Friday 2 March 2012

சில்லறை பிரச்னை


கூடங்குளம் அணுமின் நிலையம், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பிரச்னைகள் தீர்ந்தாலும் தீர்ந்து விடும், சென்னை மாநகரப் பேருந்தில் நீடிக்கும் சில்லறைப் பிரச்னை தீரவே தீராது போலிருக்கிறது. ஐம்பது பைசா பிரச்னையால் தினசரி பயணிகளுக்கும் கண்டக்டருக்கும் தினசரி சண்டை நடப்பதை பல ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாகம் உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, அனைத்து டிக்கெட்டுக்களும் ரவுண்டாக்கப்பட்டு விட்டன. ஆனாலும், எட்டு ரூபாய் டிக்கெட்டுக்கு பத்து ரூபாய் கொடுத்தாலும், சில்லறைக் கேட்டு வெறுப்பேற்றுகிற கண்டக்டரை என்னவென்று சொல்வது போதிய சில்லறைகளுடன் வருவதுதானே அவர்களது தொழில் தர்மமாக இருக்க முடியும். எப்போதாவது ஒருநாள் பேருந்தில் ஏறுகிற பயணியிடம் சில்லறை கேட்டு சண்டை பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது அண்மையில், திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில், ஓசி டீக்காக, ஒரு கண்டக்டர் தனது பையில் இருந்த சில்லறைகளை டீக்கடைக்காரரிடம் கொடுத்ததை பார்த்தபோது வெறுத்துப்போனேன். 

1 comment:

  1. சில்லறை மொத்தமாகக் கொடுத்து கமிஷன் வாங்கிக் கொள்வது வெகு காலமாக நடந்து வரும் விஷயம் நண்பரே...

    இங்கே தில்லியில் எந்தக் கடைகளிலும் ஐம்பது காசு கொடுத்தால் வாங்கிக் கொள்வதே இல்லை - ஒரு பொருள் 8.50 என்றால், 9 ரூபாய் வாங்கிக் கொள்வார். நீங்களாகவே 8.50 கொடுத்தால் - 50 பைசா செல்லாது எனச் சொல்லிவிடுவார்கள்....

    ReplyDelete