Sunday 18 June 2017

இன்று தந்தையர் தினம்


ஆண்களின் உலகம் தியாகங்களாலும்,வியர்வையாலும் சூழப்பட்டது. குழந்தைகளின் நலனுக்காக தங்கள் ஆயுள் முழுவதையும் அர்ப்பணிப்பவர்கள் தந்தையர் . அவர்களை பெருமைப்படுத்தும் நாள்தான் "சர்வதேச தந்தையர் தினம்". ஆண்டு தோறும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

எப்படி வந்தது 'தந்தையர் தினம்'?

1882-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ வீரரான வில்லியன் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் மற்றும் எல்லன் தம்பதிக்கு மகளாக பிறந்தவர்  சொனாரா ஸ்மார்ட் டோட். அவருக்கு 16 வயதானபோது,  ஆறாவது பிரசவத்திற்கு சென்ற அவரது தாய் எல்லன் மரணமடைந்தார்.

அன்று முதல் மறுமணம் செய்து கொள்ளாமல் தனது ஆறு பிள்ளைகளுக்கும் தாயும், தந்தையுமாக இருந்தவர் வில்லியம் ஜாக்சன். தன் தந்தையின் அர்ப்பணிப்பு உணர்வு சொனாராவை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் 1909-ஆம் ஆண்டு சர்வதேச அன்னையர் தின கொண்டாட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதை அறிந்த  சொனாரா, தன் தந்தையின் தியாகம், அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என வாதிட்டார். தன் தந்தையின் பிறந்தநாள் தந்தையர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என தேவாலயத்தில் ஆவண செய்தார். இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது.

அன்று முதல்  சர்வதேச தந்தையர் தினம்  ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.  1972-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்தார். 

1 comment:

  1. வணக்கம் நண்பரே நான் இதுவரை அறியாத விடயம் இது.

    அறியத் தந்தமைக்கு நன்றியோடு தங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.

    பதிவு ஒருநொடி என் மனதை கலங்க வைத்து விட்டது காரணம் நானும் திரு. வில்லியம் ஜாக்சன் நிலையில் வாழ்பவனே....
    - கில்லர்ஜி

    ReplyDelete