Thursday, 7 May 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 10

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.
2. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.
3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.
4. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல?
5. பணம் தானேன போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல?
6. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
7. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.
8. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது?
9. கஷ்டம் தான் ஞ் ஆனா முடியும்.
10. நஷ்டம் தான் ஞ் ஆனா மீண்டு வந்திடலாம்.
11. இதில விட்டா அதில எடுத்திட மாட்டேனா?
12. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டேனா?
13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.
14. ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதைப் பார்.
15. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?
16. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?
17. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
19. முடியுமாஞ்ன்னு நினைக்காதே. முடியணும்னு நினை.
20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.
21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.
22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
23. திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
24. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.
25. ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்.
26. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?
27. ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனையை நான் தீர்த்தா போதாதா?
28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
29. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
30. அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?
31. அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.
32. நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?
ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம் ஒன்பது முறை விழுந்தவனுக்கு இன்னொரு பெயர் உண்டு. எட்டு முறை எழுந்தவன் எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.ஒரு கணவனின் புலம்பல்  கவிதை 

மனைவிகளே! காதல் துணைவிகளே!
தாலி கட்டிய நாள் முதலாய் 
எங்கள் சந்தோஷத்துக்கு வேலிகட்டிய மாமியார் பெத்த மகள்களே!
கடவுளின் துகள்களே!,

தந்திரத்தால், தலையணை மந்திரத்தால், 
தொட்டுத் தாலி கட்டிய எங்களை
எந்திரமாகச் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே!

கல்யாணத்துக்கு முன்னால இனிக்க இனிக்கப் பேசினீங்க.
ஆனா, கல்யாணம் ஆனதில் இருந்து தட்டு டம்ளர்களை எடுத்து வீசுறீங்க 
சத்தியமா நினைச்சுப் பார்க்கலை இப்படி ஒரு மாறுதலை 
அதனாலதான் அரசாங்க பாருக்குத் தேடிப் போறோம் ஆறுதலை.

கொஞ்சிப் பேசிய குரல் எங்கே?
கிள்ளி விளையாடிய விரல் எங்கே?
எங்க காதுல பாடின 'சிநேகிதனே... சிநேகிதனே...’ பாட்டு எங்கே?
ரிஷப்சனுக்கு வாங்கின ரேமண்ட்ஸ் கோட் எங்கே?
ஆமா, நேத்து சட்டையில வெச்சிருந்த 100 ரூபாய் நோட்டு எங்கே? 

உங்களை கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ண உதவின 
ஃப்ரெண்ட்ஸ்களையே கட் பண்ணச் சொல்லி ஊட்ட ஆரம்பிக்கிறீங்க பொங்கச்சோறு...
கடைசில எங்க நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சுருங்கிய நட்பு வட்டாரம்
ஆக்கிட்டுத்தான் போடுறீங்க மத்தியான சோறு.

நட்புனா என்ன தெரியுமா ? 
சின்ன பிரச்னைக்குக்கூட செவுத்துல காலைவெச்சு உதைக்கிற குங்ஃபூ இல்லம்மா...
சுமாரா ஆடினாக்கூட 'சூப்பர்’னு மார்க் போடுற குஷ்பூம்மா... குஷ்பூ 
காபி குடிச்சுட்டா 'கப்’பைத் தூக்கி எறியலாம்...
ஆனா, கல்யாணம் பண்ணிட்டோம்னு நட்பைத் தூக்கி எறிய முடியுமா?

ஜனவரி மாசம் ரெடி பண்ணின சாம்பாரை, பிப்ரவரி வரைக்கும் 
ஃப்ரிட்ஜ் என்ற மார்ச்சுவரியில் பாதுகாப்பா வைக்கிறீங்க.
டி.வி, டேப் ரிக்கார்டரைத் தவிர மத்த எல்லாத்தையும் அதுக்குள்ளே திணிக்கிறீங்க. !
ஷாப்பிங் போயி லேட்டானாலோ, சீரியல் சென்ட்டிமென்ட்டுக்கு எமோட்
ஆகிட்டாலோ, உடனே உப்புமா கிண்டிக் குடுக்கிறீங்க பாருங்க..
மக்கழே, வாரம் ஒரு தடவை கிண்டுனாதான் அது உப்புமா..
வருஷம் முழுக்க அதையே கிண்டுறது ரொம்பத் தப்பும்மா !

