Wednesday 20 March 2013

போப் முதலாம் பிரான்சிஸ்



கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதகுருவாக (போப்) அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக் லியோ தேர்வு செய்யப்பட்டு, 'முதலாம் பிரான்சிஸ்'ங்கற பெயரோட 266 வது போப்பா கடந்த 19-ம் தேதி பதவி ஏற்றார்.

உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது. வாடிகன் நகரத்தில் உள்ள சிஸ்டன் தேவாலயத்தில், 115 கார்டினல்கள் கூடி ரகசிய ஓட்டு பதிவை நடத்தினார்கள்.இந்த தேர்தலில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த 76 வயதான ஐ£ர்ஜ் மரியோ பெர்கோக் லியோ புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார். தேர்வு 

போப்பாண்டவரா தேர்வு செய்யப்படுபவர்கள், தங்கள் இயற்பெயரை மாற்றி புதிய பெயரை சூட்டிக்கொள்வது வழக்கம் அதன்படி புதிய போப் தனது பெயராக பிரான்சிஸ் என்பதை தேர்வு செய்துள்ளார். ஏழைகளை நேசித்த புனித பிரான்சிஸ் அசிசி நினைவாகவே அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தா சொல்லியிருக்காரு. 12-13ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் அஸிஸி பகுதியில் வாழ்ந்த புனித பிரான்ஸிஸ், ஏழைகளிடம் மிகுந்த அன்பு காட்டியவர். அமைதியின் பிரதிநிதியாக விளங்கியவர். சக குருவான பிரேஸிலைச் சேர்ந்த என் நண்பர், நான் போப்பாக தேர்வானதும், ஏழைகளை மறந்து விடாதே'ன்னு சொன்னாரு, அப்போ, உடனடியா புனித பிரான்சிஸ்தான் எனக்கு நினைவுக்கு வந்தார். அதனால அந்த பேரை தேர்வு செய்தேன் என்று கூறியுருக்கிறார்.   

இதுவரை இருந்த போப்புகளுக்குப் பின்னால, 2-ம் போப் ஜான் பால், 16-ம் பெனடிக்ட்'னு ஒரு எண் இருக்கும். ஆனா தற்போது தேர்வாகியிருக்கிற புது போப்புக்கு அந்த மாதிரி எண் இருக்காது. ஆனாலும் அவர் முதலாம் பிரான்சிஸ்னு அழைக்கப்படுவார். 

போப் முதலாம் பிரான்சிஸ் ஐரோப்பியர் அல்லாத முதல் போப்னு சொல்றாங்க. லத்தீன் அமெரிக்கா நாட்டிலேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காரு. ஆனாலும், அதுல உண்மையில்லை..8-ம் நூற்றாண்டுல, சிரிய நாட்டைச் சேர்ந்தவரு போப்பா இருந்திருக்காருன்னு சொல்றாங்க. அவர் பெயர் போப் 3-ம் புனித கிரகெரி.இவரு கி.பி. 731 முதல் 741 வரை போப்பாக இருந்தாரு. அதேபோல பெத்லேகம், ஜெருசலேம், லிபியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கூட இதுக்கு முன்னாடி போப்பா இருந்திருக்காங்க.   

புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், அர்ஜெண்டினா நாட்டின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் நகரில் மேரியோ ஜோஸ்-ரெஜினா மேரியோ தம்பதிக்கு 5 பிள்ளைகளில் ஒருவராக 1936-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி பிறந்தாரு. ரசாயனத்தில் முதுநிலை பட்டம் பெற்றவரு. பின்னர் இறையியல் கல்வி பயின்று இறையியல் பட்டம் பெற்றிருக்காரு. 

1969-ம் ஆண்டு மதகுருவாக திருநிலைப்படுத்தப்பட்டாரு. 1998-ம் ஆண்டு பியூனஸ் அயர்ஸ் ஆர்ச் பிஷப் ஆனார். 2001-ம் ஆண்டு கர்தினால் ஆக உயர்ந்தாரு.

 கடந்த முறை போப் 16-ம் பெனடிக்ட் தேர்வு செய்யப்பட்டபோது, இவருக்கு இரண்டாவது இடம் கிடைச்சது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் பெனடிக்டுக்கும் போட்டி கடுமையா இருந்தப்போ, தனக்கு வாக்களிக்க வேண்டாம்னு கார்டினல்களை அவரு கேட்டுக்கிட்டாராம். 

