Tuesday, 20 March 2012

இந்திய சினிமா


பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இந்திய சினிமாவுக்கு நூற்றாண்டு தொடங்குவதால் சேவை வரி ரத்து செய்யப்படுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்தாலும் அறிவித்தார். அன்றிலிருந்து சினிமாவைப் பற்றி ஏதாவது எழுதியே தீருவது என்று மண்டையை பிறாண்டிக் கொண்டிருந்தேன். அப்புறம் அங்குமிங்குமாக தேடி கிடைத்த கொஞ்சுண்டு தகவல்கள் உங்கள் பார்வைக்காக. 
   இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் தாதா சாகேப் பால்கே என்பவரால் 1913 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'ஹரிச்சந்திராஆகும்இதற்கு முன்பே கூட இந்தியாவில்திரைப்படங்கள் வந்திருந்தன1865 ஆம் ஆண்டு முதல் அசையும் படங்கள் வெளிவந்திருந்தனஆனால்இவைகள் துண்டுப்படங்களாகும்ஹரிலால் சென்தானேவால் ஆகியோர்மும்பையிலும்கொல்கத்தாவிலும்சிறிய படங்களை தயாரித்தனர்வங்க மொழியின் முதல் திரைப்படம் 'சத்யாபாபு ஹரிச்சந்திரா' 1917 ஆம் ஆண்டு வெளிவந்ததுதமிழின் முதல் படம்'கீசகவதம்' 1919 ஆம் ஆண்டு வெளிவந்தது.
          1920 ஆம் ஆண்டுகளில்தீரன் கங்கூலிபாபுராவ் பெயிண்டர்அசெத்திங்சந்துலால்ஷாராணிவி.சாந்தாராம் போன்ற திரைப்பட இயக்குநர்கள் 'இங்கிலாந்து ரிடர்ண்டு, 'சங்காரிபாஷ்', 'குணசுந்தரிபோன்ற பல திரைப்படங்களை உருவாக்கினர்.
           ஊமைப்படக் காலக்கட்டத்தில் இருந்து முதல் பேசும் படமாக உருவானது 'ஆலம் ஆராதான்இதுவே இந்தியாவின் முதல் பேசும் படமாக 1931 ஆம் ஆண்டு வெளிவந்ததுஇந்தகாலக்கட்டத்தில் தான் வங்காளத்திலும்தென்னிந்தியாவிலும் பேசும் படங்கள் உருவாக்கப்பட்டனவங்காளத்தில் 'ஜமாய்ஷாஸ்திதெலுங்கில் 'பக்த பிரகலாதா', தமிழில் 'காளிதாஸ்',முதல் படங்களாக வெளிவந்தன.
           திரைப்பட வளர்ச்சி 1930 ஆம் ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் கண்டதுபக்திபுராணக்கதைகளுடன் கூடிய படங்களுடன்சமுதாய உணர்வுள்ள படங்களும் வெளியாயின.சாந்தாராமின் 'துனியாநாமானே', 'ஆதீமிபதேஹாலின் 'சாந்தாதுக்காராம்மற்றும் பல பொழுதுபோக்கு படங்கள் வந்தன.
            இந்தியாவின் முதல் வண்ணப்படம் அர்தேஷிர் ராணியின் 'கிஸபின் கன்னியாஎன்ற திரைப்படமாகும்இது 1937 ஆம் ஆண்டு வெளியானதுஇதே காலத்தில்மராத்திகுஜராத்தி,கன்னடம்ஒரியாஅசாமிபஞ்சாபிமளையாள மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகின.

தமிழ் சினிமா
விக்டோரியா பப்ளிக் ஹால்  
        1897 ஆம்  ஆண்டு சென்னையில் ரிப்பன் மாளிகைக்கு அடுத்திருந்த 'விக்டோரியா பப்ளிக் ஹாலில் 'எட்வர்ட்என்ற ஆங்கிலேயர் 'புகை வண்டியின் வருகை, ' தொழிற்சாலையை விட்டு..'போன்ற சில நிமிடங்களே ஓடக்கூடிய மௌன துண்டுப்படங்களை போட்டுக்காட்டினார்இதுதான் தமிழகத்தில் காட்டப்பட்ட முதல் சினிமா.
      