போருக்குப் போனவன்கூடப் பொழைச்சு வந்திருக்கான்,
ஆனா, பொண்ணுங்ககூட புடவை எடுக்கப் போனவன், 
கூடாரம் கவிழ்ந்து சேதாரமாகிப் போனதாதான் 
பலப் பல வரலாற்று ஆதாரங்கள் சொல்லுது.

பொண்டாட்டிகூட துணியெடுக்க 'அமர்க்களம்’ அஜித் போல போன பல பேரு,
'ஆரம்பம்’ அஜித் போல தலை நரைச்சு வந்த தமாஸு 
ஊரு முழுக்க நிறையவே இருக்கு.

அரசமரம் போல இருக்கும் புருஷ மரங்களின் தேக்கு உடம்பையே 
உதறவைக்கிற அளவு, புருஷனை அதட்டுறதுல பிஹெச்.டி., முடிச்ச நீங்க, கிச்சன்ல
கரப்பான்பூச்சியையும், பாத்ரூம்ல பல்லியையும் பார்த்துட்டுப் 
போடுவீங்க பாருங்க ஒரு சத்தம்....

அதைக் கேக்கிற எங்களுக்கு, ஏதோ விட்டலாச்சார்யா வீட்டுக்குள்ளயே பேய்
வந்த மாதிரி தலைக்கு ஏறும் பித்தம் .!
ஒரு தக்குனூண்டு கரப்பான்பூச்சிக்கே பயந்து 
கணவனைத் துணைக்குக் கூப்பிடுறீங்களே?
நாங்களும்தான் பொண்டாட்டிக்குப் பயப்படுறோம். 
ஆனா, என்னைக்காவது அப்படில்லாம் கத்திக் கூப்பாடு போட்டிருக்கோமா ?

எண்ணெயை விட்டு செஞ்ச பன்னு மேல 
கொஞ்சம் வெண்ணையைத் தடவுன மாதிரி, லைட்டா தொப்பை வந்தாலே,
'உடம்பைக் குறை, வயித்தை மறை’னு, காவடி சிந்து முதல்
கண்ணீர் சிந்து வரை பேச்சா பேசிக் கொல்றீங்க.
இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்... ?
இது என்னம்மா நியாயம் ?
டயட்டாவும் புருஷன்தான் இருக்கணும், 
கொயட்டாவும் புருஷன்தான் இருக்கணுமா ?

ஐ டோன்ட் நோ ஒய்... ஆல் ஹஸ்பண்ட்ஸ் சொல்லிங் பொய்.
இது எதுனாலனு உங்களுக்குப் புரியணுமா ?
நாங்க சொல்ற எல்லா பதில்களுக்கும், நீங்க திருப்பிக் கேள்விகளா கேட்டா,
நாங்க பதிலா சொல்லுவோம்..? பொய்தான் சொல்லுவோம் !
வீட்டுக்கு வந்த மனுஷன், பசி ஏப்பம் விட்டாக்கூட 
பீர் ஏப்பம்னு நினைச்சு மோப்பம் புடிக்கிறது,
'சாப்பாடு போடும்மா’னு கெஞ்சிக் கேட்டாலும், 
ரிமோட்டைத் தூக்கி தலையில அடிக்கிறது,
வாய் திறந்து பேசினாலே நெருப்பா முறைக்கிறது.
வேண்டாம் பேபிம்மா கோவம்,
ஆம்பளைங்க ஆல்வேஸ் பாவம்  !

