Friday 3 August 2012

இந்திய சினிமா 100 - 3




** சினிமாவுக்காக வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை 'மூவி மிரர்' இந்த பத்திரிகையை 1927ம் ஆண்டு எஸ்.கே. வாசன் என்பவர் தொடங்கினாரு. தமிழ்ல வெளிவந்த முதல் சினிமா பத்திரிகை 'சினிமா உலகம்'. இதை 1935ம் ஆண்டு பி.எஸ். செட்டியார் என்பவர் வெளியிட்டாரு. 

** தென்னிந்திய மொழியில் 'டப்பிங்' செய்யப்பட்ட முதல் படம் 'அரிச்சந்திரா' இதை 1943ம் ஆண்டு தயாரிச்சவரு ஏவி.எம். 

** இந்தியாவுக்குள்ள முதல் முதலா காட்டப்பட்ட முதல் மௌனப்படம் 'ஏசுவின் வாழ்க்கை'. 'டூபாண்ட்'ங்கற பிரெஞ்சுக்காரர் 1896ம் ஆண்டு மும்பையில பொதுமக்களுக்கு போட்டு காட்டினாரு. 

** இந்திய சினிமாவுல முதன் முதலா கதாநாயகியா நடிச்சது ஒரு சிறுவன். 'சோலங்கி' என்ற அந்த சிறுவன் 'ராஜா அரிச்சந்திரா' படத்துல பெண் வேஷம் போட்டு, 'தமயந்தி' கதாபாத்திரத்துல நடிச்சான். உண்மையான முதல் கதாநாயகி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கமலா'ங்கற பெண்மணிதான். 1913ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே தயாரிச்ச 'பாஸ்மாசூர் மோகினி'ங்கற படத்துல அவங்க முக்கிய வேடத்துல நடிச்சாங்க. 

** ஆரம்பகால சினிமா படங்கள் ஊமைப்படங்களாவே வந்திச்சுன்னு நமக்குத் தெரியும். பிறகு பேசும் படங்கள் வந்தன. பேசும் சினிமாக்கள் வந்த பிறகும் ஊமைப்படங்கள் வந்தா எப்படி இருக்கும்?
இப்படி உருவான முதல்படம் 'இங்கீத்'ங்கற பெங்காலி படம். 1961ம் ஆண்டு வெளியான இந்த படத்துல வசனமே கிடையாது. பின்னணி இசை மட்டும்தான் இருந்திச்சு. அதுக்கு அப்புறம் 1987ம் ஆண்டு சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்துல பேசாத படம் வெளி வந்துச்சு. தமிழ்ல 'பேசும் படம்', தெலுங்குல 'புஷ்பக் விமானா', இந்தில,'புஷ்பக்'ன்னு வெவ்வேற பெயர்கள்ல வெளியாச்சு. இந்த படத்துல கதாநாயகனா நடிச்சவரு நம்ம கமல்ஹாசன். 

** சினிமாவை செட்டுகள் ஆட்டிப்படைச்ச காலத்துல ஒரு செட் கூட போடாம எடுக்கப்பட்ட படம், ' ஆஸ்மான் மஹால்'ங்கற படம். இது 1965ம் ஆண்டு வெளியாச்சு. 

** இயக்குநர் மணிரத்ம் எடுத்த 'தில்சே' (தமிழ்ல 'உயிரே') படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. பிரிட்டன்ல 'டாப் டென்' படங்கள்ல இடம்பிடிச்ச முதல் இந்திய திரைப்படம் இதுதான். 

** உலகத்துலயே அதிக படங்கள்ல கதாநாயகனா நடிச்ச நடிகர் பிரேம் நசீர். அதுவுமில்லாம, ஒரே ஆண்டுல அதிக படங்களிலும் நடிச்சி சாதனை படைச்சிருக்காரு. 1979ம் ஆண்டுல மட்டும் இவரு நடிச்ச 39 படங்கள் வெளியாச்சு. உலக அளவிலான இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கலை. 

** ஆரம்ப காலத்துல வெளியான சினிமாக்கள் பெண்கள் நடிக்கலை. ஆண்கள்தான் பெண் வேஷம் போட்டு நடிச்சாங்க. அதுக்கு அப்புறம் பெண்களும் நடிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, பெண் கதாபாத்திரமே இல்லாத ஒரு படம் வந்திருக்கு. மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்துல மம்முட்டி கதாநாயகனா நடிச்ச 'மதிலுகள்'தான் அந்த படம். இதுல ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை. 

** நடிகை மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் நடிச்சி சாதனை படைச்சிருங்காங்க. அதேபோல சத்தமில்லா வேறொரு சாதனையும் செஞ்சிருக்காங்க. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் கூட நாடகங்களிலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கூட சினிமாவுலயும் நடிச்சிருக்காங்க. அதனால, அதிக முதல்வர்களோட நடிச்ச பெருமை அவங்களுக்கு இருக்கு. அதே மாதிரி, ஏவி.எம். நிறுவனம் தயாரிச்ச படங்கள் பணி புரிஞ்ச அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ஆர். ஆகியோர் முதலமைச்சரா ஆகியிருக்காங்க.  


5 comments:

  1. அடடே... தமிழில் முதல் சினிமா பததிரிகை ஆரம்பிச்சவர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தானா...? ஊமைப்படம். முதல் கதாநாயகின்னு எத்தனை புதுப் புது தகவல்கள்..! அசத்துகின்றன தாஸ். உங்களின் தகவல் பெட்டகத்தைத் திறந்து வைத்து தொடருங்கள் இப்பகிர்வினை. நன்று.

    ReplyDelete
  2. ஸாரி தாஸ்... எஸ்.கே.வாசன்னு எழுதியிருக்கீங்க. கமெண்ட் பொடும் போது சரியா கவனிக்காம எழுதிட்டேன். அவசரத்துல பல்பு வாங்கிட்டேன்.. ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்

      Delete
  3. நல்ல தகவல்கள்... அசத்தறீங்க நண்பரே.

    ReplyDelete
  4. உங்க தொடர்ந்த ஆதரவு தான் இன்னும் நிறைய எழுதணும்னு எனக்கு உந்துதலை தருது. நன்றி சார்.

    ReplyDelete