              ஆரம்பகாலத்தில்,பயாஸ்கோப்,கினிமோட்டோபிராஃப்மோட்டோ போட்டோஸ்கோப்சினிமோட்டோகிராஃப் என்று பலவிதமான பெயர்களில் வழங்கப்பட்டுகடைசியாகலூமியர்சகோதரர்கள் சூட்டிய சினிமோட்டோ கிராஃப் என்ற பெயர்தான் நிலைத்தது.
                    தெரு ஓரங்களிலும்பூங்காக்களிலும் வெவ்வேறு இடங்களில் சலனப்படம் காட்டப்பட்டு வந்த காலக்கட்டத்தில், 'வார்விக் மேஜர்என்ற ஆங்கிலேயருக்கு நிரந்தரமாக ஒரே இடத்தில்படம் காட்டினால் என்ன என்று தோன்ற, 1900 ஆம் ஆண்டுசென்னையில் 'எலெக்ட்ரிக் தியேட்டர்என்ற சினிமா கொட்டகையை கட்டினார்இதுதான் தென்னிந்தியாவின் முதல்தியேட்டர் ஆகும்.
                         திருச்சியில் ரயில்வேயில் வேலைப்பார்த்து வந்த சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவருக்கு சினிமா தொழில் மீது ஆர்வம் ஏற்பட்டுபுரொஜக்டரையும்சில துண்டு படங்களையும்விலைக்கு வாங்கி திரையிட்டுக் காட்டத்தொடங்கினார்.  அந்த வகையில்சலனப்படங்களை காட்டிய முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவரானார்அதேபோல் சென்னையில்போட்டோ கிராபராக இருந்த வெங்கையா என்பவரும் துண்டுப்படங்களை வாங்கிஊர் ஊராக போய் படங்களை திரையிட்டுக்காட்டினார்.
                     பின்னர்வெங்கைய்யா 1913 ஆம் ஆண்டு சென்னையில் 'கெயிட்டிதியேட்டரை கட்டினார்இந்தியர் ஒருவரால்தென்னிந்தியாவில் கட்டப்பட்டமுதல் தியேட்டர் இதுதான்.இதனைத்தொடர்ந்து, 1914 ஆம் ஆண்டு வடசென்னை தங்கசாலையில் 'கிரௌன்தியேட்டரையும், 1915 ஆம் ஆண்டு 'குளோப்' (ராக்சிதியேட்டரையும் கட்டினார்.
                         சென்னையில் மோட்டார் வியாபாரம் செய்துவந்த நடராஜ முதலியார் என்பவருக்கு நாமே படம் தயாரித்தால் என்ன என்று தோன்றியது.  எனவே, 'ஸ்டூவர்ட் ஸ்மித்என்றஆங்கிலேயரிடம் கேமராவை கையாளும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, 1916 ஆம் ஆண்டு இந்தியா பிலிம் கம்பெனி'  என்ற தென்னிந்தியாவின் முதல் ஸ்டுடியோவை உருவாக்கி,அதில்,முப்பத்தைந்து  நாட்களில்தென்னிந்தியாவின் முதல் சலனப்படமான 'கீசகவதம்தயாராகி வெளிவந்தது1932 ஆம் ஆண்டு மைசூரில் தயாரிக்கப்பட்ட 'பாக்ய சக்ராதான்தென்னிந்தியாவின் கடைசி மௌன படமாகும்.
                   1931 ஆம் ஆண்டு 'சாகர் மூவி டோன்என்னும் மும்பை கம்பெனி 'குறத்தி பாட்டும்டான்சும் என்று பேசும் குறும்படத்தை தமிழில் முதன் முதலாக தயாரித்ததுஅதே ஆண்டில்முதல்முழு நீளத் தமிழ்ப் படமான 'காளிதாஸ்மும்பையில் தயாரிக்கப்பட்டது.
                    1934 ஆம் ஆண்டு .நாராயணன் என்பவர் சென்னையில், 'சீனிவாசா சினிடோன் என்ற தென்னிந்தியாவின் முதல் டாக்கி ஸ்டுடியோவை தொடங்கி,தென்னிந்தியாவின் முதல் பேசும்படமான 'சீனிவாச கல்யாணம்படத்தை தயாரித்து வெளியிட்டார்.

இது மூக்கைப் பொத்துகிற சமாச்சாரம் அல்ல.