இவரு ஸ்பானிஷ், இத்தாலிய மொழி மற்றும் ஜெர்மானிய மொழிகளில் சரளமாகப் பேசுவாரு. அவரது இளம்பருவத்தில் நோய்தொற்று ஏற்பட்டு ஒரு நுரையீரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகவும், இப்போ அவரு ஒரேயொரு நுரையீரலில் உயிர் வாழ்வதாக சொல்லப்படுது.

மேலும், மக்களின் போப்பாக பார்க்கப்படுகிறாரு. காராணம், இவர் சாதாரண மக்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவரு, எளிமையானவர்னு சொல்றாங்க. குறிப்பா அர்ஜென்டினாவில் இவரை ரொம்பவும் புகழ்ந்து தள்ளறாங்க. டவுன் பஸ்லதான் பயணம் செய்வாராம். தனக்கான சாப்பாட்டை அவரே சமைச்சுக்குவாராம். ஆர்ச் பிஷப்பா இருந்தப்போ, மாளிகையில வசிக்காம சாதாரண வீட்டுலதா குடியிருந்தாராம். 

முந்தைய போப்புகளைப் போலவே இவரும் அபார்ஷன், ஓரினச் சேர்க்கைத் திருமணம் ஆகியவற்றுக்கு எதிரானவர்னு சொல்றாங்க. அபார்ஷன் சட்டம் தொடர்பாக அர்ஜென்டினா அதிபர் கூடவே மோதியிருக்காராம். 

புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், அங்கு குழுமியிருந்த மக்களுக்கு ஆசி வழங்கி உரையாற்றிய போப் முதலாம் பிரான்சிஸ், 'உலக அமைதிக்காகவும், சகோதரத்துவம் தழைக்கவும் பிரார்த்தனை செய்வதாகவும், உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவ வேண்டும்'ன சொன்னாரு. 


புதிய போப் தேர்வு செய்யப்படுவது எப்படி ?

"கான்கிளேவ்' எனப்படும் கார்டினல்களின் கூட்டத்தின் மூலம், புதிய போப் தேர்வு செய்யப்படுகிறார். ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராக, புனிதமாக போப் மதிக்கப்படுகிறார். அவரை தேர்வு செய்யும் முறை பழைமையானது. இந்த முறையை, 1274ம் ஆண்டு போப் பத்தாம் கிரிகோரி என்பவர் தோற்றுவித்தார். போப்பாக இருப்பவர் இறந்தாலோ, பதவி விலகினாலோ அந்த இடம் காலியாகிவிடும். அடுத்தவரை தேர்வு செய்யும் வரை, அந்த இடம் "வெற்று அரியணை' என அழைக்கப்படும். இக்காலகட்டத்தில் புதிய போப்பை தேர்வு செய்ய, "கான்கிளேவ்' கூட்டப்படும். உலகம் முழுவதிலும் உள்ள கார்டினல்களுக்கு, அழைப்பு அனுப்பப்படும். ஓட்டளிக்க ஒன்றுகூடும் கார்டினல்களின் வயது 80க்குள் இருக்க வேண்டும். போப் தேர்தலில், வேட்பாளர் பெயர் முன்னரே அறிவிக்கப்பட மாட்டாது. வாடிகனில் ரகசியமாக சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடும் "கான்கிளேவ்' கூட்டத்தில், பிடித்தவருக்கு கார்டினல்கள் ஓட்டளிப்பர். மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறுபவர் புதிய போப் ஆகலாம். ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றவரிடம் கருத்து கேட்கப்படும். அவர் ஒத்துக்கொண்டால் போப்பாக தேர்தெடுக்கப்படுவார். புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டால், சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைபோக்கி வழியே வெண்புகை வெளியிடப்படும். ஒருவருக்கு பெரும் பான்மை கிடைக்காவிட்டாலோ, தேர்வு செய்யப்பட்டவர் பதவியை மறுத்தாலோ கரும்புகை வெளியிடப்படும். "கான்கிளேவ்' கூட்டம் நடக்கும் போது, சிஸ்டைன் சிற்றாலயத்தில் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்படும். புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும்வரை இக்கட்டுப்பாடு இருக்கும். மூன்று நாட்களுக்குள் முடிவு எட்டப்படாவிட்டால், ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் ஓட்டெடுப்பு நடக்கும். ஒருவர் பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று போப் ஆண்டவராக சம்மதம் தெரிவித்தால், தனது பெயரை தானே தேர்வு செய்வார். போப் ஆன பின், பெயரை மாற்றிக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. பின் போப்புக்கான பாரம்பரிய ஆடைகளுடன், வாடிகன் தேவாலயத்தில் தோன்றி முதல் செய்தியை மக்களுக்கு வழங்குவார். போப் ஆண்டவர்: ஏசு கிறிஸ்து விண்ணுலகம் செல்லும் முன், கிறிஸ்தவர்களை வழிநடத்தும் பொறுப்பை முதன்மை சீடர் புனித பீட்டரிடம் ஒப்படைத்தார். புனித பீட்டரின் கல்லறையின் மீதுதான், வாடிகன் தேவாலயம் அமைந்துள்ளது. புனித பீட்டரிடம் ஏசு கிறஸ்து ஒப்படைத்த பணியை, அவரது வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோம் நகர ஆயர்கள் செய்து வந்தனர். இவர்களில் முதன்மையானவரே போப் என அழைக்கப்படுகிறார்.



