Wednesday 26 June 2013

முதலிடம்



தற்கொலை சாவு அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்துல இருக்காம். எத்தனை வேதனையான செய்தி இது..?

தேசிய குற்றப்பிரிவு ஆவணத்தின் அறிக்கையின்படி 2012ம் ஆண்டு இந்திய அளவுள தற்கொலை செஞ்சுக்கிட்டவங்கள்ல தென் மாநிலங்களைச் சேர்ந்தவங்கதான் அதிகம்னு தெரிவிக்கப்பட்டிருக்கு.  காதல், தேர்வில் தோல்வி போன்ற காரணங்களால தமிழ்நாட்டுல அதிக அளவுல தற்கொலைச் சாவுகள் நடந்திருக்காம். கடந்த சில ஆண்டுகளாவே தமிழகம் இந்த பெருமையை(?) தக்க வெச்சிருக்காம். 
2012ம் ஆண்டு மட்டும் 12.5 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் தற்கொலை மூலம் மரணத்தை தழுவிருக்காங்க. 


மெட்ரோ நகரங்கள்ல சென்னையில மட்டும் கடந்த ஆண்டு 2 ஆயிரத்த 183 பேர் தற்கொலை செய்துக்கிட்டிருக்காங்க. இதுக்கு அடுத்தபடியா, பெங்களூருவில் ஆயிரத்து 989 பேரும் தற்கொலை செய்துக்கிட்டிருக்காங்க.  கொண்டுள்ளனர். வறுமை, வேலையின்மை போன்றவைகளால  ஏற்படற மனஅழுத்தமே, பெரும்பாலாவங்களை தற்கொலைக்கு த தூண்டறதா சொல்றாங்க.  கடந்த 2011ம் ஆண்டு இந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டவங்களோட எண்ணிக்கை 41 ஆக இருந்துச்சு. இது 2012ல் 176 ஆக உயர்ந்திருக்கு.

கடந்த 2012ம் ஆண்டு நாடு முழுக்க 14 ஆயிரத்து 151 முதியவர்கள், சிறுவர்கள் தற்கொலை செய்துக்கிட்டாங்களாம்.  முதியவர்கள் தற்கொலையிலும் தமிழகம்தான் முதலிடமாம்.  எய்ட்ஸ், தீராத நோய், வலி போன்ற பிரச்சினைகளால் 25.6 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துக்கிட்டாங்க.  இந்த காரணங்களுக்காக, தமிழ்நாட்டில் 20.8 சதவீதம் பேர் தற்கொலைச் சாவை நாடியிருக்காங்க.  காதல் தோல்வி, பரிட்சையில் பெயில்  இந்த காரணங்களால அதிக அளவுல தற்கொலை முடிவினை தேர்ந்தெடுத்திருக்காங்க. குடும்பப் பிரச்சினையில் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்துக்கிட்டவங்க. 99 பேர். இதுல 47 பேர் பெண்கள்.

தற்கொலையை கோழை எடுக்கற தைரியமான முடிவுன்னு சொல்லுவாங்க.. இது எந்த அர்த்தத்துல சொல்லப்பட்டது தெரியலை. ஆனா.. எந்த விதத்துல பாத்தாலும் இது தப்பான முடிவு. தற்கொலை சாவுகளை தடுக்க அரசாங்கமும், சமுக ஆர்வலர்களும் ஓரணியில சேரணும். 


2 comments:

  1. அடடா.... இதிலேயா முதலிடம் பிடிக்க வேண்டும்!.... :(

    ReplyDelete
  2. பரிதாபம்! தற்‌கொலை செய்யறதுன்னு முடிவெடுத்துட்டா, அதை உடனே செயல்படுத்தாம கொஞ்சம் தள்ளிப் போட்டா பலர் மனசு மாறிடுவாங்கன்றதுதான் நிஜம். எல்லாம் கணநேர அவசரம்தான்!

    ReplyDelete