Monday 21 January 2013

தெரிந்ததும் தெரியாததும்.. 1


முசோலினி 


உலகைப் பயமுறுத்திய சர்வாதிகாரிகள்ல ஹிட்லருக்கு அடுத்தபடியா பிரபலமாக இருந்தவரு முசோலினி. இவரு 1922 முதல் 21 ஆண்டு காலம் சர்வாதிகாரிய இத்தாலியை ஆட்டிப்படைச்சாரு. இவரோட நெருங்கிய நண்பர் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர். சின்ன வயசுல ஓவியராகணும்னு ஆசைப்பட்டவரு ஹிட்லர். ஆனா.. விதி வேற மாதிரியா விளையாடி.. உலக வரலாற்றையே மாத்திடுச்சு. அதே மாதிரி.. பள்ளிக் கூட வாத்தியாரா இருந்த முசோலினி, சர்வாதிகாரியா மாறினதும் விதியோட வினோத விளையாட்டுக்கள்ல ஒண்ணு. 

இத்தாலியில, 1883-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி முசோலினி பிறந்தாரு. இவரோட அப்பா ஒரு கொல்லர். சொந்தமா இரும்புப் பட்டறை நடத்திக்கிட்டிருந்தாரு. அம்மா பள்ளிக்கூட ஆசிரியை. 
இத்தாலியில மன்னர் ஆட்சி ஒழிஞ்சி, மக்கள் ஆட்சி மலரணும்னு முசோலினியோட அப்பா, வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் டீக்கடை அரசியல் பேசிட்டிருப்பாரு. அவரைப் பார்த்து, முசோலினிக்கும் சின்ன வயசிலயே அரசியல் ஆசை வந்துட்டுது. பள்ளிப் படிப்பை முடிச்சதும், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினாரு. நல்லா பேசவும் எழுதவும் தெரிஞ்ச முசோலினிக்கு லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ், ஆங்கிலம் 
ஆகிய மொழிகளும் தெரியும். 

பசங்களுக்கு பாடம் நடத்திட்டிருந்த முசோலினிக்கு அந்த வேலை கொஞ்ச நாள்லயே போரடிச்சிட்டுது. அதனால அதை விட்டுட்டு, ராணுவத்துல சேர்ந்து கொஞ்ச காலம் வேலைபார்த்தாரு. அதுவும் போரடிக்க, ஒரு பத்திரிகையில வேலைக்குச் சேர்ந்தாரு. பத்திரிகையில அவர் எழுதிக கட்டுரைகள் பெரிய பரபரப்பை உண்டாக்கிச்சு. அவர் எழுதிய ஒரு கட்டுரைக்காக, ஓராண்டு ஜெயில் தண்டனை கூட  அனுபவிச்சாரு. இந்த காலக்கட்டதுத்துல 1914-ம் ஆண்டுல முதலாம் உலகப் போர் மூண்டுச்சு. அப்போ.. மறுபடியும் முசோலினி ராணுவத்துல சேர்ந்தாரு. இதே காலக்கட்டத்துலதான் ஜெர்மனியில் ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தாருங்கறது குறிப்பிடத்தக்க விஷயம். 

அப்புறம்.. 1939-ம் ஆண்டு ரெண்டாம் உலகப் போர் மூண்டது. ஹிட்லரும், முசோலினியும் ஒரணியில் நின்னு நேச நாடுகளை எதிர்த்தாங்க. முதல்ல இவங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைச்சது. அப்புறம் போரின் போக்கு மாறி ஹிட்லருக்கும், முசோலினிக்கு தோல்விகள் தொடர்ந்துச்சு. போரில் தோற்றபிறகு ஒரு வேனில் ஏறி எல்லையை கடந்து தப்பிக்க முசோலினி முயற்சி பண்ணாரு. கூடவே தனது காதலி கிளாரா பெட்டாசியையும் கூட்டிட்டு போனாரு. 

1945, ஏப்ரல் 26 அதிகாலையில் எல்லையை கடக்க முயன்றப்போ, புரட்சிப்படை அவங்களை மடங்கிடுச்சு. முசோலினியை அடையாளம் கண்டுக்கிட்ட அவங்க, காதலியோடு சேர்த்து அவரை கீழே இறக்கினாங்க. முடிவு நெருங்கிட்டதை உணர்ந்த முசோலினி, அவங்க முன்னாடி மண்டியிட்டு, 'என்னை கொன்னுடாதீங்க'ன்னு கெஞ்ச ஆரம்பிச்சாரு. அப்போ பேண்ட்லயே அவரு 'ஒண்ணுக்கு' போயிட்டாராம். 

ஆனா.. அவர் மீது இரக்கம் காட்டாத அவங்க, துப்பாக்கியால முசோலினியையும், அவரோட காதலியையும் சல்லடையாக துளைச்சி, அவங்க உடலை மிலான் நகரின் நடுவீதியில போட்டுட்டாங்க. அந்த உடல்கள் மேல எல்லாரும் காறி துப்புயும், சிறுநீர் கழிச்சும் அவமானப்படுத்தினாங்க. அப்புறம் அவங்க உடல்களை ஒரு கம்பத்துல தலைக்கீழா கட்டி தொங்கவிட்டுட்டு போயிட்டாங்க. 

சர்வாதிகாரிகளோட கடைசி காலம் மிகவும் கொடூரமானதாவே இருக்கும்ங்கறதுக்கு முசோலினி ஒரு உதாரணம். 

(வரலாற்று நாயகர்களை பத்தி இந்த மாதிரி குட்டி குட்டியா எழுதணும்னு ஆசை. புடிச்சுருந்தா சொல்லுங்க.. )

3 comments:

  1. nalla thakaval..!

    thodarungal....

    ReplyDelete
  2. நல்லா இருக்குது தாஸ்! தொடர்ந்து எழுதுங்க. இதே முசோலினி மேட்டரை கொஞ்சம் ஹ்யூமரஸா எழுதிப் பாத்தா என்னன்னு ஒரு (விபரீத) ஆசை வருது எனக்கு. எழுதினா அவசியம் சொல்றேன். நன்றி.

    ReplyDelete
  3. இதே போல் பல தகவல்களை தொடர வாழ்த்துக்கள்... Followers ஆகி விட்டேன்... பால கணேஷ் அவர்களும் முசோலினியைப் பற்றி சமீபத்திய பதிவு எழுதி இருந்தார்...

    வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்... (http://blogintamil.blogspot.in/2013/02/Thanks-you-all.html)

    ReplyDelete