போப் தேர்வு - தேதி வாரியாக


11.2.2013: போப் 16-ம் பெனடிக்ட் தனது முதுமை காரணமாகவும், பணிச்சுமையாலும் பதவியை தொடர முடியவில்லை எனவும், பதவி விலக விரும்புவதாகவும் கூறினார். 

28.2.2013: போப் 16-ம் பெனடிக்ட் பதவியிலிருந்து வெளியேறினார். வாடிகன் நகரில் இருந்தும் புறப்பட்டார். 

5.3.2013: போப் 16-ம் பெனடிக்ட்டுக்கு பதில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியானது. 

8.3.2013: போப் ஆண்டவரை தேர்வு செய்யும் 115 கர்தினால்களுக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதில், 12-ந்தேதி கூட்டம் நடைபெறும் என்றும், அதில் பங்கேற்று புதிய போப்பை தேர்வு செய்யும்படியும் கூறப்பட்டிருந்தது. 

12.3.2013: புதிய போப் தேர்வு கூட்டம் புனித பீட்டர் தேவாலயத்தின் சிஸ்டைன் சேப்பலில் தொடங்கியது. அன்று முடிவு எட்டப்படவில்லை. 

13.3.2013: காலையில் நடந்த கூட்டத்தில் முடிவு ஏற்படாததால் மாலையில் மீண்டும் கூட்டம் நடந்தது. அன்று இரவு 11.38 மணிக்கு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார். 

13.3.2013: இரவு 12.10-க்கு சிஸ்டைன் சேப்பலின் புகை போக்கி மூலம் புதிய போப் தேர்வு முடிவு வெண்புகை மூலம் அறிவிக்கப்பட்டது.

13.3.2013: இரவு 12.45 மணிக்கு கர்தினால் ஜார்ஜ் மரியோ போப் ஆண்டவருக்கான புதிய உடைகளை அணிந்தார். 

13.3.2013: இரவு 12.55 புதிய போப் ஆண்டவர் ஜார்ஜ் மரியோ வாடிகன் பீட்டர் தேவாலய பால்கனியில் தோன்றினார். அவரை கர்தினால்கள் பல்கலைக்கழக டீன் பொதுமக்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். 

அதன் பின்பு புதிய போப் ஜார்ஜ் மரியோ வாடிகன் தேவாலயம் முன்பு கூடி நின்ற மக்களுக்கு ஆசி வழங்கினார்.

வாடிகன் நகரம் - ஒரு சிறு குறிப்பு 

உலகிலேயே மிகச்சிறிய நாடு, மிகப்பெரிய அரண்மனையை கொண்டது, மிகப்பெரிய தேவாலயத்தைக் கொண்டது போன்ற பெருமைகளை பெற்றது வாடிகன் நகரம்.

11.2.1929 ஆம் தேதி வாட்ரான் ஒப்பந்தப்படி வாடிகன் நகரம் தனிநாடாக திகழ்கிறது. உலகிலேயே மிகச் சிறிய நாடான வாடிகன் 0.44 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது ஆகும்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதகுருவான  போப் ஆண்டவர் வாடிகனிலிருந்து தனியாட்சி செலுத்தி வருகிறார்.

இந்நகரம், இத்தாலி நாட்டின் ரோமின் ஒரு பகுதியாக இருந்தாலும், வாடிகன் ரோமுக்கோ, இத்தாலிக்கோ எந்த வகையிலும் கட்டுப்பட்டதில்லை.

வாடிகனின் மொத்த மக்கள் தொகையே சுமார் ஆயிரம் பேர் தான். போப்பின் அலுவலகத்தில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமே நாட்டின் குடியுரிமை வழங்கப்படுகிறது. 30 வருடமாக இங்கேயே இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாரும் அங்கு குடியுரிமை பெற்றுவிட முடியாது. புனித பணி என்பதால், வாடிகனுக்கு ராணுவமோ, பிற நாடுகளுடன் வணிகமோ கிடையாது.

