Thursday 26 July 2012

ஒர் அதிர்ச்சி தகவல்



     வாழ்க்கையில் தோல்வியும், விரக்தியும் ஏற்படும்போது, அதிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்று சரித்திரம் படைக்கிறவர்கள் ஒரு ரகம். தோல்விகளை சந்திக்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு செல்பவர்கள் ஒரு ரகம். 

        இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில், கடந்த 2010ம் ஆண்டில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேரும், 2011ம் ஆண்டில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 585 பேரும் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டுள்ளதாக கூறுகிறது அந்த புள்ளி விவரம். 

        நாட்டில் தற்கொலை மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலம் மேற்கு வங்கம். இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. முறையே மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.  பெருநகரங்களை பொருத்தவரை சென்னை முதலிடத்தில் உள்ளது. பெங்களுரு, டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

 அதிக அளவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஆண்கள். மேலும், தற்கொலை செய்துகொள்பவர்களில் 5 பேரில் ஒருவர் குடும்பத்தலைவிகளாம். பெரும்பாலானோர், சமூக, பொருளாதார காரணங்களாலேயே தற்கொலை முடிவை நாடுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 


3 comments:

  1. உண்மையில் அதிர்ச்சி தகவல்தான்....

    ReplyDelete
  2. அதிர்ச்சியான தகவல்கள் தான்....

    ReplyDelete
  3. romapa mosam....

    tharkolaikal theervaakumaaa....!?

    ReplyDelete