ஒரு மனிதன் சதை துணுக்குகளாய் சிதறிக்கிடந்த காட்சியை சில மாதங்களுக்கு முன் காண நேர்ந்தது என் வாழ்க்கையின் மிக உச்சபட்ச அதிர்ச்சி. வழக்கமான ஒரு காலை நேரத்தில் சைதாப்பேட்டை மார்க்கெட் சுரங்கப்பாதையை கடந்து அலுவலகம் சென்றுகொண்டிருந்தபோது, ரயில் டிராக் அருகே பெருங்கூட்டம் ஒன்று கூடியிருந்தது. ஆர்வமிகுதியில் எட்டி பார்த்து, முதல் வரியில் உள்ள அதிர்ச்சியை அடைந்தேன். எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் ரயில் தண்டவாளத்தில், சில மீட்டர் தூரத்திற்கு மனித சதை துணுக்குகள் சிதறிக்கிடந்தது. விசாரித்தபோது, இயற்கை உபாதையை கழிக்க, அங்கே ஒதுங்கியபோது, ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. 

தாம்பரம் சென்னை கடற்கரை இடையிலான ரயில் பாதை, மிகப்பெரிய திறந்தவெளி கழிப்பிடமாக, கழிப்பறை வசதியில்லாத, சென்னை நகரத்து அடித்தட்டு மக்களால் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது, இதுபோன்ற விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படுகின்றன. சென்னையின் நீர்வழித்தடங்களின் ஓரம் வசிக்கும் அடித்தட்டு மக்கள் திறந்தவெளிக் கழிப்பிடங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.  அவர்களுக்கு வேறு வழியே இல்லை. 

இந்தியாவில் உள்ள வீடுகளின் வகைப்பாடு, வசிப்போரின் வாழ்க்கைத்தரம் ஆகியவைபற்றி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள புள்ளிவிவரம் இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் திறந்தவெளியைப் பயன்படுத்துவோர் 49.8% பேர்.  கழிப்பறை வசதிகள் இல்லாத வீட்டில் வசிப்போர் திறந்தவெளிகளைத் தங்கள் இயற்கையின்அழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கழிப்பறை வசதி இல்லாத வீடுகளைச் சேர்ந்த 3.2% பேர் மட்டுமே பொது கட்டணக் கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.  தேசிய அளவில் 49.8% பேர் திறந்தவெளியைப் பயன்படுத்தினால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை 45.7% பேரின் நிலைமை அதுதான். இந்தியாவில் உள்ள 25 லட்சம் கிராமங்களில் வெறும் 25,000 கிராமங்கள் மட்டுமே கழிப்பறை வசதிகளைக் கொண்டவையாக, திறந்தவெளியைப் பயன்படுத்தாத கிராமங்களாக உள்ளன 
கழிப்பறை மட்டும் திறந்தவெளியாகவே இருப்பதற்கு, மக்களின் அறியாமை மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் அலட்சியமும் முக்கிய காரணம். 
சென்னையில் உள்ள கட்டணக் கழிப்பிடங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக, திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்துவதே ஆரோக்கியமானது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஏலம் விட்டு வருமானம் பெறவும், ஆளும் கட்சிக்கு வேண்டியவருக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கவும் மட்டுமே பொதுக் கழிப்பறைகள் பயன்படுகின்றன. அவற்றில், குறைந்த பட்ச பராமரிப்பு கூட கிடையாது என்பது வெட்கக்கேடு. ஆனால், நாம் உள்ளே செல்வதற்கு முன்பாகவே, பணத்தை மட்டும் பிடுங்கிக்கொள்வார்கள். அதனால்தான் கட்டணக் கழிப்பறைகள் அருவருப்பான சூழலில் உள்ளன.ஆட்சிகள் மாறும் போது, எழில் மிகு சென்னை என்றும், சிங்காரச் சென்னை என்றும் கோசங்கள் மாறுகின்றன.  எத்தனை ஆண்டுகளானாலும் சென்னையின் நிலையில் மட்டும் மாற்றமே இல்லை.  கோடிகளை கொட்டி, சமாதிகளை சீரமைப்பதைவிட, போதிய அளவில் கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தருவது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.  ஆனால், அரசுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை கிடையாது. சந்துக்கு சந்து சரக்குக் கடைகளைத் திறந்து, குடிமக்களை குடி மக்களாக மாற்றுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. 
ஓர் ஆரோக்கியமான நகரத்தின் முதல் அடையாளம் தூய்மையான கழிவறை. அது வீடு என்றாலும் சரி, சாலை என்றாலும் சரி. தெருவுக்கு ஒரு கட்டணக் கழிப்பிடம் அமைத்து அதைத் தூய்மையாகவும் குறைந்த கட்டணத்திலும் நடத்தக்கூட அரசாங்கத்தால் முடியவில்லை என்பது வெட்கக்கேடு. அப்புறம் எதற்கு  மாநகராட்சிகளும், உள்ளாட்சி அமைப்புகளும்?

