Saturday, 4 April 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 6

தயக்கத்தை தவிர்ப்போம்.

நீல் ஆம்ஸ்ட்ராங் - இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர். ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது. அவர், எட்வின் சி ஆல்ட்ரின். இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி. 

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். 
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

இடது காலை எடுத்து வைப்பதா?. வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல."‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்"...

தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார். அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..." நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார். வரலாறு ஆனார்.

வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை. முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம். தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம். அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம். ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம். சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம். எனவே, நல்ல விஷயங்களில் தயக்கத்தை தவிர்ப்போம். தலைநிமிர்ந்து நிர்ப்போம். படித்ததில் பிடித்தது

பேரறிஞர் அண்ணா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேரம். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்ததால், அவர் டெல்லியில் இருந்தார். அண்ணா ஆங்கில இலக்கியத்தில் புலமை பெற்றர். Êசரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவார். ஒருநாள் கூட்டத்தொடர் முடிந்து அண்ணா வெளியே வந்துகொண்டிருந்தார். அவரை வழி மறித்த டெல்லி பத்தி£¤கையாளர் ஒருவர், "நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்." என்றார்.

அண்ணாவும் பேட்டிகொடுக்க சம்மதித்து தயாரானார். நிருபர் துணிச்சலாக, "உங்களிடம் எதைப்பற்றி கேள்வி கேட்டாலும் சுலபமாக உடனே பதில் சொல்வீர்களாமே. நான் கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா?." என்றார்.

அண்ணாவும் "கேளுங்க தம்பி..." என்றார் ஆங்கிலத்தில்.

உடனே நிருபர் கேட்டார், "ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்கு "A" என்ற எழுத்தே இல்லாமல் உங்களுக்கு பதில் சொல்லத் தெரியுமா?." 

அண்ணா சற்றும் தாமதிக்காமல், "தம்பி, 1 முதல் 999 வரை ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள். கடைசியில் STOP  நிருபர் உடனே அண்ணாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். 1 முதல் 999 வரை ஆங்கிலத்தில் "A" என்ற எழுத்தே வராது என்பது அன்றுதான் நிறையபேருக்கு தெரிய வந்தது. முதல் வாய்ப்பை தவற விடாதீர்கள். 

காலை நேரம். அலுவலகத்திற்கு கிளம்பியாக வேண்டும் நான். செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன். கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம். அய்யோ என்ன ஆயிற்று எனக்கு? நான் நன்றாகத்தானே இருக்கிறேன். 

ஒரு நிமிடம் யோசிக்கிறேன் நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது.  ஆனால் அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.
காபி வேண்டுமே, என் மனைவி எங்கே? மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம். அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன். 
என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள். பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள்.

தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள். என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள். 

நான் இறக்கவில்லை. இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன். ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை. என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தொ¤யவில்லை. அய்யோ என்ன செய்வேன் நான்? எப்படி அவர்களுக்குத் தொ¤விப்பேன்? 

நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா? 

என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான். 

நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பி£¤ந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பா¤வும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள். அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவி¢ல்லை. 

அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றி¢லும் பாசமே நிறைந்திருக்கும். 

இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான். 

ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. 

அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன். "ஓ  கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்"

என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் " என்று  நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.உண்மையில்  இதற்கு முன்னால் இவ்வாறு  சொல்லவே  இல்லை. "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை  கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய்  நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!
திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றான் மனைவி. 

ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..

என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும்  இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே  நீ மிகவும் அழகான மற்றும் பாசமான  மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக. 

முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.

நண்பர்களே இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள். ஏனெனில் உங்களுது  பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். 


ஆட்கொல்லி 

காட்டு வழியே ஒரு துறவி போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு புதா¤ல் ஏதோ தெரிந்தது. அது என்னவென்று பார்த்தார். அது ஒரு வெண்கலப் பானை நிறைய தங்கக் காசுகள். ‘ஐயோ ஆட்கொல்லி இருக்கிறதே ஆட்கொல்லி இருக்கிறதே!’ என்று கூறி அந்த இடத்திலிருந்து விரைந்து சென்றார்.

