Wednesday 7 March 2012

தமிழ் திரைப்படங்களுக்கு 8 தேசிய விருதுகள்




2011-ம்  ஆண்டுக்கான 59 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. 'தியோல்' என்ற மராத்தி படத்தில் நடித்த கிரீஷ் குல்கர்னி சிறந்த நடிகராகவும், 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தி டர்ட்டி பிக்சர். இதில் சில்க் ஸ்மிதாவாக, வித்யா பாலன் நடித்திருந்தார் .

தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருதினை பியாரி மொழியில் வெளியான முதல் படமான 'பியாரி'க்கும், மராத்திப் படமான 'தியோலு'க்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது 


சிறந்த இந்திப் படத்துக்கான விருது ஓனிர் இயக்கிய 'ஐ யாம்' படத்துக்குக் கிடைத்துள்ளது.







சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது விமல், இனியா நடித்த 'வாகை சூடவா' தமிழ்ப் படத்துக்குக் கிடைத்துள்ளது.   குழந்தை தொழிலாளர்கள் பற்றிய இந்த படத்தை சற்குணம் இயக்கி இருக்கிறார். 



'அழகர்சாமியின் குதிரை' படம் சிறந்த பொழுது போக்குப் படமாக தேர்வாகியுள்ளது. இதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது.





'ஆரண்ய காண்டம்' படத்துக்கு சிறந்த எடிட்டிங் (பிரவீண் – ஸ்ரீகாந்த்), சிறந்த புதுமுக இயக்குநருக்கான (தியாகராஜன் குமாரராஜா) இந்திராகாந்தி விருதுகள் கிடைத்துள்ளன.



ஷாரூக்கானின் சயின்ஸ் பிக்சன் படமான 'ரா ஒன்'னுக்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்கான விருது கிடைத்துள்ளது.



குறும்பட பிரிவில், நடிகை ரேவதி இயக்கிய ஆங்கிலப்படமான `தி சன் செட்ஸ்' சிறந்த குடும்ப கதையம்சம் கொண்ட படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. இதேபோல் நல்லமுத்து தயாரித்து இயக்கிய `டைகர் டைனாஸ்டி' என்ற படம், சிறந்த சுற்றுச் சூழல் படத்துக்கான விருதை தட்டிச் சென்றது. 



விருதுப் பட்டியல்:


சிறந்த இயக்குநர் : கோவிந்தர் சிங் (அன்னே கோடே தா டான்)
சிறந்த திரைக்கதை: விகாஸ் பேஹல் மற்றும் நிதீஷ் திவாரி (சில்லர் பார்ட்டி)
சிறந்த வசனம்: கிரீஷ் குல்கர்னி (தியோல்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: பார்த்தோ குப்தே (ஸ்டான்லி கா டப்பா)
சிறந்த குழந்தைகள் படம்: சில்லர் பார்ட்டி (இந்தப் படத்தில் நடித்த அனைத்து குழந்தைகளுக்கும் விருது)



சிறந்த பெங்காலி படம்: ரோஞ்சனா ஆமி ஆர் அஷ்போ நா
சிறந்த டோக்ரி படம்: திலேஷ் பாஷியா கோய்
சிறந்த கன்னட படம்: கூர்ம அவதார்



சிறந்த மணிப்புரி படம்: பிஜிகீ மணி
சிறந்த மராத்தி படம்: ஷாலா
சிறந்த பஞ்சாபி படம்: அன்னே கோடே தா டான்



சிறந்த நடன இயக்குநர்: போஸ்கோ மற்றும் சீஸர் (ஜிந்தகி மிலேகி நா தபோரா)



நடுவர் குழுவின் பரிசுக்குரிய படம்: ரோஞ்சனா ஆமி ஆர் அஷ்போ நா



சிறந்த இசை: நீல் தத்தா (ரோஞ்சனா ஆமி ஆர் அஷ்போ நா)



சிறந்த பாடலாசிரியர்: அமிதாப் பட்டாச்சார்யா (ஐ யாம்)



சிறந்த மேக்கப்: விக்ரம் கெயிக்வாட் (பால் கந்தர்வா, தி டர்ட்டி பிக்சர்)



சிறந்த காஸ்ட்யூம்: நீதா லுல்லா (பால் கந்தர்வா, தி டர்ட்டி பிக்சர்)



சிறந்த பாடகர் (பெண்): ரூபா கங்குலி

சிறந்த படம் மற்றும் இயக்குனருக்கு தங்கத்தாமரை விருதுடன் ரொக்கப்பரிசு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும். சிறந்த நடிகர்-நடிகைக்கு வெள்ளித்தாமரை விருதுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது.

2011-ம்  ஆண்டு, விருதுக்கான போட்டியில் பங்கேற்ற படங்களின் எண்ணிக்கை 186    வரும் மே மாதம் 3 -ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் விருதுகளை வழங்குகிறார். 



No comments:

Post a Comment