கொழுத்த பணக்காரர்கள் நடை பயிற்சி செய்ய பூங்காக்கள் உருவாக்குவதற்கும், நீர் வழித்தடங்களின் ஓரம் வசிக்கும் அடித்தட்டு மக்களை சென்னைக்கு வெளியே விரட்டுவதற்கும் தானா ?

பத்திரிகையில் படித்த சுவாரசிய செய்தி ஒன்று :

கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் அங்கிருந்து வெளியேறி தாய் வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்ணுக்கு, சுத்தம், சுகாதாரம் பற்றி கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக டெல்லியில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. மத்தியப்பிரதேச மாநிலம் பீதுல் மாவட்டத்தில் உள்ள சின்சோலியை சேர்ந்தவர் அனிதாவுக்க கடந்த ஆண்டு மே மாதம்  திருமணம் நடந்தது.  கணவன் சிவராம் நாரேவுடன் ஜீதுதானா கிராமத்தில் உள்ள புகுந்த வீட்டுக்கு சென்ற அனிதாவுக்கு அதிர்ச்சி.  சிவராமின் வீட்டில் கழிப்பறை இல்லை. மேலும், அந்த கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. கிராமத்தை சுற்றியிலும் உள்ள திறந்தவெளியைதான் கழிப்பறையாக பயன்படுத்தி வந்தனர். 

 இந்த திறந்தவெளி கழிப்பிட முறையை அனிதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டிலேயே கழிப்பறை கட்டினால்தான் உங்களோடு வாழ்வேன் என்று சிவராமுடன் சண்டைபோட்டார்.  சிவராம் மறுக்கவே, அனிதா தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.  இந்த பிரச்னையால் திருமண வாழ்க்கையே முடிந்துவிடுமோ என்று பயந்த சிவராம்,  தன்னுடைய வீட்டில் கழிப்பறை கட்டியதோடு, கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும் என்று கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டார்.

அந்த கிராமத்தை சுலப் இன்டர்நேஷனல் நிறுவனம் தத்து எடுத்து, கழிப்பறைகளை கட்டியது.  கணவன் வீட்டுக்கு அனிதா திரும்பினார். கிராம மக்களிடையே சுத்தம், சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய அனிதாவை அந்த கிராமமே பாராட்டியது. சுலப் இன்டர்னேஷனல் நிறுவனம் வழங்கும் விருதுக்கு அனிதா தேர்வு செய்யப்பட்டு,  டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விருது வழங்கினார். 

Friday, 16 March 2012

ஜலகண்டேச்வரர் ஆலயம் / வேலூர் கோட்டைநண்பரை பார்ப்பதற்காக, சென்னையில் இருந்து வேலூருக்கு நானும், மற்றொரு நண்பரும் இருசக்கர வாகனத்தில் சென்றோம். நண்பர் வர தாமதம் ஏற்பட்டதால், கிடைந்த இடைவெளியில் வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றோம். (கோயிலின் உள்பகுதில் ஒரு கிணறு இருக்கிறது. தண்ணீர் நிரம்பிய அக்கிணற்றில், ஒரு நாணயத்தை போட்டால், அது கரை ஒதுங்கி, படி மற்றும் சுவர் இடுக்கில் நின்றுவிட்டால், நாம் நினைத்த காரியம் நிறைவேறுமாம். கடந்த முறை சென்றபோது, நான் போட்ட நாணயம் படியில் ஒதுங்கியது. ஆனால், நான் நினைத்த காரியம் மட்டும் நிறைவேறிவில்லை. இதே போன்று ஏகப்பட்ட நாணயங்கள் பலரது வேண்டுதலை, ஆசைகளை, கனவுகளை சுமந்தபடி, அந்த கிணற்றில் கதை ஒதுங்கிக் கிடக்கின்றன)
ஒரு சில முறை அக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். பிரம்மாண்ட கற்களால் உருவாக்கப்பட்ட அந்த ஆலயம் ஒவ்வொரு முறை பார்க்கும்போது பிரமிப்பையே ஏற்படுத்துகிறது. வழக்கம் போல, கோயில் மண்டபத்தில் அமர்ந்து காதல் ஜோடிகள் சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. (அந்த விவஸ்தைக்கெட்ட ஜென்மங்களுக்கு வேறு இடமே கிடைக்காதா)

ஒரு மணிக்கு வாட்ச்மேன் வந்து விரட்டத் தொடங்கியதால், சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டோம். வேறொரு நாளைக்கு நிதானமாகச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும். 


