் மூலம் சமூகத்தில் தன் சுவடு பதித்தவனை என்னவென அழைப்பது? சீரிய சிந்தனைகள் மூலம் சீறிய சிங்கம் ஜெயகாந்தன்! - நடிகர், இயக்குநர் பார்த்திபன் 

Monday, 6 April 2015

தெரியுமா இவரை - 9 ஆர்க்கிமிடிஸ்

பொருள்களின் டென்ஸிட்டி அதாவது அடர்த்தி பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்னவர் கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 ஆம் ஆண்டு பிறந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரது தந்தை ஒர் ஆராய்ச்சியாளர். செல்வ செழிப்பான குடும்பம். தன் மகன் நன்கு கல்விகற்று தன்னைப்போலவே ஆராய்ச்சியாளனாக வேண்டும் என விரும்பிய தந்தை, ஆர்க்கிமிடிஸை கல்வி பயில எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.

ஆர்க்கிமிடிஸும் நன்கு கல்வி பயின்று தான் பிறந்த சிரகூஸ் நகருக்கு திரும்பினார். இரண்டாம் ஹெயிரோ என்ற மன்னன் அப்போது சிரகூஸை ஆண்டு வந்தான். தனக்கு ஒரு தங்க கிரீடம் செய்து கொள்ள விரும்பிய அந்த மன்னன் நிறைய தங்கத்தை பொற்கொல்லரிடம் கொடுத்து, கீரீடம் செய்து தரச் சொன்னான். கிரீடம் தயாராகி வந்தது, எடைபோட்டுப் பார்த்தபோது, சரியாக இருந்தது. ஆனாலும், தங்கத்தில் கலப்படம் செய்யப்பட்டிருக்குமோ என்று மன்னனுக்கு சந்தேகம். இதை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்த மன்னர், இதுகுறித்து, ஆர்க்கிமிடிஸிடம் சொன்னார். அவரும் இதை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து சதா யோசனை செய்துகொண்டிருந்தார். 

இந்த சிந்தனையோடு, ஒருநாள் குளிக்க தண்ணீர் தொட்டியில் இறங்கினார் ஆர்க்கிமிடிஸ். அப்போது, தொட்டியில் இருந்த தண்ணீர் வழிந்தது. இதை கவனித்த ஆர்க்கிமிடிஸ், அந்த நொடியில், மன்னரின் கேள்விக்கான விடையை கண்டுபிடித்தார். உடனே, உற்சாக மிகுதியில், ஆடையின்றி இருப்பதை மறந்து, யுரேக்கா யுரேக்கா (கண்டுபிடித்துவிட்டேன், கண்டுபிடித்துவிட்டேன் ) என்று கத்திகொண்டு ஓடினார். உற்சாகம் தனிந்ததும் மன்னரிடம் இருந்து கிரீடத்தை வரவழைத்து அதன் எடையை அளந்து பார்த்தார். பின்னர் அதே எடை அளவுக்கு சுத்தமான தங்கத்தையும் வெள்ளியையும் வரவழைத்தார். சுத்தமான தங்கம் எவ்வளவு தண்ணீர் வெளியேற்றுகிறது என்பதை அறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் தங்கத்தை போட்டு வெளியேறும் நீரின் அளவை கணக்கெடுத்து கொண்டார்.

அதேபோல சுத்தமான வெள்ளி வெளியேற்றும் அளவையும் கணக்கெடுத்துக்கொண்டார். கடைசியாக கிரீடத்தை தண்ணீரில் போட்டு எவ்வளவு தண்ணீர் வெளியாகிறது என்று பார்த்தார் அது சுத்த தங்கத்தில் செய்யப்பட்டிருந்தால் சுத்த தங்கம் வெளியேற்றிய அதே அளவு நீரைத்தான் கிரீடமும் வெளியேற்றிருக்க வேண்டும். ஆனால் அது சுத்த தங்கமும் சுத்த வெள்ளியும் வெளியேற்றிய நீரின் அளவுகளுக்கு இடைபட்ட அளவு தண்ணீரை வெளியேற்றியது. அதன் மூலம் கிரீடத்தில் பொற்கொல்லர் கலப்படம் செய்திருக்கிறார் என்பதை மன்னருக்கு நிரூபித்தார் ஆர்க்கிமிடிஸ். அந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் அவர் எழுதி வெளியிட்ட 'ஆன் பிளோட்டிங் பாடிஸ்' ( On Blotting Bodies ) என்ற புத்தகம் இன்றைய நவீன இயற்பியலுக்கு அடிப்படையாக விளங்குகிறது.

