Thursday 13 July 2017

நான் சொன்னா, எவன் கேட்கிறான்? ‍

        
              இளைஞன் ஒருவன் குருவிடம் சென்று, “திருமணத்திற்கு எனக்கு வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நான் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்துவது?” என்று கேட்டான். 

            அதற்கு குரு, அழகான பெண் வேண்டாம், அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும் அழகில்லாதவளும் வேண்டாம், ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகலம்.
            
      உயரமான பெண் வேண்டாம்! நீ அவளை அண்ணார்ந்து பார்த்து பேச வேண்டும், குள்ளமானவளும் வேண்டாம்! உனக்கு அது பொருத்தமாக இருக்காது.

           பருமனான பெண் வேண்டாம், உன் வருமானம் அவளுக்கு போதாது, மெலிந்தவளும் வேண்டாம், வீட்டில் அவள் எங்கே என நீ தேடுவாய்!

         சிகப்பான பெண் வேண்டாம்! அவளை காணும்போதெல்லாம் உனக்கு மெழுகுவர்த்திதான் ஞாபகம் வரும்! கறுப்பானவள் வேண்டாம்! இருட்டில் அவளை கண்டு நீயே பயப்படக் கூடும்!

‍          படிக்காத பெண் வேண்டாம்! நீ கூறுவதை அவள் புரிந்துகொள்ளமாட்டாள், ‍‍படித்தவளும் வேண்டாம்! உன் பேச்சையே அவள் கேட்கமாட்டாள்!

‍           பணக்கார பெண் வேண்டாம்! மாமியார் வீட்டில் உனக்கு மரியாதை இருக்காது, ‍ஏழை பெண்ணும் வேண்டாம்! உனது மரணத்திற்கு பிறகு உன் குழந்தைகள் சிரமப்படும்!

‍‍‍            அதிக அன்பான பெண் வேண்டாம்! நீ வாழவும் முடியாது, சாகவும் முடியாது. கோபக்கார பெண் வேண்டாம், உன் வாழ்க்கை நரகமாகிவிடும்!

‍            அனைத்தும் தெரிந்த விவரமான பெண் வேண்டாம், உன் மீது சந்தேகம் கொள்வாள், ‍ஒன்றும் தெரியாத அப்பாவியும் வேண்டாம், நீ வீட்டு வேலைக்காரனாய் மாறிவிடுவாய்!

             அமைதியானவளை முடிக்கதே! நீ இறந்துபோனாலும் அவள் மௌனமாகத்தான் இருப்பாள், ‍சுறுசுறுப்பான பெண் வேண்டாம், நீ சொல்வது அவள் காதில் விழாது!

       சொந்த ஊருக்குள் பெண் எடுக்க வேண்டாம், தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் அதை காண ஓடுவாள், தூரத்திலும் பெண் எடுக்க வேண்டாம், அடிக்கடி பயணம் செய்வதிலேயே உன் வாழ்க்கை முடிந்து போகும்!

              என்று கூறி பெறும் மூச்சுவிட்டார் குரு. அதற்கு இளைஞன் ஆத்திரத்துடன், "ஏன் குருவே இதற்கு நீங்கள் திருமணமே செய்துகொள்ளதே என்று சொல்லிவிடுங்களேன் என்றான்.

               குரு மெல்லிய சிரிப்புடன், "சொன்னா எவன் கேட்கிறான்?" என்றார்.


No comments:

Post a Comment