Sunday 19 August 2012

சென்னைக்கு 373 வயசு




சென்னை யாருக்கும், எப்போதுமே அலுக்காத நகரம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைங்கறதால, அதோட உருமாற்றங்களை ஒரளவு பாத்திருக்கேன். ஆள் நடமாட்டமில்லாத, இதெல்லாம் டெவலப் ஆகவே ஆகாதுன்னு நினைச்ச பல ஏரியாக்கள் நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு மாறியிருக்கு.

ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், தபால் தலைகள் சேகரிக்கற மாதிரி சென்னையை பத்தின வரலாற்றையும், செய்திகளையும் சேகரிக்கறது என்னோட பொழுதுபோக்குகள்ல ஒண்ணு. சென்னை வரலாறுன்னு ஒரு தடியான புத்தகத்தை வாங்கி வெச்சிருக்கேன். இன்னும் முழுசா படிச்சி முடிக்கலை. அசோகமித்திரனோட எழுத்துக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரோட புலிக்கலைஞன் சிறுகதையை மறக்கவே முடியாது. அதோட, ஒரு பார்வையில் சென்னை நகரம்னு அவர் சென்னையைப் பத்தி எழுதின கட்டுரைத் தொகுப்பு ரொம்பவே சுவாரஸ்யமான புத்தகம். 

தி.நகரை பத்தி அவர் எழுதறப்போ, அவர் சென்னைக்கு வந்த புசுல, உஸ்மான் ரோட்டுல நடந்திட்டிருக்கும் போது, மாம்பலம் ரயில் நிலையத்தில ரயில் வர்ற சத்தம் கேட்டதும், ரங்கநாதன் தெருவழியா ஓடிப் போய் ரயிலை பிடிப்பாங்களாம். அப்புறம்.. பசங்க ரங்கநாதன் தெருவுல கிரிக்கெட் விளையாடுவாங்களாம். அப்படியான சூழ்நிலையையை இப்போது கற்பனை செஞ்சு கூட பாக்க முடியாது. ஒரு சாதாரண நாள்ல உஸ்மான் ரோட்டுலேந்து ரங்கநாதன் தெரு வழியா ரயில்நிலையத்துக்கு போறதுக்கு இப்போ குறைஞ்சபட்சம் அரைமணி நேரமாவது ஆகும். திருவிழா நாட்கள் சொல்லவே வேணாம். 

ஆனா.. இன்னமும் அந்த அசாதாரண சூழ்நிலையில ஒரே ஒரு வீடு அங்க இருக்கறதும், மனிதர்கள் அங்கு குடியிருக்கறதும் ஆச்சரியமான விஷயம். அது தவிரவும், பேச்சிலர்கள் தங்கியிருக்கிற மேன்சன்கள் ரங்கநாதன் தெருவில இருக்கறதா கேள்வி பட்டிருக்கேன். பாத்ததில்லை. அந்த தெருவுல மனிதர்கள் வசிக்கிறதை கற்பனை செஞ்சு பார்க்க முடியாத விஷயங்கள்ல ஒண்ணுங்கறது என்னோட தனிப்பட்ட கருத்து. 


பரங்கிமலையில உள்ள தேவாலயத்துக்கு எப்போவாவது போவேன். அங்கேயிருந்து பாத்தா முழு சென்னையையும் பாக்கலாம். ஆரம்பத்துல பாத்ததுக்கும், இப்போ பாக்கறதுக்கும் ரொம்ப வித்தியாசம் தெரியுது. முதல்ல சென்னையில் உயரமான கட்டிடம் எல்.ஐ.சி. கட்டிடம் மட்டும் தனிச்சு தெரியும். அப்புறம் கடலும் தெரியும். அப்புறம் வளைஞ்சி நெளிஞ்சி போற மவுண்ட் ரோடும், அதில எறும்பு ஊர்ந்து வாகனங்கள் போறதும் தெரியும். இப்போ சில மாசங்களுக்கு முன்னால பாத்தப்போ, இந்த காட்சியில நிறையவே மாற்றம். கடல் தெரியலை. ரோடுகளும் தெரியலை. காரணம் பெரிய பெரிய கட்டிடங்கள் முளைச்சி எல்லாத்தையும் மறைச்சிடுச்சி. 

அப்புறம் பசுமையா தெரிஞ்ச பல இடங்கள் நிறம் மாறியிருக்கு. நகரம் முழுக்க ஊசி ஊசியா செல்போன் கோபுரங்கள். புதுசா நடவு செஞ்ச வயல்ல நாற்றுக்கள் குச்சி குச்சியா நிக்குமே அதுமாதிரி தெரியுது. 

சென்னையோட பரபரப்பு ரொம்பவே அலுத்துப் போன ஒண்ணு. சென்னையை விட்டு, ஏதாவது ஒரு கிராமத்துல செட்டிலாகணும் ஆசை. ஆனா.. சென்னையை விட்டு, வேற இடத்துல வசிக்கிறதை கற்பனை செஞ்சு கூட பாக்க முடியலை. ரொம்பவும், பிடிச்ச அதே நேரத்துல பிடிக்காத நகரமும் சென்னைதான். 

சென்னை எல்லா தரப்பு மக்களும் பிழைச்சிருக்க ஏத்த நகரம். ஆனா.. இது வாழறதுக்கு ஏத்த நகரமில்லை. இதுவும் என்னோட தனிப்பட்ட கருத்துதான். 



5 comments:

  1. தாஸ் கடைசி இரண்டு பாராக்கள் மிகமிகச் சரியான கருத்துக்கள். பிழைக்க ஏற்ற நகரமாக இருக்கிறது சென்னை எனக்கு. மனதுக்குகந்த நகரமாக இருக்கிறது மதுரைதான் எனக்கு. பரங்கி மலை மேலிருந்து பார்க்கும் லுக் பற்றி நீங்கள் சொன்னது அருமை. அந்த வியூவில் இப்போது தெரியும் விஷயங்கள் பற்றிச் சொன்னது வேதனை. என்ன செய்ய... விஞ்ஞானத்தை அனுபவிக்க விலை கொடுத்துத்தான் ஆக வேண்டியுள்ளது.

    ReplyDelete