Saturday 4 April 2015

உணவும், மருந்தும் - 2 பீட்ரூட்

பீட்ரூட் பெரும் பாலானோருக்கு பிடிக்காத காய். பெரும்பாலும், இது கூட்டுப் பொறியலாகவே இதை செய்வதால், அதை நாம் ஒதுக்கி விடுகிறோம். அதில் உள்ள மருத்துவ குணங்கள் அளப்பறியது. இதைப் படித்தால், நிச்சயம் பீட்ரூட்டை உணவிலிருந்து ஒதுக்க மாட்டீர்கள். தேடிப்போய் வாங்குவீர்கள். 

பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும், வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. 

பீட்ரூட்டில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரக்கூடியது. இரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்கிறது.

பீட்ரூட்டை சமைத்தோ, பச்சையாவோ சாப்பிட்டால், மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு ஆகியவை சரியாகும்.

மற்ற கீரைகளைப் போலவே, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர் எனப்படும்  வயிற்றுப்புண், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களை குணமாக்கும் சக்தி பீட்ரூட் கீரைக்கு உண்டு. 

மலச்சிக்கல், மூலக்கோளாறுகளால் அவதிப்படுபவர்கள், பீட்ரூட் சாறுடன் தண்ணீர் கலந்து இரவில் தூங்கச் செல்லும் முன் தினசா¤ குடித்து வந்தால், குணம் கிடைக்கும். 

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், புற்றுநோய் பரவுவதை தடுக்க முடியும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்கும் சக்தியும் பீட்¢¢ரூட்டுக்கு உண்டு. 


பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். 

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும். 

பீட்ரூட் உடல் எடையை சீராக பராமா¤க்கும். அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொண்டால் முகப்பொலிவு கூடும். 
தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும். பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் பூசிவர புண் ஆறும்.


பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.


No comments:

Post a Comment