கல்யாணமோ, காதுகுத்தோ, சீமந்தமோ, சினிமாவோ 
என்னைக்காவது சீக்கிரமா கிளம்பி இருக்கீங்களா ?
எட்டு முழம் ஸாரியை நீங்க பாடில சுத்தறதுக்குள்ள, 
அசோக் லேலண்டு லாரிக்கே பாடி கட்டிடலாம். !
நீங்க மேக்கப் முடிக்கிறதுக்குள்ள, 'இதுவரைக்கும் நீ மந்திரி, இந்த
நிமிஷத்துல இருந்து நீ எந்திரி’னு அம்மா மினிஸ்ட்ரியையே மாத்திடுறாங்க.

கிளியோபாட்ராவுக்கு எதுக்கும்மா த்ரெட்டிங்கு ?
மோனலிசாவுக்கு எதுக்கும்மா ப்ளீச்சிங்கு ?
தகரத்துக்கு ரப்பிங் பாலிஷ் போடுறது லாஜிக்.
தங்கத்துக்கு டால்கம் பவுடர் போடுறதுல என்ன மேஜிக் ?
நீங்கள்லாம் தங்கம்மா தங்கம்.

ஊருக்குப் போற அன்னைக்குத்தான் பல கணவர்கள் பாருக்குப் போறாங்க.
அதைப் புரிஞ்சுக்காம, 'கதவைத் தொறந்து போட்டுத் தூங்காதீங்க...
சிலிண்டரை ஆஃப் பண்ணுங்க, டி.வி சுவிட்சை ஆஃப் பண்ணுங்க’னு மொபைல்லயே குடும்பம் நடத்துறீங்களே..?
முடியலை

# என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...


அப்புறம் ஏன்? 

மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன.
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.
இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக, எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள்? மனித பிறப்பு மிக .அ£¤ய பிறப்பு. வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வதுதானே சிறப்பு? கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான் அதனால கொலை வெறி ஆகாம படிங்க..

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயங்காலம் வேலை முடிச்சு, காட்டு வழியா பைக்ல வீட்டுக்கு போய்க்கிட்டு இருந்தான்.  அப்ப திடீர்னு  பைக் பஞ்சர் ஆய்டுச்சு. உடனே பக்கத்துல பார்த்தான். தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது. உடனே அங்க ஏதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கப் போனான்.

அங்கே இருந்த ஒரு துறவி, தம்பி நேரமாயிடுச்சு.. இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணிட்டு போகணுமா? பேசாம இங்யே ராத்தி£¤ தங்கிட்டு காலைல போங்கன்னு சொன்னாரு. இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான். அங்கேயே சாப்பிட்டுட்டு படுத்துட்டான். நள்ளிரவுல மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம் .ஆனா ஒருத்தரும் எழுந்து என்னனு பார்க்கலை. அதனால அவனும் எந்து பாக்காம அப்படியே படுத்துட்டான். 

மறுநாள் காலைல வண்டிய சரி பண்ணிட்டு போகும் போது, அந்த சத்ததுக்கான காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான். ஆனா அந்த துறவி, அதை உன்கிட்ட சொல்லக்கூடாது, நீ போகலாம் அப்படின்னுட்டாரு.  சா¤ன்னு இவனும் புறப்பட்டு வந்துட்டான். ஒரு வருடம் கழிச்சு அதே வழியா வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது. அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது .

இவனும் மறு நாள்காரணம் கேட்டான் .ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார். மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான். அவர் அப்பவும் மறுத்தார் .உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு. ஒரு தடவைக் கூட காரணத்தை சொல்ல மாட்டங்குறீங்க. ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு நீயும் என்னமாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் .

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாக வந்துட்டான். வந்ததும் அவரு இவனை தவம் பண்ண சொன்னார். இவனும் பண்ணினான் ஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ திற. அங்கதான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவை  காண்பிச்சார் .

உடனே இவனும் தொறந்தான்.அங்க இன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி. அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த சாவி தருவேன்னு துறவி சொன்னார். இவனும் கண்டு பிடிச்சான்அடுத்த சாவியும் தந்தார் .இவன் தொறந்தான் . அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .
ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான் ... அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகனும்.

( பாவி பயலுக எனக்கும் இப்படிதாங்க அனுப்புனாங்க )

No comments:

Post a Comment