Friday 22 May 2015

தெரியுமா இவரை - 14 ஹோசிமின்

பிரான்ஸ் நாட்டிடமும், பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த மகத்தான தலைவர் ஹோசிமின். 

1890-ம் ஆண்டு பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாப் பிறந்தார். அவரது இயற்பெயர்  சிங்சுங். ஹோசிமின்' என்ற பெயருக்கு 'ஒளி தந்தவர்' என்பது பொருள். இருண்டு கிடந்த வியட்நாம் நாட்டுக்கு ஒளி ஏற்றியவர் என்பதால், மக்கள் ஆசையுடன் வைத்த பெயர் ஹோசிமின்.!

பிரான்ஸ் நாடு தனக்கு தோதானவர்களை வியட்நாம் அரசின் பதவியில் அமர வைத்து,  பொம்மலாட்ட அரசியல் நடத்திக் கொண்டிருந்த காலம். அதை எதிர்த்து புரட்சியாளர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்த கொரில்லா படைக்கு தகவல்களை கொண்டு போகும் ஆபத்தான வேலையை சிறுவனா இருந்த ஹோசிமின் செய்துகொண்டிருந்தார். நாட்டு விடுதலைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலே அதற்குக் காரணம். 


இளைஞனாக வளர்ந்ததும் பிரான்ஸ் நாட்டுக்கு எதிரான பல போராட்டங்களில் அவர் கலந்துகொண்டார். எனினும், அந்த போராட்டங்களுக்கு எந்த பலனும் கிட்டாததால் சோர்வு ஏற்பட்டதுதான் மிச்சம். பின்னர், பிரான்ஸ் நாட்டில் தபால் அலுவலகத்தில் அவருக்கு வேலை கிடைக்க, அங்கு பணியில் சேர்ந்தார். 


அவர் அந்த வேலையில் சேர முக்கியக் காரணம், பிரெஞ்சு புரட்சி எப்படி நடைபெற்றது, அதை எப்படி அவர்கள் சாதித்தார்கள் என்பதை தெரிந்துக் கொள்வதற்காகத்தான். விரும்பியபடியே, அந்த புரட்சி குறித்த தகவல்களை சேகா¤த்துக் கொண்டபின், அவர் 1940-ம் ஆண்டு அவர் வியட்நாமுக்குத் திரும்பினார். 

அந்த காலக்கட்டத்தில், பிரான்சிடமிருந்த வியட்நாம், ஜப்பானின் கைகளுக்குப் போனது. பிரான்ஸ், ஜப்பான் ஆகிய இரண்டு கொள்ளிகளில், ஜப்பான் அவர்களுக்கும் தேவலாம் என்று பட்டது. எனவே, ஜப்பானியர்களுக்கு வியட்நாம்வாசிகள் வரவேற்பும் அளித்தார்களாம். 

யாரிடம் அடிமைப்பட்டிருந்தால் என்ன, அடிமை, அடிமைதானே? எனவே, ஜப்பானியர்களையும் விரட்டியடித்து சுதந்திரத்தை நாம் சுவாசிக்க வேண்டும் என்று ஹோசிமின் முழங்கினார். அவரை நசுக்க ஜப்பான் அரசு முயற்சி செய்ய, வியட்நாமின் அடர்ந்த காடுகளுக்குள் தஞ்சமடைந்தார் ஹோசிமின். 

அந்த காட்டிற்குள் இருந்தபடியே, கொரில்லாப் படையை உருவாக்கி, வாய்ப்புக்காக காத்திருந்தார் அவர். அந்த வாய்ப்பு அவருக்கு சரியாக அமைந்தது. 1945-ம் ஆண்டு ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டிருந்த காலம். அந்த பேரழிவின் அதிர்ச்சிலிருந்து ஜப்பான் சுதாரிக்க முடியாத நிலையில் இருக்க, அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜப்பானிடமிருந்து வியட்நாமை அபகரிக்க காய்களை நகர்த்தியது பிரான்ஸ். 

ஆனால், அந்த வாய்ப்பை பிரான்ஸ் நாட்டுக்கு அளிக்காமல், முந்திக்கொண்ட ஹோசிமின், ஜப்பானியர்களை விரட்டியடித்துவிட்டு வியட்நாமை கைப்பற்றினார். அதே வேகத்துடன் வியட்நாமை சுதந்திர நாடாகவும் பிரகடனப்படுத்தினார். 

உடனுக்குடன் தேர்தலையும் நடத்த, ஹோசிமின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்நாட்டின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிபட்ட நாகமாக இருந்த பிரான்ஸ், வியட்நாம் மீது போர் தொடுத்தது. 

யுத்தம் ஆரம்பமானது. போர்க்கப்பல்கள், விமானங்கள், பீரங்கிகள் என சகல நவீன ஆயுதங்களுடன் வந்த பிரான்சை, குறைந்த ஆயுதங்களுடன் இருந்த வியட்நாம் ¬தா¤யமாக எதிர்கொண்டது. எப்படியும் நாம்தான் ஜெயிப்போம் என்ற அகங்காரத்தில் பிரான்ஸ் படைகள், கொஞ்சம் அலட்சியத்துடன் போரிட, காட்டுக்குள் கடுமையான கொரில்லா போர்முறையை பயின்ற வியட்நாம் வீரர்கள் அசுர வேகத்துடன் போராட்டார்கள். வாழ்வா, சாவா பிரச்னை அவர்களுக்கு. முடிவில் வியட்நாம் வீரர்களே வெற்றி பெற்றார்கள். 


