Wednesday 18 April 2012

'மூழ்காத ஷிப்'





 உங்க விருப்பத்திற்கேற்ப நண்பர்கள் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


 ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட எண்ணங்களும், செயல்களும் உண்டு. நட்பு என்ற போர்வையில் நண்பனின் சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைக்காதீர்கள். 


      நண்பனுக்கு உதவுங்கள். உங்களுக்குத் தேவையெனில் அவனுடைய உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதே சமயத்தில் அளவுக்கு மீறிய உதவியை இருவருமே செய்ய முயற்சிக்காதீர்கள். 


   நண்பன் பேசும்போது வாயைத் திறக்காதீர்கள். ஆலோசனைக்கு மட்டுமே வாயைத் திறக்கவும். 


       நண்பன் இல்லாத நேரத்தில் அவனைப்பற்றி நீங்கள் பேசவோ அல்லது மற்றவர் பேசவோ அனுமதிக்காதீர்கள். 


    நண்பனின் வெற்றியைக் கொண்டு பெருமைக் கொள்ளுங்கள். 


    திறந்த மனத்துடன் பாராட்டுங்கள். 


   திறந்த மனமே நட்புக்கு அடையாளம். நண்பனின் மேலுள்ள கோபத்திற்கு திரை போடாதீர்கள். முகத்திற்கு நேரே கூறிவிடுங்கள். 


        நண்பர்களிடையே பேதம் கிடையாது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்பதெல்லாம் நட்புக்குக் கிடையாது. எனவே நண்பனைத் தாழ்வாகவோ, உயர்வாகவோ எண்ணாதீர்கள். 


   குறைபாடுகள் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்கிறோம். என்பதை நினைவில் கொண்டு, நண்பனின் குறைகளை பெரிது படுத்தாதீர்கள். 

       
          அப்புறம் என்ன.. என்றும் 'மூழ்காத ஷிப்' பிரண்ட் ஷிப் தான். 


( பத்தாண்டுகளுக்கு முந்ததைய வார இதழ் ஒன்று படிக்கக் கிடைத்தது. அதில், பளிச்சென்று கண்ணில்பட்ட விஷயம் இது. உங்களுக்கு எந்த விதத்திலாவது பயன்படுமானால் மகிழ்ச்சி. )

6 comments:

  1. எப்போதும் பயன்படக்கூடிய அறிவுரைகள். நீங்கள் படித்ததை எங்களுடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. பயனுள்ள நல்ல விடயம். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. நல்லதோர் பகிர்வு. எங்களுடன் அதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. நல்ல விஷயம் & நல்ல பகிர்வு. அதை பகிர்ந்து கொண்டதற்கு எனது நன்றி.

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள விடயம்......
    கண்டிப்பாக நல்ல நண்பர்களை உருவாக்க உதவும்

    ReplyDelete