இந்நாட்டைச் சுற்றி, கற்களால் ஆன சுவர்கள் உள்ளன. வாடிகனுக்குள் நுழைய ஏதாவது ஒரு கேட் வழியாகத்தான் உள்ளே போக முடியும். இந்த வாயில்களை காக்கும் பொறுப்பு, சுவிட்சர்லாந்தில் இருந்து வந்து இங்கேயே தங்கிவிட்ட காவலாளிகளின் பரம்பரையினருக்கு மட்டுமே உண்டு. இந்தப் பணியை,அவர்கள் வாழையடி வாழையாக செய்து வருகின்றனர்.

வாடிகனின் வருமானம் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையின் வாயிலாகவே வருகிறது. தினமும், லட்சக்கணக்கில் டாலர்கள் கொட்டோ கொட்டென்று கொட்டி அந்நாட்டின் கஜானாவை நிரப்புகிறது. உலகிலேயே காணிக்கை அதிகமாக வரும் இடம் வாடிகன். இரண்டாம் இடம் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில்.


போப்பின் ஆலோசகர்கள் கார்டினல்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வெவ்வேறு நாடுகளில் வாழும் இவர்கள்தான் போப்பின் அடுத்த வாரிசை தேர்ந்தெடுப்பார்கள். 

வாடிகனில் அமைந்துள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயம் தான், உலகிலேயே மிகப்பெரிய தேவாலயமாகும். இதன் விதானம் எனப்படும் மேற்கூரை 138 மீட்டர் உயரம் கொண்டது. பொறியாளர்கள், மின்சார வேலைப்பார்ப்பவர்கள், விதானத்தில் மேலே ஏறுபவர்கள் என்று இந்த விதானத்திற்கு மட்டும் நிரந்தரமாக 70 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் வேலை விதானத்தின் மேலே ஏறி, தேவைப்படும் போது, ஜன்னல்களை திறக்க வேண்டும். இல்லையெனில், மூட வேண்டும். பழுதுபார்க்க வேண்டும். விளக்குகளை பொருத்த வேண்டும். இதுதான் இவர்களது பணி. 5 ஆயிரம் விளக்குகளும், 1000 தீவர்த்திகளும் கொண்டு இந்த விதானம் அலங்கரிக்கப்படும்.

இந்த தேவாலயத்தின் முன்னால், ஒரு லட்சம் பேர் கூடுவதற்கான மிகப்பெரிய முற்றம் உள்ளது. மக்களை ஆசீர்வதிப்பதற்காக, போப் ஆண்டவர், பால்கனியில் தோன்றும்போது, முற்றம் நிரம்பி வழியும்.
இந்த பால்கனியில் இருந்து பார்த்தால், நாட்டின் அனைத்துப் பகுதியும் தெளிவாக தெரியும்.

இந்த தேவாலயம் இயேசு கிறிஸ்துவின் சீடர் புனித பீட்டரின் கல்லறையின் மேல் கட்டப்பட்டதாகும்.

இந்த தேவாலயம், நான்காம் நுற்றாண்டில் மரத்தால் கட்டப்பட்டதாகும். ஆயிரம் ஆண்டுகள் கழித்து இது அழியத்தொடங்கியது. அந்த சமயத்தில் மறுபடியும் பிரம்மாண்டமான ஒரு தேவாலயமாக கட்டத்தொடங்கினார்கள். இதனை கட்டி முடிக்க 150 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. கி.பி. 1453 ல் தொடங்கப்பட்ட கட்டிடப்பணி, கி.பி.1609 ஆம் ஆண்டில்தான் நிறைவடைந்தது.




1 comment:

  1. அட... இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன்னு சரித்திரத்துல படிச்சிருக்கேன். அதுமாதிரி இவர் முதலாம் பிரான்சிஸ்-ஆ? போப்பாண்டவர் பத்தியும், வாடிகன் சிட்டி பத்தியும் ஓரளவு தெரியும்னாலும், எப்படி போப்பாண்டவர் தேர்வு செய்யப்படறார்ங்கறதும், போப்களின் பட்டியலும் எனக்கு புதிய விஷயங்கள். விரிவாக ஆவணம் போல பதிவிட்டு அறியத் தந்தமைக்கு நன்றிகள் தாஸ்!

    ReplyDelete