ஆர்க்கிமிடிஸ் கணிதத்தில் மிகச்சிறந்து விளங்கியதோடு வான சாஸ்திரத்திலும் இயந்திர நுட்பங்களிலும் பொறியியலிலும் தன்னிகரற்று விளங்கினார். அவரது மதிநுட்பத்தை கண்டு ரோமானிய சாம்ராஜ்யமே மலைத்த ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை ரோமானிய கடற்படை சிரகூஸ் நகரை முற்றுகையிட்டது. சிரகூஸ் நகரை நோக்கி நெருங்கியபோது சுமார் 500 அடி உயர குன்றின் மீதிருந்து கண்களை கூச வைக்கும் ஒளி வீசிக்கொண்டிருந்தது. ரோமானிய கடற்படை வீரர்களுகு என்னவென்று புரியவில்லை. கிட்ட நெருங்க நெருங்க ஒளியின் தக தகப்பு அதிகரித்தது. அப்போதுதான் கிரேக்கர்களுக்கு பலமாக ஆர்க்கிமிடிஸ் என்ற மேதை இருப்பது ரோமானிய கடற்படைத் தளபதி மார்க்ஸ் கிளேடியஸ் மாஸில்லஸ்க்கு நினைவுக்கு வந்தது.

ஏதோ நிகழப்போகிறது என்று சுதாரிப்பதற்குள் பாய்மரக் கப்பல்களின் படுதாக்கள் தீப்பற்றி எறிந்தன. சில நிமிடங்களுக்குள் பெரும்பாலான கப்பல்கள் தீக்கரையாகி நாசமாயின. அப்போதுதான் ரோமானியர்களுக்கு புரிந்தது ஆர்க்கிமிடிஸ் பிரமாண்டமான நிலைக்கண்ணாடிகளை குன்றின் மீது நிறுவி அதில் சூரிய ஒளியினை குவித்து அதனை போர்க்கப்பல்கள் மீது பாய்ச்சி சாகசம் புரிந்திருக்கிறார் என்பது. இப்படி பல போர்க்காப்பு சாதனங்களையும் உத்திகளையும் உருவாக்கி புகழ் பெற்றார் ஆர்க்கிமிடிஸ். அவர்மீது பெரும் மரியாதை வைத்திருந்த ரோமானியத் தளபதி மாஸில்லஸ் எந்த சூழ்நிலையிலும் படையெடுப்பு வெற்றி அளித்தாலும் சிரகூஸில் எவரைக் கொன்றாலும் ஆர்க்கிமிடிஸிக்கு மட்டும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று கட்டளையிட்டுயிருந்தார்.

ஆர்க்கிமிடிஸ் கடல் தாக்குதலிருந்து சிரகூஸை காப்பாற்றிய மூன்று ஆண்டுகளில் ரோமானியர்கள் மீண்டும் படையெடுத்தனர். அப்போது தனது 75 ஆவது வயதில் கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து வட்டங்களையும் கோணங்களையும் வரைந்து ஆய்வு செய்து கொண்டிருந்தார் ஆர்க்கிமிடிஸ். அவரை யாரென்று அறியாத, அவரின் பெருமை தெரியாத ஒரு ரோமானிய வீரன் ஆர்க்கிமிடிஸின் நெஞ்சில் வாளை பாய்ச்சினான். அந்த கிரேக்க சகாப்தம் சரிந்தது.

