Sunday 3 May 2015

62-வது தேசிய திரைப்பட விருதுகள் முழுமையான பட்டியல்


இந்தியாவின் முதல்  திரைப்படமான ராஜா ஹரிச்சந்திரா படம், 1913ம் ஆண்டு மே 3ம் தேதி திரையிடப்பட்டது. அந்த படத்தை தயாரித்து வெளியிட்டவர் தாதா சாகிப் பால்கே. இதை கவுரவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் தாதா சாகிப் பால்கே விருது மற்றும் தேசிய விருதுகள், மே மாதம் 3-ம் தேதி வழங்கப்படுகிறது. 


2014-ம் ஆண்டிற்கான 62 வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் ஜிகர்தண்டாபடத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகராகவும், சிறந்த பாடலாசிரியராக நா. முத்துக்குமார், சிறந்த பாடகியாக உத்ரா உன்னி கிருஷ்ணன், சிறந்த தமிழ் திரைப்படம் குற்றம் கடிதல், சி்றந்த குழந்தைகள் திரைப்படம் காக்கா முட்டை, காக்கா முட்டை படத்தில் நடித்த இரண்டு சிறுவர்கள், ‘ஜிகர்தண்டாபடத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் விஞ்ஞான் பவனில் நேற்று நடைப்பெற்றது. அதில், கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

குற்றம் கடிதல், காக்கா முட்டை என்று சர்வதேச அரங்கில் கவனம் பெற்ற திரைப்படங்கள் இந்திய அளவிலும் தமிழ் சினிமாவின் உலகத் தரத்தை பறை சாற்றியிருக்கிறது. அதே நேரம், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் திரைப்படத்தின் பல பிரிவுகளில் சிறப்பாக பணிபுரிந்து
விருதுகள் வென்ற திரைப்பட ஆளுமைகளின் முழுமையான பட்டியல்:

சிறந்த திரைப்படம்: கோர்ட் (மராத்தி, ஹிந்தி, குஜராத்தி & ஆங்கிலம்)
ரசிகர்களுக்கு சிறப்பான பொழுதுபோக்கை வழங்கிய பிரபலமான திரைப்படம் : மேரி கோம்
சிறந்த அறிமுக திரைப்படத்திற்கான இந்திரா காந்தி இயக்குனர் விருது : ஆஷாபடத்திற்காக Jaoar Majhe
சிறப்பு நடுவர் விருது: Khwada (மராத்தி)
சிறந்த இயக்கம்: ஸ்ரீஜித் முகர்ஜி, Chotushkone (பெங்காலி)
சிறந்த நடிகை: கங்கனா ரனாவத், Queen (ஹிந்தி)
சிறந்த நடிகர்: விஜய் Nanu Avanalla Avalu (கன்னடம்)
சிறந்த துணை நடிகர்: பாபி சிம்ஹா, ஜிகர்தண்டா (தமிழ்)
சிறந்த துணை நடிகை: Baljinder Kaur for Pagdi The Honour (Haryanavi)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: காக்கா முட்டை (தமிழ்)
சிறந்த பெண் பின்னணிப் பாடகர்: உத்ரா உன்னிகிருஷ்ணன், அழகு, சைவம் (தமிழ்)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: Dolly Ahluwalia, ஹைதர் (இந்தி)
சிறந்த ஒப்பனை கலைஞர்: நங்கராஜூ மற்றும் ராஜு,  Nanu Avanalla Avalu (கன்னடம்)
சிறந்த ஒளிப்பதிவு: Chotushkone (பெங்காலி)
சிறந்த படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன், ஜிகர்தண்டா(தமிழ்)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: Aparna Raina for Nachom - IA Kumpasar (Konkani)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் (அசல்): ஸ்ரீஜித் முகர்ஜி, Chotushkone (பெங்காலி)
சிறந்த திரைக்கதை எழுத்தாளர் (தழுவியது): Joshy Mangalath for Ottal (Malayalam)
சிறந்த வசனம்: விஷால் பரத்வாஜ், ஹைதர் (ஹிந்தி)
சிறந்த பாடல்: நா.முத்துக்குமார், அழகு, சைவம் (தமிழ்)
சிறந்த இசை பாடல்கள்’ : ஹைதர்
சிறந்த இசை பின்னணி’: Nineteen Eighty Three (மலையாளம்)
Best Audiography - Location Sound Recordist: Mahaveer Sabbanwal for Khwada (Marathi)
Best Audiography - Sound Designer: Anish John for Asha Jaoar Majhe (Bengali)
Best Audiography - Re-recordist of the final mixed track: Anirban Sengupta & Dipankar Chaki for Nirbashito (Bengali)
சிறந்த நடன அமைப்பு: சுதேஷ் பிஸ்மில், ஹைதர்(ஹிந்தி)
சிறந்த அஸ்ஸாமி திரைப்படம்: Othello
சிறந்த பெங்காலி படம்: Nirbashito
சிறந்த இந்தி திரைப்படம்: Queen
சிறந்த ரப்பா திரைப்படம்: Orong
சிறந்த ஹர்யான்வி திரைப்படம்: Pagdi The Honour
சிறந்த பஞ்சாபி திரைப்படம்: Punjab 1984
சிறந்த தமிழ் திரைப்படம்: குற்றம் கடிதல்
சிறந்த தெலுங்கு திரைப்படம்: Chandamama Kathalu
சிறந்த மலையாளத் திரைப்படம்: Ain
சிறந்த மராத்தி மொழி திரைப்படம்: Killa
சிறந்த ஒடிய திரைப்படம்: Aadim Vichar
சிறந்த கன்னடத் திரைப்படம்: Harivu
சிறந்த கொங்கனி திரைப்படம்: IA Kumpasar
Special Mention: Killa (Marathi), Bhootnath Returns (Hindi), Ain
(Malayalam), Nachom - IA Kumpasar (Konkani)
சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு திரைப்படம்: Ottaal (மலையாளம்)
சிறந்த கல்வி திரைப்படம்: Komal & Behind the Glass Wall
சிறந்த காணல்/சாகச படம்: Life Force - India's Western Ghats
சிறந்த துப்பறியும் படம்: Phum Shang
சிறந்த அனிமேஷன் படம்: Sound of Joy
சிறந்த குறுகிய புனைகதை திரைப்படம்: Mitraa
சமூக விஷயங்களில் சிறந்த திரைப்படம்: Chotoder Chobi
சிறந்த குழந்தைகள் படம்: காக்கா முட்டை (தமிழ்) மற்றும் Elizabeth Ekadashi  (மராத்தி)
சிறந்த விமர்சகர்: Tanul Thakur
சிறந்த சினிமா புத்தகம்: Silent Cinema: (1895-1930)

தாதா சாகேப் பால்கே விருது”: சசி கபூர்


No comments:

Post a Comment