வியட்நாம் வெற்றியை ஈட்டினாலும், தெற்கு வியட்நாம் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. வடக்குப் பகுதி மட்டும்தான் ஹோசிமின் வசம். நாட்டை முழுமையா மீட்டே தீருவன் என சபதமிட்டார் ஹோசிமின். 

ஹோசிமின் ஒரு கம்யூனிஸ்ட் என்று முத்திரைக் குத்தி, அமொ¤க்காவிடம் உதவி கேட்டது பிரான்ஸ். கம்யூனிஸ்ட்களை எட்டிக்காயாக பார்க்கும் அமொ¤க்கா, பிரான்ஸ் நாட்டுக்கு ஆயுத உதவி செய்தது. 

பின்னர், அமொ¤க்காவின் உபயத்தால், வியட்நாமில் ஆயுத மழை பொழியத் தொடங்கியது. ஆனால், தளராமல் பிரான்ஸ் நாட்டுக்கு தண்ணிக் காட்டினார் ஹோசிமின். வெறுத்துப்போன அமொ¤க்கா, 1965-ம் ஆண்டு நேரடியாக களமிறங்கியது. இரக்கமே இல்லாமல் வடக்கு வியட்நாம் மேல் குண்டு மழை பொழியத் தொடங்கியது அமெரிக்கா. ஆனால், கொரில்லா படையில் நிபுணத்துவம் பெற்ற வியட்நாம் வீரர்கள் முன்னால் எந்த ஆயுதமும் எடுபடவில்லை. வேறு வழியின்றி வியட்நாம் முன்னால் மண்டியிட்டது அமொ¤க்கா. வடக்கு வியட்நாமை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று ஹோசிமினுடன் சமாதானத்துக்கு வந்தது அமெரிக்கா. 

அதை ஏற்காத ஹோசிமின், சுதந்திர நாடே எனது லட்சியம் என்பதில் உறுதியாக இருந்தார். 

1968ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தெற்கு வியட்நாம்ல முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகள், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த நேரம். 
சாதாரண மக்கள் போல ஊடுருவியிருந்த ஹோசிமினின் படைகள் திடீரென வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டு, அமெரிக்க தூதரக அலுவலகத்தை  கைப்பற்றினார்கள். 

எரியும் புத்த பிட்சு 
இந்த அவமானத்தையும் மூக்குடைப்பையும் சகிக்க முடியாத அமெரிக்கா, கட்டுப்பாடில்லாத வன்முறையை கட்டவிழ்த்து விட்டது.  கம்யூனிஸ்ட் என்று சந்தேகம் எழுந்ததால், அப்பாவி பொதுமக்களையும் இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஹோசிமினுக்கு ஆதரவாக புத்த பிட்சுகள் போராட்டங்களில் குதித்தார்கள். அவர்களது போராட்டமுறை வேறுவிதமாக இருந்தது. ஒரு சின்ன கதறலோ, சத்தமோ இன்றி புத்த பிட்சுகள் தங்களை தாங்களே நடுரோட்டில் எரித்துக் கொண்டார்கள். இதையெல்லாம் பார்த்த அமெரிக்க மக்கள், அமெரிக்க அரசை குறை சொல்ல ஆரம்பித்தார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தததால், வியட்நாமிலிருந்து படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் நிக்சன். 

அப்படி அறிவித்தாலும், தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து கொண்டேதான் இருந்தது. 1972-ம் ஆண்டு மார்ச் மாதம், ஒரு வியட்நாம் கிராமம் மீது நோப்பாம் என்ற குண்டை அமெரிக்கா வீச, அந்த கிராமமே தீப்பற்றி எரிந்தது. அந்த சம்பவத்தில் தன் உறவுகளை இழந்த சிறுமி ஒருத்தி நிர்வாணமாக ஓடி வர, அந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி, உலகத்தை உலுக்கியது. உலக நாடுகள் அமொ¤க்காவை கண்டிக்க, வேறு வழியே இல்லாமல் படைகளை வாபஸ் வாங்கியது அமெரிக்கா. 


வட வியட்நாம், தென் வியட்நாமுடன் இணைந்து ஒரே சுதந்திர நாடானது. ஆனால், அந்த கனவுக்காக போராடின ஹோசிமின், சுதந்திர நாடான வியட்நாமை பார்க்க உயிருடன் இல்லை. அதற்கு முன்னதாகவே அவர் மறைந்துவிட்டார். வெற்றிக்கு அருகே அழைத்து வந்த, அந்த தலைவனை மறக்காத வியட்நாம் மக்கள், ஒருங்கிணைந்த வியட்நாம் தலைநகரான சைகோனுக்கு ஹோசிமின் சிட்டி என்று பெயர் வைத்து கவுரவப்படுத்தினார்கள். 

2 comments:

  1. இயற்கையை மட்டுமல்லாது மானிடம் ஏந்தும் புரட்சிக்கான
    ஆயுதயங்களையும்
    கவிதைகளில்
    கோர்த்திடுங்கள்
    கவிஞர்களே!
    என்றுச் சொன்ன ஹோசிமினை மீண்டும் மீண்டும் அறிமுகபடுத்துவதில்
    ஆனந்தமே!
    நன்றி!

    ReplyDelete
  2. மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் என்றும் மக்கள் மனதில் இருப்பார்கள்...வெல்லட்டும் புரட்சிப்போராட்டம்...

    ReplyDelete