Sunday 16 July 2017

இதம் தரும் இஞ்சி


      `Zingiber officinale’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இஞ்சிக்கு, `அல்லம், `ஆசுரம், `ஆத்திரகம், `ஆர்த்திரகம், `கடுவங்கம் என வேறு பெயர்களும் உண்டு. பூமிக்குக் கீழே விளையும் இஞ்சிக்கு, தமிழ்நாட்டுச் சமையலில் முக்கிய இடம் உண்டு.
      மருத்துவ குணம் கொண்ட இஞ்சி துவையல், குழம்பு, பச்சடி, கஷாயம், ஜூஸ்... எனப் பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது.
      இஞ்சியின் சாறை வடிகட்டி, அதன் தெளிந்த நீரை எடுத்து, தேன் சேர்த்துக் குடித்துவந்தால், குறைந்த ரத்த அழுத்தம் இயல்புநிலைக்குத் திரும்பும்.
      இஞ்சிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து தேன், சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் ஜூஸ் உடல்நலத்துக்கு நன்மை தரக்கூடியது.
      இஞ்சியை வெறும் சாறாகவோ, ஜூஸ் செய்தோ அருந்திவந்தால் உடல் எடை குறையும்.
      இஞ்சி சாறு, ரத்த ஓட்டத்தை சீராக்கும். சுவாசப் பிரச்னைகளை நீக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.  
      பசியின்மை, அஜீரணகோளாறு, வயிற்றுப்பொருமல், தொண்டை கம்மல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இஞ்சி அருமருந்து. இஞ்சி பசியைத் தூண்டுவதோடு, உமிழ்நீரைப் பெருக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலில் உள்ள வாயுவை நீக்கும்.  கபம், பித்தம், வாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.


No comments:

Post a Comment