Sunday 10 May 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 11


வரம் 

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்து, “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்.

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா, “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகி, வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?” ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம “குப்புமி” “குப்புமி” “குப்புமி”ன்னு சொன்னானாம்.  பாவம் கடைசி வரை அவனுக்கு ”சா” வே 
வரலையாம். 

சாமியின் background voice....

"வரம் கேக்குற உனக்கே இத்தன அதப்புனா. குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்..."     


• • • • 


ஜோடி இல்லாம பீச்சுக்கு தனியா போனா இதுதான் கதி.. 


• • • • 



GOOD MOTIVATION

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா?”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து..”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.


*

நம்மளோட வண்டி வாகனத்துல, நமக்கு பிடித்தமான சாமி படங்களையோ, பெயர்களையோ எழுதி வெச்சிக்கிறது வழக்கம். சிலர் பிடித்தமான வாசகங்களையும் எழுதி வைப்பாங்க. இன்னும் சிலர் இப்படியும் எழுதி வெச்சிருக்காங்க.. என்னன்னு நீங்களே பாருங்களேன்...






No comments:

Post a Comment