கேட்டர்பில்ட் எனப்படும் கவன்கல் எறிந்து விரோதி படைகளை தாக்குவது போன்ற பல்வேறு போர்க்கருவிகளை உருவாக்கியவர் ஆர்க்கிமிடிஸ். அவர் உருவாக்கிய பல சாதனங்கள் நவீன உத்திகளோடும் வடிவமைப்புகளோடும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் லிவர் எனப்படும் நெம்புகோல் மூலம் எப்படிப்பட்ட பளுவையும் தூக்க முடியும் என்று அவர் செய்து காட்டினார். லிவர், புலி என்ற அமைப்புகளை உருவாக்கி ஒரு கப்பலில் ஏராளமான பொருட்களை ஏற்றி வேறு எவரது துணையும் மற்றும் இயந்திரத்தின் துணையும் இன்றி தான் ஒருவராகவே அந்த கப்பலையே நகரச் செய்து காட்டினார். 

ஒருமுறை சிரகூஸின் மன்னர் ஆர்க்கிமிடிஸிடம் உங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லையா என்று கேட்க அதற்கு அவர், நான் நிற்பதற்கு உலகத்திற்கு வெளியே ஒரு இடம் அமைத்து கொடுங்கள் அங்கு நின்றுகொண்டு, இந்த பூமியையே அசைத்துக் காட்டுகிறேன் என்றாராம். 


Saturday, 4 April 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 6

தயக்கத்தை தவிர்ப்போம்.

நீல் ஆம்ஸ்ட்ராங் - இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர். ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது. அவர், எட்வின் சி ஆல்ட்ரின். இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி. 

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். 
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

இடது காலை எடுத்து வைப்பதா?. வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல."‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்"...

தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார். அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..." நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார். வரலாறு ஆனார்.

வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை. முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம். தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம். அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம். ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம். சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம். எனவே, நல்ல விஷயங்களில் தயக்கத்தை தவிர்ப்போம். தலைநிமிர்ந்து நிர்ப்போம். படித்ததில் பிடித்தது

பேரறிஞர் அண்ணா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேரம். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்ததால், அவர் டெல்லியில் இருந்தார். அண்ணா ஆங்கில இலக்கியத்தில் புலமை பெற்றர். Êசரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவார். ஒருநாள் கூட்டத்தொடர் முடிந்து அண்ணா வெளியே வந்துகொண்டிருந்தார். அவரை வழி மறித்த டெல்லி பத்தி£¤கையாளர் ஒருவர், "நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்." என்றார்.

அண்ணாவும் பேட்டிகொடுக்க சம்மதித்து தயாரானார். நிருபர் துணிச்சலாக, "உங்களிடம் எதைப்பற்றி கேள்வி கேட்டாலும் சுலபமாக உடனே பதில் சொல்வீர்களாமே. நான் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா?." என்றார்.

அண்ணாவும் "கேளுங்க தம்பி..." என்றார் ஆங்கிலத்தில்.

உடனே நிருபர் கேட்டார், "ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்கு "A" என்ற எழுத்தே இல்லாமல் உங்களுக்கு பதில் சொல்லத் தெரியுமா?." 

அண்ணா சற்றும் தாமதிக்காமல், "தம்பி, 1 முதல் 999 வரை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள். கடைசியில் STOP  நிருபர் உடனே அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 1 முதல் 999 வரை ஆங்கிலத்தில் "A" என்ற எழுத்தே வராது என்பது அன்றுதான் நிறையபேருக்கு தெரிய வந்தது. முதல் வாய்ப்பை தவற விடாதீர்கள். 

காலை நேரம். அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன். கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ என்ன ஆயிற்று எனக்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன். 

ஒரு நிமிடம் யோசிக்கிறேன் நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது.  ஆனால் அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.
காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன். 
என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள். பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள்.

தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள். 

நான் இறக்கவில்லை. இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன். ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை. என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தொ¤யவில்லை. அய்யோ என்ன செய்வேன் நான்? எப்படி அவர்களுக்குத் தொ¤விப்பேன்? 

நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா? 

என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான். 

நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பி£¤ந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பா¤வும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள். அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவி¢ல்லை. 

அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றி¢லும் பாசமே நிறைந்திருக்கும். 

இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான். 

ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. 

அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன். "ஓ  கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்"

என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் " என்று  நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.உண்மையில்  இதற்கு முன்னால் இவ்வாறு  சொல்லவே  இல்லை. "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை  கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய்  நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!
திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றான் மனைவி. 

ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..

என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும்  இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே  நீ மிகவும் அழகான மற்றும் பாசமான  மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக. 

முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.

நண்பர்களே இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள். ஏனெனில் உங்களுது  பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். 


ஆட்கொல்லி 

காட்டு வழியே ஒரு துறவி போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு புதா¤ல் ஏதோ தெரிந்தது. அது என்னவென்று பார்த்தார். அது ஒரு வெண்கலப் பானை நிறைய தங்கக் காசுகள். ‘ஐயோ ஆட்கொல்லி இருக்கிறதே ஆட்கொல்லி இருக்கிறதே!’ என்று கூறி அந்த இடத்திலிருந்து விரைந்து சென்றார்.

அந்த வழியே இரு நண்பர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்து துறவி ‘ஆட்கொல்லி இருக்கிறது அந்தப் பக்கம் போகாதீர்கள்’ என கூறிக் கொண்டே சென்றார். ஆனால் அவர்கள் இருவரும் கேட்காமல் அவ் வழியே சென்று அப் பானையைப் பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்கள் இருவரும் காசுகளைப் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்தனர். பகலில் ஊருக்குச் சென்றால் எல்லோரும் பார்த்து விடுவர் என்பதால் இரவு யாருக்கும் தெரியாமல் ஊருக்குச் செல்ல தீர்மானித்தனர்.
இருவருக்கும் பசித்தது. ஆகவே ஒருவர் காவல் இருக்க ஒருவன் உணவு வாங்கி வரவும் பேசிக் கொண்டனர். உணவு வாங்கி வர செல்பவனுக்கு பெருங்கவலை அவன் ஓடி விடுவானோ என அரைகுறை நம்பிக்கையுடன் சென்றான்.

தங்கத்தின் நிறம், ஒளி, குணம் காத்திருந்தவரை என்னவோ செய்தது. பக்கத்தில் வளர்ந்திருந்த மூங்கிலைப் படீர் என ஒடித்தார். கத்தி போலக் கூர்மையாக இருந்தது. கண்களில் வெறி ஏறிக் காத்திருந்தார். உணவு வாங்கி வந்தவர் அதை வைத்து விட்டு நிமிர்ந்தார். அவர் வயிற்றில் கூரான மூங்கில் பாய்ந்தது. அலறிச் சாய்ந்தார்.

கொலை செய்தவன் கையைக் கழுவி விட்டு உணவை உண்டார். அடுத்த நிமிடம் சரிந்து விழுந்து இறந்தார். உணவு கொண்டு வந்தவர் அதில் விஷம் கலந்தது இவருக்குத் தெரியுமா என்ன?
துறவி மீண்டும் அவ்வழியே வந்தார். ‘ஆட்கொல்லி இருவரைக் கொன்று விட்டதே! இன்னும் எத்தனை பேரைக் கொல்லுமோ? என வருந்திய படியே சென்றார்.


ரிலாக்ஸ் ப்ளீஸ் 

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்.
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.
மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!இவங்க, இந்த வயசுல, அவங்கக்கிட்ட அதைச் சொன்னா. அவங்க இப்படித்தான் ஃபீல்  பண்ணுவாங்க. 

6 வயசு பையன்: ஐ லவ் யூ.
6 வயசு பொண்ணு: ஐ லவ் யூ ப்ரண்ட்.
ஸ்கூல் பையன்: ஐ லவ் யூ.
ஸ்கூல் பொண்ணு: ச்சீ, டீச்சர்கிட்ட சொல்றேன்.
காலேஜ் பையன்: ஐ லவ் யூ.
கா.பொண்ணு: அக்கா, தங்கச்சியோட நீ பொறக்கல.?
வேலைக்கு போகும் ஆண்: ஐ லவ் யூ.
பெண்: ------------------ (ரவி யும் சொல்லிருக்கான். இவனுக்கு சம்பளம் கம்மியோ?)
கணவன்: ஐ லவ் யூ,
மனைவி: எதுக்கு இப்ப வழியறீங்க, காசு கைல இல்ல,போங்க.
கிழவன்: ஐ லவ் யூ.
கிழவி: பேரன், பேத்தீ எடுத்தாச்சி, வர,வர அறிவே இல்ல.

# அட எப்பதான் நாங்க ஐ லவ் யூ சொல்றது. என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா.இவையெல்லாம், எங்கே?

இயற்கை எங்கே?
தென்னை ஓலை விசிறி எங்கே? பனையோலை விசிறி எங்கே?
பல்லாங்குழி எங்கே? கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?
தெல்லு விளையாட்டு எங்கே? கோபிபிஸ் விளையாட்டு எங்கே?
சாக்கு பந்தயம் எங்கே? கில்லி எங்கே? கும்மி எங்கே?
கோலாட்டம் எங்கே? திருடன் போலீஸ் எங்கே?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே? மரப்பாச்சி கல்யாணம் எங்கே?
ஊனாங்கொடி ரெயில் எங்கே? 
கம்பர்கட் மிட்டாய் எங்கே? குச்சி மிட்டாய் எங்கே? 
குருவி ரொட்டி எங்கே? இஞ்சி மரப்பா எங்கே? 
கோலி குண்டு எங்கே? கோலி சோடா எங்கே?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே?
கரிப்பழம் எங்கே? கள்ளிப்பழம் எங்கே?
இளுவான் எங்கே? எலந்தை பழம் எங்கே?
சீம்பால் எங்கே? ரோசம் வளர்த்த கொங்க மாட்டுப்பால் எங்கே?
பனம் பழம் எங்கே? சூரிப்பழம் எங்கே? இளுவான் எங்கே?
பழைய சோறு எங்கே? நுங்கு வண்டி எங்கே?
பூவரசன் பீப்பி எங்கே? கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?
நடை பழகிய நடை வண்டி எங்கே? அரைஞான் கயிறு எங்கே?
அன்பு எங்கே? பண்பு எங்கே? பாசம் எங்கே? நேசம் எங்கே?
மரியாதை எங்கே? மருதாணி எங்கே? சாஸ்திரம் எங்கே? சம்பரதாயம் எங்கே?
விரதங்கள் எங்கே? மாட்டு வண்டி எங்கே? கூட்டு வண்டி எங்கே?
ஆழ உழுத எருதுகள் எங்கே? செக்கிழுத்த காளைகள் எங்கே?
எருமை மாடுகள் எங்கே? பொதி சுமந்த கழுதைகள் எங்கே?
பொன் வண்டு எங்கே? சிட்டுக்குருவி எங்கே?
குயில் பாடும் பாட்டு  எங்கே? குரங்கு பெடல் எங்கே?
அரிக்கேன் விளக்கு எங்கே? விவசாயம் எங்கே?
விளை நிலம் எங்கே? ஏர்கலப்பை எங்கே?
மண் வெட்டி எங்கே? மண்புழு எங்கே? 
வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?
பனை ஓலை குடிசைகள் எங்கே? தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே ?
குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே? அந்த குளங்களும் எங்கே?
தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே? அம்மிக்கல் எங்கே? ஆட்டுக்கல் எங்கே?
மோர் சிலுப்பி எங்கே? கால்கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே ?
நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே?
வெத்திலை பாக்கு பரிசங்கள் எங்கே? 
தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே ?
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே? 
தாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே ?
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே ?
மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?
இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே? 
தாவணி அணிந்த இளசுகள் எங்கே? சுத்தமான நீரும் எங்கே ?
மாசு இல்லாத காற்று எங்கே ? நஞ்சில்லாத காய்கறி எங்கே?
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?
எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே?

இதற்கு பாமரனாலும், மெத்தபடித்தவனாலும், விஞ்ஞானியாலும், ஏன் கணினியாலும் கூட பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து  பணம் எனும் காகித்தை தேடி இந்த உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதுசரி அடுத்த தலைமுறையை பற்றி  சிந்திக்க நமக்கு நேரம் தான் எங்கே? எங்கே? எங்கே?