கோயில் வாசலில் தொல்பொருள் துறையினரால் வைக்கப்பட்டிருந்த கோயில் வரலாறு குறித்த கல்வெட்டு 


இக்கோயில் வேலூர் கோட்டையைப் போலவே கி.பி. 1566 ம் ஆண்டிற்கு முன்பாக, வீரப்ப நாயக்கரின் மகனும், லிங்கபூபாலரின் தந்தையுமான சின்னபொம்மி நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்டது. இம்மன்னன் மஹாமண்டலேச்வரர் திருமலைய தேவருக்கும் மஹாராஜ சதாசிவதேவருக்கும் (அவருக்குப் பின் ஸ்ரீரங்கதேவ மஹாராஜருக்கும்) உட்பட்ட சிற்றரசாக வேலூர்ச் சீமையில் ஆண்டான். இக்கோவில் விஜயநகரக் கட்டடப்பாணியின் இறுதி வடிவில் கட்டப்பட்டு, கருவறையும், உண்ணாழியும் அதனுடன் ஒருமித்த மஹா மண்டபமும் கூடியது. மஹா மண்டபத்து வடப்புறம் நடராஜருக்குரிய சிறிய சந்நிதி அறையின் அடித்தளத்தில் நிலவறை ஒன்று உண்டு. 
கோயிலமைப்பின் வெளிப்பிரகாரத்தின் தெற்கு முகமாக உயர்ந்த கோபுர வாயிலொன்றும், தென்மேற்கே கலியாண மண்டபமும், வடமேற்கே அகழியுடன் தொடர்புள்ள நிலவறையுடன் கூடிய மண்டபமும், அம்மன் சந்நிதியும் உள்ளன. கலியாண மண்டபத்தின் சிறந்த நுண்ணிய சிற்ப வேலைபாடு விஜயநகர பாணியின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. கோட்டை 'ஜ்வரகண்டேசுவரருக்கு' மானியமாக வழங்கப்பட்ட அருகிலுள்ள ஏழு கிராமங்களைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இருக்கின்றன. இதனின்றும், சிவனுக்குரிய ஜ்வரகண்டேசுவரர் எனும் பெயர் காலப்போக்கில் ஜலகண்டேசுவரர் என்று மாறியதையும் அறியலாம். 17,18,19ம் நூற்றாண்டில் தொடர்ந்து விளைந்த பீஜப்பூர் ஆதில்ஷாஹி, மராட்டிய, கர்நாடக நவாபிய படையெடுப்புகளின் போது, இக்கோயில் படை முகாமாக உபயோகிக்கப்பட்டு, சிதைந்து பூசனையற்ற நிலையை அடைந்தது

Thursday, 8 March 2012

சாணம் மெழுகிய வாசலில்
ஓலைப்பாய் விரித்தமர்ந்து
நிலாச்சோறு சாப்பிட்டபடி
அப்பத்தாவிடம் கேட்ட
மந்திரவாதி கதை
நினைவுக்கு வருகிறது
-
மின்வெட்டால்
நெடுந்தொடர் தொலைத்து
காற்றுக்காக மொட்டைமாடு
வந்து
வானம் பார்க்கையில்..!
-
==========================
>ஜி.ஆரோக்கியதாஸ்
நன்றி: கல்கி 8-5-11

Wednesday, 7 March 2012

தமிழ் திரைப்படங்களுக்கு 8 தேசிய விருதுகள்
2011-ம்  ஆண்டுக்கான 59 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 'தியோல்' என்ற மராத்தி படத்தில் நடித்த கிரீஷ் குல்கர்னி சிறந்த நடிகராகவும், 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தி டர்ட்டி பிக்சர். இதில் சில்க் ஸ்மிதாவாக, வித்யா பாலன் நடித்திருந்தார் .

தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருதினை பியாரி மொழியில் வெளியான முதல் படமான 'பியாரி'க்கும், மராத்திப் படமான 'தியோலு'க்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது 


சிறந்த இந்திப் படத்துக்கான விருது ஓனிர் இயக்கிய 'ஐ யாம்' படத்துக்குக் கிடைத்துள்ளது.சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது விமல், இனியா நடித்த 'வாகை சூடவா' தமிழ்ப் படத்துக்குக் கிடைத்துள்ளது.   குழந்தை தொழிலாளர்கள் பற்றிய இந்த படத்தை சற்குணம் இயக்கி இருக்கிறார். 'அழகர்சாமியின் குதிரை' படம் சிறந்த பொழுது போக்குப் படமாக தேர்வாகியுள்ளது. இதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது.

'ஆரண்ய காண்டம்' படத்துக்கு சிறந்த எடிட்டிங் (பிரவீண் – ஸ்ரீகாந்த்), சிறந்த புதுமுக இயக்குநருக்கான (தியாகராஜன் குமாரராஜா) இந்திராகாந்தி விருதுகள் கிடைத்துள்ளன.ஷாரூக்கானின் சயின்ஸ் பிக்சன் படமான 'ரா ஒன்'னுக்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்கான விருது கிடைத்துள்ளது.குறும்பட பிரிவில், நடிகை ரேவதி இயக்கிய ஆங்கிலப்படமான `தி சன் செட்ஸ்' சிறந்த குடும்ப கதையம்சம் கொண்ட படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. இதேபோல் நல்லமுத்து தயாரித்து இயக்கிய `டைகர் டைனாஸ்டி' என்ற படம், சிறந்த சுற்றுச் சூழல் படத்துக்கான விருதை தட்டிச் சென்றது. விருதுப் பட்டியல்:


சிறந்த இயக்குநர் : கோவிந்தர் சிங் (அன்னே கோடே தா டான்)
சிறந்த திரைக்கதை: விகாஸ் பேஹல் மற்றும் நிதீஷ் திவாரி (சில்லர் பார்ட்டி)
சிறந்த வசனம்: கிரீஷ் குல்கர்னி (தியோல்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: பார்த்தோ குப்தே (ஸ்டான்லி கா டப்பா)
சிறந்த குழந்தைகள் படம்: சில்லர் பார்ட்டி (இந்தப் படத்தில் நடித்த அனைத்து குழந்தைகளுக்கும் விருது)சிறந்த பெங்காலி படம்: ரோஞ்சனா ஆமி ஆர் அஷ்போ நா
சிறந்த டோக்ரி படம்: திலேஷ் பாஷியா கோய்
சிறந்த கன்னட படம்: கூர்ம அவதார்சிறந்த மணிப்புரி படம்: பிஜிகீ மணி
சிறந்த மராத்தி படம்: ஷாலா
சிறந்த பஞ்சாபி படம்: அன்னே கோடே தா டான்சிறந்த நடன இயக்குநர்: போஸ்கோ மற்றும் சீஸர் (ஜிந்தகி மிலேகி நா தபோரா)நடுவர் குழுவின் பரிசுக்குரிய படம்: ரோஞ்சனா ஆமி ஆர் அஷ்போ நாசிறந்த இசை: நீல் தத்தா (ரோஞ்சனா ஆமி ஆர் அஷ்போ நா)சிறந்த பாடலாசிரியர்: அமிதாப் பட்டாச்சார்யா (ஐ யாம்)சிறந்த மேக்கப்: விக்ரம் கெயிக்வாட் (பால் கந்தர்வா, தி டர்ட்டி பிக்சர்)சிறந்த காஸ்ட்யூம்: நீதா லுல்லா (பால் கந்தர்வா, தி டர்ட்டி பிக்சர்)சிறந்த பாடகர் (பெண்): ரூபா கங்குலி

சிறந்த படம் மற்றும் இயக்குனருக்கு தங்கத்தாமரை விருதுடன் ரொக்கப்பரிசு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும். சிறந்த நடிகர்-நடிகைக்கு வெள்ளித்தாமரை விருதுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது.

2011-ம்  ஆண்டு, விருதுக்கான போட்டியில் பங்கேற்ற படங்களின் எண்ணிக்கை 186    வரும் மே மாதம் 3 -ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் விருதுகளை வழங்குகிறார்.