அந்த வழியே இரு நண்பர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்து துறவி ‘ஆட்கொல்லி இருக்கிறது அந்தப் பக்கம் போகாதீர்கள்’ என கூறிக் கொண்டே சென்றார். ஆனால் அவர்கள் இருவரும் கேட்காமல் அவ் வழியே சென்று அப் பானையைப் பார்த்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்கள் இருவரும் காசுகளைப் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்தனர். பகலில் ஊருக்குச் சென்றால் எல்லோரும் பார்த்து விடுவர் என்பதால் இரவு யாருக்கும் தெரியாமல் ஊருக்குச் செல்ல தீர்மானித்தனர்.
இருவருக்கும் பசித்தது. ஆகவே ஒருவர் காவல் இருக்க ஒருவன் உணவு வாங்கி வரவும் பேசிக் கொண்டனர். உணவு வாங்கி வர செல்பவனுக்கு பெருங்கவலை அவன் ஓடி விடுவானோ என அரைகுறை நம்பிக்கையுடன் சென்றான்.

தங்கத்தின் நிறம், ஒளி, குணம் காத்திருந்தவரை என்னவோ செய்தது. பக்கத்தில் வளர்ந்திருந்த மூங்கிலைப் படீர் என ஒடித்தார். கத்தி போலக் கூர்மையாக இருந்தது. கண்களில் வெறி ஏறிக் காத்திருந்தார். உணவு வாங்கி வந்தவர் அதை வைத்து விட்டு நிமிர்ந்தார். அவர் வயிற்றில் கூரான மூங்கில் பாய்ந்தது. அலறிச் சாய்ந்தார்.

கொலை செய்தவன் கையைக் கழுவி விட்டு உணவை உண்டார். அடுத்த நிமிடம் சரிந்து விழுந்து இறந்தார். உணவு கொண்டு வந்தவர் அதில் விஷம் கலந்தது இவருக்குத் தெரியுமா என்ன?
துறவி மீண்டும் அவ்வழியே வந்தார். ‘ஆட்கொல்லி இருவரைக் கொன்று விட்டதே! இன்னும் எத்தனை பேரைக் கொல்லுமோ? என வருந்திய படியே சென்றார்.


ரிலாக்ஸ் ப்ளீஸ் 

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்.
மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்.
மனைவி: உங்கப் பையனுக்குப் பிடிக்காது.
கணவன்: முட்டைப் பொரியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல.
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி!இவங்க, இந்த வயசுல, அவங்கக்கிட்ட அதைச் சொன்னா. அவங்க இப்படித்தான் ஃபீல்  பண்ணுவாங்க. 

6 வயசு பையன்: ஐ லவ் யூ.
6 வயசு பொண்ணு: ஐ லவ் யூ ப்ரண்ட்.
ஸ்கூல் பையன்: ஐ லவ் யூ.
ஸ்கூல் பொண்ணு: ச்சீ, டீச்சர்கிட்ட சொல்றேன்.
காலேஜ் பையன்: ஐ லவ் யூ.
கா.பொண்ணு: அக்கா, தங்கச்சியோட நீ பொறக்கல.?
வேலைக்கு போகும் ஆண்: ஐ லவ் யூ.
பெண்: ------------------ (ரவி யும் சொல்லிருக்கான். இவனுக்கு சம்பளம் கம்மியோ?)
கணவன்: ஐ லவ் யூ,
மனைவி: எதுக்கு இப்ப வழியறீங்க, காசு கைல இல்ல,போங்க.
கிழவன்: ஐ லவ் யூ.
கிழவி: பேரன், பேத்தீ எடுத்தாச்சி, வர,வர அறிவே இல்ல.

