Thursday 14 May 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 12

தோணுச்சு 

* சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்.
* வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!
* எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும். யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும்!
* விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம். ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது!
* உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!
* பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது!
* ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!
* நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாகியிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!
* சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!
* ‘சரியாக் கேட்க மாட்டேங்குது, அப்புறமாப் பேசுறேன்’ என்பது மட்டும் சரியாக் கேட்டுவிடுகிறது!
* சிறு வயதில் ஆம்லெட் ஆக முடியாமல் தப்பித்த முட்டைகள்தான் வளர்ந்தவுடன் தந்தூரி சிக்கன் ஆகிறது!
* ஆடுகள் ஆடுகின்றன! கோழிகள் குதிக்கின்றன! பல வீட்டின் குழம்புச் சட்டியில் இன்று!



பழைய தலைமுறை 

ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்.
ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நாமளாதான் இருக்கும்.
மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்...!
கேலண்டர் அட்டையை பரீட்சை அட்டையாக பயன்படுத்தி தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும்.
மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் .
கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும்.
காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் 
இருக்கும்.
நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10th 12th ரிசல்ட்  பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை நாம தான்
கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுறை நாம தான்
ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.
சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.
போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
ஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டினது நாம தான்
நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
கோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை 
இதெல்லாம் போச்சு.
நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி நீயீநீ பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...
5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,
மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாம தான்
இதையெல்லாம் படிக்கும் போது சிறுதுளி கண்ணில் எட்டிப் பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.



"பரம்பரை" என்பதன் பொருள் என்ன?

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது என்று சொல்வதுண்டு. 
பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும், "தலைமுறை தலைமுறையாக" என்பதே உண்மை பொருள் ஆகும். அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
பரன் + பரை = பரம்பரை
நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
மகன் + மகள்
பெயரன் + பெயர்த்தி
கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த்தி
எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி
நமக்கு முந்தைய தலைமுறைகள்:
நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
பரன் + பரை - ஏழாம் தலைமுறை
ஒரு தலைமுறை - சராசரியாக  60 வருடங்கள் என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..




ஆண்கள் ரொம்ப பாவம் 


ஆண் என்பவன்..
கடவுளின் உன்னதமான படைப்பு

சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்
பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, 
தன் கனவுகளை தியாகம் செய்பவன்

காதலிக்கு பரிசளிக்க , 
தன் பர்ஸை காலி செய்பவன்
மனைவி குழந்தைகளுக்காக, 
தன் இளமையை அடகுவைத்து 
அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, 
அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்
இந்த போராட்டங்களுக்கு இடையில், 
மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, 
தாங்கிக்கொண்டே ஓடுபவன்

அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே 
ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன் 
அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்
வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்
குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், 
கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம், அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்
தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்
எனவே, ஆண்களின் உலகம், தியாகங்களாலும்  வியர்வையாலும் சூழப்பட்டது.


மணிரத்னம் - திரைப்படங்கள் ஒரே ஒரு பார்வை 

தான் கொன்றவனின் மனைவிக்கு தாலி கட்டினால் - தளபதி
தாலி கட்டிட்டு அவரவர் வீட்டுல வாழ்ந்தால் - அலைபாயுதே
வாழ்ந்துவிட்டு தாலி கட்டினால் - ஓ கே கண்மணி
தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்
இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்
தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்
ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்
ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம்
ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா
தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா
ரத்னம் ‘டா’ ... ’மணிரத்னம்’ டா 


தத்துபித்துவங்கள் 

* செருப்பு இல்லாம நாம நடக்கலாம்... ஆனா,  நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )

* இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்....சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்... ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
--- ராவெல்லாம் முழிச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்

* என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்... ரயில் ஏறனும்னா, ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகணும்...
இதுதான் வாழ்க்கை .

* பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்...ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா.. ஃபுல்லு வருமா..? நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

* என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !! அதேமாதிரி, என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!

* டிசம்பர் 31க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்... இதுதான் உலகம்.

* பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்...ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்...சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்...ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ? யோசிக்கணும்............ ...!!

* இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம். ஆனா, பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

* ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும், மேன்யுவலாத்தான்  டிரைவ்
பண்ண முடியும் .

* தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது ! (என்ன கொடுமை சார் இது !?!)

* வாழை மரம் தார் போடும் ஆனா.......அதை வச்சு ரோடு போட முடியாது! (ஹலோ ! ஹலோ!)

* பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்...ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா..? இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா? (டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)

* சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்.. அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ? (ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)

* பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்...கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.

* பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்...ஃப்ரன்ட் வீல முந்த முடியாது. இதுதான் உலகம்

* என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது .

* ஓடுற எலி வாலை புடிச்சா............ .நீ ' கிங்'கு ஆனா...... தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு.... 

* நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா......ஒடுற பஸ்ஸுக்கு
முன்னாடி நிக்க முடியாது...

* வண்டி இல்லாமல் டயர் ஓடும்... ஆனால்.......டயர் இல்லாமல்
வண்டி ஓடுமா ? (இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.)

* சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா.....ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?
இல்ல..பிளேன் ஓட்டுறது பிளானிங் னதான்...


 # அவ்வளோதான்   

1 comment:

  1. எனக்குத் தெரிந்து ஏழு தலைமுறை பற்றிய தகவல் தவறான தகவல். ஒரு தலைமுறை 60 வருடம் கிடையாது.
    எனக்கு வயது 3
    தந்தைக்கு வயது 30
    தாத்தா வயது 60
    ஆகா 57 வயதில் மூன்று தலைமுறை உள்ளது.

    ஆகவே 7 தலைமுறை என்பது.
    நீண்டு நெடிய நாள் வாழ்வு வாழும் குடும்பத்தைக்குறிப்பது.
    அதாவது
    நான் 80 வயது நெருங்கும்போது (1000 பிறை நிலவு கடந்த போது)
    நான் கண்ட தலைமுறை
    முன்னால்
    அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா (3)
    நான் (1)
    மகன், பேரன், கொள்ளு பேரன் (3) இதுவரை சாத்தியம்.
    பரவலாக இருக்கும் -- அப்படிப்பட்ட குடும்பத்தில் -- அனைவரும் நெடு நாள் வாழ்வது கண்டு -- வரும் குடும்பத்தில் உள்ளவர்களைக் குறித்து அவர்களை மரியாதை நிமித்தமாக "ஏழு தலைமுறை கண்டு - நீடு வாழ்க" என்பது முறை.
    இந்த கணக்குப்படியான 900 வருடம் இல்லை என்பது என் கருத்து.

    ReplyDelete