Monday 19 May 2014

கோழித் தூக்கம் வேண்டாம்

மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தைத் தூங்குவதில் செலவிடுகின்றனர். அதாவது சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது.
ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம். இது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் தூக்கம் மிக அவசியமாகிறது. உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்குப் போதுமான முக்கியத்துவம் அளிக்கும் நாம் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை.
தூங்குகிறேன் என்ற பெயரில் கோழித் தூக்கம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். முறையான தூக்கம் இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் தோன்றும். இந்தப் பரபரப்பில் நல்ல தூக்கத்திற்கு எங்கு நேரம் இருக்கிறது எனச் சொல்வதும் சரிதான் ஆனால் ஒரு நாளில் குறைந்தது ஐந்து மணி நேரமாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும். காலையில் எழும்போது சுறுசுறுப்பை உணர்ந்தால் அதுவே சரியான அளவு தூக்கம்.
இந்தப் பரபரப்பில் நல்ல தூக்கத்திற்கு எங்கு நேரம் இருக்கிறது எனச் சொல்வதும் சரிதான் ஆனால் ஒரு நாளில் குறைந்தது ஐந்து மணி நேரமாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும். காலையில் எழும்போது சுறுசுறுப்பை உணர்ந்தால் அதுவே சரியான அளவு தூக்கம்.

No comments:

Post a Comment