Sunday 16 July 2017

நாம் தான் ஏழை



          ஒரு பணக்கார தந்தை, தனது மகனுக்கு ஏழை மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று காண்பிக்க விரும்பினார். எனவே, பணக்காரர் தம் மகனை வெளியூருக்கு அழைத்துச் சென்றார். அங்கு, ஏழை குடும்பம் ஒன்றுடன் இருவரும் 2 நாட்கள் தங்கிவிட்டு, வீடு திரும்பினர்.

       வரும் வழியில் மகனை பார்த்து, அவர்கள் எவ்வளவு ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் பார்த்தாயா? இந்த பயணத்தின் மூலம் நீ கற்றுக்கொண்டது என்ன?” என்று கேட்டார்.
       அதற்கு மகன்,  " நாம் ஒரு நாய் வளர்க்கிறோம். அவர்கள் 4 நாய்களை வைத்திருக்கிறார்கள். நம் வீட்டில் நீச்சல் குளம் இருக்கிறது, அவர்களிடம் நதி இருக்கிறது. நம் வீட்டில் மின் விளக்குகளை வைத்திருக்கிறோம். அவர்கள் ஏராளமான நட்சத்திரங்களை வைத்திருக்கிறார்கள். சாப்பிடுவதற்கு கடையில் நாம் பொருட்களை வாங்குகிறோம். ஆனால், அவர்களே விளைவித்துக்கொள்கிறார்கள். திருடர்களுக்கு பயந்து நாம் வீட்டைச் சுற்றி சுவர் கட்டி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சுற்றியுள்ள சொந்த பந்தங்களே பாதுகாப்பாக இருக்கிறார்கள்..
       தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க, நாம் எவ்வளவு ஏழையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று புரிய வைத்த தற்கு நன்றி அப்பாஎன்றான் மகன்.

       நீதி - பணம் வைத்திருந்தால் மட்டுமே பணக்காரனாகிவிட முடியாது.

1 comment:

  1. அருமையான நீதிக்கதை.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete