Monday 12 June 2017

சில உளவியல் உண்மைகளும் ஆலோசனைகளும்

சில உளவியல் உண்மைகள்!

1. அதிகம் சிரிப்பவர்கள், தனிமையில் வாடுபவர்கள்.
2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.
3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..
4. அழுகையை அடக்குபவர்கள், மனதால் பலவீனமானவர்கள்.
5. முரட்டுத்தனமாக உண்பவர்கள், மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.
6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள், அப்பாவிகள். மென்மையானவர்கள்.
7. சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள், அன்புக்காக ஏங்குபவர்கள்.

பேச்சு -  உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..
2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
3   மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்..
5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். .
6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
7. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.
8. நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
9. குழந்தைகளோடு பேசும்போதுஅருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10. உங்கள் பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

(வாட்ஆப் வறுவல்)

No comments:

Post a Comment