# அட எப்பதான் நாங்க ஐ லவ் யூ சொல்றது. என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா.இவையெல்லாம், எங்கே?

இயற்கை எங்கே?
தென்னை ஓலை விசிறி எங்கே? பனையோலை விசிறி எங்கே?
பல்லாங்குழி எங்கே? கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?
தெல்லு விளையாட்டு எங்கே? கோபிபிஸ் விளையாட்டு எங்கே?
சாக்கு பந்தயம் எங்கே? கில்லி எங்கே? கும்மி எங்கே?
கோலாட்டம் எங்கே? திருடன் போலீஸ் எங்கே?
ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே? மரப்பாச்சி கல்யாணம் எங்கே?
ஊனாங்கொடி ரெயில் எங்கே? 
கம்பர்கட் மிட்டாய் எங்கே? குச்சி மிட்டாய் எங்கே? 
குருவி ரொட்டி எங்கே? இஞ்சி மரப்பா எங்கே? 
கோலி குண்டு எங்கே? கோலி சோடா எங்கே?
பல் துலக்க ஆலங்குச்சி எங்கே?
கரிப்பழம் எங்கே? கள்ளிப்பழம் எங்கே?
இளுவான் எங்கே? எலந்தை பழம் எங்கே?
சீம்பால் எங்கே? ரோசம் வளர்த்த கொங்க மாட்டுப்பால் எங்கே?
பனம் பழம் எங்கே? சூரிப்பழம் எங்கே? இளுவான் எங்கே?
பழைய சோறு எங்கே? நுங்கு வண்டி எங்கே?
பூவரசன் பீப்பி எங்கே? கைகளில் சுற்றிய பம்பரங்கள் எங்கே?
நடை பழகிய நடை வண்டி எங்கே? அரைஞான் கயிறு எங்கே?
அன்பு எங்கே? பண்பு எங்கே? பாசம் எங்கே? நேசம் எங்கே?
மரியாதை எங்கே? மருதாணி எங்கே? சாஸ்திரம் எங்கே? சம்பரதாயம் எங்கே?
விரதங்கள் எங்கே? மாட்டு வண்டி எங்கே? கூட்டு வண்டி எங்கே?
ஆழ உழுத எருதுகள் எங்கே? செக்கிழுத்த காளைகள் எங்கே?
எருமை மாடுகள் எங்கே? பொதி சுமந்த கழுதைகள் எங்கே?
பொன் வண்டு எங்கே? சிட்டுக்குருவி எங்கே?
குயில் பாடும் பாட்டு  எங்கே? குரங்கு பெடல் எங்கே?
அரிக்கேன் விளக்கு எங்கே? விவசாயம் எங்கே?
விளை நிலம் எங்கே? ஏர்கலப்பை எங்கே?
மண் வெட்டி எங்கே? மண்புழு எங்கே? 
வெட்டுமண் சுமந்த பின்னல் கூடை எங்கே ?
பனை ஓலை குடிசைகள் எங்கே? தூக்கனாங் குருவி கூடுகள் எங்கே ?
குளங்களில் குளித்த கோவணங்கள் எங்கே? அந்த குளங்களும் எங்கே?
தேகம் வளர்த்த சிறுதானியம் எங்கே? அம்மிக்கல் எங்கே? ஆட்டுக்கல் எங்கே?
மோர் சிலுப்பி எங்கே? கால்கிலோ கடுக்கன் சுமந்த காதுகள் எங்கே ?
நல்லது கெட்டது சுட்டிக்காட்டும் பெரியவர்கள் எங்கே?
வெத்திலை பாக்கு பரிசங்கள் எங்கே? 
தோளிலும் இடுப்பிலும் சுமந்த பருத்தி துண்டு எங்கே ?
பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே? 
தாய்பாலைத் தரமாய் கொடுத்த தாய்மை எங்கே ?
மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே ?
மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே?
இடுப்பை சுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே? 
தாவணி அணிந்த இளசுகள் எங்கே? சுத்தமான நீரும் எங்கே ?
மாசு இல்லாத காற்று எங்கே ? நஞ்சில்லாத காய்கறி எங்கே?
பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே?
எல்லாவற்றையும் விட நம் முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே?

இதற்கு பாமரனாலும், மெத்தபடித்தவனாலும், விஞ்ஞானியாலும், ஏன் கணினியாலும் கூட பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் நிம்மதியான வாழ்வை மறந்து  பணம் எனும் காகித்தை தேடி இந்த உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதுசரி அடுத்த தலைமுறையை பற்றி  சிந்திக்க நமக்கு நேரம் தான் எங்கே? எங்கே? எங்கே?


No comments:

Post a Comment