Saturday 15 July 2017

வாழ்க்கை அமைதியாக செல்வதற்கான வழி

     
      ஒரு தம்பதி தங்களது 25-ம் ஆண்டு திருமண நாளை, ஊரையே கூட்டி விருந்து வைத்து கொண்டாடினார்கள்.
      
      அப்போது, செய்தியாளர் ஒருவர், அந்த தம்பதியிடம், “ உங்கள் திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன, உங்கள் வாழ்க்கை அமைதியாக செல்வதற்கான வழி என்ன? ” என்று கேட்டார்.

      இந்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாத கணவர், ஒரு சம்பவத்தை விவரித்தார், "நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காக,  இரண்டு குதிரைகளை வாடகைக்கு எடுத்து, ஆளுக்கு ஒரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
      எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை திடீரென துள்ளி குதித்து என் மனைவியை அது கீழே தள்ளிவிட்டது. அவள் எழுந்து,
மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, ‘இது தான் உனக்கு முதல் முறை’ என்று அமைதியாகக் கூறினாள்.

      சிறிது தூரம் சென்றதும்,  மீண்டும் குதிரை அவளை கீழே தள்ளியது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு ‘இது உனக்கு இரண்டாம் முறை’ என்றாள்.

      மூன்றாம் முறையும் குதிரை அவளை கீழே தள்ளியது. அவள் வேகமாக எழுந்து, கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!

      இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நான் கோபமாக, ‘ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? அறிவில்லையா? என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, இதுதான் உங்களுக்கு முதல் முறை’ என்றாள். அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர்.
      நீதி : இப்படிதான் பல ஆண்களின் வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருக்கிறது.







2 comments:

  1. அருமையான சம்பவம். எப்படி என் இல்லற வாழ்வின் ரகசியத்தை அறிந்தீர்கள் என்று ஆச்சரியப் பட்டுக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  2. ஹா..ஹா..
    எல்லாம் ஒரு மனக்கணக்குத்தான்

    ReplyDelete