Saturday 15 July 2017

கொசுவை விரட்ட இயற்கை வழிகள்


 கொசு ஏற்படுத்தும் பாதிப்புக்களை விளக்கத் தேவையில்லை. கொசு ஒருபக்கம் தொல்லை என்றால், அதை விரட்ட பயன்படும் ரசாயனம் கலந்த கொசு விரட்டிகளும் உடலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்துகின்றன.

உடலுக்கு தீங்கிழைக்காத கொசு விரட்டிகளும் இருக்கத்தான் செய்கின்றன. இயற்கையான அந்த வழிகள் என்னென்ன?  

 * கற்பூரவல்லி, கற்றாழைச் சாறு இரண்டையும் தண்ணீருடன் சேர்த்துக் கலந்து, ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் எஸ்கேப்.

 * புதினா, கற்பூரவல்லி, காட்டுத் துளசி, கற்றாழை, செவ்வந்தி போன்ற செடிகள் கொசுக்களின் பரம விரோதி. இந்த எளிய செடிகளை வீட்டில் வளர்த்தால், கொசுக்கள் நெருங்காது. 

* காலை, மாலை வேளைகளில் கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்து புகையாகப் போட்டால் கொசுக்கள் எட்டிப்பார்க்காது. உலர வைத்த வேப்பிலை, நொச்சி, யூகலிப்டஸ் இலைகளும் புகை போட ஏற்றது.

* காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகையும் கொசுவை விரட்டும்.

* எலுமிச்சைப் பழத்தைப் பாதியாக நறுக்கி, அதில் கிராம்பை நட்டு வைத்தால், அதிலிருந்து வரும் வாசனை கொசுக்களை நெருங்க விடாது.

* புதினா வாசனையும் கொசுக்களுக்கு எனிமி. புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுக்க தெளித்தால், அந்த வாசனைக்கு கொசுக்கள் தாக்குப்பிடிக்காது.

* தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில துளிகள் லாவண்டர் எண்ணெயுடன் கலந்து உடலில் தேய்த்துக்கொண்டால், கொசு மட்டுமல்ல, வேர்வை நாற்றமும் பறந்தோடும்.

* ஒரு டம்ளர் தண்ணீரில் கற்பூரத்தை மிதக்கவிட்டால், அதன் வாசம் கொசுக்களை ஓட ஓட விரட்டும.
 * வேப்ப எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் கலந்து உடலில் தேய்த்துக்கொண்டால், கொசுக்கள் உங்களை தொடாது.

* வேப்ப எண்ணெய், யூக்கலிப்டஸ் ஆயில், கிராம்பு எண்ணெய் மூன்றையும் கலந்து வீடு முழுக்கத் தெளித்தால், கொசுக்கள் வாசல் தாண்டி உள்ளே வராது. 

* வேப்ப இலை, நொச்சி, ஆடுதொடா, குப்பைமேனி போன்ற இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சி தைலமாக்கி பூசிக்கொண்டால், கொசுக்களுக்கு நோ என்ட்ரி. 

* யூகலிப்டஸையும் எலுமிச்சை எண்ணெயையும் சமஅளவில் கலந்து உடலில் தேய்த்துக்கொண்டாலும், கொசுக்கள் கிட்டே வராது. 

* கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு, அறையின் உள்ளே கற்பூரத்தை ஏற்றிவைத்தால்,  20 நிமிடங்களில் கொசுக்கள் அந்த இடத்தில் இருக்காது. 

5 comments:

  1. good information

    raja

    ReplyDelete
  2. இதில் சிலவற்றை செய்துபார்தோம் பலனில்லை!

    ReplyDelete
    Replies
    1. இயற்கை முறை வழிகள் இவை. தாமதமானாலும் நிச்சயம் பலன் உண்டு.

      Delete
  3. ஒரு டம்ளர் தண்ணீரில் கற்பூரத்தை மிதக்கவிட்டால், அதன் வாசம் கொசுக்களை ஓட ஓட விரட்டும. கொஞ்சம் கூட பலனில்லை

    ReplyDelete