Sunday 4 March 2012

என்னே ஒரு அக்கறை !



              இன்றைய தேதியில், யாராவது ஒருவர் தனக்கு தண்ணியடிக்கிற ( டாஸ்மாக் தண்ணிதாங்க) பழக்கம் இல்லையென்றால், மற்றவர்கள் அவரை ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் பார்க்கிறார்கள். 
   
  'அப்படியா, நிஜமாவா, உண்மையிலேயே இதுவரைக்கும் தண்ணியடிச்சதில்லையா? ' என்று ஒரு டஜன் கேள்விகளுக்கு மேல் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாலும், அரை மனசோடுதான் அதனை நம்புகிறார்கள். 
காலம் அப்படியாகிவிட்டது. 

           திருமணத்திற்கு பெண் தேடும் போது, எந்த மாப்பிள்ளையாவது, தனக்கு வரதட்சணை வேண்டாம் என்று கூறினால், அவனுக்கு பெண் தரமாட்டார்களாம். காரணம், வரதட்சனை வேண்டாம் என்றால், பையனுக்கு ஏதோ குறை இருக்கும் என்று அவர்களாகவே ஒரு கணக்கை போட்டுக்கொள்வது. அதேபோன்று, இப்போது, யாராவது தண்ணியடிக்கவில்லையென்றால், அந்த பையனுக்கு ஏதாவது குறை இருக்கும் என்று நம்பும் காலம் வெகு விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், தண்ணியடிப்பது இப்போது, தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதுபோல ஒரு சாதாரண நிகழ்வாகவும், சமூக அந்தஸ்தாக மாறிவிட்டது. 

                          கல்யாணம், கருமாதி எல்லாவற்றிலும் தண்ணி இருந்தாக வேண்டும். சாதாரண குடிமக்களை சிறந்த 'குடி' மக்களாக்க, கழக அரசுகள் போட்டிப்போட்டுக் கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. நேற்று மாலை செய்தித் தாள் ஒன்றில், டாஸ்மாக்குகளில் சூடான வகை (ஹாட்) சரக்குகளின் விற்பனையை அதிகரிக்க, குளிர் வகை (பீர்) சரக்குகளின் விற்பனையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. 

                                 மக்கள் மீது என்னே ஒரு அக்கறை !


3 comments:

  1. அரசுக்கு வேண்டிய பணத்தினை சேர்க்கத் தானே இந்த அக்கறை..... :(

    ReplyDelete
  2. குடிப்பதை ஒரு குறையாகவே எண்ணாத அளவுக்கு மக்களைப் பழக்கி விட்டார்களே தாஸ்... என்ன செய்ய... இதையெல்லாம் கண்டு பொருமத்தான் முடிகிறது.

    ReplyDelete
  3. அதேபோன்று, இப்போது, யாராவது தண்ணியடிக்கவில்லையென்றால், அந்த பையனுக்கு ஏதாவது குறை இருக்கும் என்று நம்பும் காலம் வெகு விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், தண்ணியடிப்பது இப்போது, தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதுபோல ஒரு சாதாரண நிகழ்வாகவும், சமூக அந்தஸ்தாக மாறிவிட்டது. // உண்மைதாங்க உத்தியோகம் புருஷ லட்சணம் போய் குடி புருஷ லட்சணம் என்றாகி விடும் போல ஆதங்கமான பதிவு . நண்பர் கணேஷ் அவர்களின் மூலம் தங்கள் வலைப்பக்கம் வந்தேன் அருமை முழுவதும் படிக்க முடியவில்லை நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிறேன் .

    ReplyDelete