Friday 1 May 2015

மே 1 - உலகத் தொழிலாளர்கள் தினம்

ஒருவர் உழைப்பது மகிழ்ச்சியாக உழைப்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தான். ஆனால், ஓய்வின்றி நாள் முழுவதும்  உழைத்தால், களைப்பு ஏற்படுமே ஒழிய மகிழ்ச்சி ஏற்படுவதற்கு வழியில்லை.  தொழில் நிறுவனங்களிலும் 8 மணி நேரம்தான் வேலைநேரமாக நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அதற்கேற்ற வகையிலேயே ஊதியமும் தரப்படுகிறது. 

இந்த 8 மணி நேர வேலை என்பதும், அதற்கேற்ற ஊதியம் என்பதும் எங்கே, எப்போது, எதற்காக, எப்படி நிர்ணயிக்கப்பட்டது?

18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் மேற்கத்திய நாடுகளில் தினமும் 12 முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில் 20 மணி நேரமும் தொழிலாளர்கள் வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். 

இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கமும், அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்களும், பென்சில் வேனியா நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், ரயில்வே தொழிலாளர்களும் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து போராடினர். 1832-ம் ஆண்டு பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும்  இதே கோரிக்கையை முன் வைத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக் காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங் களும், சிறு வணிகர்கள் கூட்டமைப் பும் இணைந்து 1884-ம் ஆண்டு “ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்டு டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியனை” உருவாக்கினர். இந்தக் கூட்டமைப்பு 8 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இது தொழிலாளர் ஒற்றுமைக்கு பெரிய அளவில் வழிவகுத்தது. இந்தக் கூட்ட மைப்பு,1886 மே 1-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்குக் காரணம்.

இதையடுத்து 1889 ஜூலை 14-ம் தேதி பாரீஸில் கூடிய சோசலிஷ தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற மாநாட்டில், கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரப் பணிக்கான போராட்டத்தைத் தொடர்வது என்றும், 1890, மே 1 அன்று சர்வதேச அளவில் தொழி லாளர் இயக்கங்களை நடத்த வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. உலகத் தொழிலாளர்கள் அனைவரும், 8 மணி வேலை நேரத்துக்காக போர்க்குரல் கொடுக்க வேண்டிய  நாள் மே 1 என்று அறிவிக்கப்பட்டது.

1888-ம் ஆண்டு செயின்ட் லூயிஸ் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு அதன் தலைவர் சாமுவேல் கோம்பரஸ் தலைமையில் கூடியது. இதையடுத்து 8 மணி நேர வேலை இயக்கத்துக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. சிகாகோ போராளிகளின் தியாகமும், அமெரிக்கத் தொழிலாளர்களின் போராட்டமும்தான் 8 மணி நேர வேலைக்கு அடித்தளமிட்டன. இதன் காரணமாகவே மே மாதம் முதல் தேதி உழைப்பாளர்களின் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment